சோராபுதீன் என்கவுண்டர் வழக்கின் தீர்ப்பு: சோராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை விடுவித்து வழங்கப்பட்ட தீர்ப்பை, ஷேக்கின் சகோதரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்ததன் மூலம் பம்பாய் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கு குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் இங்கே.
சோராபுதீன் என்கவுன்டர் வழக்கின் தீர்ப்பு: 2005-06-ஆம் ஆண்டுகளில் சோராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் போலி என்கவுன்டர் மற்றும் ஷேக்கின் மனைவி கௌசர் பீயின் கொலை தொடர்பான வழக்கில், 21 காவல்துறை அதிகாரிகள் உட்பட 22 பேர் விடுவிக்கப்பட்டதை பம்பாய் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.
2018-ஆம் ஆண்டு டிசம்பரில் சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 காவல்துறைப் பணியாளர்கள் உட்பட 22 பேரையும் விடுவித்திருந்தது. 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில், சோராபுதீனின் இரண்டு சகோதரர்கள் விடுவிப்புகளை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றம் மேல்முறையீடு மனுக்களை நிராகரித்தது.
இந்தியாவின் என்கவுன்டர் அரசியலில் நீண்டகாலமாக ஒரு முக்கிய ஆதாரமாக இருந்து வரும் இந்த வழக்கு மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த விதம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இங்கே.
வழக்குத் தொடுத்த தரப்பின் வாதம்
ஆரம்பத்தில், குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவும் (Anti-Terrorism Squad (ATS)) மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறையும் (CID-Crime) இந்த வழக்கை விசாரித்து வந்தன. பின்னர், 2010-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation (CBI)) மாற்றியதோடு, விசாரணையை மும்பையில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றவும் உத்தரவிட்டது.
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஆட்கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சோராபுதீன் மீது பதிவு செய்யப்பட்டிருந்தன என்றும், அவர் ஒரு "மிகவும் கொடூரமான குற்றவாளி" என்றும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
2005-ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று, ஹைதராபாத்தில் இருந்து மகாராஷ்டிராவின் சாங்லிக்கு சொகுசுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, இறந்த மூவரும் கடத்தப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு கூறியது. மேலும், சோராபுதீன் மற்றும் கௌசர் பீ ஆகியோர் குஜராத்தில் உள்ள பண்ணை வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்ததாகவும் மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு, ராஜஸ்தானின் பில்வாராவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துளசிராம் கைது செய்யப்பட்டதாகக் காட்டப்பட்டது.
ஷேக்கைக் கொலை செய்வதற்காக குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் குற்றச் சதியில் ஈடுபட்டதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியிருந்தது. அரசியல் அழுத்தம் காரணமாக சோராபுதீனைக் கைது செய்ய வேண்டியுள்ளதாகவும், பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும் அவரது கூட்டாளியான பிரஜாபதியைத் தவறாக வழிநடத்தி அவர்கள் உதவி கோரியதாகவும் அரசுத் தரப்பு கூறியது.
2005-ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று அகமதாபாத்தில் சோராபுதீன் ஒரு போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக மத்திய புலனாய்வுப் அமைப்பு கூறியது. இருப்பினும், அப்போது குற்றம் சாட்டப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகள், சோராபுதீனுக்கு பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருந்ததாகவும், ஒரு பிரபல அரசியல் தலைவரைக் கொல்வதற்காக அவர் அந்த நகரத்தில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
கௌசர் பீ அதே மாதம் கொல்லப்பட்டார். மேலும், அவரது உடல் அந்த ஆண்டு நவம்பர் 29 அன்று அப்புறப்படுத்தப்பட்டது. ஒரு வருடம் கழித்து, குஜராத்தில் நடந்த மற்றொரு 'திட்டமிட்ட' மோதலில் பிரஜாபதி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 38 பேரில் 16 பேரை நீதிமன்றங்கள் விடுவித்தன. அவர்களில் தற்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அப்போதைய மூத்த இந்தியா ஆட்சி பணியில் இருந்த அதிகாரிகளான தினேஷ் எம்.என், ராஜ்குமார் பாண்டியன் மற்றும் டி.ஜி. வன்சாரா, மற்றும் ராஜஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா ஆகியோரும் அடங்குவர்.
2018-ஆம் ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது
2018-ஆம் ஆண்டில், மத்திய புலனாய்வுப் அமைப்பு சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், நீதிபதி எஸ்.ஜே. சர்மா தலைமையில், தனது 358 பக்க தீர்ப்பில், கூறப்படும் சதியை நிலைநாட்டுவதற்கு மத்திய புலனாய்வுப் அமைப்பு எந்தவொரு "ஆவண மற்றும் உறுதியான ஆதாரங்களையும்" (documentary and substantive evidence) சமர்ப்பிக்கத் தவறிவிட்டது என்று தீர்ப்பளித்தது.
சோராபுதீன் மற்றும் பிரஜாபதி ஆகியோரின் ‘கொலை' மரணங்களில் 'கொலை' குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய புலனாய்வுப் அமைப்பு கூறியது. குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கு முன்பு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Criminal Procedure Code (CrPC)) பிரிவு 197-ன் கீழ் தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியைப் பெற புலனாய்வு அமைப்பு தவறியதால், குற்றம் சாட்டப்பட்டவர் 'விடுதலைக்குத் தகுதியானவர்' (entitled to acquittal) என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
சிறப்பு நீதிபதி, சாட்சிகள் மத்திய புலனாய்வுப் அமைப்பு தனது விசாரணையின்போது பதிவு செய்த வாக்குமூலங்களின்படி சாட்சியம் அளிக்காததால் பிறழ் சாட்சிகளாக மாறியதாகவும், நீதிமன்றத்தின் முன் சாட்சிக் கூண்டில் நின்றபோது, அவர்கள் "அச்சமின்றி" உண்மையைப் பேசியதன் மூலம், மத்திய புலனாய்வுப் அமைப்பில் "தங்களது வாக்குமூலங்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியதாகவும்" குறிப்பிட்டிருந்தார்.
ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர், விசாரணையின் போது நீதிபதி, “மத்திய புலனாய்வு அமைப்பு குற்றங்களின் உண்மையை அறிவதற்குப் பதிலாக வேறு ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருந்தது” என்றும், “உண்மையைக் கண்டறிவதைவிட, ஒரு குறிப்பிட்ட, முன்யோசனையுடன் உருவாக்கப்பட்ட கோட்பாட்டை நிறுவுவதில் அதிக அக்கறை கொண்டிருந்தது” என்றும் குறிப்பிட்டார்.
மத்திய புலனாய்வு அமைப்பானது, அரசியல் தலைவர்களை எப்படியாவது சிக்க வைப்பதற்காக, ஒரு முன் திட்டமிடப்பட்ட கோட்பாட்டையும் ஒரு செயல்திட்டத்தையும் தன்வசம் கொண்டிருந்தது என்றும், அந்த அமைப்பானது, சட்டப்படி விசாரணையை நடத்துவதற்குப் பதிலாக, அந்த இலக்கை அடைவதற்குத் தேவையானதை மட்டும் செய்தது என்றும் நீதிபதி தனது கருத்தை பதிவு செய்தார்.
அரசியல் கட்சியின் தலைவர்களை எப்படியாவது சிக்க வைக்கும் முனைப்பில், மத்திய புலனாய்வு அமைப்பு ஆதாரங்களை உருவாக்கி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது என்று நீதிமன்றம் கூறியது.
முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட விசாரணையின் நகலைப் பயன்படுத்தி, விசாரணையை அவசரமாக முடித்ததில் மத்திய புலனாய்வு அமைப்பு அலட்சியம் காட்டியதாகவும், எந்தச் சதித்திட்டம் குறித்தும் அறியாத காவல்துறையினரைக் குற்றவாளியாக்கியதாகவும், மாறாக அவர்கள் நிரபராதிகள் போல் தோன்றியதாகவும் நீதிமன்றம் கூறியது.
உயர் நீதிமன்றத்தின் முன் உள்ள சவால்
சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட சோஹ்ராபுதீனின் சகோதரர்களான ரூபாபுதீன் மற்றும் நயாபுதீன், சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரியும், 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களாக மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்தனர். சிறப்பு நீதிபதியின் கண்டுபிடிப்புகள் "சாட்சியங்களுக்கு முரணானவை" (contradictory to the evidence) என்று அவர்கள் வாதிட்டனர்.
அரசுத் தரப்பால் 200-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 92 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையில், ஒரு நீதிபதிக்கு முன்பாகப் பதிவு செய்யப்பட்ட அல்லது புலனாய்வு அதிகாரிகளால் காணொளியாகப் பதிவு செய்யப்பட்ட பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள், விசாரணை நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டப்படவோ அல்லது சமர்ப்பிக்கப்படவோ இல்லை என்று மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பயிருந்தது. மேலும், பிறழ் சாட்சிகளாக இல்லாத ஏறத்தாழ 118 சாட்சிகளின் சாட்சியங்கள் "நம்பகத்தன்மையற்றவை" எனக் கூறித் தவறாகப் புறக்கணிக்கப்பட்டன என்று அந்த மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பயிருந்தன.
பம்பாய் உயர்நீதிமன்றம் எவ்வாறு தீர்ப்பளித்தது
உயர் நீதிமன்றம் 2019-ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று மேல்முறையீட்டு மனுக்களை ஏற்றுக்கொண்டு, விடுவிக்கப்பட்ட நபர்களுக்கும் மத்திய புலனாய்வு அமைப்புக்கும் அறிவிப்பாணையை அனுப்பியது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில், சாட்சியான மகேந்திரசிங் ஜாலா தான் பாதிக்கப்பட்டவர் அல்ல என்று கூறி, விடுவிப்புகளை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
2019-ஆம் ஆண்டு அக்டோபர் முதல், சோராபுதீனின் சகோதரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடுகள், தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் தலைமையிலான அமர்வின் முன் 2025-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இறுதி விசாரணைகள் வரை விசாரிக்கப்படாமல் இருந்தன. அந்த விசாரணைகள் ஜனவரி 16 அன்று நிறைவடைந்தன.
2025-ஆம் ஆண்டு அக்டோபரில், சிறப்பு நீதிமன்றத்தின் 2018 ஆம் ஆண்டு தீர்ப்பை ஏற்றுக்கொண்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், விசாரணை நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று மத்திய புலனாய்வு அமைப்பு கூறியது.
உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ளபட்ட வாதங்கள்
2018-ஆம் ஆண்டு தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, மேல்முறையீட்டாளர்கள் — மற்ற ஆதாரங்களுடன் தகுந்த அதிகார அமைப்பின் ஒப்புதல்கள் தேவையில்லை என்றும், பிரஜாபதியின் சக கைதி "தன் உயிருக்கு அஞ்சினார்" என்பதைக் காட்டிய "ஏற்கத்தக்க" சாட்சியங்களை நீதிபதி நம்பத் தவறிவிட்டார் என்றும் வாதிட்டனர்.
தற்போதைய மேல்முறையீடுகளில் பிரதிவாதிகளாக உள்ள, விடுவிக்கப்பட்ட நபர்கள், தங்கள் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிக்கை விடுத்தனர். தங்களுக்கு எதிரான சதிக்குற்றச்சாட்டை நிலைநாட்ட நேரடி ஆதாரம் எதுவும் இல்லை என்றும், தங்களை விடுவிப்பதற்கான சிறப்பு நீதிமன்ற உத்தரவு நியாயமானது என்றும் அவர்கள் வாதிட்டனர்.
Original article : Why Bombay HC upheld acquittal of 22 in the landmark Sohrabuddin encounter case. -Omkar Gokhale