பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) மத்தியில் துணைப்பிரிவு பற்றிய சட்ட விவாதம் பல ஆண்டுகளாக எவ்வாறு உருவாகி வருகிறது -அபூர்வா விஸ்வநாத்

 இடஒதுக்கீடு வழங்கும் போது இந்த துணை வகைப்பாடுகளை உருவாக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளதா அல்லது அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளதா என்பதை உச்ச நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும்.

இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் (D Y Chandrachud) தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அடுத்த வாரம் பட்டியலிடப்பட்ட வகுப்பினரை (Scheduled Castes (SC) துணை வகைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறது.


அதிக ஆதிக்கம் செலுத்தும் பட்டியலிடப்பட்ட வகுப்பினர்களுடன் ஒப்பிடும்போது, இடஒதுக்கீட்டில் கூட சில பட்டியலிடப்பட்ட வகுப்பினர்கள் கணிசமாகக் குறைவாகவே இருப்பதாக மாநிலங்கள் வாதிடுகின்றன. அனைத்து பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மக்களிடையேயும் நன்மைகளை மிகவும் நியாயமாக விநியோகிக்க, தற்போதுள்ள 15% பட்டியலிடப்பட்ட வகுப்பினர் ஒதுக்கீட்டிற்குள் தனி இடஒதுக்கீட்டை அமைக்க அவர்கள் விரும்புகிறார்கள்.


இடஒதுக்கீட்டிற்காக இந்த துணைப்பிரிவுகளை உருவாக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளதா அல்லது குடியரசுத் தலைவர் மட்டுமே அவ்வாறு செய்ய முடியுமா என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும்.


தொடக்கம்


1975 இல், பஞ்சாப் அரசாங்கம் அதன் 25% பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை இரண்டு வகைகளாகப் பிரித்தது. அவை, பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பால்மிகி (Balmiki) மற்றும் மஜ்பி சீக்கிய சமூகத்தினருக்கு (Mazhbi Sikh communities) மட்டுமே முதல் வகை இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவர்கள் கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடுகளுக்கு முதல் முன்னுரிமை அளித்தனர். இரண்டாவது பிரிவில் இந்த சிறப்புச் சலுகையைப் பெறாத பிற பட்டியலிடப்பட்ட வகுப்பின சமூகங்களும் அடங்கும்.


ஒட்டுமொத்தமாக பட்டியலிடப்பட்ட வகுப்பின சமூகங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதைத் தாண்டி,மேலும் சில சமூகங்களுக்கு சலுகைகளை வழங்குவதற்காக ஒரு மாநிலத்தால் தற்போதுள்ள இடஒதுக்கீடுகள் 'துணை-வகைப்படுத்தப்பட்ட' (sub-classified) முதல் நிகழ்வுகளில் ஒன்றாகும்.

 

இந்த அறிவிப்பு சுமார் 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. ஆனால் 2004 ஆம் ஆண்டில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு 2000 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசம் கொண்டுவந்த இதேபோன்ற சட்டத்தை செல்லாததாக்கிய போது, அவை சட்ட சவால்களை மேலும் எதிர்கொண்டது. சின்னையா vs ஆந்திரப் பிரதேச மாநிலம்' (E.V. Chinnaiah vs State of Andhra Pradesh)  வழக்கில், சமத்துவ உரிமையை மீறியதற்காக ஆந்திரப் பிரதேச பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (இட ஒதுக்கீடுகளை பகுத்தறிவுபடுத்துதல்) சட்டம் (Scheduled Castes (Rationalisation of Reservations) Act), 2000ஐ உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. சட்டம் மாநிலத்தில் உள்ள பல்வேறு பட்டியல் சாதி சமூகங்களை பட்டியலிட்டது மற்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இடஒதுக்கீடு பலன்களைக் குறிப்பிட்டது.


பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடுகள் சமூகங்களை வித்தியாசமாக நடத்துவதால் சமத்துவ உரிமைக்கு எதிரானது என்று நீதிமன்றம் கூறியது. தீண்டாமை காரணமாக அவர்கள் அனைவரும் வரலாற்று ரீதியாக பாகுபாட்டை எதிர்கொண்டதால், அரசியலமைப்பு பட்டியலிடப்பட்ட வகுப்பினர்களை ஒரே குழுவாகக் கருதுகிறது.


அரசியலமைப்பின் 341 வது பிரிவையும் நீதிமன்றம் குறிப்பிடுகிறது, இது இடஒதுக்கீடுகளுக்காக பட்டியலிடப்பட்ட வகுப்பினர் சமூகங்களின் பட்டியலை உருவாக்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வானது, பிரிவு 341-ல் துணைப்பிரிவு உட்பட இந்தப் பட்டியலில் "தலையிட" (interfere) அல்லது "தொந்தரவு" (disturb) செய்ய மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், அவ்வாறு செய்வது சட்டப்பிரிவு 341ஐ மீறும் செயல் என்றும் கூறியது.


உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் 1975 ஆம் ஆண்டு 'டாக்டர். கிஷன் பால் v. பஞ்சாப் மாநிலம்' வழக்கின் மூலம் இதற்கான அறிவிப்பை ரத்து செய்தது.


மேல்முறையீடு


அக்டோபர் 2006 இல், பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் அறிவிப்பை ரத்து செய்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, பால்மிகி (Balmiki) மற்றும் மஜ்பி சீக்கிய சமூகங்களுக்கான (Mazhbi Sikh communities) இட ஒதுக்கீடுகளில் முன்னுரிமை அளிப்பது பற்றி பஞ்சாப் அரசு பஞ்சாப் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (சேவைகளில் இட ஒதுக்கீடு) சட்டம், (Scheduled Caste and Backward Classes (Reservation in Services) Act),  2006 உடன் மீண்டும் சட்டத்தை கொண்டு வர முயற்சித்தது. 


2010 இல், உயர்நீதிமன்றம் மீண்டும் இந்த விதியை நீக்கியது. 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பட்டியலிடப்பட்ட வகுப்பினரின் ஒதுக்கீட்டை உட்பிரிவில் சேர்க்க முடியாது என்று தவறாக முடிவு செய்துவிட்டதாக வாதிட்டு பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


2014 இல், 'டேவிந்தர் சிங் v பஞ்சாப் மாநிலம்' வழக்கில், உச்ச நீதிமன்றம் 2004 EV சின்னையாவின் (E V Chinnaiah) தீர்ப்பு பல்வேறு அரசியலமைப்பு விதிகளை ஆய்வு செய்வதால், இந்த இடஒதிக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மேல்முறையீடு செய்தது. அரசியலமைப்புச் சட்டத்தை விளக்குவதற்கு உச்ச நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தேவை.


2020ல், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, ஈ.வி.சின்னையாவின் 2004 தீர்ப்பை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியது. நீதிமன்றமும், அரசும் "மௌனப் பார்வையாளனாக இருக்க முடியாது மற்றும் நேர்மாறான உண்மைகளுக்கு கண்களை மூடிக் கொள்ள முடியாது" என்று தீர்ப்பு குறிப்பிட்டது. அனைத்து பட்டியலிடப்பட்ட வகுப்பினரும் ஒரே மாதிரியானவர்கள் என்ற கருத்தை அவர்கள் ஏற்கவில்லை, அவர்களுக்குள் வேறுபாடுகள் இருப்பதாகக் கூறினர்.


முக்கியமாக, ஈ.வி.சின்னையா -வின் தீர்ப்பிலிருந்து, பட்டியலிடப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீடுகளுக்கு "கிரீமி லேயர்" (creamy layer) கருத்து பயன்படுத்தப்பட்டது. 'ஜர்னைல் சிங் vs லச்மி நரேன் குப்தா' (Jarnail Singh vs Lachhmi Narain Gupta) வழக்கு தொடர்பான முக்கியமான 2018 தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் பட்டியலிடப்பட்ட வகுப்பினர்களுக்கான "கிரீமி லேயர்" (creamy layer) கருத்தை அங்கீகரித்துள்ளது. இடஒதுக்கீடுகளுக்குத் தகுதியானவர்களுக்கு வருமான வரம்பை இந்தக் கருத்து தீர்மானிக்கிறது. இது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (Other Backward Castes (OBC)) பயன்படுத்தப்பட்டாலும், 2018 இல் முதல் முறையாக பட்டியலிடப்பட்ட வகுப்பினரின் பதவி உயர்வுகளுக்கும் இது பயன்படுத்தப்பட்டது.


இதற்கான உட்பிரிவு என்பது கிரீமி லேயர் (creamy layer) விதியைப் பயன்படுத்துவதைப் போன்றது என்று மாநிலங்கள் வாதிடுகின்றன. மேல் வகுப்பினரை பட்டியலிடப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு பதிலாக, மிகவும் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர்.


டேவிந்தர் சிங் (Davinder Singh) அமர்வில் ஐந்து நீதிபதிகள் (ஈ.வி. சின்னையாவைப் போலவே) இருந்ததால், ஏழு நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு இப்போது இந்த வழக்கை விசாரிக்கிறது - சிறிய பெஞ்சின் தீர்ப்பை விட பெரிய அமர்வின் தீர்ப்பு மட்டுமே மேலோங்கும்.

இந்த உட்பிரிவின் காரணமாக பஞ்சாபில் உள்ள பால்மிகிகள் (Balmikis) மற்றும் மஜாபி சீக்கியர்கள் (Mazhabi Sikhs) மற்றும் ஆந்திராவில் உள்ள மதிகாவை (Madiga in Andhra Pradesh) மட்டுமல்ல, பீகாரில் பேஸ்வான்கள் (Paswans in Bihar), உத்திர பிரதேசத்தில் உள்ள ஜாதவ்கள் (Jatavs in UP) மற்றும் தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கும் (Arundhatiyars) பாதிப்பை ஏற்படுத்தும்.




Original article:

Share: