வெளிநாட்டு பொருளாதாரப் பாதுகாப்புகளை வலுப்படுத்துதல். -சச்சின் குப்தா

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெளிப்புற பொருளாதார நிலையற்றத் தன்மையின் தாக்கங்களை எதிர்கொள்ள, அரசு பல்வேறு கட்டமைப்பு சார்ந்த  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


சமீபத்தில் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் நிலைமை சீரடையும் ஆரம்ப அறிகுறிகளைக் காட்டினாலும், அவை இந்தியாவின் அதிக பொருளாதாரத் தாங்கும் திறனை சோதித்துள்ளன. இந்தச் சம்பவம், எரிசக்தி விலைகள், நாணய அழுத்தங்கள் போன்றவைகளின் மூலம், இந்தியப் பொருளாதாரம் இன்னும் வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு எவ்வளவு உணர்திறன் கொண்டதாக உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.


குறைந்துவரும் அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment (FDI)) மற்றும் அந்நியப் பங்கு முதலீடு (Foreign Portfolio Investment (FPI)) ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவு, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் உயர்வு மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் உர விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள் ஆகியவற்றின் கூட்டு விளைவால் ரூபாய் மதிப்பு  குறைவதற்கு முக்கிய காரணியாக உள்ளது.


இதன் விளைவாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (current account deficit (CAD)) மற்றும் செலுத்து இருப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட அழுத்தம், டாலர் வெளியேற்றத்தைத் தடுக்கவும் புதிய மூலதன வரவுகளை ஈர்க்கவும் அரசாங்கத்தையும் ரிசர்வ் வங்கியையும் தலையிட வேண்டிய சூழலை உருவாக்கியது.


உடனடித் தளர்வாக இருந்தாலும், கொள்கைரீதியான பதில்  ஒரு முக்கியமான பார்வையை வழங்குகிறது: இந்தியா அவ்வப்போது ஏற்படும் இடையூறுகளுக்கு எதிர்வினையாற்றவில்லை. மாறாக, அடிக்கடி நிகழும் உலகளாவிய நிலையற்றத் தன்மைக்கு எதிராக தனது வெளிப்புறப் பாதுகாப்புகளைத்  வலுப்படுத்துகிறது.


தங்கத்தின் மீதான அதிக இறக்குமதி வரிகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான ஏற்றுமதி வரிகள் உள்ளிட்ட ஆரம்பகால ராஜதந்திர நடவடிக்கைகள், சிறிதளவே நிவாரணம் அளித்தன.


ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்களின் தேவையை உணர்ந்து, அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் (RBI) வெளிநாட்டு மூலதனத்தை நேரடியாக ஈர்ப்பதற்காக ஒரு ஒருங்கிணைந்த உத்தியைத் தொடங்கின.


முக்கிய  முயற்சிகள்


(i) நிலையான புலம்பெயர் மூலதனத்தை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு நாணயத்தில் வெளிநாடுவாழ் இந்தியர் (Incentivising Foreign Currency Non-Resident (FCNR)) வைப்புத்தொகைகளை ஊக்குவித்தல். ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு புதிய வைப்புத்தொகைகளைத் திரட்டுவதற்காக, செப்டம்பர் 30, 2026 வரை, 3-5 வருட கால அவகாசத்துடன் ஒரு சலுகைக் கட்டண பாதுகாப்பை வழங்கும், இதன் மூலம் இந்த வைப்புத்தொகைகளுக்கான அசல் சலுகை கட்டண செலவை திறம்பட ஏற்கும். இந்திய ரிசர்வ் வங்கி, FCNR(B) வைப்புத்தொகைகளுக்கு சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் (Statutory Liquidity Ratio (SLR)) மற்றும் பணக் கையிருப்பு விகிதம் (Cash Reserve Ratio (CRR)) ஆகியவற்றிலிருந்தும் விலக்கு அளித்துள்ளது. இதன் மூலம் 4 சதவீதம் வரை செயல்திறன் அதிகரிக்கும். மேலும், முக்கிய வங்கிகள் இந்த நன்மைகளின் ஒரு பகுதியை, அத்தகைய வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை 200 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்துவதன் மூலம், கிடைக்கும் பலன்களில் ஒரு பகுதியை வைப்பீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளன. இதுபோன்ற தகுதியுள்ள வைப்புத்தொகைகளின் அடிப்படையில் கடன் பெறும் வசதியையும் (leverage) ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.


(ii) பொதுத்துறை நிறுவனங்கள் (public sector undertakings (PSUs)) மற்றும் வணிக வங்கிகளுக்கு, 3-5 ஆண்டுகளுக்குள் முதிர்வடையும் வெளிநாட்டுக் கடன்களுக்கு  1.5 சதவீத சலுகை வட்டி விகிதத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


(iii) உலகளாவிய முதலீட்டாளர் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக, அரசுப் பத்திரங்கள் (G-Secs) மீதான பிடித்தம் மற்றும் மூலதன ஆதாய வரிகளை  நீக்கியுள்ளது.


இந்த நடவடிக்கைகளால் $50 பில்லியன் அமெரிக்க  அதிகமான முதலீட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பணவீக்கம் தொடர்பான முரண்பாடு


இந்த உத்தியின் முதன்மைச் சவால் ஒரு செவ்வியல் பேரியல் பொருளாதார (macroeconomic) முரண்பாட்டில் உள்ளது: பெரிய அளவிலான டாலர் வரவுகளை ஈர்ப்பதற்கு, மத்திய வங்கி அதற்கு இணையான ரூபாய் பணப்புழக்கத்தை வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டுப் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது.


வழங்கல் தரப்பில் உள்ள கடுமையான பலவீனங்கள் இந்தப் பணப்புழக்கம் சார்ந்த அபாயத்தை மேலும் தீவிரப்படுத்துகின்றன. பருவமழைக் காலத்தில் 'எல் நினோ' அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், உணவுப்  பணவீக்கத்தின் (food inflation) அபாயம் அதிகரிக்கிறது.



மேலும், உலகளாவிய எரிசக்தி விலைகளின் தாக்கத்தை சில்லறை வர்த்தகப் பொருளாதாரம் இன்னும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், ஒரு லிட்டருக்கு  ₹15-20 வரையிலான விலை உயர்வை தற்போது நிறுத்தி வைத்துள்ளன. படிப்படியான விலை மாற்றங்களை நோக்கி அரசு தவிர்க்க முடியாமல் நகரும்போது, ​​பரவலான பணவீக்கம் தீவிரமடையும். இதன் விளைவாக, இந்திய ரிசர்வ் வங்கி கொள்கை வட்டி விகிதங்களை  தற்போது தளர்த்த வாய்ப்பில்லை.



இந்த உள்நாட்டு நிலைப்பாடு உலகளாவிய சூழ்நிலைகளை வெளிக் காட்டுகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவில், நிதி விரிவாக்கம் மற்றும் குறையாத பணவீக்கம் காரணமாக 10 ஆண்டு கால கருவூலப் பத்திரங்களின் வருவாய் (Treasury yield) வருமான விகிதம் 4.5 சதவீதத்திற்கு மேல்   அதிகமாக உள்ளது.


 நிச்சயமற்றத் தன்மைக்கு மத்தியில்  மீண்டும் வருதல்


உடனடிப் பொருளாதாரக் கண்ணோட்டம் மந்தமாக இருந்தாலும், இந்தியாவின் முக்கியப் பொருளாதாரக் குறிகாட்டிகள் முக்கிய மீண்டும் வரும் திறனைக் காட்டுகின்றன.


முக்கிய துறைகளில் நிறுவனங்களின் லாபத்திறன் மீண்டும் அதிகரித்து வருகிறது. வாகனம்  மற்றும் வங்கித் துறை போன்ற முக்கியத் தொழில்கள், வரி விதிப்புகளின் சுமையையும் உலகளாவிய வர்த்தகப் பிரச்சனைகளையும் மீறி, கணிசமான முன்னேற்றங்களைப் பதிவு செய்து வருகின்றன.


இது போன்றப் பெருநிறுவனங்களின் சக்திக்கு, நான்காம் காலாண்டில் பதிவான 7.8 சதவீத வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் அடித்தளமாக அமைந்துள்ளது.


இறுதியாக, இந்தியா நிதிப் பற்றாக்குறை, அதிகரித்த பணவீக்கம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அரசாங்கச் செலவினங்கள் போன்ற அபாயங்களுடன் ஒரு தற்காலிகக் கட்டத்திற்குள் நுழைகிறது. இருப்பினும், தற்போதைய நெருக்கடி பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்புச் சிக்கலால் உருவானதல்ல. இது முக்கிய  நிகழ்வுகளால்  ஏற்பட்ட ஒன்றாகும். எனவே, மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் மோதல் தீர்க்கப்பட்டால், பின்னவடைவை அடைந்துள்ள இந்தியா பொருளாதாரம் எதிர்காலத்தில் மீண்டு வருவதற்கான வாய்ப்பு ஏற்படும்.


கட்டுரையாளர் கேர்எட்ஜ் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை மதிப்பீட்டு அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.


Original Link: Strengthening external sector defences.


Share:

இந்தியாவின் சாலைகள் எவ்வாறு உலகின் இரண்டாவது மிகப்பெரிய சாலைக் கட்டமைப்பாக உருவெடுத்தன? - கண்ணன் கே.

இந்தியாவின் சாலை வலையமைப்பு (Road Network) தொடக்கத்தில் அடிப்படை இணைப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. பின்னர் சாலை வலையமைப்பு நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்பை (Macroeconomic Integration) மேம்படுத்தும் வகையில் வளர்ச்சியடைந்தது. தற்போது, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் போக்குவரத்து வலையமைப்புகளை (Integrated Logistics Networks) உருவாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாற்றத்தைப் பொருளாதாரரீதியாகத் திறமையானதாகவும், சுற்றுச்சூழல்ரீதியாக நிலையானதாகவும், சமூகரீதியாக அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதில் உள்ள சவால்கள் யாவை?  


இன்றைய சாலைக் கட்டமைப்புகள் அதிக அளவில் மோட்டார் வாகனங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதைக் சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றம், தெளிவாக வரையறுக்கப்பட்ட நடைபாதைகளில் பாதுகாப்பாக நடப்பதற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமை என்றும், அது மோட்டார் வாகனங்களுக்கான முன்னுரிமையைவிட முக்கியமானது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் (Ministry of Road Transport and Highways (MoRTH)) கூற்றுப்படி, உலகின் 2-வது பெரிய மற்றும் 64 சதவீதமும், பயணிகள் போக்குவரத்தில் 90 சதவீதமும் சாலைப் போக்குவரத்தின் மூலமாகவே நடைபெறுகின்றன.


இந்தப் பின்னணியில், இந்தியச் சாலை வலையமைப்பின் பரிணாம வளர்ச்சி, அதன் நவீனமயமாக்கல் மற்றும் மிதமுள்ள சவால்கள் குறித்து ஆராய்வோம்.


இந்தியாவின் சாலை வலையமைப்பின் பரிணாம வளர்ச்சி


இந்தியாவின் சாலை வலையமைப்பின் பரிணாம வளர்ச்சியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். இந்தக் கட்டங்களில், திட்டமிடலின் கவனம், அடிப்படை இணைப்பை உறுதி செய்வதிலிருந்து படிப்படியாக மாறி, பேரியல் பொருளாதார ஒருங்கிணைப்பைச் (macroeconomic integration) சாத்தியமாக்குவதையும், சில நாட்களுக்கு முன்னர், ஒருங்கிணைந்த தளவாட வலையமைப்புகளைக் கட்டமைப்பதையும் பிரதிபலிக்கிறது.


முதல் கட்டம் (1943-1998)


முதல் கட்டம் வரைவுத் திட்டக் (blueprint phase,) கட்டமாகும். இந்த காலக்கட்டத்தில், நாடு முழுவதும் உள்ள சாலைத் களை உருவாக்குவதற்காக 1934-ல் நிறுவப்பட்ட நெடுஞ்சாலைப் பொறியாளர்களின் முக்கிய அமைப்பான இந்தியச் சாலைகள் காங்கிரஸ் (IRC) சாலைத் திட்டமிடலை உருவாக்கியது. இந்தியச் சாலைகள் காங்கிரஸ் தனது திட்டங்களை 20 ஆண்டு காலச் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் செயல்படுத்தியது. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை நாக்பூர் திட்டம் (1943-1961), பம்பாய் திட்டம் (1961-1981) மற்றும் லக்னோ திட்டம் (1981-2001) ஆகும்.


இந்த கட்டத்தில், ஒவ்வொரு 100 சதுர கிலோமீட்டருக்கும் ஒரு அடிப்படைச் சாலை அடர்த்தியை (road density) உருவாக்குவதும், சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்டச் சாலைகள் மற்றும் கிராமப்புறச் சாலைகள் என வகைப்படுத்துவதும் முக்கிய இலக்காக இருந்தது. அடிப்படை இணைப்பை வழங்குவதும், எண்ணிக்கையிலான இலக்குகளை   அடைவதும் முக்கிய நோக்கமாக இருந்ததால், உருவாக்கப்பட்ட சாலை வலையமைப்பு பல்வேறு இடங்களில் பிரிந்து காணப்பட்டது. மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவற்றின் திறன் குறைவாகவே இருந்தது.


இரண்டாம் கட்டம் (1998-2017)


இரண்டாம் கட்டம் இணைப்பு வசதியில் கவனம் செலுத்தியது. மேலும், இது 1990-களின் தாராளமயமாக்கல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியால் அதிகளவு ஏற்ப்பட்டது. இந்த காலக் கட்டத்தில், கவனம் அடிப்படை அணுகலில் இருந்து அதிக அளவிலான பொதுப் போக்குவரத்திற்கு மாறியது.


இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும் 1998-ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (National Highways Development Project (NHDP)) அமைக்கப்பட்டது. தங்க நாற்கரச் சாலை (Golden Quadrilateral) மற்றும் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு சாலைகளை வெற்றிகரமாக உருவாக்கியதன் மூலம், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் இந்தியாவின் முக்கியமான அதிவேக மற்றும் அதிகக் கொள்ளளவு கொண்ட நெடுஞ்சாலை வலையமைப்பை நிறுவியது.


இருப்பினும், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (National Highways Development Project (NHDP)) புதிய நெடுஞ்சாலைப் பாதைகளை உருவாக்குவதை விட, ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும்  மாதிரியில்  அதிக அளவு கவனம் செலுத்தியது. விரிவாக்கப்பட்ட சாலைகளின் முழுவதிலும் பொருளாதார நடவடிக்கைகள் அதிகமாக இருந்ததால், வளர்ந்து வரும் நகர்ப்புறக் குடியிருப்புகள் வழியாகச் செல்லும் பல நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; இது சரக்குக் கையாளுதல் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை அதிகரித்ததுடன், பயண வேகத்தையும் குறைத்தது.


மூன்றாம் கட்டம் (2017-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை)


மூன்றாம் கட்டம், ஒருங்கிணைந்த மின்கட்டமைப்பின் மீதான கவனத்தால் குறிக்கப்படுகிறது. நேரியல் விரிவாக்கத்தின் (linear expansion) வரம்புகளை உணர்ந்து, தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் (NHDP) மீதமுள்ள கட்டங்கள் பாரத்மாலா திட்டத்துடன் (Bharatmala Pariyojana) இணைக்கப்பட்டன. இந்தத்திட்டம், 4-வழி சாலைகள் மூலம் 550 மாவட்டத் தலைமையகங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, பல்வேறு அமைச்சகங்களின் உள்கட்டமைப்புத் திட்டமிடலை ஒருங்கிணைக்கும் வகையில் 2021-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமான பிரதமரின் கதிசக்தி தேசிய ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துடன் (PM GatiShakti National Master Plan) இணைக்கப்பட்டது.


இந்த முயற்சிகள், வெறும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கான நெடுஞ்சாலை விரிவாக்கத்திலிருந்து விலகி, இடம் அடிப்படையிலான ஒருங்கிணைந்த தளவாட (Logistics) வலையமைப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளன. பழைய வழித்தடங்களை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட புதிய வழித்தடங்கள் மூலம் நகர்ப்புற நெரிசல் மிகுந்த பாதைகளை முற்றிலுமாகத் தவிர்ப்பதே தற்போதைய அணுகுமுறையாக உள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார புவியியல் அமைப்பு மேம்படுத்தப்பட்டு, பொருட்களின் போக்குவரத்து வேகமாகவும், குறைந்த செலவிலும் நடைபெறுகிறது.


புதிய மற்றும் பழைய விரைவுச் சாலைகள்


குறிப்பாக, இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பின் நவீனமயமாக்கலானது, புதிய கட்டுமானப் பணிகள் மற்றும் பழைய சாலைகளை மேம்படுத்துதல் ஆகிய இரண்டு அணுகுமுறைகள் பின்பற்றுகின்றன.


பசுமை நிலக் கட்டுமானம்


ஒரு புதிய வழித்தடத்தில் திட்டங்களைக் கட்டுவது பசுமை நிலத் திட்டம் என வகைப்படுத்தப்படுகிறது. பசுமை நில விரைவுச்சாலைகள் என்பவை, முன்னர் மேம்படுத்தப்படாத நிலத்தில் கட்டப்படும் புதிய நெடுஞ்சாலைகள் ஆகும். அவை புதிதாகத் திட்டமிடப்படுவதால், அதிக நெரிசல் மிகுந்த நகர்ப்புற மையங்களையும், அதிக போக்குவரத்து உள்ள வழித்தடங்களையும் அவற்றால் கடந்து செல்ல முடியும். இது, மணிக்கு 120 கி.மீ. வரையிலான வேகத்தைத் தாங்கக்கூடிய நேரான வழித்தடங்கள், குறைந்தபட்ச வளைவுகள் மற்றும் சரிவுகளுடன் கூடிய பாதைகளை வடிவமைக்க உதவுகிறது.


பயண நேரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பசுமை நில வழித்தடங்கள், சரக்குப் பூங்காக்கள், உற்பத்தித் தொகுப்புகள் மற்றும்  சீரமிகு துணை நகரங்களுக்கான புதிய அணுகல் புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் பிராந்தியப் பொருளாதாரங்களுக்கு ஆதரவளிக்க முடியும். பசுமை நில விரைவுச்சாலைகள்   நன்மைகளை வழங்கினாலும், அவற்றுக்கு பெரிய அளவிலான நிலம் கையகப்படுத்துதல், கணிசமான முதலீடு, பல சுற்றுச்சூழல் மற்றும் சட்டரீதியான அனுமதிகள் தேவைப்படுகின்றன. இது பெரும்பாலும் இழப்பீடு மற்றும் புனரமைப்பு தொடர்பான தாமதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் வழிவகுக்கிறது.


பழைமையான பொருளாதாரச் சாலை மேம்பாடு (Brownfield development) என்பது, ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நவீனமயமாக்குதல், அகலப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது. இது முக்கியமாக, அதிக போக்குவரத்து உள்ள நான்கு வழி நெடுஞ்சாலைகளை ஆறு அல்லது எட்டு வழி வழி சாலைகளைத் தரம் உயர்த்துவதன் மூலம் செய்யப்படுகிறது. இந்தத் திட்டங்கள், ஒரு நெடுஞ்சாலையின் கட்டுமானம், செயல்பாடு மற்றும் எதிர்கால விரிவாக்கத்திற்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மொத்த அகலமான, ஏற்கனவே உள்ள வழித்தடத்தை (right-of-way (RoW)) பயன்படுத்துகின்றன.


வணிகப் போக்குவரத்து உள்ளூர் உற்பத்தித்திறனை நெரிக்கும் வழித்தடங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், கைவிடப்பட்ட நிலப் பயன்பாட்டு விரிவாக்கம் நாட்டின் பழைமையான பொருளாதாரச் சாலை வலையமைப்பிற்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது. இருப்பினும், போக்குவரத்து தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும்போதே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவையே இந்த அணுகுமுறைக்கான முக்கிய சவாலாக அமைகிறது. ஏற்கனவே உள்ள நகர்ப்புற வளர்ச்சி, பழைய பாலங்களின் வடிவமைப்பு போன்றவை விரிவாக்கத் திட்டங்களைக் கட்டுப்படுத்துகின்றன. இந்தக் கட்டமைப்பு ஏற்கனவே உள்ள திட்டங்கள் மற்றும் வசதிகளை விரிவுபடுத்தும் பசுமை நிலக் கட்டுமான முயற்சிகள், நீண்டகாலமாக இருந்து வரும் பல்வேறு இடையூறுகளை சிறிதளவு குறைப்பதற்க்கு உதவும் என்பதை இது காட்டுகிறது.


இந்தக் கட்டமைப்பு வரம்புகளை உணர்ந்து, தற்போதுள்ள நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்வதிலிருந்து மாறி, புதிய பொருளாதார வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பை வடிவமைப்பதில் கவனம் செலுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.


நெடுஞ்சாலைகள் முதல் பொருளாதார வழித்தடங்கள் வரை


இந்தியாவின் சாலை அமைக்கும் உத்தி,  பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், வர்த்தக அளவோடு நேரடியாகத் தொடர்புடையதாக சாலை கட்டுமானத்தை வடிவமைக்கிறது. வளங்கள் நிறைந்த உட்புற பகுதிகளை நுகர்வு மையங்களுடன் மேம்படுத்தப்பட்ட சரக்குப் பாதைகள் மூலம் தடையின்றி இணைப்பதற்காக 26,000 கி.மீ-க்கும் அதிகமான பொருளாதார வழித்தடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.


உள்கட்டமைப்புத் திட்டமிடலை ஒருங்கிணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த ஜிஐஎஸ் அடிப்படையிலான டிஜிட்டல் தளமான, பிரதமர் கதிசக்தி தேசிய திட்டத்தால் இந்த ஒருங்கிணைப்பு ஆதரிக்கப்படுகிறது. வனப் பகுதிகள், தற்போதுள்ள இரயில் பாதைகள், தொழில்துறை மண்டலங்கள் மற்றும் பயன்பாட்டுக் குழாய்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட தரவு அடுக்குகளை ஒன்றன் மேல் ஒன்றாகப் பொருத்துவதன் மூலம், சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களுக்கும் இடையே ஒரு மேம்பட்ட ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பே ஏற்படக்கூடிய முரண்பாடுகளை இந்தத் தளம் அகற்ற முயல்கிறது.


திட்ட வடிவமைப்பை வெறும் நிர்வாகச் செயல்பாடாக மட்டும் கருதாமல், தரவு சார்ந்த மற்றும் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது. சரக்கு போக்குவரத்திற்கான பிரத்யேக வழித்தடங்கள் (Dedicated Freight Corridors (DFCs)), உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் முக்கிய சர்வதேச விமான நிலையங்களுடன் நேரடியாக இணையும் வகையில் நவீன நெடுஞ்சாலைகள் வடிவமைக்கப்படுகின்றன. இதன் மூலம் சரக்குகளை கையாளுதல் மற்றும் போக்குவரத்துக்கான கால அளவு அதிகளவு குறைக்கப்படுகிறது.


செயல்படுத்துவதில் உள்ள சவால்கள்


தெளிவான செயல்திட்ட வரைவு இருந்தபோதிலும், இந்தியாவின் நெடுஞ்சாலை நவீனமயமாக்கல் முயற்சிகள், அவற்றின் திட்டக் காலக்கெடுவையும் நிதி நிலைத்தன்மையையும் பாதிக்கும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன.


நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதமே முக்கிய சவாலாக உள்ளது. 'நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமைச் (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act) சட்டம், 2013'-ன்கீழ் நிலத்தை வாங்குவது ஒரு சிக்கலான செயல்முறையாகும். நில உரிமையின்  பிளவுப்பட்ட தன்மை, நில உரிமை தொடர்பான சர்ச்சைகள் மற்றும் நீண்டகால சட்டப் போராட்டங்கள் ஆகியவை திட்டத்தின் ஆரம்பச் செலவுகளைப் பலமடங்கு அதிகரிப்பதோடு, செயல்படுத்தலையும் தாமதப்படுத்துகின்றன.


இரண்டாவது சவால், சுற்றுச்சூழல் மற்றும் பிற அனுமதிகளைப் பெறுவதில் உள்ளது. நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பெரும்பாலும் வனப் பகுதிகள், வனவிலங்கு வாழ்விடங்கள் மற்றும் சூழல் உணர்திறன் மண்டலங்கள் தொடர்பான அனுமதிகள் தேவைப்படுகின்றன. இது பெரும்பாலும் தாமதங்களுக்கு வழிவகுத்து, திட்டச் செலவுகளையும் அதிகரிக்கிறது.


உட்கட்டமைப்புச் செலவுகளில் அதிக பகுதியை அரசாங்கமே ஏற்பதால், நிதிப் பற்றாக்குறை மற்றொரு தடையாக உள்ளது. அதிக அபாயங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனியார் முதலீடு குறைந்ததைத் தொடர்ந்து, அரசு நேரடியாக தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.


கட்டுமானத் துறையில் பொது–தனியார் கூட்டாண்மையை (Public-Private Partnership (PPP)) மீண்டும் செயல்ப்பாட்டிற்கு கொண்டு வர, கலப்பு ஆண்டுத் தொகை முறை (Hybrid Annuity Model (HAM)) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில், கட்டுமானச் செலவில் 40 சதவீதத்தை அரசு ஏற்கிறது. மீதமுள்ள முதலீட்டை தனியார் மேம்பாட்டாளர்கள் மேற்கொள்கிறார். இந்த கலப்பின ஆண்டுத்தொகை மாதிரி, நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் விரிவாக்கத்திற்கு புத்துயிர் அளிக்க உதவிய போதிலும், அது அதிக நிதிச் சுமையையும் நீண்டகாலச் செலவுகளையும் பொதுத்துறை நிதிநிலை அறிக்கைகளுக்கு மாற்றியது.


வேகமான, நீடித்த சாலைகளை அமைப்பதை நோக்கி


இந்தியாவின் பெரிய அளவிலான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், கொள்கை அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய மாற்றத்தை காட்டுகிறது. சாலைகளை போக்குவரத்து பாதைகளாக மட்டுமே கருதாமல், கிராமப்புற விவசாயப் பகுதிகள், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், உற்பத்தி மையங்கள் மற்றும் துறைமுகங்களை ஒருங்கிணைத்து, ஒரே உள்நாட்டு சந்தையாக இணைக்கும் பொருளாதார வழித்தடங்களாக (Dynamic Economic Corridors) பார்க்கும் அணுகுமுறையாக இது மாறியுள்ளது.


இருப்பினும், இந்தக் கொள்கையின் வெற்றியானது, அதிவேகப் போக்குவரத்தால் ஏற்படும் மனித இழப்புகளையும், எளிதில் பாதிப்படையக்கூடிய நிலப்பரப்புகளின் சூழலியல் தாங்கும் திறனையும் கருத்தில் கொள்ளும் கொள்கைகளைச் சார்ந்துள்ளது. இனிவரும் காலங்களில், அரசு கடுமையான சூழலியல் சார்ந்த தீர்வுகள், வனவிலங்கு வழித்தடங்கள் மற்றும் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். அதே வேளையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற  திட்டங்களையும் விரைவுபடுத்த வேண்டும்.


நெடுஞ்சாலை நவீனமயமாக்கலை என்பது வெறும் கட்டமைக்கப்பட்ட கிலோமீட்டர்களின் அடிப்படையில் மட்டும் அளவிட முடியாது. மாறாக, அவை இணைக்கும் பகுதிகள் மற்றும் சூழல் மண்டலங்களுடன் அந்தப் பாதைகள் எவ்வளவு பாதுகாப்பான மற்றும் நிலையான முறையில் இணைந்து செயல்படுகின்றன என்பதன் மூலமே அளவிட முடியும்.


Original Link: How India’s roads evolved into the world’s second-largest network.

Share:

இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள, மூன்று வெவ்வேறு உத்திசார் பணிகளைக் கொண்ட மூன்று போர்க்கப்பல்கள் யாவை? -சுஷாந்த் குல்கர்னி

இந்திய கடற்படை ஜூன் மாதம் 21-ஆம் தேதி மூன்று புதிய போர்க்கப்பல்களைத் தங்களது படையில் இணைத்துள்ளது. இதில் ஒன்று கடலுக்கு நடுவே வெகுதூரம் சென்று எதிரிகளுடன் போரிடக்கூடியது, மற்றொன்று கடல் பரப்பை ஆராய்ச்சி செய்யக்கூடியது, மற்றும் இன்னொன்று கடற்கரைக்கு அருகில் நீர்மூழ்கி கப்பல்களைத் தேடி அழிக்கும் திறன் கொண்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த 'ஐ.என்.எஸ் துனகிரி' (INS Dunagiri), 'ஐ.என்.எஸ் சன்ஷோதக்' (INS Sanshodhak) மற்றும் 'ஐ.என்.எஸ் அக்ரே' (INS Agray) ஆகிய கப்பல்களின் அர்ப்பணிப்பு விழாவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதன் மூலம், கடந்த ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டு முதல் இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பல்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றன.


இந்த மூன்று கப்பல்களும், பிரம்மோஸ் ஏவுகணை பொருத்தப்பட்ட அதிநவீன 'ஐ.என்.எஸ் துனகிரி', ஆழ்கடல் ஆராய்ச்சி கப்பலான 'ஐ.என்.எஸ் சன்ஷோதக்' மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்க்கும் 'ஐ.என்.எஸ் அக்ரே' ஆகியவை கொல்கத்தாவில் உள்ள ‘Garden Reach Shipbuilders & Engineers’ (GRSE) நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, இந்த மூன்று கப்பல்களும் 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை ஆகும்.                   மேலும், இவற்றை உருவாக்குவதில் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (Micro, Small and Medium Enterprises (MSMEs)) பங்களித்துள்ளன.


ஜூன் 21-ஆம் தேதி இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்ட அந்த மூன்று போர்க்கப்பல்கள் எவை?



ஐஎன்எஸ் துனகிரி (INS Dunagiri): இந்த மூன்றில் மிகப்பாரிய மற்றும் அதிக ஆயுதங்கள் ஏந்திய போர்க்கப்பல் 'ஐஎன்எஸ் துனகிரி' ஆகும். இது ஒரு 'நடுத்தரப் போர்க்கப்பல்' (Frigate) வகையைச் சேர்ந்தது. இது 'Destroyer' எனப்படும் பிரம்மாண்ட அழிப்புவகை கப்பல்களைவிடச் சிறியது, ஆனால் கடற்கரையிலிருந்து வெகுதூரம் சென்று கடலில் போரிடக்கூடிய அளவுக்குப் பெரியது ஆகும்.


இது இந்திய கடற்படையின் 'திட்டம் 17A' (Project 17A) திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தின்கீழ், நவீன தலைமுறைக்கான 'எதிரி ரேடார்களில் எளிதில் சிக்காத' (Stealth) வழிகாட்டப்பட்ட ஏவுகணை நடுத்தரப் போர்க்கப்பல்கள் இந்தியாவில் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு 'Stealth' என்பது முற்றிலும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடுவது அல்ல, மாறாக எதிரிகளின் ரேடார் (Radar) மற்றும் பிற சென்சார்களில் (Sensors) இது மிகக் கடினமாகவே புலப்படும் என்பதாகும். துனகிரி கப்பலில் பிரம்மோஸ் (BrahMos) நிலப்பரப்பிலிருந்து நிலப்பரப்பைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர நிலப்பரப்பிலிருந்து வான்பரப்பைத் தாக்கும் ஏவுகணை (Medium-Range Surface-to-Air Missile (MRSAM)) அமைப்பு போன்ற ஆயுதங்கள் உள்ளன. இவற்றுடன் பன்னோக்குக் கண்காணிப்பு, கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் ரேடார் (MFSTAR), சோனார் (Sonar - நீருக்கடி ஒலி அலைக்கருவி), மின்னணுப் போர் முறைகள் (Multi-Function Surveillance, Track And Guidance Radar (Electronic warfare systems)) மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதங்கள் போன்ற அதிநவீன சென்சார்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.


பாதுகாப்பு சார்ந்து, பலவிதமான பணிகளைச் செய்யக்கூடிய இந்த 'நடுத்தரப் போர்க்கப்பல்' (Frigate) ரகக் கப்பல்கள், கரையில் இருந்து வெகு தொலைவில் உள்ள சர்வதேச ஆழ்கடல் பகுதிகளில் (Blue water) பகுதியில் தங்கிச் செயல்படும் திறன் கொண்டவை. இவை வழக்கமான மற்றும் வழக்கத்திற்கு மாறான அச்சுறுத்தல்கள் ஆகிய இரண்டையுமே எதிர்கொள்ளக் கூடியவை, என்று கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தொடரில் உள்ள மற்ற போர்க்கப்பல்கள் ஐ.என்.எஸ் நீலகிரி (INS Nilgiri), ஹிமகிரி (Himgiri), தாராகிரி (Taragiri), உதயகிரி (Udaygiri) மற்றும் விந்தியகிரி (Vindhyagiri) ஆகியவை ஆகும்.


ஐ.என்.எஸ் சன்ஷோதக் (INS Sanshodhak): இது ஒரு பெரிய அளவிலான ஆய்வுக்கப்பல் (Survey Vessel Large (SVL)) ஆகும். கடல் நீரின் ஆழம், கடற்படுகையின் அமைப்புகள், துறைமுகங்களுக்கான அணுகுமுறைப் பாதைகள், கப்பல் போக்குவரத்து வழிகள் மற்றும் கடல்சார் தரவுகள் ஆகியவற்றை அளவிடுவதும் ஆராய்ச்சி மேற்கொள்வதும்தான் இதன் முக்கியப் பணியாகும். இக்கப்பலில் தானியங்கி நீரடி வாகனங்கள் (Autonomous Underwater Vehicle (AUV)), தொலைவிலிருந்து இயக்கப்படும் வாகனங்கள் (Remotely Operated Vehicle (ROV)) மற்றும் ஒலி அலைகள் மூலம் கடலின் ஆழத்தையும், கடற்படுகையின் வடிவத்தையும் துல்லியமாக அளவிடும் நவீன ரேடார் (Multi-beam echo sounders) போன்ற நவீன அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கடல் மட்டத்திலிருந்தும், நீருக்கு அடியிலிருந்தும் துல்லியமான தரவுகளைச் சேகரிக்க இக்கப்பலுக்கு உதவுகின்றன.


தானியங்கி நீரடி வாகனம் (Autonomous Underwater Vehicle): மனிதர்கள் இல்லாமல் கடலுக்கு அடியில் தானாகவே சென்று தரவுகளைச் சேகரிக்கும் சிறிய நீர்மூழ்கி போன்ற சாதனம். 


போர்க்கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் வெறும் வெற்று நீலப் பரப்பில் மட்டும் செயல்படுவதில்லை. அவை நீரின் ஆழம், கடற்படுகையின் வடிவங்கள், நீரோட்டங்கள், பவளப்பாறைகள், குறுகிய கடல் பாதைகள், துறைமுகங்கள், நீருக்கடியில் உள்ள சரிவுகள் மற்றும் கடற்கரையோரத் தடைகள் நிறைந்த நீர்நிலைகள் வழியாகவே பயணிக்கின்றன. இந்தச் சூழலைத் துல்லியமாக அறிந்துகொள்வது போர்க்கப்பல்கள் பாதுகாப்பாக நகரவும், நீர்மூழ்கிக் கப்பல்கள் தங்களின் பாதைகளைத் திட்டமிடவும், துறைமுகங்கள் தங்களின் வரைபடங்களைப் புதுப்பிக்கவும், பாதுகாப்புப் படைகள் தங்களின் நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்கவும் உதவுகிறது. மேலும், இது பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து, பேரிடர் நிவாரணம், கடல் ஆராய்ச்சி மற்றும் கடற்கரை மேம்பாடு போன்ற பொதுமக்களின் தேவைகளுக்கும் ஆதரவளிக்கிறது, என்று ஆய்வுக்கப்பல்களில் பணியாற்றிய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


'சன்ஷோதக்' என்பது பெரிய அளவிலான ஆய்வுக்கப்பல்களின் (SVL) 'சந்தாயக்' (Sandhayak-class) பிரிவைச் சேர்ந்த கடைசி கப்பலாகும். நான்கு பெரிய ஆய்வுக்கப்பல்களுக்கான ஒப்பந்தம் அக்டோபர் மாதம் 2018-ஆம் ஆண்டில் கையெழுத்தானது. இப்பிரிவைச் சேர்ந்த மற்ற கப்பல்களான ஐ.என்.எஸ் சந்தாயக் (INS Sandhayak), ஐ.என்.எஸ் நிர்தேஷக் (INS Nirdeshak) மற்றும் ஐ.என்.எஸ் இக்ஷக் (INS Ikshak) ஆகியவை முறையே பிப்ரவரி மாதம் 2024-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 2024-ஆம் ஆண்டு மற்றும் நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு ஆகிய மாதங்களில் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.


ஐ.என்.எஸ் அக்ரே (INS Agray): இந்த மூன்றாவது போர்க்கப்பல்,                       மற்ற மூன்றில் மிகச் சிறியதாக இருந்தாலும், மிகவும் பிரத்யேகமான மற்றும் தனித்துவமான ஒரு பணியைச் செய்யக்கூடியது. இது கடற்கரைப் பகுதிகளில் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிப்பதற்காக (Submarine-hunter) வடிவமைக்கப்பட்ட ஒரு கப்பலாகும். 'அக்ரே' என்பது 'அர்னாலா' (Arnala-class) வகையைச் சேர்ந்தது. கடற்கரை, துறைமுகங்கள், கடற்படைத் தளங்கள் மற்றும் முக்கியமான கடல் வழிப்பாதைகளுக்கு அருகிலுள்ள ஆழமற்ற நீர்நிலைகளில் இருக்கும் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து தாக்குவதற்காகவே இந்த சிறியரகப் போர்க்கப்பல்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.                           ஐ.என்.எஸ் அக்ரே கப்பலில் இலகுரக நீரில் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள் (Torpedoes), உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் சோனார் (Sonar) ஒலி அலை அமைப்புகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

INS induction

கடற்கரையை ஒட்டிய நீர்நிலைகளைக் குறிக்க 'Littoral' என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, இதன் எளிமையான பொருள் 'கரைக்கு அருகில் உள்ள நீர்நிலை' என்பதாகும். "கடற்கரைப் பகுதிகள் நீர்மூழ்கிக் கப்பல்களைக்  கண்டுபிடிப்பதற்குக் கடினமான இடங்களாகும். ஏனெனில், அவை அதிக சத்தம் நிறைந்ததாகவும், பரபரப்பானதாகவும், பல்வேறு தடைகள் நிறைந்ததாகவும் இருக்கும். மீன்பிடிப் படகுகள், வணிகக் கப்பல்கள், கடலடி அமைப்புகள் மற்றும் கடலோரச் செயல்பாடுகள் ஆகியவை திறந்தவெளிக் கடலைவிட இங்கு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிவதைக் கடினமாக்குகின்றன. அந்த இடத்தில்தான் அக்ரே (Agray) போன்ற ஆழமற்ற நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல் (Anti-Submarine Warfare Shallow Water Craft (ASW-SWC)) ரகக் கப்பல்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன என்று கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


நீர்முழ்கிக் கப்பல்கள் என்பவை ராணுவத் தளவாடங்களிலேயே கண்டறிவதற்கு மிகக் கடினமான அமைப்புகளில் ஒன்று என்பதால் இந்த விஷயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் கடற்படையில் சேர்ப்பதற்குப் பின்னால் உள்ள முக்கியமான செய்தி என்ன?


ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த விழாவின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த மூன்று கப்பல்களும் ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு விதமான பாதுகாப்புத் திறன்களை இந்தியக் கடற்படையில் சேர்க்கின்றன.                    இவை அனைத்தும் இணைந்து, கடற்படையின் சமநிலையான பாதுகாப்புத் திறன் வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. மேலும் இவை ஆழ்கடல் செயல்பாடுகளை (Blue-water operations) வலுப்படுத்துவதோடு, கடல்சார் பகுதி விழிப்புணர்வையும் (Maritime Domain Awareness) அதிகரித்து, வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகக் கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்கின்றன, என்று கடற்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் தங்களின் கடற்படை வலிமையைப் பெருக்கி வருவதால் இந்தியப் பெருங்கடல் பகுதி அதிகப் போட்டி நிறைந்ததாக மாறி வருகிறது. அதேநேரத்தில், இந்தியாவின் கடல்சார் பொறுப்புகளும் அரபிக்கடல், வங்காள விரிகுடா, தீவுப் பகுதிகள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் பரந்து விரிந்துள்ளன. இத்தகைய சூழலில், இந்த மூன்று கப்பல்களும் ஒரே நேரத்தில் கடற்படையில் சேர்க்கப்படுவது என்பது, இந்தியக் கடற்படை தனது திறன்களைப் பல அடுக்குளாக எவ்வாறு கட்டமைத்து வருகிறது என்பதற்கான ஒரு முக்கிய அறிகுறியாகும். அதாவது, தொலைதூரப் பணிகளுக்கான பெரிய போர்க்கப்பல்கள், கடலைப் பற்றி ஆராய்வதற்கான ஆய்வுக் கப்பல்கள் மற்றும் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான சிறிய நீர்மூழ்கி-தாக்குதல் (Submarine-hunters) கப்பல்கள் எனப் பல பிரிவுகளில் கடற்படை பலமடைந்து வருகிறது, என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மேலும், இது நாட்டின் உற்பத்தித் தொழில்துறை சார்ந்த ஒரு முக்கியச் சமிக்ஞையுமாகும். வெவ்வேறு பணிகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்ட மூன்று வேறுபட்ட போர்க்கப்பல்களை, உள்நாட்டிலேயே தயாரித்து ஒரே நேரத்தில் கடற்படையில் இணைக்க முடியும் என்பது, இந்தியாவின் கடற்படைக் கப்பல் கட்டும் சூழல் அமைப்பின் வளர்ந்த முதிர்ச்சியைக் காட்டுகிறது.


Original Link: What are the three ships with three different strategic roles that Navy inducted


Share:

ராகிகர்ஹி ஏன் முக்கியமானது? - பிரியா குமாரி சுக்லா

தற்போதைய நிலவரம் : ஹரியானாவின் ராகிஹர்கியில் (Rakhigarhi) கண்டெடுக்கப்பட்ட சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளை, அறிவியல் ஆய்வு மற்றும் முக அமைப்பை மீண்டும் உருவாக்கும் (facial reconstruction) பணிக்காக இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை (Archaeological Survey of India (ASI)) அனுப்பியுள்ளது. அதே நேரத்தில், ஹரப்பா நாகரிகத்தின் மிகப்பெரிய தளமாக ராகிஹர்கி அறியப்படுகிறது.

முக்கிய அம்சங்கள் :


சமீபத்திய அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட நான்கு எலும்புக்கூடுகள் வெள்ளிக்கிழமையன்று கொல்கத்தாவில் உள்ள இந்திய மானுடவியல் ஆய்வுத் துறைக்கு (Anthropological Survey of India (AnSI)) அனுப்பப்பட்டன. அதேவேளையில், அவற்றில் ஒரு எலும்புக்கூட்டிலிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ (DNA) மாதிரிகள் லக்னோவில் உள்ள பிர்பால் சஹ்னி தொல்லுயிர் அறிவியல் நிறுவனத்திற்கு (Birbal Sahni Institute of Palaeosciences (BSIP)) அனுப்பப்பட்டுள்ளன.


'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழிடம் பேசிய இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் (ASI) கண்காணிப்புத் தொல்லியல் ஆய்வாளர் மனோஜ் சக்சேனா, மூன்று எலும்புக்கூடுகள் மற்றும் மண் மாதிரிகள் கொல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டதாகவும், நான்காவது எலும்புக்கூடு மட்டும் தனியாக அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். ஐந்தாவது எலும்புக்கூடு இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் (ASI) வசம் வைக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட ஐந்து எலும்புக்கூடுகளில் மூன்று பெண்களுடையதாகவும், இரண்டு ஆண்களுடையதாகவும் கருதப்படுகின்றன. ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, இவர்கள் அனைவரும் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. எனினும், விரிவான அறிவியல் பகுப்பாய்வு மூலம் அவர்களின் துல்லியமான வயது கண்டறியப்படும்.


இந்த எலும்புக்கூடுகள் சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான ஹரப்பா காலத்தைச் சேர்ந்தவை என்பதால், இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது என்று சக்சேனா குறிப்பிட்டார். இந்த ஆய்வுகள் மூலம், அவர்கள் இயற்கையான காரணங்களால் இறந்தார்களா அல்லது நோயினால் இறந்தார்களா என்பதையும், நோயினால் இறந்திருந்தால் அது என்ன வகையான நோய் என்பதையும் கண்டறிய முடியும் என்று அவர் கூறினார். மேலும், அவர்களின் பூர்வீகம், உயரம், உடல் அமைப்பு மற்றும் சமூக நிலை குறித்த விவரங்களையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று முக அமைப்பு மறு உருவாக்கம் (facial reconstruction) ஆகும். இது ஹரப்பா நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதற்கான காட்சி வடிவத்தை வழங்கக்கூடும். சக்சேனாவின் கூற்றுப்படி, விரிவான அறிக்கையைத் தயாரிக்க மானுடவியல் மற்றும் டிஎன்ஏ ஆய்வுகள் ஒருங்கிணைக்கப்படும்.

அப்பகுதியில் வாழ்ந்த மனிதக் கூட்டத்தினரைப் பற்றி நன்கு புரிந்துகொள்ளவும், மேலும் ஆய்வுக்கு தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காணவும், அக்காலகட்டத்தின் பண்டைய சூழலை (palaeo-environment) ஆராய்ச்சியாளர்கள் மறு உருவாக்கம் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா? :


ராகிகர்ஹி தளம் ஏழு மேடுகளைக் (mounds) கொண்டுள்ளது. மேடு எண் 7-இல் 2005-06, 2015 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளையில், மேடு எண் 6-இல் 2005-06 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவிலான அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன.


முந்தைய அகழ்வாராய்ச்சிகளில் குடியிருப்பு அமைப்புகள், தெருக்கள், வடிகால் அமைப்புகள் மற்றும் ஆபரணங்கள் தயாரிக்கும் இடமாகக் கருதப்படும் ஒரு பகுதி ஆகியவை கண்டறியப்பட்டன. மேலும், தொல்லியல் ஆய்வாளர்கள் செம்பு மற்றும் தங்க ஆபரணங்கள், சுடுமண் பொம்மைகள், முத்திரைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மட்பாண்டங்களையும் கண்டெடுத்தனர்.


ஏறக்குறைய கி.மு. 4200-ஐச் சேர்ந்த ரகிகர்கி (Rakhigarhi), குஜராத்தில் உள்ள தோலாவிராவுடன் (Dholavira) இணைந்து, இந்தியாவில் உள்ள இரண்டு மிகப்பெரிய ஹரப்பா காலத் தொல்லியல் தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கலாச்சார பாரம்பரியத் தலங்களாக மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட 15 தொல்லியல் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டத்தை அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பண்டைய நாகரிகங்கள் குறித்த பார்வையாளர்களின் புரிதலை மேம்படுத்தும் வகையில், அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதிகள் சிறப்பு நடைபாதைகள் மூலம் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்படும் என்று கூறினார். மேலும், தகவல் விளக்க மையங்கள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் ஆழ்ந்த அனுபவத்தை அளிக்கும் கதை சொல்லும் தொழில்நுட்பங்கள் (immersive storytelling technologies) மூலமாகவும் இப்பகுதிகள் மேம்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.


இந்திய மானுடவியல் ஆய்வு நிறுவனம் (Anthropological Survey of India (AnSI)) என்பது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு முதன்மையான ஆராய்ச்சி அமைப்பாகும். 1945-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், இந்தியாவில் மானுடவியல் ஆராய்ச்சிக்கான முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் பிராந்திய மையங்களைக் கொண்டுள்ள இந்திய மானுடவியல் ஆய்வு நிறுவனம் (AnSI), இந்தியாவின் பல்வேறு சமூகங்களின் உயிரியல்-கலாச்சார, சமூக-கலாச்சார மற்றும் மொழியியல் அம்சங்கள் உள்ளிட்ட மானுடவியலின் பல்வேறு துறைகளில் விரிவான கள ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.


Original Link: Why Rakhigarhi is important?


Share:

குடிமக்களின் நலன்களும் இயற்கை வளப் பாதுகாப்பும் -கலைசெல்வன் பெரியசாமி

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள், அங்கு சட்டப்பூர்வமாக நிலம் வைத்திருக்கும் நில உரிமையாளர்களைப் புறக்கணிப்பதாக இருக்கக் கூடாது.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தற்போது அரசாங்கத்தின் மிக முக்கியக் கொள்கையாக மாறியிருப்பது முற்றிலும் சரியானதுதான். தென்னிந்தியாவின் கடைசி இயற்கைச் சதுப்புநிலங்களில் ஒன்றான, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் தளமாக (Ramsar Site) அங்கீகரிக்கப்பட்ட சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலம், வெள்ளப் பாதிப்பைக் குறைப்பதிலும், நிலத்தடி நீரைச் சேமிப்பதிலும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதால் அது கண்டிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இருப்பினும், இந்தச் சதுப்புநிலம் மற்றும் அதனைச் சுற்றி அமையவிருக்கும் 'கட்டுப்பாட்டுப் பகுதி' (Influence Zone) ஆகியவற்றின் காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்,        அங்கு சட்டப்பூர்வமாக நிலம் வாங்கியுள்ள ஆயிரக்கணக்கான நில உரிமையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. இது சுற்றுச்சூழல் மேலாண்மை, மக்களின் சொத்துரிமை மற்றும் அரசு அமைப்புகளின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.


தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)) முன்பு நடைபெறும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைச் சுற்றியுள்ள புதிய ஒரு கிலோமீட்டர் 'கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்' (Influence Zone) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (Chennai Metropolitan Development Authority (CMDA)) விதித்துள்ள கட்டுப்பாடுகள் பல முக்கியமான கவலைகளை எழுப்பியுள்ளன.                      உதாரணமாக, இந்த 8,537 ஏக்கர் 'கட்டுப்பாட்டுப் பகுதியில்' ஏறக்குறைய 85% முதல் 90% வரையிலான பகுதி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இரண்டாவது பெருந்திட்டத்தின்கீழ் (Second Master Plan 2008) ஏற்கனவே குடியிருப்பு, கல்வி நிறுவனங்கள், வணிகம் மற்றும் தொழில்சார்ந்த செயல்பாடுகளுக்காக "வளர்ச்சிப் பகுதி" (Development area) என்று ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், சதுப்புநிலத்தின் துல்லியமான எல்லை, இந்தக் கட்டுப்பாட்டுப் பகுதி மற்றும் நீண்டகால ஒழுங்குமுறை விதிகள் ஆகியவை இன்னும் ஆய்வு நிலையிலேயே இருப்பதாகப் பல்வேறு அரசு முகமைகள் பசுமைத் தீர்ப்பாயத்திடம் தெரிவித்துள்ளன.


இந்தக் கட்டுப்பாடுகளின் விளைவுகள் தற்போது தெரியத் தொடங்கிவிட்டன. பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், பெருங்குடி, செம்மஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் குடியிருப்பு மனைகளிலும் வீட்டுத் திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் மாதச் சம்பளம் வாங்குபவர்கள், ஓய்வூதியதாரர்கள், தங்களது குடும்பத்திலேயே முதல்முறையாக வீடு வாங்குபவர்கள், சிறு தொழிலதிபர்கள் மற்றும் பல வருட நிதி தியாகங்களுக்குப் பிறகு சட்டப்பூர்வமாக சொத்து வாங்கிய நடுத்தரக் குடும்பத்தினர் ஆவர். இத்தகைய குடும்பங்களுக்கு, நிலம் என்பது வெறும் ஒரு நிதிச் சொத்து மட்டுமல்ல. எனவே, நிலம் சார்ந்த இந்தத் தெளிவற்ற அல்லது நிலையற்ற சூழல் அவர்களின் நிதித் திட்டமிடலை மட்டுமன்றி, மன அமைதியையும் கடுமையாகப் பாதித்துள்ளது.


20 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சட்டவிதிகளையும் முறையாகப் பின்பற்றி, ஒரு சாதாரண குடியிருப்பு மனையை வாங்கிய ஒரு குடிமகனின் சூழ்நிலையைக் கருத்தில் கொள்வோம். அவர் அதற்கான பதிவுச் கட்டணங்களை முறையாகச் செலுத்தினார், சொத்து வரிகளை வழக்கமாகத் தாக்கல் செய்தார், மேலும் வங்கிக் கடன்களையும் மிகச் சரியாகத் திருப்பிச் செலுத்தி வந்தார்.                  ஆனால் இன்று, அவருடைய நிலம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு "கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்" (Influence Zone) வருவதால், எதிர்காலத்தில் அங்கு கட்டுமான அனுமதிகள் கிடைக்குமா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளார்.  ஏனெனில், அந்த மண்டலத்திற்கான புதிய கட்டுப்பாட்டு விதிகள் இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன.


சமநிலையின் அவசியம்


தாமதமாகும் சொந்த வீட்டுக்கனவோடு தொடர்புடைய சமூகப் பாதிப்புகள் உண்மையானவை மற்றும் முக்கியமானவை என்றாலும், அவை அரிதாகவே தொழில்நுட்ப அறிக்கைகளிலோ அல்லது திட்டமிடல் ஆவணங்களிலோ இடம்பெறுகின்றன. வீடு வாங்குவதைத் தள்ளிப்போடும் முடிவுகள் ஓய்வூதியத் திட்டமிடல், குழந்தைகளுக்கான கல்வி முதலீடுகள், குடும்பப் பாதுகாப்பு மற்றும் நீண்டகால நிதி நிலைத்தன்மை ஆகியவற்றைப் பாதிக்கின்றன.                               மேலும், சட்டவிதிமுறைகளில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை, ஒட்டுமொத்த வணிகச் சங்கிலியிலும் உள்ள நம்பிக்கையைச் சீர்குலைக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து கட்டுமானத் துறை, பொறியியல், கட்டிடக்கலை, போக்குவரத்து, கட்டுமானப் பொருட்கள் விநியோகம் மற்றும் வீடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை நம்பியிருக்கும் ஏராளமான சிறு வணிகத் துறைகளைப் பெருமளவில் பாதிக்கக்கூடும்.


கொட்டிவாக்கத்திலிருந்து செம்மஞ்சேரி வரை நீளும் பழைய மகாபலிபுரம் சாலை தகவல் தொழில்நுட்ப வழித்தடமானது சுமார் 4,800 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின்படி, இதில் சுமார் 60% (2,850 ஏக்கர்) 'கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதியாக' (Influence Zone) உள்ளது.                             தற்போதைய கட்டுப்பாடுகளின் காரணமாக, சென்னையின் மிக முக்கியமான மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்த வழித்தடத்தின் பெரும் பகுதி, புதிய மேம்பாட்டு அனுமதிகளைப் பெறுவதில் இப்போது நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில், பள்ளிக்கரணை சதுப்புநில விவாதத்தின் மற்றொரு பகுதி இன்னும் ஆராயப்படாமலேயே உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் (CMDA) வரையறுக்கப்பட்ட 'ராம்சார் தளம்' (Ramsar Site) எல்லைக்குள், சட்டப்பூர்வமாக வாங்கப்பட்ட தனியார் நிலங்களும் இருப்பதாகக் கூறப்படுபவைதான் இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், கடந்தகால நில நிர்வாகம், பத்திரப் பதிவுகள் மற்றும் வழங்கப்பட்ட அனுமதிகள் குறித்து பல கேள்விகள் எழக்கூடும். இதற்கான பதில்கள், தற்போது விவாதிக்கப்பட்டு வரும் 'பாதுகாக்கப்பட்ட இடைவெளிப் பகுதி' (Buffer zone) சிக்கலைவிட, மிகவும் சிக்கலான ஒரு நிர்வாகச் சவாலை வெளிப்படுத்தலாம்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தனிமைப்படுத்துவதாகவோ அல்லது மக்களைத் தண்டிக்கும் ஒரு செயல்முறையாகவோ மாறிவிடக்கூடாது. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைப் பாதுகாப்பது என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை, அது மிக முக்கியமானது. அதேநேரத்தில், சட்டப்பூர்வமாகச் சொத்துக்களை வாங்கிய குடிமக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளும் சம அளவில் முக்கியமானவை ஆகும். ஒரு முதிர்ந்த ஜனநாயகம் இந்த இரண்டு பக்கங்களையும் ஒருசேரப் பாதுகாக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்புநிலத்திற்கான 'ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம்' (Integrated Management Plan (IMP)) நிறைவடையும் நிலையை நோக்கிச் செல்லும்போது, முறையான விதிமுறைகள், பொதுமக்களுடனான ஆலோசனைகள் மற்றும் நியாயமான இடைக்கால நடவடிக்கைகள் ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் குடிமக்களின் நலனையும் சமமாகக் கருத்தில் கொள்ள உதவிகரமாக இருக்கும்.


எழுத்தாளர் ஒரு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிபுணர் ஆவார்.


Original Link: Citizens interests and conservation 


Share:

ஐஐடி-களுக்குள் நுழைந்த ஒரு மறைமுக ஊடுருவல் (Trojan horse) - வாசுதேவன் முகுந்த்

இந்திய அறிவுசார் அமைப்பு (Indian Knowledge System (IKS)) மையங்கள், புராணங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளை இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் (ஐஐடி) கட்டமைப்பில் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


கடந்த சில ஆண்டுகளாக, 'இந்திய அறிவுசார் அமைப்பு' (Indian Knowledge System(IKS)) என்ற திட்டம், பாரம்பரிய இந்திய ஞானத்தை நவீனக் கல்விப் பாடத்திட்டங்களில் ஒருங்கிணைக்க முயன்று வருகிறது. இந்தியாவின் பூர்வீக அறிவுசார் வரலாற்றை மீட்டெடுப்பதற்கும், ஒரு முறைசாரா கலாச்சார விருப்பத்தை கல்வியின் ஒரு பகுதியாக உயர்த்துவதற்கும் நியாயமான முயற்சியாக உள்ளன. இருப்பினும், இன்று முன்னெடுக்கப்படும் இந்திய அறிவுசார் அமைப்பு (IKS) அந்த இலக்கை அடையவில்லை.

உண்மையான இந்திய அறிவுசார் அமைப்பு (IKS), என்பது பாணினியின் (Panini) மொழியியல், நியாய தர்க்கவியல் பள்ளி (Nyaya school of logic), கேரள கணித மரபு (Kerala school of mathematics), வூட்ஸ் எஃகு உருவாக்கம் (development of Wootz steel) போன்றவற்றில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், ஐஐடி-மண்டியின் (IIT-Mandi) இயக்குனர் லட்சுமிதர் பெஹெரா போன்றவர்களின்கீழ் நிறுவனமயமாக்கப்படும் தற்போதைய இந்திய அறிவுசார் அமைப்பானது (IKS), "புராண அறிவியல்", வரலாறாகச் சித்தரிக்கப்படும் புராணக் கதைகள், தொழில்நுட்பமாக மாற்றப்படும் சடங்குகள் மற்றும் அறிவியல் பூர்வமாகச் சரிபார்க்கக்கூடிய தன்மையை வெளிப்படையாகப் புறக்கணிக்கிறது.


இந்திய அறிவுசார் அமைப்பின் (IKS) மிகவும் தீவிரமான வடிவம், 2020-ம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) மூலம் முறைப்படுத்தப்பட்டது. இது உலோகவியல் மற்றும் பண்டைய கணிதத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பதிவு செய்வதன் மூலம் தொடங்கியது. பின்னர், வரலாற்று ஆய்விற்கும் மதக் கோட்பாட்டு மறுமலர்ச்சிக்கும் இடையிலான வேறுபாட்டை இது தொடர்ந்து குறைத்து வந்தது. தற்போது ஐஐடி-கரக்பூர், ஐஐடி-காந்திநகர், ஐஐடி-பம்பாய் மற்றும் ஐஐடி-கான்பூர் ஆகிய இடங்களில் இந்திய அறிவுசார் அமைப்பின் (IKS) மையங்கள் உள்ளன. குறிப்பாக, கான்பூர் மற்றும் மண்டி ஆகிய இடங்களில் உள்ள மையங்கள், "உணர்வு" (consciousness), மறுபிறவி மற்றும் "வேத" உயிரியல் தொடர்பான "ஆராய்ச்சியில்" முன்னணியில் உள்ளன. இச்சொற்கள் மேற்கோள் குறிகளுக்குள் இடப்பட்டுள்ளன. ஏனெனில், இந்திய அறிவுசார் அமைப்பைப் (IKS) போலவே, பெயரளவில் அவை எதைக் குறிப்பதாகக் கூறப்படுகின்றனவோ, உண்மையில் அவை அதைக் குறிப்பதில்லை.


போலி அறிவியலின் ஆதரவாளர்கள்


இந்திய அறிவுசார் அமைப்பு (IKS) மையங்களின் ஆதரவாளர்கள், இந்திய மனநிலையை "காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க" (decolonise) முயற்சிப்பதாகக் கூறுகிறார்கள். இருப்பினும், இந்தக் கூற்றை தீவிரமாக எடுத்துக்கொள்வது கடினம். 19-ம் நூற்றாண்டின் வங்காள மறுமலர்ச்சிக் காலத்தில், ஜெகதீஷ் சந்திர போஸ் மற்றும் பிரபுல்ல சந்திர ரே போன்ற ஆளுமைகள், இந்திய அடையாளத்தை முறையான அறிவியல் ஆய்வுகளுடன் ஒருங்கிணைத்தனர். காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது என்பது போலி அறிவியலுக்கு வழிவகுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்கள் நிரூபித்தனர். இந்திய அறிவுசார் அமைப்பு (IKS) மையங்கள், புராணங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளை ஐஐடி-க்களின் கட்டமைப்பிற்குள் புகுத்தத் திட்டமிட்டுள்ளன. இதன் மூலம், தங்கள் அரசியல்-மதக் கோட்பாடுகளுக்கு அறிவியல் அங்கீகாரம் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க, இந்த நிறுவனங்களின் நற்பெயரைப் பயன்படுத்திக்கொள்ள முற்படுகின்றன. சமீபத்தில், ஐஐடி-மண்டி (IIT-Mandi) மற்றும் ஐஐடி-கான்பூர் (IIT-Kanpur) ஆகியவை மறுபிறவி குறித்த 'அறிவியல்' சார்ந்த ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்ட ஒரு "சிறப்பு அமர்வை" நடத்தின. குழந்தைகளிடம் காணப்படும் 'முன்ஜென்ம நினைவுகளை' (past life memories) கண்டறிய, எலக்ட்ரோஎன்செஃபலோகிராஃபி தரவுகள் (Electroencephalography (EEG) data) மற்றும் ஜோதிட ரீதியான ஜாதகக் குறிப்புகளைப் பயன்படுத்துவதை இத்திட்டம் முன்மொழிந்தது. சர்ச்சைக்குரிய அமைப்பாகக் கருதப்படும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் 'உணர்வுசார் ஆய்வுகள் துறை'யைச் (Department of Perceptual Studies(DOPS)) சேர்ந்த பேச்சாளர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்வு உயர்கல்வித் துறையில் ஒரு நெருக்கடியை வெளிப்படுத்தியது. போலி அறிவியல் (pseudoscience) இப்போது முழுமையாக நிறுவனமயமாக்கப்பட்டுவிட்டது. இதில் பங்கேற்ற ஐஐடி-க்கள் (IITs), தங்கள் கல்விசார் தகுதிகளை மதக் கோட்பாட்டு நம்பிக்கைகளுக்காக விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. வட இந்தியாவில் உள்ள ஆறு வயது சிறுவன் ஒருவனின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு உலகளாவிய மெய்யியல் சார்ந்த கூற்றை (metaphysical claim) ஆதரிப்பதற்கான "முறையான வழிமுறையை" உருவாக்குவது குறித்து அந்த நிகழ்வில் பங்கேற்ற 'ஆய்வாளர்கள்' விவாதித்தனர். சாதாரண மொழியில் சொல்வதானால், இத்தகைய சான்றுகள் வெறும் "தனிப்பட்ட அனுபவக் குறிப்புகள்" (anecdotes) என்றே அழைக்கப்படுகின்றன.


ஒரு குழந்தையின் நரம்பியல் எதிர்வினை மறுபிறவிக் கோட்பாட்டை 'உறுதிப்படுத்த' முடியும் என்று கூறுவது, இந்தியத் தத்துவத்தின் சிறந்த மரபுகளுக்கே இழைக்கப்படும் அவமதிப்பாகும். அந்த மரபுகள் காலத்தின் விசித்திரமான நிகழ்வுகளாகத் திகழ்வதால் சிறந்தவையாக இருக்கவில்லை. மாறாக, அவற்றைப் பின்பற்றியவர்கள் தங்களுக்குக் கிடைத்த உண்மைகளைப் பற்றி நேர்மையாகவும் கவனமாகவும் சிந்தித்ததாலேயே அவை சிறந்தவையாகத் திகழ்கின்றன. இன்று நம்மிடம் உள்ள அறிவியல் உண்மைகள் தெரிந்திருந்தும், வெறும் ஒரு நபரை மட்டும் கொண்ட 'ஆய்வை' நம்புவதும், அல்லது இருமைவாதக் கோட்பாட்டை (உடல்-மனம் வேறுபட்டவை என்ற மறுபிறவிக் கொள்கை) நிரூபிக்க ஒரு பௌதீகக் கருவியான எலக்ட்ரோஎன்செஃபலோகிராஃபியை (Electroencephalography (EEG) பயன்படுத்துவதும் அபத்தமானதாகும்.


'முந்தைய பிறவி' வாழ்க்கைத் துணையின் புகைப்படங்கள் போன்ற "முந்தைய பிறவி தொடர்பான தூண்டுதல்களை" அக்குழந்தையிடம் காட்டி, அதன் மூளையின் எதிர்வினையைப் பதிவு செய்ய அந்த 'ஆய்வாளர்கள்' திட்டமிட்டனர். சோதனைக்கு முன்னதாகவே அக்குழந்தையுடன் "பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது" மற்றும் "முந்தைய பிறவி குடும்பம்" என்று கூறப்படுபவர்களிடமிருந்து புகைப்படங்களைச் சேகரிப்பது ஆகியவை அவர்களின் செயல்முறையில் அடங்கியிருந்தன. இதன் விளைவாக, ஆராய்ச்சியாளர்கள் தாங்களே பின்னர் கண்டுபிடித்ததாகக் கூறும் தூண்டுதல்களை உருவாக்குகிறார்கள். இது 'உறுதிப்படுத்தல் சார்பு' (confirmation bias) என்று அழைக்கப்படுகிறது. இதனுடன் ஜோதிடத்தையும் இணைப்பது முற்றிலும் அர்த்தமற்றது.


"மேற்கத்திய" அங்கீகாரத்தைப் பெறுவதற்காக இந்திய அறிவுசார் அமைப்பு (IKS) மையங்கள் உணர்வுசார் ஆய்வுகள் துறையுடன் (Department of Perceptual Studies(DOPS)) கைகோர்த்தன. ஆனால் உணர்வுசார் ஆய்வுகள் துறையின் (DOPS) பணிகள் அவற்றின் தளர்வான ஆய்வு முறைகளுக்காகப் பெயர் பெற்றவை. இறப்பிற்கும் மறுபிறவி என்று கூறப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், 'முந்தைய பிறவி குடும்பமும்' 'தற்போதைய குடும்பமும்' சந்திப்பதற்கும், தொடர்புகொள்வதற்கும், மறுபிறவி குறித்த கலாச்சாரக் கதைக்கு ஏற்ப தங்கள் தகவல்களை ஒருங்கிணைப்பதற்கும் போதுமான வாய்ப்புகள் இருப்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், மறுபிறவி மீது ஏற்கனவே நம்பிக்கை கொண்ட கலாச்சாரங்களில் மட்டுமே "முந்தைய பிறவி நினைவுகள்" பெரும்பாலும் பதிவாகின்றன என்ற உண்மையையும் அந்த 'ஆய்வாளர்கள்' ஆராயவில்லை.


கட்டாயப்படுத்தும் அணுகுமுறை


மாணவர் வன்முறை மற்றும் பாடநூல் திருத்தங்கள் மூலம் வெளியில் இருந்து கல்வித்துறையில் செல்வாக்கு செலுத்த முயற்சித்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்துத்துவத் திட்டம் இப்போது மேலிருந்து கீழாக அதிகாரத்தைப் பயன்படுத்தி உள்ளிருந்தே மாற்றத்தை ஏற்படுத்தும் அணுகுமுறைக்கு மாறியுள்ளது. முனைவர் பட்ட ஆய்வாளர்கள் (doctoral students) அந்த "சிறப்பு அமர்வில்" கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. களப்பணியாகப் பேய்களைத் தேடுவதற்கு இந்த மையங்கள் ஐஐடி-யின் நிதியையும் ஆராய்ச்சிப் பணியாளர்களையும் பயன்படுத்தியுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழுவின் 2023-ம் ஆண்டு வழிகாட்டுதல்களின்படி, உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் முக்கியமாகக் கல்விக்காக இந்திய அறிவுசார் அமைப்பு (IKS) பாடங்களை எடுக்க வேண்டும். ஐஐடி-களின் நிர்வாகிகள், தங்கள் நிறுவனங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறோம் என்பதை அறிந்திருந்தாலும், அந்த அபாயத்தை ஏற்கத் தயாராக இருக்கிறார்கள். ஏனெனில், அவர்களின் நோக்கம் அறிவியல் தலைமைத்துவம் அல்ல, அது உள்நாட்டு சித்தாந்த ஒருங்கிணைப்பு ஆகும்.


ஐஐடி-களில் பரவிவரும் போலி அறிவியலின் சீரழிவு, காலனித்துவ நீக்கத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான கோட்டை இன்னும் காணும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு, உயர்மட்ட இந்தியத் திறமையாளர்களை இடம்பெயர ஊக்குவிக்கும். இந்த "சிறப்பு அமர்வுகள்" காரணமாக, சிறந்த சர்வதேச விஞ்ஞானிகள் ஐஐடி பட்டங்களைத் தாழ்வாகக் கருதத் தொடங்குவது, ஒரு மேல்நிலை இந்தியக் கல்வியை உலகளாவிய பகுத்தறிவுத் தரங்களிலிருந்து பிரிப்பதன் மூலம் "தன்னிறைவு" (atmanirbhar) என்ற கருத்துக்கு வலு சேர்க்கும். இறுதியில், இந்தச் சுழற்சி முடிவுக்கு வந்து, இந்திய அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட நாகரிகத் திட்டத்தின் மீதான அவர்களின் விசுவாசத்தால் மட்டுமே மதிப்பிடப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.



Original Link: A Trojan horse has breached the IITs 


Share:

இந்தியாவின் டிஜிட்டல் இறையாண்மையை (Digital Sovereignty) அடைவதில் உள்ள சவால் -மனிஷ் வர்மா, ஸ்தானு ஆர் நாயர்

 இந்தியாவின் தொழில்நுட்பப் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திரரீதியானத் தன்னாட்சிக்கு டிஜிட்டல் இறையாண்மை (Digital sovereignty) இன்றியமையாதது.


நவீன உலகில், வர்த்தகம், அரசாங்கம் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகியவை செயல்படும் அடித்தளமாக டிஜிட்டல் உள்கட்டமைப்பு (digital infrastructure) விளங்குகிறது. இந்தச் சூழலில் பார்க்கும்போது, இந்தியாவின் இராஜதந்திரரீதியானப் பாதுகாப்புச் சொத்துக்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக, விரோத சக்திகளால் இந்திய சிசிடிவி (Indian closed-circuit television (CCTV)) வலையமைப்புகள் ஊடுருவப்பட்டதாக ஏப்ரல் 2026 அன்று வெளிவந்த சமீபத்திய அறிக்கைகளும், ஜூலை 2025-ல் நயாரா ஆற்றல் (Nayara Energy) நிறுவனத்தின் பெருநிறுவன மின்னஞ்சல், கூட்டுப்பணிக் கருவிகள் மற்றும் மேகக்கணினியில் சேமிக்கப்பட்ட தரவுகளுக்கான அணுகல் திடீரென மறுக்கப்பட்ட சம்பவமும், இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப இறையாண்மையின் எதிர்காலம் குறித்துக் கடுமையான கவலைகளை எழுப்புகின்றன. இந்திய சிசிடிவி (Indian closed-circuit television (CCTV)) பாதுகாப்பு மீறலுக்கு, CCTV உபகரணங்களில் சீன மென்பொருள் தளமான EseeCloud பயன்படுத்தப்பட்டதே காரணம் எனக் கூறப்பட்டாலும், நயாரா ஆற்றல் (Nayara Energy) நிறுவனத்திற்கு நிகழ்ந்த சம்பவம் என்பது, ரஷ்ய எரிசக்தி நிறுவனமான ரோஸ்நெஃப்ட் நயாரா ஆற்றல் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருந்ததன் காரணமாக, மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் ஒருதலைப்பட்சமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தடைகளை அமல்படுத்தியதன் விளைவாகும்.


இந்தச் சம்பவங்கள் ஒரு யதார்த்தமான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன. அங்கீகார அமைப்புகள், உற்பத்தித்திறன் தொகுப்புகள் மற்றும் மேகக்கணினித் தளங்கள் போன்ற முக்கியமான இந்திய டிஜிட்டல் உள்கட்டமைப்புகள், வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சொந்தமான மற்றும் அவற்றால் இயக்கப்படும் தொழில்நுட்பத் தளங்களில் இயங்குகின்றன. தரவுகள் இந்தியாவில் பௌதீகரீதியாகச் சேமிக்கப்பட்டிருந்தாலும், தற்போதுள்ள சில உலகளாவிய தரவு நிர்வாக விதிமுறைகளின் கீழ், வெளிநாட்டு மேகக்கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள தரவுகளைத் தங்கள் சொந்த அரசாங்கங்களுக்கு வழங்கும்படி கட்டாயப்படுத்தப்படலாம். இதன் விளைவாக, டிஜிட்டல் உள்கட்டமைப்பின் மீதான பயனுள்ள கட்டுப்பாடு இந்திய நிறுவனங்களிடமிருந்து விலகி, வெளிநாட்டுக் கார்ப்பரேஷன்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு மாறுகிறது.


வெளிநாட்டுக் கட்டுப்பாடு, தேசிய அபாயம்

இதன் முக்கிய விளைவு என்னவென்றால், வெளிநாட்டுத் தொழில்நுட்பத் தளங்களில் கட்டமைக்கப்பட்ட இந்திய வணிகங்கள் மற்றும் முக்கியமான அரசாங்க சேவைகளின் செயல்பாடுகள், வெளிநாட்டு அரசாங்கங்கள் எடுக்கும் முடிவுகளால் அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடியதாகின்றன. இந்திய நிறுவனங்களுக்கு முக்கியமான டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான அணுகலை மறுக்க வெளிநாட்டு அரசாங்கங்களால் வழங்கப்படும் உத்தரவுகள், அரசாங்க செயல்பாடுகளை இடைநிறுத்தலாம், வர்த்தகம் மற்றும் வணிகத்தைச் சீர்குலைக்கலாம், உற்பத்தியை நிறுத்தலாம் மற்றும் பாதுகாப்புத் திறன்களை பலவீனப்படுத்தலாம்.


உதாரணமாக, நவீனப் போர்முறை மென்பொருளால் வரையறுக்கப்படுவதால், போர் விமானங்கள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் மேம்பட்ட ரேடார் நிறுவல்களுக்கு ஆற்றலளிக்கும் உளவுத் தகவல்கள், வன்பொருளில் இல்லாமல், வெளிநாட்டு அரசாங்கங்களுக்குப் பதிலளிக்க வேண்டிய உற்பத்தியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் குறியீட்டில் (code) உள்ளது. ஒரு மோதலின்போது, இந்த உற்பத்தியாளர்களுக்கு மென்பொருள் உள்ளமைப்புகளை மாற்றுமாறு வெளிநாட்டு அரசாங்கங்களால் உத்தரவிடப்படலாம். இத்தகைய மாற்றங்கள் இலக்குத் துல்லியத்தைக் குறைக்கலாம், செயல்பாட்டு வரம்பைக் கட்டுப்படுத்தலாம் அல்லது போர்க்கள உளவுத் தகவல்களை எதிரிகளுக்குத் திருப்பிவிடவும் கூடும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 1999 கார்கில் மோதல் ஆகும். மோதலின் போது, மலைப்பாங்கான நிலப்பரப்பில் வழிசெலுத்துவதும் இலக்கு வைப்பதும் செயல்பாட்டுரீதியாக தீர்க்கமானதாக இருந்த ஒரு தருணத்தில், துல்லியமான ஜிபிஎஸ் ஆதரவைப் பெறுவதில் இந்தியா கட்டுப்பாடுகளை எதிர்கொண்டது.




இந்தியாவின் தனித்துவமான நிலைமை


வெளிநாட்டு டிஜிட்டல் உள்கட்டமைப்பைச் சார்ந்திருப்பதன் பாதிப்புகளும் அபாயங்களும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ், 2027-க்குள் அரசாங்கத் துறைகளை மைக்ரோசாஃப்ட் குழுக்கள் (Microsoft Teams) மற்றும் ஜூம் (Zoom) ஆகியவற்றிலிருந்து ஒரு இறையாண்மை கொண்ட காணொளிக் கலந்துரையாடல் தளத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளது. நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் பல ஜெர்மன் மாநிலங்கள், மைக்ரோசாஃப்ட் வேர்ட் (Microsoft Word), எக்செல் (Excel), அவுட்லுக் (Outlook) மற்றும் டீம்ஸ் (Teams) போன்ற முக்கியமான அமெரிக்க மென்பொருள் மற்றும் மேகக்கணினி சேவைகளுக்கு உள்நாட்டு மாற்றுகளை ஆராய்ந்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம், சுதந்திரமான ஐரோப்பிய மேகக்கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மூலம் அமெரிக்கத் தொழில்நுட்பத்தின் மீதான தனது சார்புநிலையைக் குறைக்க முயல்கிறது. அதேநேரத்தில், துருக்கி வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள் மீதான தனது சார்புநிலையைக் குறைத்து வருகிறது.


இருப்பினும், மற்ற நாடுகளைப் போலல்லாமல், அதிகார மாற்றக் கோட்பாட்டின் (Power Transition Theory) கட்டமைப்பிற்குள் பார்க்கும்போது இந்தியாவின் நிலைமை தனித்துவமான முறையில் அபாயகரமானதாக உள்ளது. இக்கோட்பாட்டின்படி, ரீதியில் தன்னாட்சியை தக்கவைத்துக் கொள்ள விரும்பும் ஒரு வளர்ந்து வரும் சக்தி, ஏற்கனவே நிலைபெற்ற ஒரு மேலாதிக்க சக்தியுடன் சமநிலையை நெருங்கும்போது, பிந்தையது முந்தையதைக் கட்டுப்படுத்தவே செயல்படும். வளர்ந்து வரும் போட்டியாளர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் அல்லது உள்வாங்கப்படுகிறார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது. இது ஏற்கனவே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் மிகப் பெரிய அளவில் நிலவி வருவதை நாம் காண்கிறோம். விரைவான வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் இந்தியா, இந்த முக்கியமான கட்டத்தை நோக்கி நகரும் அதே வேளையில், ஒரு கடினமான சவாலையும் எதிர்கொள்கிறது. அதுதான் வெளிநாட்டுத் தாக்கத்திலிருந்து விடுபட்ட தொழில்நுட்பக் கட்டமைப்பின் அடிப்படையில் தனது பொருளாதார வலிமையை உருவாக்குவது.



இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான உத்தி பல பரிமாணங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். கார்கில் மோதலின் போது ஜிபிஎஸ் (GPS) சேவை மறுக்கப்பட்ட நிகழ்வு, இந்தியா தனது சொந்த செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பை (satellite navigation system) உருவாக்கத் தூண்டுகோலாக அமைந்தது. சமீபகாலமாக, உள்நாட்டு குறைக்கடத்தி (semiconductor) சூழலமைப்பை வலுப்படுத்துவதும், சில மத்திய அரசு அமைச்சகங்களின் மின்னஞ்சல் அமைப்புகளை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 'ஜோஹோ' (Zoho) தளத்திற்கு மாற்றுவதும், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப இறையாண்மையை நோக்கிய இந்தியாவின் வளர்ந்து வரும் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன. யுபிஐ (UPI) மற்றும் ரூபே (RuPay) மூலம் உள்நாட்டு கட்டணச் செலுத்தல் உள்கட்டமைப்பை (indigenous payments infrastructure) உருவாக்கியதில் இந்தியா பெற்ற வெற்றி, வெளிநாட்டுக் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளால் ஏற்படும் பாதிப்புகளை முறியடிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. இந்த மாதிரியை மேகக்கணினி (cloud) உள்கட்டமைப்பு, மின்னணு வர்த்தகத் தளங்கள், அங்கீகார அமைப்புகள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தலாம்.


தரவு இறையாண்மை விவகாரத்தில் மத்திய அரசு இந்தியாவை இருட்டில் வைத்திருக்கிறது. ராகுல் காந்தி விமர்சனம்,


வெளிநாட்டு பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதில் உள்ள அபாயங்களைக் குறைக்க, அமெரிக்காவின் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் கொள்முதல் மாதிரியின் சில அம்சங்களை இந்தியா பின்பற்றலாம். பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவின் முக்கியத்துவத்தை இந்தியா நீண்டகாலமாக உணர்ந்திருந்தாலும், பொதுத்துறையை அதிகம் சார்ந்திருப்பது எதிர்பார்த்த முடிவுகளைத் தரவில்லை. 1980-களிலேயே அதற்கான திட்டம் தொடங்கப்பட்ட போதிலும், உள்நாட்டில் நவீன போர் விமானம் எதுவும் உருவாக்கப்படாதது இந்தத் தோல்விக்கு ஒரு தெளிவான சான்றாகும். இதற்கு மாறாக, அமெரிக்காவின் பாதுகாப்புத் தளங்கள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்றன. அதேவேளையில், அரசு ஆராய்ச்சி நிதியையும் உறுதியான கொள்முதல் உத்தரவாதத்தையும் வழங்குகிறது. இது ஒரு சிறந்த சுழற்சியை உருவாக்குகிறது. இதில் நிறுவனங்கள் தேசிய இராஜதந்திரரீதியல் நலன்களுடன் இணைந்து செயல்படும் அதே வேளையில், அதிநவீன திறன்களையும் வளர்த்துக் கொள்கின்றன. போட்டித்தன்மை வாய்ந்த கட்டமைப்பின்கீழ் 'மேம்பட்ட நடுத்தர ரக போர் விமானம்' (Advanced Medium Combat Aircraft(AMCA)) தயாரிப்பில் தனியார் துறையை ஈடுபடுத்துவதன் மூலம் இந்தியா சமீபகாலமாக இந்த திசையில் நகரத் தொடங்கியுள்ளது.


டிஜிட்டல் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான மற்றொரு வழி, பிற நாடுகளுடன் இணைந்து முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதாகும். இது பரஸ்பர சார்புநிலையை உறுதிசெய்து, இந்தியாவின் இராஜதந்திர ரீதியில் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளின் அபாயத்தைக் குறைகிறது. இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் (BrahMos) ஏவுகணைத் திட்டம் இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகும். இந்த உத்தியின் ஒரு முக்கிய நன்மை என்னவென்றால், உலகளாவிய அமைப்போடு இணைந்திருக்கும் அதே வேளையில், தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்ள இது இந்தியாவை அனுமதிக்கிறது. சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் அபாயத்தைத் தவிர்க்க இது இந்தியாவுக்கு உதவுகிறது. முக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்த சீனாவின் அணுகுமுறையிலிருந்து இது மாறுபட்டதாகும். இந்தச் சூழலில், சமீபத்திய இரண்டு நிகழ்வுகள் நம்பிக்கையூட்டுவதாக உள்ளன. முதலாவது, இந்தியா-அமெரிக்கா தொழில்நுட்ப ஒத்துழைப்பின் மூலம் குஜராத்தின் சனந்த் (Sanand) பகுதியில் நிறுவப்பட்ட 'மைக்ரான் டெக்னாலஜி' (Micron Technology) நிறுவனத்தின் குறைமின்கடத்தி பிணைத்தல், சோதனை, குறியிடுதல் மற்றும் பொதிகட்டுதல் (Assembly, Test, Marking and Packaging (ATMP)) மையத்தில் வணிகரீதியான உற்பத்தி தொடங்கப்பட்டதாகும். இரண்டாவது, சீனத் தொழில்நுட்பத்தின்மீது சார்ந்திருப்பதைக் குறைப்பதையும், நம்பகமான தொழில்நுட்பக் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட, செயற்கை நுண்ணறிவு மற்றும் விநியோகச் சங்கிலிப் பாதுகாப்பு குறித்த அமெரிக்கத் தலைமையிலான முன்னெடுப்பான 'பாக்ஸ் சிலிக்கா'வில் (Pax Silica) சேர இந்தியா எடுத்த முடிவு ஆகும்.


ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) இடைவெளியைக் குறைத்தல்


எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியா தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (research and development (R&D)) செலவினங்களை உலகத் தலைவர்களுக்கு இணையாக அவசரமாக உயர்த்த வேண்டும். 2000 மற்றும் 2020-க்கு இடையில், இந்தியாவின் மொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக வெறும் 0.74% ஆக இருந்தது. இது உலக சராசரியான 2.07%-ஐ விடக் குறைவு. இந்தத் தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினப் பற்றாக்குறை, இந்தியாவின் எதிர்காலத் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் இறையாண்மை குறித்துக் கடுமையான கவலைகளை எழுப்புகிறது. இந்தியாவைப் போன்ற பெரும் மக்கள் தொகை மற்றும் வலுவான பொருளாதார லட்சியங்களைக் கொண்ட ஒரு நாட்டிற்கும், ஏற்கனவே நிலைபெற்ற உலக வல்லரசுகளுக்கு இணையாகத் திகழ விரும்பும் நாட்டிற்கும், முழுமையான தொழில்நுட்ப இறையாண்மையை அடைவதற்கான செலவை ஏற்க முடியுமா என்பது முக்கியக் கேள்வி அல்ல. மாறாக, அத்தகைய இறையாண்மை இல்லாமல் செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளைத் தாங்கிக்கொள்ள முடியுமா என்பதே உண்மையான கேள்வி. தொழில்நுட்ப இறையாண்மைக்கான அபாயங்களைக் குறைப்பதில் இந்தியா எந்த அளவிற்கு வெற்றி பெறுகிறது என்பது, பெருகிவரும் பிளவுபட்ட சர்வதேச ஒழுங்கில் அதன் பொருளாதாரப் போட்டித்திறனையும் இராஜதந்திரரீதியானத் தன்னாட்சியையும் (strategic autonomy) தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதையும் இது தீர்மானிக்கும்.


மணிஷ் வர்மா ஒரு தொழில்நுட்ப உத்தி வகுப்பாளர் (Technology Strategist); இலாப நோக்கற்ற தொழில்நுட்பச் சிந்தனைக் குழுவான அவினியம் அறக்கட்டளையின் (Avinyum Foundation) சிறப்பு ஆய்வாளர் (Distinguished Fellow); மற்றும் இந்திய மேலாண்மைக் கழகம், கோழிக்கோட்டின் (IIM Kozhikode) முனைவர் பட்ட (Practice Track) ஆய்வாளர் ஆவார். முன்னதாக, இவர் ஒரு பன்னாட்டு நிதி-தொழில்நுட்ப நிறுவனத்தில் சர்வதேச வாடிக்கையாளர் செயல்பாடுகள் பிரிவின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.


ஸ்தானு ஆர். நாயர் இந்திய மேலாண்மைக் கழகம், கோழிக்கோட்டில் பொருளாதாரம் மற்றும் பொதுக் கொள்கை ஆகிய பாடங்களைக் கற்பிக்கிறார்.


Original Link: The challenge of India’s digital sovereignty


Share: