Showing posts with label semiconductors. Show all posts
Showing posts with label semiconductors. Show all posts

குறைமின்கடத்தி 2.0 எதுபோன்ற இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது? -அரூன் தீப்

குறைமின்கடத்தி 2.0 முக்கியப்பகுதிகள் யாவை? இது முதல் கட்டத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? இந்தியா ஏன் குறைமின்கடத்தி (semiconductor) உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது? கைப்பேசி உற்பத்தித் திட்டம் எது போன்ற ஊக்கத்தொகைகளை வழங்குகிறது?


தற்போதைய செய்தி:


ஜூலை 15 அன்று, மத்திய அமைச்சரவை 'இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின்' (India Semiconductor Mission (ISM)) இரண்டாம் கட்டம் மற்றும் 'கைப்பேசி உற்பத்தித் திட்டம்' (Mobile Phone Manufacturing Scheme (MPMS)) ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்தது. இந்தத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு முறையே ₹1.27 லட்சம் கோடி மற்றும் ₹62,500 கோடியாகும். இந்தியாவில் அடுத்தகட்ட செமிகண்டக்டர்  உற்பத்தி, ஒன்றிணைப்பு (assembly) மற்றும் பொதியிடல் (Packaging) வசதிகளை ஊக்குவிப்பதையும், அதேவேளையில் நாட்டில் கூடுதல் கைப்பேசி ஒன்றிணைப்பு மற்றும் உதிரிபாக உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சிகளைத் தொடர்வதையும் இந்தத்திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தத்திட்டத்தின் ஐந்தாண்டு காலப்பகுதியில் ₹4 லட்சம் கோடி முதலீடு, ₹2 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி மற்றும் ₹1 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதியும் நடைபெறும் என்று அரசு எதிர்பார்க்கிறது.


இந்த திட்டம் முதல் கட்டத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?



இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின் முதல் கட்டம் ₹76,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர், 2022-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, குஜராத்தின் சானந்தில் அமைந்துள்ள Micron நிறுவனத்தின் நினைவக (Memory Chip) சிப் பொதியிடல் (Packaging) ஆலை போன்ற பெரிய முதலீட்டுத் திட்டங்களுக்கு 50% வரை மூலதன மானியம் (Capital Subsidy) வழங்கும் அதிகாரம் இந்தத்திட்டத்திற்கு வழங்கப்பட்டது. சிறிய மின்னணு உதிரிபாகங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட 'மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்திற்கும்' (Electronics Component Manufacturing Scheme) நிதி ஒதுக்கப்பட்டது.


இரண்டாம் கட்டத்தின் துல்லியமான விவரங்களை விளக்கும் அரசிதழ் (Gazette) அறிவிப்பு அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Electronics and Information Technology (MeitY)) கூடுதல் செயலாளர் அமிதேஷ் குமார் சின்ஹா ஆகியோர், திட்டத்தின் விரிவுபடுத்தப்பட்ட செயல்பாட்டு வரம்பு குறித்து சில விவரங்களை வெளியிட்டுள்ளனர்.


இந்திய குறைமின்கடத்தி திட்டத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம், முதல் கட்டத்தில் பகுதியளவில் மட்டுமே உள்ளடக்கப்பட்ட துறைகளையும் சேர்த்து, இனி மின்னணு உற்பத்திச் சூழலமைப்பின் பரந்த பகுதிகளை கொண்டு இந்தத்திட்டம் செயல்படுவாதகும். இதில், முந்தைய கட்டத்தில் ஓரளவு மட்டுமே கவனிக்கப்பட்ட துறைகளும் இப்போது இடம்பெற்றுள்ளன. திட்டத்தில், முதல் கட்டத்தில் சிறிதளவு மட்டுமே கவனம் செலுதப்பட்ட துறைகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் சிப் வடிவமைப்புத் திறமைகளை (Chip Design Talent) ஊக்குவித்தல், மூலதன இயந்திரங்கள் (Capital Machinery), சிப் உற்பத்தி ஆலைகளில் பயன்படுத்தப்படும் பெரிய உபகரணங்கள், குறைமின்கடத்தி தரத் தூய்மையுடைய (Semiconductor-grade) இரசாயனங்கள் மற்றும் வாயுக்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.




குறைந்த அளவிலான ஊக்கத்தொகைகள் இருந்தாலும், இந்தியாவில் குறைமின்கடத்தி துறை அதிக ஈர்ப்புமிக்கதாக மாறக்கூடும் என்பதால், புதிய திட்டத்தின் கீழ் மூலதன மானியங்கள் 30-40% ஆகக் குறைக்கப்படும் என்று  சின்ஹா ​​தெரிவித்தார்.  இது போன்ற திட்டங்களை ஈர்ப்பதற்காக, மாநில அரசுகள் அடையாள விலைக்கு நிலத்தை வழங்குவதோடு, மத்திய அரசு வழங்கும் சலுகைகளுக்கு அதிகமாக தங்கள் சொந்த சலுகைகளையும் வழங்கி அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, மத்திய அரசு நிலத்திற்கான ஆதரவை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.


முதல் கட்டத்தின் முடிவுகள் என்னவாக இருந்தன?


முதல் கட்டத்தின்கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட 12 உற்பத்தி மற்றும் பொதியிடல் (Packaging) அலகுகளில், ₹1.64 லட்சம் கோடி முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானவை குறைமின்கடத்தி பொதியிடல் (Semiconductor Packaging) அலகுகளாகும். இது போன்ற வகையான 9 அலகுகள் குஜராத், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அசாம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சிலிக்கான்  உற்பத்தி  அலகும், ஒரு கேலியம் நைட்ரைடு (Gallium Nitride) அடிப்படையிலான மைக்ரோ எல்.இ.டி. (Micro LED) காட்சித் திரை உற்பத்தி (Fabrication) அலகும் அமைக்கப்பட்டுள்ளன. டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை 2028-ஆம் ஆண்டில் வணிகரீதியிலான உற்பத்தியைத் தொடங்க உள்ளது.


இந்தத் திட்டத்தில், வடிவமைப்பு-இணைந்த ஊக்கத்தொகை (Design-Linked Incentive (DL)I) திட்டமும் இடம்பெற்றுள்ளது. திட்டத்தின்கீழ் 24 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், குறைமின்கடத்தி வடிவமைப்பிற்குத் தேவையான அதிக விலை கொண்ட மென்பொருட்களுக்கான உரிமங்களை அரசு பெற்று, அவற்றை பல்கலைக்கழகங்கள் மற்றும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு  இலவசமாக வழங்கியுள்ளது. அதேபோல், புதுப்பிக்கப்பட்டு வரும் மொஹாலி குறைமின்கடத்தி ஆய்வகம், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் வடிவமைக்கப்பட்ட சிப்களை (chips) உற்பத்திக்கு முந்தைய இறுதி வடிவமைப்பாக மாற்றும் (tape out) பணிக்கான ஒரு மையமாக உருவாக்கப்பட்டு வருகிறது.



இந்தியா ஏன் குறைமின்கடத்தி உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது?


கோவிட்-19 காலகட்டத்தின் விநியோகச் சங்கிலித் தடைகள் முதல், சீனாவுடனான வர்த்தகப் போரின்போது அமெரிக்கா விதித்த ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் வரை, இந்தியா உலகளாவிய மின்னணு மதிப்புச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அதிகரித்துள்ளன. சிப் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றும் நிறுவனங்களைக் கொண்ட நெதர்லாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளின் நிலையை எட்டுவதற்குப் பல ஆண்டுகள் தேவைப்பட்டாலும், உள்நாட்டுத் திறன்களை வளர்த்துக்கொள்வது முக்கியமானது என்று அரசு வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய வசதிகளில் இலக்காகக் கொள்ளப்பட்ட சிப்புகள் எந்தளவு அதிநவீனமானவை?


மிகவும் சக்திவாய்ந்த தொலைபேசிகள் 7 நானோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான செயலாக்க முனையைக் கொண்ட “முன்னோடி” தர சிப்களைப் பயன்படுத்தும் அதே வேளையில், மத்திய அரசு 28 நானோமீட்டர் சிப்களின் உற்பத்தியையே இலக்காகக் கொண்டுள்ளது. இவை “பாரம்பரிய செயல்முறை முனைகள் (Legacy Process Nodes)” மூலம் தயாரிக்கப்படும் சிப்கள் ஆகும். தினமும் பயன்படுதப்படும் மின்னணு சாதனங்களில், அளவும், கணினி செயல்திறனும் முக்கியக் கட்டுப்பாடுகளாக இல்லாததால், இத்தகைய 28 நானோமீட்டர் சிப்களுக்கு மிகப் பெரிய சந்தை உள்ளது என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கினார்.


இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின்' (IIndia Semiconductor Mission (ISM))   2.0 முன்னேறிச் செல்லும்போது, அதுபோன்ற சிப்களுக்கான உள்நாட்டு அறிவுசார் சொத்துரிமை (domestically owned intellectual property) மற்றும் ஆராய்ச்சியின் அளவை மேம்படுத்துவதன் மூலம், குறைமின்கடத்தி சூழலமைப்பு  முன்னணி செயல்முறை முனைகள் (Frontier Nodes) நோக்கி முன்னேறும் என்று அரசு நம்புகிறது. இந்தியாவில் குறைமின்கடத்தி வடிவமைப்பாளர்கள் (Semiconductor Designers) அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு நிறுவனங்களுக்காகவோ அல்லது அவற்றை சார்ந்தே பணியாற்றுகின்றனர். இதனால், உரிமக் கட்டண (Royalties) வருவாயும், தொழில்நுட்ப நிபுணத்துவமும் உள்நாட்டு தொழில்துறைக்கு வெளியே  இருக்கின்றன.


கைப்பேசி உற்பத்தித் திட்டம் (Mobile Phone Manufacturing Scheme (MPMS)) ஏன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது


உலகம் முழுவதும் விற்பனையாகும் iPhone-களில் அதிகரித்து வரும் ஒரு பகுதி இந்தியாவில் ஒன்றிணைக்கப்பட்ட கைபேசிகளாக இருந்தாலும், அவற்றில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான உதிரிபாகங்கள் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட (Indian-designed) கைபேசிகள் சந்தையில் மிகக் குறைவாகவே உள்ளன. கைப்பேசி உற்பத்தித் திட்டம், உள்நாட்டு கைபேசி ஒன்றிணைப்பு (Domestic Phone Assembly) திறனை விரிவுபடுத்துவதன் மூலம் துணைத் தொழில் சந்தையை வளர்ப்பதற்கும், அதே நேரத்தில் உள்நாட்டு வடிவமைப்பு (Domestic Design) மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (Research and Development (R&D)) நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக, கைபேசிகளில் இடம்பெறும் உள்ளூர் வடிவமைப்பின் அளவைப் பொறுத்து, 2.25% முதல் 5% வரை ஊக்கத்தொகைகளை (Incentives) வழங்கும் வகையில் இந்தத்திட்டம் உருவக்கப்பட்டுள்ளது.


Original Link: What goals does Semicon 2.0 aim to achieve?  

Share:

இந்தியாவின் குறைமின்கடத்தி துறை ஊக்குவிப்பு: அதி-தீவிர புற ஊதாக் கதிர் லித்தோகிராபி மற்றும் கேலியம் நைட்ரைடு தொழில்நுட்பம்.

 தற்போதைய செய்தி ?


16-17 மே மாதம் 2026-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நெதர்லாந்து நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவின் குறைமின்கடத்தி உற்பத்தி இலக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கத்தைப் பெற்றது. இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி அவர்களும் நெதர்லாந்தின் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களும் குறைமின்கடத்திகள், முக்கியமான கனிமங்கள், இடப்பெயர்வு, நீர் மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த 17 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.



முக்கிய அம்சங்கள்:


1. குறைமின்கடத்திகளுக்கான ஒரு பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாக, தோலேராவில் அமையவிருக்கும் தனது 300 மிமீ (12-அங்குல) குறைமின்கடத்தி உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கும், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஆதரவளிக்கும் வகையில், ‘Tata Electronics’ மற்றும் ‘Advanced Semiconductor Materials Lithography, ஆகிய நிறுவனங்களுக்கிடைய குறைமின்கடத்திகளுக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இந்தியாவின் குறைமின்கடத்தி உற்பத்தி இலக்குகளில் மிகப்பெரிய முன்னேற்றதை குறிக்கிறது.


2. ‘Advanced Semiconductor Materials Lithography’ நிறுவனம் ராஜதந்திர ரீதியாக ஏன் முக்கியமானது? மேம்பட்ட குறைமின்கடத்திகளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் மிகவும் அதிநவீன அமைப்புகளான, அதி-தீவிர புற ஊதா (extreme ultraviolet (EUV)) லித்தோகிராபி இயந்திரங்களை உற்பத்தி செய்யும் உலகின் ஒரே நிறுவனம் ‘Advanced Semiconductor Materials Lithography’ நிறுவனம் ஆகும். ‘Advanced Semiconductor Materials Lithography’ நிறுவனத்தின் இயந்திரங்கள் இல்லாமல், அதிநவீன சில்லுகளின் உற்பத்தி  ஏறக்குறைய சாத்தியமற்றதாகிவிடும்.


3. ‘Advanced Semiconductor Materials Lithography’ நிறுவனத்தின் கூற்றுப்படி, அதி தீவிர-புற ஊதா லித்தோகிராபி 13.5 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட ஒளியைப் பயன்படுத்தி மைக்ரோசிப்களை அச்சிடுகிறது. இது ஏறக்குறைய எக்ஸ்-கதிர் வீச்சு வரம்பிற்குச் சமமானது. லித்தோகிராபி, முறையாக 'ஒளி கல்லச்சு வரைவியல்' (photolithography’) என்று அழைக்கப்படுகிறது. அச்சிடப்பட வேண்டிய வடிவத்தின் வரைபடத்தின் (இதனை ‘மாஸ்க்’ அல்லது ‘ரெட்டிக்கிள்’ என்று அழைக்கின்றனர்) வழியாக ஒளி செலுத்தப்பட்டு இந்த வடிவங்கள் சிப்பில் உருவாக்கப்படுகின்றன. 



4. இந்தச் சிப் வடிவமைப்பு முறை ஒளியின் மூலம் குறியீடாக்கப்படுகிறது. இது கணினியின் ஒளியியல் அமைப்பை சுருக்கி, அந்த வடிவத்தை ஒளியால் பாதிக்கப்படக்கூடிய ஒரு சிப் தயாரிக்கப் பயன்படும் வட்ட வடிவ சிலிக்கான் தட்டு (Photosensitive silicon wafer)) மீது துல்லியமாகக் குவிக்க உதவுகிறது. ஒரு முறை வடிவமைப்பு அச்சிடப்பட்ட பிறகு, கணினி அந்த சிலிக்கான் தட்டை லேசாக நகர்த்தி, அதன் மீது மற்றொரு நகலை அச்சிடுகிறது.


5. அதி-தீவிர புற ஊதாக் கதிர் தொழில்நுட்பம் (extreme ultraviolet (EUV)), மூரின் விதியை (Moore’s Law) பின்பற்றி முன்னெடுத்துச் செலுத்துவதோடு, புதுமையான மின்பெருக்கி (transistor) வடிவமைப்புகள் மற்றும் சிப் கட்டமைப்புகளுக்கும் ஆதரவளிக்கிறது. 1965-ஆம் ஆண்டில், ‘Intel’ நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்டன் மூர், ஒரு மைக்ரோசிப்பில் உள்ள மின்பெருக்கிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதைக் கவனித்தார்.



6. அடுத்த பத்து ஆண்டுகளில் ஒரு மைக்ரோசிப்பில் உள்ள மின்பெருக்கிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாகும் என்று அவர் கணித்தார். பின்னர் 1975-ஆம் ஆண்டீல், இதனை ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை என அவர் மாற்றியமைத்தார். இவருடைய இந்தக் கணிப்புதான் 'மூரின் விதி' (Moore’s Law) என்று அழைக்கப்படுகிறது.


மின்பெருக்கிகள் என்பவை ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் (Integrated Circuits (IC)) மற்றும் மைக்ரோசிப்புகளின் மிக முக்கியமான அடிப்படை அமைப்புகள் ஆகும். அவை மின் சமிக்ஞைகளின் (Electrical signals) ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய மின்னணு நிலைமாற்றிகள் அல்லது பெருக்கிகள் (Amplifiers) ஆகும்.  இவை சிப்கள் தகவல்களைச் செயலாக்கவும் சேமிக்கவும் உதவுகின்றன. இவை சிலிக்கான் போன்ற குறைமின்கடத்தி பொருட்களால் செய்யப்படுபவை.


7. மூரின் விதி என்பது இயற்பியல் மற்றும் வேதியியலில் நாம் அறிந்த ஒரு இயற்கை விதி அல்ல. ஆனால், அது தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்று, ஒரு சிப்பில் உள்ள மின்பெருக்கிகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து இரட்டிப்பாக்குவதன் மூலம், சில்லு தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு புதிய தலைமுறை சிப்பிலும் குறைந்த செலவில் அதிக செயல்திறனை வழங்கி வருகின்றனர்.


8. இதைச் சாத்தியமாக்க, மேம்பட்ட சிப் செயல்திறனை வழங்குவதற்காக, சிப் தயாரிப்பாளர்கள் அரிதான மூலப்பொருட்கள், மேம்பட்ட பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் மற்றும் மிகவும் சிக்கலான 3D வடிவமைப்புகளை அதிகளவில் சார்ந்துள்ளனர். இங்குதான் அதி-தீவிர புற ஊதாக் கதிர் (extreme ultraviolet (EUV)) லித்தோகிராஃபி முக்கியப் பங்கு வகிக்கிறது. இது சிப் தயாரிப்பாளர்கள் மிகக் குறைந்த செலவில் சிப்பின் அளவைச் சுருக்க உதவுகிறது மற்றும் குறைமின்கடத்தித் துறை தொடர்ந்து மூரின் விதியைப் பின்பற்றி முன்னேற வழிவகுக்கிறது.






இந்தியா-நெதர்லாந்து சந்திப்பின் முக்கிய விளைவுகள் என்னென்ன?


1. இந்தியாவும் நெதர்லாந்தும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை ஒரு 'உத்திசார் கூட்டாண்மையாக' உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளன. இதற்காக, ஐந்து ஆண்டுகால (2026-30) விரிவான ஒரு கூட்டுச் செயல்பாட்டுத் திட்டத்திற்கு இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.


2. இரு நாடுகளும்  குறைமின்கடத்தி (Semiconductor) ஆராய்ச்சித் துறையில் “புதிய அறிவுப் பாலம்” (Brain Bridge) ஒன்றை உருவாக்கியுள்ளன. இதற்காக ஐந்தோவன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ட்வென்டே பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் ஆறு முன்னணி கல்வி நிறுவனங்களான இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு (Indian Institute of Science, Bangalore), இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை (Indian Institute of Technology, Bombay) இந்திய தொழில்நுட்பக் கழகம், டெல்லி, இந்திய தொழில்நுட்பக் கழகம், காந்திநகர், இந்திய தொழில்நுட்பக் கழகம், கவுகாத்தி மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், மதராஸ் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.


3. பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பைப் பொறுத்தவரை, பாதுகாப்புத் தொழில் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு உட்பட, இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்காக, பாதுகாப்பு அமைச்சகங்கள் மற்றும் சர்வதேச இராணுவ ஒத்துழைப்பு இயக்குநரகங்களுக்கு இடையே ஒரு முறையான "முப்படை கூட்டுத் தொடர்பை" திட்டமிட அவர்கள் ஒப்புக்கொண்டனர்.


4. இடப்பெயர்வு ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், சட்டவிரோதமாகப் குடியேறுவது மற்றும் மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கும், அவற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும் இருநாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில், அதிகத் திறமை வாய்ந்த நிபுணர்களின் முறையான மற்றும் நியாயமான இடப்பெயர்வை ஊக்குவிக்கவும் இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.




கேலியம் நைட்ரைடு தொழில்நுட்பம்


1. இந்த மாதத் தொடக்கத்தில், ஒன்றிய அமைச்சரவை இந்தியாவில் இரண்டு புதிய குறைமின்கடத்தி ஆலைகளுக்கு ஒப்புதல் அளித்தது. அவற்றில் ஒன்று, நாட்டின் முதல் திரை தயாரிப்பு ஆலையாக அமையக்கூடும். இவற்றுடன், குஜராத், அசாம், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் இந்திய குறைமின்கடத்தி இயக்கத்தின் (India Semiconductor Mission (ISM)) முதல் கட்டத்தின்கீழ் மொத்தம் 12 சிப் ஆலைகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.


2021-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய குறைமின்கடத்தி இயக்கத்தின் 1.0, முதல் கட்டமானது உற்பத்தி மற்றும் திரை உற்பத்தி வரை ஒரு முழுமையான சிப் சூழலமைப்பை உருவாக்குவதற்கான அரசின் ஆதரவுடனான ஒரு முயற்சியாகக் கருதப்பட்டது. இது, சிப்களை உற்பத்தி செய்யக்கூடிய  உள்கட்டமைப்பை அமைப்பதில் கவனம் செலுத்துகிறது. டாடா குழுமத்தால் அமைக்கப்படும் ஒரு உற்பத்தி ஆலை முதல், ‘Micron Technology’, ‘Tatas’, ‘CG Power’, and ‘Kaynes Semicon’, போன்ற நிறுவனங்களின் பொருத்துதல், சோதனை மற்றும் பேக்கேஜிங் ஆலைகள் வரை, சிப்களை உற்பத்தி செய்யக்கூடிய இயற்பியல் உள்கட்டமைப்பை அமைப்பதில் கவனம் செலுத்துகிறது.


பிப்ரவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய குறைமின்கடத்தி இயக்கம் 2.0, தற்போது அரசாங்கம் தனது கவனத்தை உற்பத்தி ஆலைகளைத் தாண்டி மற்றவைகளை விரிவுபடுத்திக்கொள்ள வழிவகுக்கிறது. இது குறைமின்கடத்தி உபகரணங்கள், மூலப்பொருட்கள், வேதிப்பொருட்கள், வடிவமைப்பு கருவிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), பயிற்சி மற்றும் விநியோகச் சங்கிலி உறுதித்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.


2. ‘Crystal Matrix Ltd’ நிறுவனத்தால் மினி/மைக்ரோ-எல்இடி (Mini/Micro-LED - Light Emitting Diode) டிஸ்ப்ளே மாடல்களை தயாரிப்பதற்காக, கேலியம் நைட்ரைடு  (Gallium Nitride (GaN)) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ரூ. 3,068 கோடி மதிப்பிலான 'கூட்டு குறைமின்கடத்தி உற்பத்தி மற்றும் பொருத்துதல்'  ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


3. குறைமின்கடத்திகள் சிலிக்கான் போன்ற பொருட்களால் ஆனவை மற்றும் ஒரு கடத்திக்கும் ஒரு மின்காப்புப் பொருளுக்கும் இடைப்பட்ட மின் கடத்துத்திறனைக் கொண்டுள்ளன. குறைமின்கடத்திகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் கூறு சிலிக்கான் ஆகும்.


4. கடந்த சில ஆண்டுகளில், மற்றொரு குறைமின்கடத்தியான கேலியம் நைட்ரைடு (GaN), அதிக சக்தி மற்றும் உயர் அதிர்வெண் பயன்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதால், மின்னணுவியலில் தனக்கான இடத்தைப் பெற்று வருகிறது.


5. கேலியம் நைட்ரைடு (GaN) என்பது சிலிக்கானுக்கு ஒரு சிறந்த மாற்றாகக் கருதப்படும் ஒரு பொருளாகும். சிலிக்கானுடன் ஒப்பிடும்போது, இது நீண்டநேரத்திற்கு அதிக மின்னழுத்தத்தைக் கடத்துவதில் மிகவும் சிறந்தது. மேலும், இது மின்சாரம் வேகமாகப் பாய்வதற்கும் அனுமதிக்கிறது.


6. கேலியம் நைட்ரைடு மிகக் குறைவான வெப்பத்தையே வெளியிடுவதால், இதன் கட்டமைப்புகளை மற்ற பொருட்களுடன் ஒப்பிடும்போது மிகவும் நெருக்கமாக அடுக்க முடியும். இதன் காரணமாக ஒட்டுமொத்த சாதனத்தின் அளவும் மிகவும் சிறியதாக இருக்கும்.














குறைமின்கடத்தி ஆலை

இடம்

டாடா எலக்ட்ரானிக்ஸ் குறைமின்கடத்தி ஆலை

குஜராத்

மைக்ரான் தொழில்நுட்பம்

குஜராத்

கெய்ன்ஸ் குறைமின்கடத்தி

குஜராத்

சிஜி குறைமின்கடத்தி

குஜராத்

கிரிஸ்டல் மேட்ரிக்ஸ்

குஜராத்

சுச்சி செமிகான்

குஜராத்

டாடா எலக்ட்ரானிக்ஸ் அசெம்பிளி யூனிட்

அஸ்ஸாம்

எச்.சி.எல்-ஃபாக்ஸ்கான்

உத்தரப் பிரதேசம்

SIC குறைக்கடத்தி

ஒடிசா

3D கண்ணாடி தீர்வுகள்

ஒடிசா

தொகுப்பு தொழில்நுட்பங்களில் மேம்பட்ட அமைப்பு

ஆந்திர பிரதேசம்

கான்டினென்டல் சாதனம்

பஞ்சாப்

Original link:

India’s semiconductor push: EUV lithography and GaN technology.


Share:

பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தின் பின்னணியில் குறைமின்கடத்தி முன்னெடுப்பு - சக்தி பிரசாத் ஸ்ரீசந்தன்

மேம்பட்ட குறைமின்கடத்திகளைத் தயாரிக்கத் தேவையான, அதி-புற ஊதாக் (extreme ultraviolet (EUV)) அச்சுக்கலை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் உலகின் ஒரே நிறுவனம் ASML ஆகும்.


பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததற்குக் காரணம், அது வெறும் ராஜதந்திரரீதியான அடையாளமாக இருந்தது மட்டுமல்ல, இந்தியாவின் தொழில்நுட்ப  இலக்குகளுக்கும் குறைமின்கடத்திச் சூழலமைப்பில் டச்சு ஆதிக்கத்திற்கும் இடையே வளர்ந்து வரும் ஒருங்கிணைப்புமே ஆகும். குறைக்கடத்திகள், பொருளாதாரப் போட்டித்திறன், இராணுவத் திறன், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் இறையாண்மை ஆகியவற்றை வடிவமைக்கும் புதிய புவிசார் அரசியல் அதிகார மையமாக  மாறியுள்ள ஒரு காலகட்டத்தில் இந்தப் பயணம் அமைந்தது.

உருவாகிவரும் இந்தக் கூட்டாண்மையில், உலகளாவிய சிப் சூழலமைப்பில் ஏறக்குறைய நிலை வகிக்கும் டச்சுத் தொழில்நுட்ப நிறுவனமாக ASML திகழ்கிறது. அதிநவீன குறைக்கடத்திகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும், மிகவும் நுட்பமான அமைப்புகளான 'அதி-புற ஊதாக் கதிர் அச்சுக்கலை இயந்திரங்களை' (lithography machines) உற்பத்தி செய்யும் உலகின் ஒரே நிறுவனம் ASML ஆகும். அதன் இயந்திரங்கள் இல்லையேல், அதிநவீன சிப்களின் உற்பத்தி என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகிவிடும். இது, ஒப்பீட்டளவில் ஒரு சாதாரண ஐரோப்பிய சக்தியாகத் திகழ்ந்த நெதர்லாந்தை, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உலகளாவிய தொழில்நுட்பப் போட்டியில் ஒரு முக்கிய நாடாக  உருமாற்றியுள்ளது.


இந்தியா இந்த ராஜதந்திரத்தைப் புரிந்துகொண்டுள்ளது. 'மேக் இன் இந்தியா', 'டிஜிட்டல் இந்தியா' மற்றும் 'இந்தியா குறைமின்கடத்தி திட்டம்' போன்ற முன்முயற்சிகளின்கீழ், நாட்டின் பரந்த தொழில்நுட்பத் தன்னிறைவுக்கான வளர்ச்சிக்கு குறைக்கடத்திகள் முக்கியமானவை என்பதை இந்தியா அடையாளம் கண்டுள்ளது. உற்பத்தி ஆலைகள், பொதிப்படுத்தும் வசதிகள், சிப் வடிவமைப்பு மையங்கள் மற்றும் குறைமின்கடத்தி ஆராய்ச்சி உள்கட்டமைப்பு உள்ளிட்ட ஒரு உள்நாட்டு குறைமின்கடத்தி சூழலமைப்பை உருவாக்குவதற்காக, இந்தியா பில்லியன் கணக்கான டாலர்களை மானியங்களாகவும் சலுகைகளாகவும் ஒதுக்கியுள்ளது. உதாரணமாக, குஜராத்தின் தோலேராவில் முன்மொழியப்பட்டுள்ள, $11 பில்லியன்   முதலீட்டில் உருவாக்கபடவுள்ள டாடா குறைமின்கடத்தி உற்பத்தி ஆலை, உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியின் மேம்பட்ட உற்பத்தித் துறையில் நுழைவதற்கான இந்தியாவின் இதுவரை இல்லாத மிகவும் முக்கியமான  முயற்சியாக இருந்து வருகிறது.


அமெரிக்க-சீன தொழில்நுட்பப் போட்டி, ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட் பெருந்தொற்றின் போது ஏற்பட்ட விநியோகச் சங்கிலிப் பாதிப்புகள் போன்றவற்றின் காரணமாக, உலகளாவிய குறைமின்கடத்தித் தொழில் ஒரு ஆழமான மறுசீரமைப்பு பணியை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக, ASML உள்ளிட்ட டச்சு நிறுவனங்கள் தற்போது சீனாவுக்கான ஏற்றுமதியில் அதிகரித்து வரும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றன. இதன் விளைவாக, பரந்த "சீனா மற்றும் மற்ற நாடுகள்” (China-plus-one) என்ற கட்டமைப்பிற்குள், ஜனநாயக, அரசியல்ரீதியாக நிலையான மற்றும்  ராஜதந்திரரீதியாக இணைந்த ஒரு மாற்று உற்பத்தி மையமாக இந்தியா இருக்கிறது. டச்சு குறைமின்கடத்தி நிறுவனங்கள் சீனாவிற்கு வெளியே பல்வகையான வாய்ப்புகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், அதேநேரத்தில் இந்திய அதிகாரிகள், இந்தியாவை ஒரு நீண்டகால உற்பத்தி மற்றும் புத்தாக்கத் தளமாகக் (innovation base) கருதுமாறு நெதர்லாந்தை ஊக்குவிப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


தற்போது முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வெல்ட்ஹோவனில் உள்ள ASML தலைமையகத்திற்கு வருகை தந்தார். அங்கு, லித்தோகிராபி தொழில்நுட்பங்கள் (lithography technologies) மற்றும் இந்தியாவின் குறைக்கடத்தி இலக்குகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. பிரதமர் மோடியின் பயணத்தின் போது, தோலேராவில் அமையவிருக்கும் தனது 300 மிமீ (12-அங்குல) குறைக்கடத்தி உற்பத்தி ஆலையை அமைப்பதற்கும், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில், Tata Electronics நிறுவனம் ASML உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது இந்தியாவின் குறைமின்கடத்தி உற்பத்தி இலக்குகளில் ஒரு  முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


இருப்பினும், இந்தக் கூட்டாண்மையின் முக்கியத்துவம் வன்பொருள் மற்றும் உற்பத்திக்கு அப்பாற்பட்டது. ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள், ஒளியியல் தொகுப்புகள், துல்லியப் பொறியியல் நிறுவனங்கள் மற்றும் மேம்பட்ட வடிவமைப்புத் திறன்களை உள்ளடக்கிய குறைக்கடத்திப் புத்தாக்கத்தின் ஒரு முழுமையான சூழலமைப்பை நெதர்லாந்து இந்தியாவிற்கு வழங்குகிறது. இது போன்ற ஒத்துழைப்பு, இந்தியா குறைந்த விலை ஒருங்கிணைப்புத் தளமாக மாறும் தவறைத் தவிர்க்க உதவும். மாறாக, சிப் வடிவமைப்பு, குறைமின்கடத்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மேம்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைந்த உற்பத்தி அமைப்புகள் ஆகியவற்றை நோக்கி மதிப்புச் சங்கிலியில் முன்னேறுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, பிரதமர் மோடியின் இந்தப் பயணம், வர்த்தகம் மற்றும் அரசியலை மையமாகக் கொண்ட பாரம்பரிய ராஜதந்திரத்திலிருந்து, “தொழில்நுட்ப ராஜதந்திரம்” (technology diplomacy) என்று அழைக்கப்படக்கூடிய ஒன்றை நோக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கையின் வளர்ச்சியை வெளிக் காட்டுகிறது.

எச்சரிக்கையாக இருப்பதற்கு காரணங்கள் உள்ளன. குறைமின்கடத்தி உற்பத்தி என்பது உலகின் மிகவும் மூலதனம் தேவைப்படும் மற்றும் தொழில்நுட்பரீதியாக சிக்கலான தொழில்களில் ஒன்றாகும். மானியங்கள் மற்றும் அரசியல் ஆதரவு இருந்தபோதிலும், உள்கட்டமைப்பு இடைவெளிகள், மின்சார நம்பகத்தன்மை சிக்கல்கள், உயர் சிறப்பு வாய்ந்த உற்பத்தித் திறமையாளர்களின் பற்றாக்குறை மற்றும் இறக்குமதி செய்யப்படும் குறைக்கடத்தி தரப் பொருட்களைச் சார்ந்திருத்தல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சவால்களை இந்தியா இன்னும் எதிர்கொள்கிறது. மேலும், மேம்பட்ட தொழில்நுட்பங்களைச் சுற்றியுள்ள ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு அரசியல், ஆழமான தொழில்நுட்பப் பரிமாற்றங்களைச் சிக்கலாக்கக்கூடும். குறைக்கடத்திக் கட்டுப்பாடுகள் தொடர்பான அமெரிக்காவின் ராஜதந்திர  விருப்பங்களுடன் நெதர்லாந்து நெருக்கமாக இருந்து வருகிறது.


இருப்பினும், தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் ஆகியவை ஆழமாக உள்ள இந்தக் காலகட்டத்தில், இந்தியாவும் நெதர்லாந்தும் ஒன்றைஒன்று சார்ந்த இருக்கும் நாடுகளாக கருதுகின்றன. பிரதமர் மோடியின் பயணம், மேம்பட்ட தொழில்நுட்பங்களின் முதன்மை நுகர்வோராக இருப்பதிலிருந்து, உலகளாவிய குறைமின்கடத்திச் சூழலமைப்பை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்கேற்பாளராக மாறுவதற்கான இந்தியாவின்  பயணத்தை  வேகப்படுத்தக்கூடும்.


கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர், ஐரோப்பிய ஆய்வுகள் மையம், சர்வதேச ஆய்வுகள் பள்ளி, ஜே.என்.யு.





Original Link: The semiconductor push behind PM Modi’s Netherlands visit.


Share: