ரஷ்யாவின் அணுசக்தி நிலைப்பாட்டின் அபாயங்கள் -ஹர்ஷ் வி. பந்த், அங்கித் கே.

 அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வரம்பை குறைக்க ரஷ்யா ஆலோசித்து வருகிறது. இது ஏற்றுக்கொள்ளப்பட்டால் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.


ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் முடிவடையாமல் இரண்டாம் ஆண்டை எட்டியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ரஷ்யா உக்ரைன் எல்லைக்கு அருகே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை உருவகப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தது. மார்ச் மாதம், பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதாக ரஷ்யா கூறியது. போரின் நடுவே இதுபோன்ற அணு ஆயுதத்தை  பற்றிய பேச்சுகள் கவலையளிக்கிறது.


உக்ரைனுக்கு உதவி செய்யும் நாடுகளின் தலைவர்களின் அறிக்கைகள்தான் அணு ஆயுத அச்சுறுத்தல் அதிகரிப்பதற்கான காரணம் என ரஷ்யா கூறியுள்ளது. இதில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்புவது பற்றிய அறிக்கையும், ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க உக்ரைன் நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்ற பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூனின்  போன்றோரின் கருத்துகள்தான் இந்த நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணம் என்று ரஷ்யா கூறுகிறது. 


புரிதலில் மாற்றம்


ரஷ்யாவின் நடவடிக்கைகள் உண்மையான அச்சுறுத்தலுக்கான பதில்களைக் காட்டிலும் அச்சுறுத்தும் முயற்சிகள் போல் தெரிகிறது. மக்ரோன் மற்றும் கேமரூனின் அறிக்கைகள் ரஷ்யாவின் இருப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுகிறது. ஆனால், பிரான்சும் இங்கிலாந்தும் ரஷ்யாவை அச்சுறுத்தும் எந்த நடவடிக்கையிலும்  ஈடுபடவில்லை. எனவே மாஸ்கோவின் நடவடிக்கைகள் நியாயமானவை அல்ல.


முதல் பார்வையில், ரஷ்யாவின் கடுமையான பேச்சு உக்ரைன்  மற்றும் அதன் நட்பு நாடுகள் அச்சறுத்தலாக கருதலாம். வடகொரியா போன்ற நாடுகள் பெரிய அண்டை நாடுகளால் அச்சுறுத்தப்படும்போது, போர்களை ​​நிறுத்த முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக அச்சறுத்துகின்றன. ஆனால், அணு ஆயுதங்களை எளிதாகப் பயன்படுத்துவது குறித்து ரஷ்யா யோசித்து வருகிறது. இது சாதாரணமாக மாறினால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

 

பனிப்போருக்குப் பிறகு பல ஆண்டுகளாக, அணுசக்தி தடுப்பு பற்றி தெளிவான நிலைப்பாடுகள் உருவாகின. அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், போரில் இரு நாடுகளும் அழிந்துவிடும் என்பது ஒரு பெரிய நம்பிக்கை. இந்த யோசனை பரஸ்பர உறுதியான அழிவு (mutually assured destruction) என்று அழைக்கப்படுகிறது. மேலும்,  எதிரியால் ஒரு நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்.


ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் பெரும்பாலும் நிலையான நிலைகளில், உறுதியற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. ரஷ்யாவின் இருப்பை நேரடியாக அச்சுறுத்தவில்லை. ஆனால், ரஷ்யா இன்னும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயாராக உள்ளது. கூடுதலாக, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ரஷ்யாவின் விதிகள் ரஷ்யாவின் உயிர்வாழ்வு தீவிரமாக ஆபத்தில் இருந்தால் மட்டுமே அவை பயன்படுத்தப்படும் என்று கூறுகின்றன. அணு ஆயுதங்கள் பற்றிய இந்த நீண்டகால விதிகள் ஒரு போரின் போது நீட்டிக்கப்பட்டு மாற்றப்படுவது கவலையளிக்கிறது.


ஆபத்தான முன்னோடி


சிறிய மோதல்களில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று பகிரங்கமாக அச்சுறுத்துவதன் மூலம் ரஷ்யா ஆபத்தான பாதையில் செல்கிறது. பெரிய நாடுகள் இதை அடிக்கடி செய்ய ஆரம்பித்தால், மற்ற நாடுகளும் இந்த அச்சறுத்தல்களையேத் தொடரலாம். ஈரான் மற்றும் வட கொரியா போன்ற அணு ஆயுதங்களைக் கொண்ட சிறிய நாடுகள், இராணுவங்களைக் கொண்ட வலுவான நாடுகளை பயமுறுத்தும் என்று நினைத்து, அவற்றைப் பயன்படுத்துவதில் அதிக நம்பிக்கையுடன் இருக்கலாம். எனவே, ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இப்போது குறைவாக இருந்தாலும், அதைப் பற்றிய அவர்களின் பேச்சு ஆபத்தான  எடுத்துக்காட்டாக அமைக்கிறது. அணு ஆயுதங்களை இனி கடைசி ஆயுதமாக பார்க்க முடியாது. இது வழக்கமான மற்றும் அணுசக்தி யுத்தத்திற்கு இடையிலான வேறுபாட்டை குறைக்கலாம் 


ரஷ்யாவின் நடவடிக்கைகள் பலவீனமான அணு ஆயுதங்கள் பரவுவதை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அபாயம் உள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகள் அவற்றை வைத்திருக்கும் நாடுகளின் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடும் என்பதை தற்போதைய போர் காட்டுகிறது. இது மற்ற நாடுகளை தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அணு ஆயுதங்களைப் பெற விரும்புகிறது.


1990-களில், புடாபெஸ்ட் மெமோராண்டம் (Budapest Memorandum) ரஷ்யா, யு.கே மற்றும் யு.எஸ். ஆகிய நாடுகளின் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஈடாக, உக்ரைன் தனது அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான முடிவு இப்போது தவறானதாகத் தெரிகிறது. இஸ்ரேலால் அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால் அணுசக்தி திட்டங்களை மாற்றுவது பற்றி ஈரான் சமீபத்தில் பேசியது ஏன் என்பதைக் காட்டுகிறது. அணு ஆயுதங்கள் வேண்டாம் என்று ஈரான் கூறினாலும், இஸ்ரேலின் அச்சுறுத்தல்களால் அது தனது மனதை மாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம், அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்கும் முயற்சிகளைப் பாதிக்கிறது. வடகொரியா போன்ற பிற சிறிய நாடுகளை தங்கள் அணு ஆயுதங்களை கைவிடவோ அல்லது அவற்றை அகற்றவோ விரும்பவில்லை. ஏனெனில், அவர்கள் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துகின்றனர்.

 

ரஷ்யாவின் நடவடிக்கைகள் புதிய அணுசக்தி ஆபத்தை உருவாக்கியுள்ளன. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வரம்பை குறைப்பதன் மூலம், அணுசக்தி தடுப்பு பற்றிய புரிதலை ரஷ்யா மாற்றியுள்ளது. இது சிறிய நாடுகளுக்கு, குறிப்பாக நீண்டகாலப் பதட்டங்கள் உள்ள பிராந்தியங்களில் அதிகம் கவலைப்பட வைக்கிறது. அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் எழுந்தால், போரைத் தடுப்பதை விட போர் முன்னுரிமை பெறலாம். அணு ஆயுதப் போரின் மேகம் போர்க்களத்திற்கு மேலே மிதந்தால், ஆயுதக் குறைப்புக்கு எதிரான தடுப்பு மற்றும் பெருக்கத்தை விட போர் முன்னுரிமை பெறலாம். மேலும், அணுசக்தி உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும்.


ஹர்ஷ் வி. பந்த் துணைத் தலைவர், ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை, அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை; அங்கித் கே. டெல்லியை தளமாகக் கொண்ட ஒரு ஆய்வாளர், போர் மற்றும் இராஜதந்திரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.




Original article:

Share: