2085-ஆம் ஆண்டிற்குள், தீவிர நிகழ்வுகள் நிலப் பகுதியில் வாழும் விலங்குகளின் வாழ்விடங்களில் 36 சதவீதத்தைப் பாதிக்கக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. தீவிர வானிலை நிகழ்வுகள் என்றால் என்ன? காலநிலை மாற்றம் அவற்றை எவ்வாறு தீவிரப்படுத்துகிறது?
தற்போதைய செய்தி :
'Nature Ecology & Evolution' இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, இந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வந்தால், 2085-ஆம் ஆண்டிற்குள் நிலப்பரப்பில் வாழ்ந்துவரும் வனவிலங்கு வாழ்விடங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலனவை, வெப்ப அலைகள், காட்டுத்தீ மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற காலநிலை சார்ந்த பல்வேறு வகையான தீவிர வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்படக்கூடும். இந்தச் சூழலில், இந்த ஆய்வின் சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மேலும், பல்வேறு வகையான தீவிர வானிலை நிகழ்வுகள் எவை என்பதையும் புரிந்துகொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. ஜெர்மனியில் உள்ள பாட்ஸ்டாம் காலநிலை தாக்க ஆய்வு நிறுவனம் (Potsdam Institute for Climate Impact Research (PIK)) ஆய்வாளர்கள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, நடுத்தர-உயர் அளவிலான உமிழ்வு (emission) சூழ்நிலையில் காலநிலை மாற்றம் 34,000 முதுகெலும்புள்ள உயிரினங்களின்மீது ஏற்படுத்தும் தாக்கத்தை பகுப்பாய்வு செய்தது.
2. கடுமையான வெப்ப அலைகளால் தான் மிகவும் இந்த பாதிப்பிற்கு முக்கிய காரணி என்று அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலும் புவி வெப்பமயமாதல் தொடர்ந்தால், 2050-ஆம் ஆண்டிற்குள், நிலப்பரப்பில் உள்ள விலங்குகளின் வாழ்விடங்களில் 74% வெப்ப அலைகளாலும், 16% காட்டுத்தீயாலும், 8% வறட்சியாலும், 3% வெள்ளத்தாலும் பாதிக்கப்படும் என்று அந்த ஆய்வு கூறியது.
3. அமேசான், வெப்பமண்டல ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பல்லுயிர் மையங்களில் இந்தத் தீவிர நிகழ்வுகளின் தாக்கம் அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு குறிப்பிட்டது.
4. தீவிர காலநிலை நிகழ்வுகள், நிலப்பரப்பில் உள்ள பல்லுயிர்ப்பெருக்கத்தின் மீது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த ஆய்வு கோடிட்டுக் காட்டியது. ஒரு வெப்ப அலை அல்லது காட்டுத்தீ நிகழ்வு விலங்கினங்களை பேரழிவுக்கு உள்ளாக்கக்கூடும் என்றாலும், அடிக்கடி நிகழும் பல நிகழ்வுகள் பாதிப்புகளை மேலும் தீவிரப்படுத்துகின்றன.
5. மேலும், நுணுக்கமான பகுப்பாய்வில், வெளிநாட்டு உயிரினங்களைக் காட்டிலும் சொந்தநாட்டு உயிரினங்கள் தீவிர நிகழ்வுகளால் அதிக பாதிப்புக்குள்ளாவதோடு, தாவரங்களின்மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தி, பல உயிரினங்களுக்கான வாழ்விடத் தரத்தை (habitat quality) மாற்றுவதாக தெரிய வந்துள்ளது.
தீவிர வானிலை நிகழ்வுகள் என்றால் என்ன?
1. உலக வானிலை மையத்தின் கூற்றுப்படி, “ஒரு தீவிர வானிலை நிகழ்வு (extreme weather event) என்பது, ஆண்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரே நேரத்தில் அரிதாக நிகழ்வதுடன், அதன் அளவு, இடம், நேரம் அல்லது பரப்பளவு ஆகியவற்றின் அடிப்படையில் அசாதாரணமான பண்புகளைக் கொண்டிருப்பதாகும்.
2. தீவிர வானிலை நிகழ்வுகள் என்பவை, சமூகங்கள், வேளாண்மை மற்றும் இயற்கைச் சூழல் அமைப்புகளில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய, வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான வானிலை அல்லது காலநிலை நிலைமைகள் ஆகும்.
3. 2022-ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு, வெப்ப மற்றும் குளிர் அலைகள், வெள்ளம், அதீத மழைப்பொழிவு, வறட்சி, சூறாவளிகள் மற்றும் வெப்பமண்டலப் புயல்கள் ஆகியவை தீவிர வானிலை மற்றும் காலநிலை நிகழ்வுகளால் ஏற்படுவதாக தெரிவிதுள்ளது. ஆனால், இவை மட்டுமே காரணி அல்ல.
காலநிலை மாற்றம் தீவிர வானிலை நிகழ்வுகளை எவ்வாறு பாதிக்கிறது?
1. 1850-ஆம் ஆண்டிலிருந்து பூமியின் சராசரி உலகளாவிய வெப்பநிலை குறைந்தபட்சம் 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இதற்கான முக்கிய காரணம், மனிதச் செயல்பாடுகள் மூலம் வளிமண்டலத்திற்கு இதுவரை இல்லாத அளவில் வெளியிடப்பட்ட பசுமை இல்ல வாயுக்கள் (greenhouse gases) ஆகும்.
2. வெப்பநிலை அதிகரிப்பின் விளைவாக, உலகம் முழுவதும் தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி மற்றும் அதிக தீவிரத்துடன் நிகழ்கின்றன. இந்த நிகழ்வுகளில் வெப்ப அலைகள், வறட்சி, வெள்ளம், சூறாவளி மற்றும் காட்டுத்தீ ஆகியவை அடங்கும்.
காலநிலை மாற்றம் (climate change) என்பது என்ன?
காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (Intergovernmental Panel on Climate Change (IPCC)) கூற்றுப்படி, காலநிலை மாற்றம் என்பது, காலநிலையின் பண்புகளின் சராசரி அல்லது மாறுபாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் (எ.கா., புள்ளிவிவர சோதனைகளைப் பயன்படுத்தி) கண்டறியக்கூடிய மற்றும் பொதுவாகப் பத்தாண்டுகள் அல்லது அதற்கும் மேலாக நீடிக்கும் ஒரு காலநிலை நிலை மாற்றத்தைக் குறிக்கிறது.
3. குறிப்பாக, எந்தவொரு குறிப்பிட்ட தீவிர வானிலை நிகழ்வையும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்துவது மிகவும் கடினம். ஏனெனில், எல் நினோ மற்றும் லா நினோ போன்ற இயற்கையான காலநிலை மாறுபாடுகளின் வடிவங்கள் உட்பட, போன்ற நிகழ்வுகளுக்கு பல காரணிகள் உள்ளன என்று, அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி மற்றும் ராயல் சொசைட்டி இணைந்து வெளியிட்ட 'காலநிலை மாற்றம்: சான்றுகள் மற்றும் காரணங்கள்' என்ற வெளியீடு கூறுகிறது. இருப்பினும், புவி வெப்பமயமாதல் ஒரு நிகழ்வை மிகவும் கடுமையானதாகவோ அல்லது அது நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியதாகவோ ஆய்வுகள் காட்டமுடியும் என்று குழு மேலும் தெரிவித்துள்ளது.
4. உதாரணமாக, 2019-ஆம் ஆண்டு வெப்ப அலை காரணமாக மேற்கு ஐரோப்பாவில் 2,500 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, இத்தகைய கடும் வெப்ப அலை, காலநிலை மாற்றம் இல்லாத உலகத்துடன் ஒப்பிடும்போது, ஐந்து மடங்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது.
5. மேலும், வரும் ஆண்டுகளில் வெப்ப அலைகள் கடுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக, 2040-களில் வெப்ப அலைகள் 12 மடங்கு அதிகமாக ஏற்படக்கூடும் என்று காலநிலை மாதிரிகள் காட்டுகின்றன.
6. அதேபோல், அதிகரித்துவரும் வெப்பநிலை வறட்சியை மோசமாக்கியுள்ளது. அதீத வெப்பம், நிலத்திலிருந்து அதிகமாக ஈரப்பதத்தை ஆவியாக்குவதன் மூலம், காட்டுத்தீ ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகளையும், நீண்டகால காட்டுத்தீப் பருவத்தையும் உருவாக்குகிறது.
7. அதிக வெப்பநிலையானது நிலத்திலிருந்து மட்டுமல்லாமல், கடல்கள் மற்றும் பிற நீர்நிலைகளிலிருந்தும் நீர் ஆவியாவதற்குக் காரணமாகிறது. வெப்பமான வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது.
8. சராசரி வெப்பநிலையில் ஏற்படும் ஒவ்வொரு 1 டிகிரி செல்சியஸ் உயர்வுக்கும், வளிமண்டலத்தால் 7% கூடுதல் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழல் புயல்களை மேலும் ஆபத்தானவையாக மாற்றுகிறன. இதன் விளைவாக மழைப்பொழிவின் தீவிரம், கால அளவு அல்லது அடிக்கடி நிகழும் நிகழ்வுகள் அதிகரிக்கின்றன. இது இறுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடும்.
9. அதிகரித்துவரும் வெப்பநிலையானது சூறாவளிகளை மேலும் வலுவானதாகவும், அடிக்கடி நிகழக்கூடியதாகவும் ஆக்குகின்றன என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2023-ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வின்படி, உலக வெப்பநிலை குறைந்தது 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், கிழக்கு பசிபிக் பகுதியில் பெரிய சூறாவளிகள் நிலப்பரப்பை அடையும் நிகழ்வுகள் 30% வரை அதிகரிக்கக்கூடும் என்று கூறுகிறது. இதற்கான முக்கிய காரணம் கடல்களின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பாகும். இதுவே சூறாவளிகள் உருவாகவும் வலுப்பெறவும் முக்கிய காரணியாக அமைகின்றன.
2026-ஆம் ஆண்டு காலநிலை ஆபத்துக் குறியீடு அறிக்கை
1. கடந்த ஆண்டு நடைபெற்ற 30-வது காலநிலை மாநாட்டில், பான் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பான ஜெர்மன்வாட்ச், காலநிலை ஆபத்துக் குறியீட்டு (Climate Risk Index (CRI)) அறிக்கையை வெளியிட்டது. கடந்த 30 ஆண்டுகளில் காலநிலை தொடர்பான பேரழிவுகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது, 2023-ல் வெளியிடப்பட்ட முந்தைய அறிக்கையைவிட ஒரு இடம் முன்னேறி உள்ளதை காட்டுகிறது.
2. 2006-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் காலநிலை ஆபத்துக் குறியீடு, மிக நீண்ட காலமாக வெளி வரும் வருடாந்திர காலநிலைத் தாக்கம் தொடர்பான குறியீடுகளில் ஒன்றாகும். இந்தக் குறியீடு, காலநிலை தொடர்பான தீவிர வானிலை நிகழ்வுகளால் நாடுகளில் ஏற்படும் விளைவுகளை அளவிடுகிறது. இது நாடுகளை பொருளாதார மற்றும் மனித பாதிப்புகள் (உயிரிழப்புகள் மற்றும் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை) அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது; இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு முதலிடத்தில் உள்ளது.
3. அறிக்கையின்படி, அனைத்து நாடுகளும் காலநிலை தொடர்பான ஆபத்துகளால் பாதிக்கப்படுகின்றன. ஆனால், உலகில் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.
4. வெள்ளம், வெப்ப அலைகள், புயல்கள் மற்றும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு தீவிர வானிலை நிகழ்வுகளை நாடு இந்தியா எதிர்கொண்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்து, உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புயல்கள் கடலோரப் பகுதிகளைப் அதிக பாதிப்புள்ளாக்கி, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட காலநிலை அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
5. மனிதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றம், தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படவும் மேலும் தீவிரமடையவும் முக்கிய கரணியாகும் இருந்து வருகிறது. 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், எல் நினோ பல தீவிர நிகழ்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், காலநிலை மாற்றம் அவற்றை இன்னும் மோசமாக்கியதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 2024-ஆம் ஆண்டில், மனிதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றம், 41 நாட்கள் கூடுதல் ஆபத்தான வெப்பத்தை ஏற்படுத்தியது. இது குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதித்ததோடு, அதிக தீவிரம் கொண்ட சூறாவளிகள் மற்றும் காட்டுத்தீ போன்ற பிற தீவிர வானிலை நிகழ்வுகளுக்கும் வழிவகுத்தது.
Original link:
Extreme Weather Events: Trends, triggers and consequences.