யுரேனியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து… -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


இந்தத் துறையில் சுரங்க மேம்பாடு மற்றும் செயல்பாட்டு முகமையின் (Mine Development and Operation Agency (MDO)) எந்தவொரு பங்கேற்பும் அணுசக்தித் துறையின் (Department of Atomic Energy (DAE)) கடுமையான மேற்பார்வையின் கீழ் இருக்க வேண்டும் என்றும் அந்தக்குழு பரிந்துரைத்தது.

 சுரங்க மேம்பாடு மற்றும் செயல்பாட்டு முகமை என்பது சுரங்க உரிமையாளரால் பொதுவாக அரசு அல்லது பொதுத்துறை நிறுவனம் மூலம்  நியமிக்கப்படும் ஒரு ஒப்பந்ததாரர் ஆகும். இந்த முகமை உரிமையாளரின் சார்பாக சுரங்கத்தை மேம்படுத்தி, இயக்கி, சுரங்கப் பணிகளை மேற்கொள்கிறார்.


 2047-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் குடிமை அணுமின் உற்பத்தித் திறனை தற்போதைய 8.7 ஜிகாவாட்-மின்சாரம் (GWe) அளவிலிருந்து 100 GWe-ஆக உயர்த்த நாடு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்தப் பரிந்துரை வந்துள்ளது.


இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் இயற்கையான யுரேனியத்தைப் பயன்படுத்துகின்றன. இவற்றிற்கான எரிபொருள் தேவைகள், அரசுக்குச் சொந்தமான 'யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்' (Uranium Corporation of India Ltd (UCIL)) சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி ஆகியவற்றின் கலவை மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.


தாராபூர் அணுமின் நிலையம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிய இரண்டு இலகு நீர் அணு உலை (light water reactor (LWR)) வகைகளில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் முழுவதுமாக இறக்குமதி செய்யப்படுகிறது.


  நாட்டில் யுரேனியம் தாதுவை வெட்டி எடுத்துச் சுத்திகரிக்கும் அதிகாரத்தை மட்டுமே கொண்ட யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஜார்க்கண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பல நிலத்தடி மற்றும் திறந்தவெளிச் சுரங்கங்களையும் சுத்திகரிப்பு ஆலைகளையும் இயக்குகிறது. மேலும், அரசுக்குச் சொந்தமான இந்திய அணுசக்தி கழகத்தால் (Nuclear Power Corporation of India Limited (NPCIL)) இயக்கும் உலைகளுக்கான எரிபொருள் தயாரிப்பிற்காக, யுரேனியம் செறிவூட்டப்பட்ட கலவையை 'தேசிய எரிபொருள் வளாகம்' (National Fuel Complex (NFC)) நிறுவனத்திற்கு அனுப்புகிறது.




இந்தியா தற்போது கஜகஸ்தான், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்வதாகவும், உஸ்பெகிஸ்தானுடனான நீண்டகால விநியோக (long-term supply contract) ஒப்பந்தம் 2026-ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும் என்றும் நாடாளுமன்றக் குழு குறிப்பிட்டது.


2026-ஆம் ஆண்டிற்குப் பிறகும் உஸ்பெகிஸ்தானிலிருந்து நீண்டகால யுரேனியம் விநியோகத்தைப் பெறுவதற்கான அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை  அந்தக்குழு கோரியது.


 விநியோகத்தை பல்வகைப்படுத்தவும், விநியோகத்தடைகள் மற்றும் சந்தை அபாயங்களைக் குறைக்கவும், வெளிநாடுகளில் உள்ள யுரேனியம் சொத்துகளில் பங்குகளை வாங்குவதற்காக முன்மொழியப்பட்ட 'யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்'-தேசிய அனல் மின் கழகத்தின் கூட்டு முயற்சியை விரைவுபடுத்தவும் அந்தக்குழு பரிந்துரைத்தது.


'யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்'-தேசிய அனல் மின் கழகத்தின் கூட்டு முயற்சி முயற்சி தொடர்பான காலக்கெடு, எதிர்கால எரிபொருள் கொள்முதல் திட்டங்கள் மற்றும் அணுசக்தித் துறையின் மேற்பார்வையின்கீழ் உள்நாட்டு யுரேனியம் சுரங்கப் பணிகளில் சுரங்க மேம்பாடு மற்றும் செயல்பாட்டு முகமையின் பங்கேற்பிற்கான முன்மொழியப்பட்ட கட்டமைப்பு ஆகியவை குறித்து விரிவான அறிக்கையை அணுசக்தித்துறையிடமிருந்து அந்தக்குழு கோரியது.


— யுரேனியம் கனிமங்களுக்கான சுரங்கக் குத்தகை காலத்தை, தற்போதுள்ள குத்தகை பரப்பளவில் 10% வரை ஒரு முறை நீட்டிக்க அனுமதிக்கும் வகையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை (Mines and Minerals (Development and Regulation) Act (MMDR) சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அணுசக்தித் துறை அந்தக்குழுவிடம் தெரிவித்தது.


புதிதாகக் கண்டறியப்பட்ட அல்லது தாதுப்படிவுகளின் ஆழமான பகுதிகள், தற்போதுள்ள குத்தகை எல்லைகளை தாண்டி நீண்டு காணப்படும் சூழல்களைக் கையாள்வதே இந்த மாற்றத்திற்கான நோக்கமாகும். தற்போதைய நடைமுறையின்படி, இத்தகைய விரிவாக்கங்களுக்கு தனித்தனி குத்தகைகள் மற்றும் அனுமதிகள் பெற வேண்டியுள்ளது. இது திட்டங்களின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக்கூறுகளை (techno-economic viability) பாதிக்கக்கூடும். குறிப்பாக, 600 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் அமைந்துள்ள கனிமப்படிவங்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.


உங்களுக்குத் தெரியுமா?


யுரேனியம் என்பது இயற்கையாகக் காணப்படும் ஒரு கதிரியக்கத் (radioactive element) தனிமமாகும். இயற்கையாக யுரேனியத்தில்  மூன்று ஐசோடோப்புகள் உள்ளன: அவை யுரேனியம்-234 (U-234), யுரேனியம்-235 (U-235) மற்றும் யுரேனியம்-238 (U-238) ஆகும். இவற்றில் U-235 அணுக்களின் பிளவு (fission) மூலம் அணுசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.  இருந்த போதிலும், இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத்தில்  U-235 ஐசோடோப்பு 0.72 சதவீதம் மட்டுமே உள்ளது. பெரும்பாலான அணு உலைகளுக்கும் அவற்றின் எரிபொருள்களுக்கும்  ஐசோடோப்  அதிக அளவு தேவைப்படுகிறது.


Original articles: about uranium and its significance. -Roshni Yadav

Share: