தமிழ்நாட்டின் கல்வி நிதி ஏன் நிறுத்தி வைக்கப்பட்டது? -பிரிசில்லா ஜெபராஜ்

 தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டுக்கான சமக்ர சிக்ஷா (Samagra Shiksha) நிதி ஏன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது? தமிழ்நாட்டின் கல்வி நிதி விடுவிக்கப்படுவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்ன? தேசிய கல்விக் கொள்கை 2020 நிதியை எவ்வாறு பாதிக்கிறது? மும்மொழி சூத்திரம் ஏன் பிரச்சினையாக உள்ளது? 


சமக்ர சிக்ஷா கல்வித் திட்டத்திற்கான நிதியை  ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு இன்னும் வழங்கவில்லை. இந்த நிதியை தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020-ஐ முழுமையாக செயல்படுத்த  ஒன்றிய இணைத்துள்ளது என்று மாநில அரசு கூறுகிறது. இதில் சர்ச்சைக்குரிய மும்மொழி கொள்கை உட்பட மாநிலம் எதிர்த்த விதிகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக நிலைமை மோசமடைந்தது, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் X வலைதளப்பக்கத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்தனர்.

 

சமக்ர சிக்ஷா  திட்டம்  (Samagra Shiksha) என்றால் என்ன, அதன் கீழ் தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி வழங்கவில்லை? 


சமக்ர சிக்ஷா என்பது நர்சரி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்விக்கான ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டமாகும். இதில் ஆசிரியர் பயிற்சி, சிறப்புக் கல்வி, டிஜிட்டல் கருவிகள், பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் தொழில் பயிற்சி மற்றும் விளையாட்டு போன்ற பிற பகுதிகளுக்கு நிதியுதவியும் அடங்கும். இத்திட்டம் பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் நூலகங்களுக்கான மானியங்களையும் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு 2021 மற்றும் 2026-க்கு இடையில், ₹2.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய மற்றும் மாநிலங்கள் செலவுகளை 60:40 விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. 2024-25-ல், தமிழ்நாட்டின் பங்கு ₹3,586 கோடி, ஒன்றிய அரசின்பங்கு ₹2,152 கோடி. ஆனால், முதல் காலாண்டு தவணையான ₹573 கோடி இன்னும்  ஒன்றிய அரசால் இன்னும் வழங்கப்படவில்லை.

 

கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், நிதி வழங்குவதற்கு ஒன்றிய அரசு ஒரு நிபந்தனையை சேர்த்துள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றிய அரசின் மற்றொரு கல்வித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதே அந்த நிபந்தனை என்று முதல்வர் கூறினார். இந்தத் திட்டம் பிரதமர் பள்ளிகள், ரைசிங் இந்தியா (PM Shri) என்று அழைக்கப்படுகிறது. இது 2022 முதல் 2027 வரை இயங்கும். தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவதை வெளிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 14,500 மாதிரி பள்ளிகளை உருவாக்குவதே இந்த திட்டத்தின் இலக்கு. திட்டத்தின் மதிப்பு ₹27,360 கோடி. செப்டம்பர் 2022 முதல் குறைந்தது 10 கடிதங்களை ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ளது. செப்டம்பர் 2022 முதல், தேசிய கல்விக் கொள்கையை முழுவதுமாக செயல்படுத்தப்பட வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு தமிழ்நாட்டு அரசிற்கு குறைந்தபட்சம் 10 கடிதங்களை ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது.

 

2024 மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இதுகுறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், "சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியுதவியுடன் பிரதமர் புரிந்துணர்வு ஒப்பந்தம் இணைக்கப்பட்டுள்ளது. கேள்விக்குரிய நிதியில் 2023-24 முதல் தாமதமான மூன்றாவது மற்றும் நான்காவது தவணைகள் மற்றும் நடப்பு ஆண்டிற்கான முழு நிதியும் அடங்கும். கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு மாற்றியமைக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த பதிப்பு தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்துதல்  பற்றிய பகுதியை நீக்கியது. ஆனால், இந்த மாற்றத்தை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநிலங்கள் தங்கள் நிதியைப் பெற்றுக்கொண்டதாக ஆகஸ்ட் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். கடந்த செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், தேசிய கல்விக் கொள்கைக்கு உடன்படாததால், "சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்க மறுக்கிறது" என்று குற்றம் சாட்டினார். 


தேசிய கல்விக் கொள்கை 2020 விவகாரத்தில் தமிழ்நாட்டின் பிரச்சினை என்ன?


 மும்மொழிச் கொள்கை மற்றும் பாடத்திட்ட போன்றவற்றில் மாற்றம் செய்வதே தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு தெரிவிப்பதற்கான முக்கிய காரணம் என்று தனது X பக்கத்தில் ஒரு பதிவில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கினார். தமிழ்நாடு ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கையை பின் பற்றி வருவதாக குறிப்பிட்டார். சமக்ரா ஷிக்ஷா நிதிகளை முழு தேசிய கல்விக் கொள்கையுடன் இணைப்பது கல்வியில் மாநிலத்தின் அரசியலமைப்பு உரிமைகளை கட்டுப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார். 


ஜூலை மாதம் சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாட்டின் மாநிலக் கல்விக் கொள்கை (State Education Policy (SEP)) வரைவு, தமிழ்நாடு (5+3+2+2) பாடத்திட்ட கொள்கையை பின்பற்ற விரும்புகிறது. இது முன்பள்ளி ஆண்டுகளை உள்ளடக்கிய தேசிய கல்விக் கொள்கையிலிருந்து வேறுபட்டது என்பதைக் காட்டுகிறது. புதிய கல்விக் கொள்கை பரிந்துரைத்தபடி குழந்தைகள் ஆறு வயதிற்குப் பதிலாக ஐந்து வயதில் 1-ஆம் வகுப்பில் நுழைய வேண்டும் என்று மாநிலக் கல்விக் கொள்கை முன்மொழிகிறது. தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரி சேர்க்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பொது நுழைவுத் தேர்வை தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி கொள்கையை செயல்படுத்துவதுதான் இதில் மிகப்பெரிய பிரச்சினை. 



 மும்மொழித் திட்டத்தை (three-language formula) தமிழ்நாடு  எதிர்ப்பது ஏன்? 


  தேசிய கல்விக் கொள்கை 2020 ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறது மற்றும் மாணவர்கள் இரண்டு இந்திய மொழிகள் உட்பட குறைந்தது மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். இந்த யோசனை 1968 முதல் ஒவ்வொரு தேசிய கல்விக் கொள்கையிலும் உள்ளது மற்றும் பல மாநிலங்களில் இந்த கொள்கை பயன்படுத்தப்படுகிறது. அங்கு மாணவர்கள் உள்ளூர் மொழி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகியவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள் சமஸ்கிரதமும் சில சமயங்களில் கற்பிக்கபடுகிறது.   இந்த கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த எதிர்ப்பு சுதந்திரத்திற்கு முந்தைய சமூக இயக்கங்களிலிருந்து தொடர்கிறது. 1930-களில் கட்டாய இந்திக்கு எதிரான போராட்டங்கள், 1960-களின் பிற்பகுதியில் இந்தி எதிர்ப்பு வன்முறை கலவரங்கள் மற்றும் 1986-ல் புதிய கல்விக் கொள்கை மற்றும் நவோதயா பள்ளிகளுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. 


தமிழ்நாடு இரு மொழி சூத்திரத்தை பயன்படுத்துகிறது. அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளி ஆண்டுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டையும் படிக்க வேண்டும். அவர்கள் இந்தி அல்லது வேறு எந்த மொழியையும் விருப்ப மூன்றாவது மொழியாக தேர்வு செய்யலாம். தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் வெளியிட்ட பதிவில், "எதிர்கால சந்ததியினர் ஆங்கிலப் புலமையைப் பெறுவதை உறுதி செய்யும் அதே வேளையில், எங்கள் அடையாளத்தின் தூணாக தமிழை ஏற்றுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். தேசிய கல்விக் கொள்கை 2020 மும்மொழிக் கொள்கையில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்று அது கூறுகிறது. அதாவது, இந்தியை மூன்று மொழிகளில் ஒன்றாக சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாணவர்கள் தமிழை மூன்றாவது மொழியாக தேர்வு செய்யலாம். ஆனால் அது நடுநிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் மட்டுமே கற்பித்து தரப்படும். தமிழ்நாட்டில்  உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டத்தை கொள்கை அளவில் நிராகரித்துள்ளன. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாடு தமிழ் உட்பட தாய்மொழியில் கல்வியை எதிர்ப்பதாக அர்த்தமா என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பினார்.  


  இதற்கு பதிலளித்த தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், தமிழ்நாடு அரசின் கொள்கை எப்போதும் உள்ளடக்கிய கற்றலுக்கு முன்னுரிமை அளிக்கிறது. கல்விக் கொள்கையில் தமிழ் ஒரு மைல்கல் என்றும், மாணவர்களுக்கு ஆங்கில அறிவு அளிக்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.


Original article:

Share: