2026-ஆம் ஆண்டு தீர்ப்பாய சீர்திருத்த மசோதா குறித்து…

அரசாங்கம் தனது விருப்பப்படி தீர்ப்பாய உறுப்பினர்களை நீக்க முடியாத வகையில் இருக்க வேண்டும்.


நீதித்துறை அமைப்பில் தீர்ப்பாயங்கள் (Tribunals) இருப்பதற்கான முக்கியக் காரணம் ஒன்று உள்ளது: வழக்கமான நீதிமன்றங்களைவிட, தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்களை நிபுணர்கள் மூலம் விரைவாகத் தீர்க்க இவை உதவுகின்றன. 1987-ஆம் ஆண்டு 'எஸ்.பி. சம்பத் குமார்' மற்றும் 1997-ஆம் ஆண்டு 'எல். சந்திர குமார்' ஆகிய வழக்குகளில், தீர்ப்பாயங்களின் முடிவுகள் உயர்நீதிமன்றங்களின் மறுஆய்வுக்கு உட்பட்டவை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தீர்ப்பாயங்கள் வரலாற்றுரீதியாக, மறு ஆய்வு செய்ய வேண்டிய முடிவுகளை எடுக்கும் அதே அமைச்சகங்களால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளன. 2019-ஆம் ஆண்டு ரோஜர் மேத்யூ வழக்கில், தீர்ப்பாயங்களின் உறுப்பினர்களைத்தேர்வு செய்வது மற்றும் அவற்றின் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதற்காக, தன்னிச்சையான சட்டப்பூர்வ தேசிய தீர்ப்பாயங்கள் ஆணையத்தை (National Tribunals Commission  (NTC)) அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. ஆனால், 2017-ஆம் ஆண்டு நாடாளுமன்றம் நிதிச் சட்டம், மூலம் தீர்ப்பாயங்களுக்கான நியமனங்களில் நிர்வாகத்துறைக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்கியது. மேலும், 2021-ஆம் ஆண்டு தீர்ப்பாயங்கள் சீர்திருத்த அவசரச்சட்டம் மூலம் உச்சநீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்திருந்த நிபந்தனைகளை மீண்டும் கொண்டுவந்தது. 2025-ஆம் ஆண்டு சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கில் உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம் மீண்டும் கொண்டுவந்த சர்ச்சைக்குரிய விதிகளை ரத்து செய்து, முந்தைய நடைமுறையை மீட்டெடுத்ததுடன், தேசிய தீர்ப்பாயங்கள் ஆணையத்தை அமைக்க அரசாங்கத்திற்கு நான்கு மாதங்கள் கால அவகாசம் வழங்கியது. இதன் பின்னர்  2026-ஆம் ஆண்டு தீர்ப்பாயச் சீர்திருத்த (Tribunal Reforms Bill) மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை ஆகஸ்ட் 10 அன்று மக்களவை எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேறியது. தொடர்ந்து ஆகஸ்ட் 11 அன்று மாநிலங்களவையும் நிறைவேற்றியது. இந்த மசோதாவின் குறிப்பிடத்தக்க சாதகமான அம்சங்களில்,  தீர்ப்பாய உறுப்பினர்களுக்கான ஐந்தாண்டு பதவிக்காலத்தை மீண்டும் கொண்டுவருதல், சீரான பணிச்சேவை விதிமுறைகளை அறிமுகப்படுத்துதல், தேசிய தீர்ப்பாயங்கள் தரவு கட்டமைப்பு (National Tribunals Data Grid) தொடர்பான விதிகளைச் சேர்த்தல் ஆகியவை அடங்கும். ஏற்கனவே நிலுவையில் உள்ள நியமனங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் இந்த மசோதா வழிவகை செய்யும்.


இருப்பினும், இந்த மசோதா தேசிய தீர்ப்பாயங்கள் ஆணையத்திற்கு  தேவையான தன்னாட்சியை இன்னும் வழங்கவில்லை. முதலாவதாக, பிரிவு 14, தீர்ப்பாய உறுப்பினர்களின் தகுதிகள், தேர்வு முறை, ஊதியம், படிகள் மற்றும் பிற பணிச்சேவை விதிமுறைகள் ஆகியவற்றை எதிர்காலத்தில் நிர்வாகத்தால் உருவாக்கப்படும் விதிகளுக்கு விட்டுவிடுகிறது. ஆனால், 2019-ஆம் ஆண்டு ரோஜர் மேத்யூ  வழக்கில், நீதிபதி தீபக் குப்தா, நீதித்துறை அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு யார் தகுதியுடையவர் என்பதை வரையறுப்பது ஒரு அத்தியாவசிய சட்டமியற்றும் செயல்பாடு என்றும், அதை விதிகளை உருவாக்கும் அதிகாரத்திற்கு ஒப்படைக்க முடியாது என்றும் கூறியிருந்தார். இருப்பினும், இந்தப் புதிய மசோதா நீதிமன்றத்தின் 2025-ஆம் ஆண்டுத் தீர்ப்பைப் பின்பற்றுவதாகக் கூறினாலும், உண்மையில் நீதிபதி வெளிப்படையாகவே எச்சரித்திருந்த அதிகாரப் பகிர்வு  அதிகாரத்தை மற்றவர்களிடம் ஒப்படைத்தல் தொடர்பான அம்சங்களை  கொண்டுள்ளது. பிரிவு 3-ல் உள்ள இதுபோன்ற தெளிவற்ற மொழியையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், பிரிவு 16-ன் கீழ், ஒரு புகாரை தேசிய தீர்ப்பாய ஆணையத்தின் (NTC) விசாரணைக்கு அனுப்பும் முன், சம்பந்தப்பட்ட அமைச்சகம் முதலில் அதனைப் பரிசீலிக்கும். எனவே, 2021-ஆம் ஆண்டில்  இருந்ததை விட நடைமுறை மிகவும் விவரிக்கப்பட்டதாக இருந்தாலும், தேசிய தீர்ப்பாய ஆணையத்தின் தலைவரையும் நீதித்துறை உறுப்பினர்களையும் நியமிக்க மட்டுமே தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசனை செய்த பின்னரே, உறுப்பினர்களை மத்திய அரசே நியமிக்கிறது. மேலும், மத்திய நிதி மற்றும் நிர்வாகத்தில் கணிசமான செல்வாக்கையும் தக்க வைத்துக் கொள்கிறது. இது அடிப்படையில் தொடரும் ஒரு தோல்வியாகும்: தீர்ப்பாயங்களை நிர்வாகத் துறையின் கட்டுப்பாட்டிலிருந்து  பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ஆணையம், இவ்வாறு நிர்வாகத் துறையின் விதிகளுக்கு ஏற்ப இருக்க முடியாது. தேசிய தீர்ப்பாய ஆணையத்தின் உறுப்பினர்களைத் தன் விருப்பம்போல நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரத்தைக்கைவிடுவதன் மூலம், அரசாங்கம் அந்த அமைப்பை  முழுமையாகச் சுதந்திரமானதாக மாற்ற வேண்டும்.


Original Link: In the way: On the Tribunal Reforms Bill 2026

Share: