அசாஞ்சே விடுவிக்கப்பட வேண்டும், அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படக்கூடாது.
விக்கிலீக்ஸின் (WikiLeaks) நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (Julian Assange), இங்கிலாந்தில் சட்டப்பூர்வ நிவாரணத்தை வென்றுள்ளார். ராணுவ ரகசியங்களை கசியவிட்டதற்காக அவரை விசாரிக்க அமெரிக்கா விரும்புகிறது. விசாரணைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டவரான அசாஞ்சே, நியாயமான விசாரணைக்கு உத்தரவாதம் அளிக்க அமெரிக்க அரசாங்கத்திற்கு மூன்று வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. சுதந்திரமான பேச்சுக்காக அமெரிக்காவின் முதல் திருத்தத்தை அவர் பயன்படுத்த முடியும் என்பதை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. வெளிநாட்டில் இருப்பது அவரது வழக்கை பாதிக்காது. மரண தண்டனை வழங்கப்படாது என்று நீதிமன்றம் உறுதியளித்தது. மரண தண்டனையை தவிர்க்கும் வாஷிங்டனின் வாக்குறுதிக்கு எதிராக அசான்ஜின் சட்டக் குழு வாதிடவில்லை. ஆனால், UK நீதிபதிகள் ஆஸ்திரேலியராக இருப்பது அவரது பேச்சு சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று ஒப்புக்கொண்டனர். குறிப்பாக முதல் திருத்தம், தேசிய பாதுகாப்பு வழக்குகளில் வெளிநாட்டினரைப் பாதுகாக்காது என்ற அமெரிக்கா வழக்கறிஞரின் வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். இந்த வாதங்களை எதிர்த்து, அசாஞ்சே மேல்முறையீடு செய்வதற்கு சில மாதங்கள் இருக்கிறது.
பாக்தாத்தில் அமெரிக்க வான்வழி தாக்குதல் நடத்தி பொதுமக்களைக் கொன்ற வீடியோக்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. அசான்சேயின் வழக்கு ஏப்ரல் 2010-ல் உலகம் முழுவதும் பிரபலமானது. அதன்பிறகு, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த அமெரிக்கப் போர்கள் பற்றிய ரகசிய இராணுவ ஆவணங்களையும் வெளியிட்டார். மேலும், அமெரிக்க தூதரக அதிகாரிகளிடமிருந்து ரகசிய செய்திகளையும் வெளியிட்டர்.
திரு. அசாஞ்சே உளவுச் சட்டத்தை (Espionage Act) மீறியதாக அவர் மீது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் 2019-ல் வழக்குத் தொடுத்தது. அவர் நீண்ட காலம் சிறைவாசத்தை அனுபவிக்கலாம். அசாஞ்சே ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகள் மற்றும் இங்கிலாந்தின் பெல்மார்ஷ் சிறைச்சாலையில் ஐந்து ஆண்டுகள் கழித்துள்ளார். விக்கிலீக்ஸுக்கு ரகசியத் தகவலை அனுப்பிய அமெரிக்க இராணுவ ஆய்வாளரும், விசில்-ப்ளோயருமான செல்சியா மேனிங்கிற்கு (Chelsea Manning) 2013-ல் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது தண்டனையை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா 2017- ல் மாற்றினார்.
அசாஞ்சே தனது பெரிய வெளியீட்டில் பெயர்களை மறைக்கவில்லை என்று அமெரிக்க அரசாங்கம் உட்பட பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வெளியிடுகள் மக்களின் உயிருக்கு சில நேரங்களில் ஆபத்தை விளைவிக்கும் என்று வாஷிங்டன் கூறுகிறது. ஆனால், போரின்போது பொதுமக்கள் குறிவைக்கப்படுவது போன்ற மனித உரிமை மீறல்கள் குறித்து மக்களை கேள்வி கேட்க வைத்தது.
அசாஞ்சேயும் விக்கிலீக்ஸும் பொறுப்பான பத்திரிகை செய்வது போன்ற முக்கியமான ஒன்றை செய்துள்ளனர். அசாஞ்சே ஏற்கனவே நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டதால், அவரை சிறையில் அடைக்காமல் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவேண்டும்.