இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கான அங்கீகாரத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏன் நிறுத்தியுள்ளது? -கதீஜா கான்

 பாரிஸ் கொள்கைகள் (Paris Principles) மற்றும் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணி (Global Alliance of National Human Rights (GANHRI)) அங்கீகாரம் இல்லாதது இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையத்தை (National Human Rights Commission (NHRC)) எவ்வாறு பாதிக்கிறது?


தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்துடன் இணைந்த ஒரு அமைப்பான தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணி, இந்தியாவின் மனித உரிமைகள் அமைப்பான தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (National Human Rights Commission (NHRC)) அங்கீகாரத்தை ஒத்திவைத்துள்ளது.


ஜெனீவாவை தளமாகக் கொண்ட தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியின், அங்கீகாரம் இல்லாமல் தேசிய மனித உரிமை ஆணையம், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்  ஆணையத்தில்  வாக்களிக்கவோ முடியாது.


நாடாளுமன்றம், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை (Protection of Human Rights Act (PHRA)) இயற்றிய பிறகு, 1993-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்டது. தற்போது, இந்த ஆணையத்துக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமை வகிக்கிறார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) அங்கீகாரம் பெறுவதில் தாமதம் காரணமாக, அதன் சுதந்திரம், திறன் மற்றும் நேர்மை பற்றி கேள்விகள் எழுப்பப்படுகிறது.

 

தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணி (Global Alliance of National Human Rights (GANHRI)) சுமார் 120 தேசிய மனித உரிமை ஆணையங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் பாரிஸ் கொள்கைகளுக்கு (Paris Principles) ஏற்ப இந்த நிறுவனங்களை மதிப்பாய்வு செய்து அங்கீகாரம் அளிக்கிறது.


தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியானது (GANHRI) அதன் அங்கீகாரத்திற்கான துணைக்குழு (Subcommittee on Accreditation (SCA)) மூலம் செயல்படுகிறது. இந்த துணைக்குழுவின் உறுப்பினர் தேசிய மனித உரிமை நிறுவனங்களை (NHRI) 'A' மற்றும் 'B' என இரண்டு குழுக்களாக வகைப்படுத்துகிறது. நவம்பர் 29, 2023 நிலவரப்படி, 120 தேசிய மனித உரிமை நிறுவனங்கள்  தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியால் (GANHRI) அங்கீகாரம் பெற்றன. இவர்களில், 88 பேருக்கு 'A' தரம் வழங்கப்பட்டது. இது பாரிஸ் கோட்பாடுகளுக்கு (Paris Principles) முழுமையாக இணங்குவதைக் குறிக்கிறது. மீதமுள்ள 32 குழுக்களுக்கு 'B' தரத்தின் கீழ் வைக்கப்பட்டது. இது குறைந்தபட்ச தரநிலையைக் குறிக்கிறது.


பாரீஸ் கோட்பாடுகள், தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் (NHRI) நிலை தொடர்பான முறையான கோட்பாடுகள், டிசம்பர் 20, 1993 அன்று ஐ.நா பொதுச் சபையால் (UN General Assembly (UNGA)) ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள் (NHRI) நம்பகமானதாகக் கருதப்படுவதற்கும் திறம்பட செயல்படுவதற்கும் பூர்த்தி செய்ய வேண்டிய குறைந்தபட்ச தரநிலைகளை அவை அமைத்துள்ளன.


தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள் (NHRI) திறம்பட செயல்படுகின்றனவா மற்றும் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியின் (GANHRI) அங்கீகாரத்திற்கு தகுதியானவையா என்பதை தீர்மானிக்க பாரிஸ் கோட்பாடுகள் ஆறு முக்கிய அளவுகோல்களை வகுத்துள்ளன. இந்த அளவுகோல்கள்:


1. உலகளாவிய மனித உரிமைகள் விதிமுறைகள் மற்றும் தரநிலைகளின் அடிப்படையில் பரந்த ஆணையைக் கொண்டது.


2. அரசாங்கத்திடம் இருந்து சுயாட்சியுடன் செயல்படுவது.


3. சுதந்திரச் சட்டம் அல்லது அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்படுவது.


4., சமூகத்தை பரந்த அளவில் பிரதிபலிக்கும் உறுப்பினர்கள் உட்பட பன்மைத்துவத்தை (pluralism) கடைபிடிப்பது.


5. போதுமான வளங்கள் இருப்பது.


6. போதுமான விசாரணை அதிகாரங்களைக் கொண்டுள்ளது.


தனிநபர்கள், மூன்றாம் தரப்பினர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் அல்லது வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் போன்ற பிற தொழில்முறை அமைப்புகளால் கொண்டு வரப்படும் புகார்கள் மற்றும் வழக்குகளைப் பெறுவதற்கு தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள் (NHRI) தயாராக இருக்க வேண்டும் என்றும் இந்தக் கோட்பாடுகள் கூறுகின்றன.


‘A’ தரநிலையிலுளள தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள் (NHRI), ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் (UN Human Rights Council), அதன் துணை அமைப்புகள் மற்றும் சில ஐ.நா பொதுச் சபை (UN General Assembly (UNGA)) அமைப்புகள் மற்றும் வழிமுறைகளில் பங்கேற்கலாம். அவர்கள் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியின் (GANHRI) முழு உறுப்பினராகும் தகுதியுடையவர்கள். இதில் வாக்களிக்கும் உரிமை மற்றும் நிர்வாகப் பதவிகளை வகிக்கலாம்.


'B' தரநிலையைப் பெற்ற தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள் (NHRI), தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணிகளில் (GANHRI) பங்கேற்கலாம். ஆனால் வாக்களிக்கவோ அல்லது நிர்வாக பதவிகளை வகிக்கவோ முடியாது.


இந்தியா அங்கீகரிக்கப்படாவிட்டால், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)  ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது வாக்களிக்கவோ அல்லது நிர்வாகப் பதவிகளை வகிக்கவோ முடியாது. இதனால், இந்தியாவின் மதிப்பாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.


ஜெனீவாவில் உள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் பலாயிஸ் டெஸ் நேஷனில் (United Nations Palais des Nations) மே 1 அன்று நடைபெற்ற அங்கீகாரத்திற்கான துணைக்குழு (SCA) கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. அங்கீகாரத்திற்கான துணைக்குழு (SCA) வருடத்திற்கு இரண்டு முறை இத்தகைய அமர்வுகளை நடத்துகிறது மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் விரிவான விளக்கங்களைப் பெறுகிறது. அதைத் தொடர்ந்து, பரிசீலனைக்கான சிக்கல்களைக் கண்டறிவதற்காக ஒரு முன் அமர்வு நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்டின் மனித உரிமை நிறுவனத்துடனும் ஒரு நேர்காணல் நடத்தப்படுகிறது.


மே 1 அன்று, கூட்டமானது நியூசிலாந்து தலைமையில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.


இந்தக் குழுவானது இன்னும் தனது அறிக்கையை வெளியிடவில்லை. கடந்த ஆண்டு அறிக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) பாரிஸ் கோட்பாடுகளை சரியாக கடைப்பிடிக்காத பகுதிகளை பட்டியலிட்டுள்ளது. NHRC நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, விசாரணைகளை மேற்பார்வையிட காவல் துறையினரை நியமிப்பதால் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் குழுவில் சிறுபான்மை அல்லது பெண் பிரதிநிதித்துவம் இல்லாதது ஆகியவை இதில் அடங்கும்.


மார்ச் 26 அன்று, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு உட்பட ஒன்பது மனித உரிமை அமைப்புகள், இந்தியாவின் மனித உரிமை நிறுவனங்கள் குறித்து கவலை தெரிவித்து தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணிக்கு (GANHRI) கூட்டாக கடிதம் எழுதின. அந்தக் கடிதத்தில், "நாட்டின் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, இந்தியாவில் குடிமை வெளியில் அதிகரித்து வரும் கட்டுப்பாடுகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க் கவலை தெரிவித்தார்." இந்தியாவில் "சிறுபான்மையினர், ஊடகங்கள் மற்றும் குடிமை சமூகத்தின் மீதான தாக்குதல்கள்" குறித்து கவனத்தை ஈர்த்த ஐ.நா மனித உரிமை நிபுணர்களாலும் இந்த கவலைகள் எழுப்பப்பட்டன.


தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) தற்போதைய 'A' மதிப்பீட்டை திருத்துமாறு தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணி (GANHRI) -அங்கீகாரத்திற்கான துணைக்குழுவை (SCA) கடிதம் வலியுறுத்தியது.


தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) 1993-ல் நிறுவப்பட்டது மற்றும் 1999 இல் முதன்முறையாக அங்கீகாரம் பெற்றது. 2006 இல் 'A' தரநிலை பெற்று 2011-ல் அதைத் தக்க வைத்துக் கொண்டது. அரசியல் பிரதிநிதிகள் நியமனம் மற்றும் NHRC ஊழியர்களில் பாலின சமநிலை மற்றும் பன்மைத்துவத்தை உறுதி செய்யத் தவறியது ஆகியவை அங்கீகாரத்தின் தற்போதைய ஒத்திவைப்புக்கான காரணங்களாகும். இறுதியில், அங்கீகாரத்திற்கான துணைக்குழுவானது (SCA) NHRCக்கு 2017 இல் 'A' தரநிலையை வழங்கியது.


கடந்த ஆண்டு, ஆறு காரணங்களைக் கூறி, SCA மீண்டும் இந்தியாவின் அங்கீகாரத்தை நிறுத்தியது. NHRC அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் செயல்படுவதற்கான நிலைமைகளை உருவாக்க முடியாது, மேலும் NHRC-ல் ஆளும் கட்சியுடன் தொடர்புடைய பல அரசு அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் உள்ளனர்.




Original article:

Share: