மக்களாட்சி : உயரடுக்குகளால் உந்தப்பட்ட திட்டத்தில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக இந்தியாவின் பயணம். – தர்.சரத்குமார்

 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச ஜனநாயக தினத்தில் (International Day of Democracy), ஜனநாயகத்தின் கொள்கைகளை மறுபரிசீலனை செய்வோம். இது மக்களின் வாக்குகளுக்கான போட்டிப் போராட்டமா? அல்லது இந்தியாவில் இருப்பதைப் போல அன்றாட தொடர்புகளில் ஊடுருவி விடுதலை முயற்சிகளை எளிதாக்கும் ஒரு மதிப்பைப் பற்றியதா? என்பதைக் கண்டுபிடிப்போம். 


மக்களாட்சி தனித்துவமானது. ஏனெனில், அது மக்களை இறையாண்மையுடன் பார்க்கிறது. இந்த பண்பு ஜனநாயகத்திற்கு ஒரு சிறப்பு ஈர்ப்பை அளிக்கிறது. எந்த அளவுக்கு என்றால், சர்வாதிகார அரசாங்கங்கள் கூட அடிக்கடி ஜனநாயகம் பற்றி என்று கூறுகின்றன. ஒரு ஆட்சி வெளிப்படையாக ஜனநாயகத்தை நிராகரிப்பதும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் ஆட்சியை அங்கீகரிப்பதும் அரிதாகிவிட்டது. 


2007–ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை செப்டம்பர் 15-ஐ சர்வதேச ஜனநாயக தினமாக (International Day of Democracy) அறிவித்தது. 'புதிய அல்லது மீட்டெடுக்கப்பட்ட ஜனநாயகங்களை ஊக்குவிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் அரசாங்கங்களின் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆதரவு' (‘Support by the United Nations system of the efforts of Governments to promote and consolidate new or restored democracies’) என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானம், ஜனநாயகத்தை சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளுடன் இணைக்கிறது. ஐ.நா.வின் உயர் மதிப்புகளை அடைவதற்கு ஜனநாயகத்தை மேம்படுத்துவது அவசியம் என்று அது வலியுறுத்துகிறது. காலப்போக்கில், ஜனநாயகத்திற்கான சர்வதேச தினம் ஜனநாயகத்தின் கருத்து, அதன் சவால்கள் மற்றும் மனித வாழ்க்கையில் அதன் தாக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஒரு தருணமாக மாறியுள்ளது. 


மக்களாட்சி என்றால் என்ன?


மக்களாட்சி என்பது நேரடியாகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ மக்களால் அதிகாரம் வகிக்கப்படும் ஒரு ஆட்சி முறையாகும். இந்த சொல் கிரேக்க வார்த்தையான "dēmokratía" என்பதிலிருந்து வந்தது, அதாவது "மக்களால் ஆட்சி" என்று பொருள். இது அரசியல் சமத்துவத்தில் கவனம் செலுத்துகிறது, வாக்களிப்பதன் மூலமும், தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலமும், கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலமும் முடிவெடுப்பதில் பங்கேற்க அனைவரையும் அனுமதிக்கிறது. 


மக்களாட்சி என்பது 'மக்கள் இறையாண்மை' என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது இறையாண்மை மக்களிடம் உள்ளது. பெஞ்சமின் ஃபிராங்க்ளின் "சுதந்திர அரசாங்கங்களில், ஆட்சியாளர்கள் சேவகர்களாகவும், மக்கள் அவர்களின் மேலதிகாரிகளாகவும் இறையாண்மையுடனும் உள்ளனர்" என்று குறிப்பிட்டார். 


முக்கிய அரசாங்க பதவிகளுக்கு வழக்கமான தேர்தல்கள் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும். ஜோசப் ஷம்பீட்டர் போன்ற சில அரசியல் அறிஞர்கள், தேர்தல்களை ஜனநாயகத்தின் மையமாகக் கருதுகின்றனர். அதை தேர்தல் போட்டியாகக் குறைத்து, அடிப்படை உரிமைகள் போன்ற பரந்த கூறுகளைப் புறக்கணிக்கின்றனர். 


இருப்பினும், ஜனநாயகத்தின் பரந்த வரையறைகளும் உள்ளன. ஜான் டூயி ஜனநாயகத்தை ஒரு அரசாங்க வடிவத்தை விட மேலானதாகக் கண்டார். தனது முதலாளித்துவம், சோசலிசம் மற்றும் ஜனநாயகம் (Capitalism, Socialism, and Democracy) 1942, புத்தகத்தில் ஜனநாயகம் செயலில் பங்கேற்பு, விவாதம் மற்றும் தார்மீக வளர்ச்சியை உள்ளடக்கியது என்று வாதிட்டார். இது அன்றாட வாழ்க்கை மற்றும் கல்வியை பாதிக்கும் ஒரு மதிப்பு அமைப்பாக அமைகிறது. 


ஜனநாயகத்திற்கான சர்வதேச தினம் இந்த பரந்த பார்வையுடன் இணையாக உள்ளது. இது ஐ.நா உறுப்பு நாடுகளை அவர்களின் ஜனநாயக நடைமுறைகளை மதிப்பீடு செய்ய ஊக்குவிக்கிறது.  இந்த ஆண்டு, ஐ.நா பொதுச்செயலாளரின் அறிவிப்பில், உலகளாவிய தேர்தல்கள் இருந்தபோதிலும், பல ஜனநாயகங்கள் செயல்திறனுக்கான அத்தியாவசிய கூறுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது என்றார். 


ஜனநாயகத்தின் வரலாறு 


கிமு 5-ஆம் நூற்றாண்டில் ஏதென்ஸில் மக்களாட்சி தொடங்கியது.  மேற்கத்தியம் அல்லாத பண்டைய நாகரிகங்களிலும் ஜனநாயக முறை ஆராயப்படுகின்றன. சில நாடுகள் நீண்ட ஜனநாயக மரபுகளைக் பினபற்றுகின்றன. 


உதாரணமாக, இந்தியா தனது வரலாற்று பரம்பரை ஆட்சியாளர்கள் மற்றும் ஆலோசனை கவுன்சில்களால் தன்னை 'ஜனநாயகத்தின் தாய்' (‘mother of democracy’) என்று அழைத்துக் கொண்டுள்ளது. நாடுகள் தங்கள் ஆரம்பகால ஜனநாயக நடைமுறைகளை வலியுறுத்துவதால், ஜனநாயகம் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. 


நவீன ஜனநாயகங்கள் ஐரோப்பிய அறிவொளிக் காலத்திலிருந்து தோன்றின. ஜான் லாக், ஜீன்-ஜாக் ரூசோ மற்றும் மாண்டெஸ்கியூ போன்ற சிந்தனையாளர்கள் நவீன தாராளவாத ஜனநாயகத்திற்கு பங்களித்தனர். லாக்கின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு அரசியல் அதிகாரம் ஆளப்படுபவர்களின் ஒப்புதலிலிருந்து வருகிறது என்று கூறுகிறது. ரூசோ மக்கள் இறையாண்மைக்காக வாதிட்டார். மான்டெஸ்கியூ கொடுங்கோன்மையைத் தடுக்க அதிகாரப் பிரிவினை முறையை முன்மொழிந்தார். 


இந்த கருத்துக்கள் அமெரிக்க புரட்சி (1776) மற்றும் பிரெஞ்சு புரட்சி (1789) ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்தின. இது ஜனநாயக குடியரசுகளுக்கு வழிவகுத்தது.  இந்த ஆரம்பகால ஜனநாயகங்கள்மீது, கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், தனிநபர் உரிமைகள், பிரதிநிதித்துவ அரசாங்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை ஊக்குவித்தன. 


'ஜனநாயகத்தின் மூன்று அலைகள் 


 சாமுவேல் ஹண்டிங்டனின் 'ஜனநாயகத்தின் மூன்று அலைகள்' (‘Three Waves of Democracy’) என்ற கருத்து ஜனநாயகத்தின் விரிவாக்கத்தை விவரிக்கிறது.


  1. முதல் அலை (1828-1926) மேற்கு ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவில் வாக்குரிமையை விரிவுபடுத்துவதன் மூலம் தொடங்கியது. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஜனநாயக நிறுவனங்களை நிறுவியது. 


  1. இரண்டாவது அலை (1943-1962) இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்தது. ஆங்கில ஆட்சியாளரிடமிருந்து சுதந்திரம் பெற்று ஜனநாயகங்களை நிறுவின. மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள் ஜனநாயகமயமாக்கப்பட்டன. 


  1. மூன்றாவது அலை போர்ச்சுகலில் கார்னேஷன் புரட்சியுடன் (1974) தொடங்கி சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தெற்கு ஐரோப்பா (கிரீஸ், ஸ்பெயின்), லத்தீன் அமெரிக்கா (பிரேசில், அர்ஜென்டினா), ஆசியா (தென் கொரியா, பிலிப்பைன்ஸ்) மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு பரவியது. இந்த அலையின் போது பல சர்வாதிகார ஆட்சிகள் வீழ்ந்தன. 


கம்யூனிஸ்ட் அமைப்பின் வீழ்ச்சி தாராளவாத ஜனநாயகத்தின் வெற்றியாக பார்க்கப்பட்டது. இருப்பினும், ஜனரஞ்சகவாதம், அடையாள அரசியல் மற்றும் இன ஜனநாயகம் போன்ற புதிய சவால்கள் தோன்றியுள்ளன. பிரான்சிஸ் ஃபுகுயாமா உள்ளிட்ட சிந்தனையாளர்கள் இப்போது ஜனநாயகத்திற்கான இந்த புதிய அச்சுறுத்தல்களைப் பற்றி பேசுகிறார்கள். 


ஜனநாயகத்திற்கான புதிய மற்றும் வளர்ந்து வரும் சவால்கள் 


சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் உலகின் சில பகுதிகளில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இனப் பெரும்பான்மை நிரந்தர தேர்தல் பெரும்பான்மையாக மாற்றப்பட்டு, ஜனநாயக அமைப்புகள் மாற்றியமைக்கப்படுகின்றன. 


இது பேச்சு சுதந்திரம், மதம் மற்றும் ஒற்றுமை சுதந்திரத்தை பாதிக்கும்.  அவை கருத்துக்கள் மற்றும் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துவதற்கு முக்கியமானவை. இந்த சவால்கள் ஜனநாயகம் செயல்முறையை மாற்றக்கூடும் மற்றும் புதிய ஜனநாயக விரோத சக்திகளை உருவாக்கலாம். 


இந்த ஆண்டின் சர்வதேச ஜனநாயக தினம் ஒரு புதிய சவாலில் கவனம் செலுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என்றாலும், அது தவறான தகவல்களையும் வெறுப்பையும் பரப்பி, ஜனநாயகம், அமைதி மற்றும் நிலைத்ததன்மையை அச்சுறுத்துகிறது என்று ஐ.நா பொதுச்செயலாளர் குறிப்பிடுகிறார். 


 இந்தியாவின் பயணம்


இந்தியாவின் வரலாறு ஜனநாயகத்தின் மாற்றும் சக்தியைக் காட்டுகிறது. ஆரம்பத்தில், ஜனநாயகம் கேள்விக்குரிய நிலைத்தன்மையுடன் ஒரு உயரடுக்கு உந்துதல் திட்டமாக இருந்தது. காலப்போக்கில், முன்னர் ஒடுக்கப்பட்ட குழுக்கள் தங்கள் காரணங்களை முன்னெடுப்பதற்கும், ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும் ஜனநாயகம் பயன்படுத்தப்படுகிறது. 


அரசியல் அறிஞர் ஜாவீத் ஆலமின் படைப்பு,  ‘ஜனநாயகம் யாருக்கு வேண்டும்? (Who Wants Democracy?)’, சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவில் ஜனநாயகம் எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது. அரசியல் போராட்டங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மூலம் அரசியலமைப்பின் உருமாறும் திறன் அதிகரித்து வருகிறது. ஆழமாக வேரூன்றிய சமூக படிநிலைகளைக் கொண்ட ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. 


ஜனநாயகத்திற்கான சர்வதேச தினம் சமூக வாழ்வில் ஜனநாயகத்தை மேம்படுத்துவது குறித்து அதிக விவாதங்களைத் தூண்ட வேண்டும்.



Original article:

Share: