நாடு முழுவதும் உள்ள வங்கிக் கணக்குகளுக்குத் தங்கள் நியமினிகளை (nominees) புதுப்பிப்பது குறித்து மக்களுக்குத் தெரிவிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
யாரும் உரிமை கோராத பணம் வங்கிகளிடம் உள்ளது. இந்தப் பணத்தை வைத்திருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கே திருப்பி செலுத்துவதற்கு வங்கிகள் மூலம் அணுக அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டணர். இதில், 2023 ஆம் ஆண்டில், நிதி அமைச்சகம் ஒரு பெரிய முயற்சியை மேற்கொண்டது. வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத முதல் 100 கணக்குகளில் இருந்து 100 நாட்களுக்குள் பணத்தை திருப்பிச் செலுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதுவரை, 1,432 கோடியை திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியிட்டது. ஆனால், இதன் பிரச்சனை இன்னும் பெரியதாக உள்ளது. எவ்வாறாயினும், மார்ச் 2023 நிலவரப்படி, வங்கிகளில் யாரும் உரிமை கோராத ₹42,272 கோடி பணம் இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 28 சதவீதம் அதிகமாகும். எனவே, இந்திய ரிசர்வ் வங்கி உரிமை கோரப்படாத வைப்பு தகவல்களை அணுகுவதற்கான நுழைவாயில் (Unclaimed Deposits - Gateway to Access inforMation(UDGAM)) என்ற புதிய வலைத்தளத்தைத் தொடங்குகிறது என்பது நல்ல செய்திதான். அதே நேரத்தில், இந்த இணையதளத்தில், வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு (Depositor Education and Awareness (DEA)) நிதியில் உரிமை கோரப்படாத பணம் ஏதேனும் உள்ளதா என்று கணக்கு வைப்பாளர் (depositors) பார்க்கலாம். பின்னர், அவர்கள் தங்கள் பணத்தை திருப்பித் தருமாறு வங்கியிடம் கேட்கலாம்.
உரிமை கோரப்படாத வைப்பு தகவல்களை அணுகுவதற்கான நுழைவாயில் (UDGAM) முன்முயற்சி ஒரு படி முன்னோக்கி உள்ளது. ஆனால், அது முழு பிரச்சினையையும் தீர்க்காது. வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் (Depositor Education and Awareness (DEA) Fund ) 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உரிமை கோரப்படாத வங்கிக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகள் மட்டுமே அடங்கும். வங்கிக் கணக்குகளில் 'செயல்படாத' (inoperative) பணம் அதிகமாக உள்ளது. இவை இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கணக்குகளாக உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கிகளும் இந்த பணத்தை கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றுவதற்கு முன்பு கணக்கு வைப்பாளர் (depositors) அல்லது அவர்களின் வாரிசுகளுக்கு உரிமை கோர உதவ வேண்டும். இல்லையெனில், பெரும்பாலும் கணக்குகள் செயல்படாததாகிவிடும். ஏனெனில், வங்கி கணக்கின் வாரிசாக ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல் உரிமையாளர் இறந்துவிடுகிறார்.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் கிளை வங்கிகள் நாடு முழுவதும் விழிப்புணர்வை தொடங்க வேண்டும். இது டீமேட் கணக்கு (demat accounts) நியமனங்கள் குறித்த செபியின் (SEBI) பிரச்சாரத்தைப் போலவே, வங்கிக் கணக்குகளில் நியமினிகளை (nominees) புதுப்பிக்க மக்களை ஊக்குவிக்க வேண்டும். நியமினிகள் இல்லை என்றால், இறந்த கணக்கு வைத்திருப்பவர்களின் நிலுவைத் தொகையை அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு அனுப்புவதற்கான நடைமுறை எளிமையாக்கப்பட வேண்டும். தற்போது, பயனாளிகளுக்கு சட்டப்பூர்வ வாரிசு அல்லது வாரிசு சான்றிதழ்கள் இருந்தாலும், பிணைய கையொப்பங்கள் மற்றும் நோட்டரி செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் (notarised affidavits) தேவைப்படும் வெவ்வேறு நடைமுறைகள் வங்கிகளில் உள்ளன. பயனாளிகள் புதிய இடங்களுக்குச் செல்வதாலும், பழைய வங்கிக் கணக்குகளை மூட மறப்பதாலும் பல செயலற்ற கணக்குகள் நடக்கின்றன. இதனால், வங்கிகள் வாடிக்கையாளர்களின் கணக்குகளை கிளைகளுக்கு இடையே எளிதாக மாற்ற அனுமதித்தால், இந்த சிக்கலை சரிசெய்ய முடியும். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி “சொந்த கிளை” (home branch) என்ற எண்ணத்திலிருந்து வங்கிகள் விடுபட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும், பயனாளிகள் தங்கள் வங்கி நடைமுறைகளில் சிலவற்றை மாற்ற ஊக்குவிக்க வேண்டும். சில தனிநபர்கள் வரிகளைத் தவிர்ப்பதற்காக வெவ்வேறு கணக்குகளில் பணத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால், வரிமானத் துறை அவர்களின் அனைத்து கணக்குகளையும் பான் (PAN) எண்களைப் பயன்படுத்தி கண்காணிக்க முடியும்.
உரிமை கோரப்படாத கணக்குகளின் உரிமையாளர்களைக் கண்டுபிடிப்பது எல்லா இந்தியர்களுக்கும் மின்னணு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் தொடங்க வேண்டும். ஜன் தன் யோஜனா திட்டத்தின் (Jan Dhan Yojana) வெற்றிக்குப் பிறகு இந்த நிலைமை மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த திட்டம் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு வங்கிக் கணக்குகளை வழங்கியுள்ளது. இதன் விளைவாக, மின்னணு முறைகள் தனிப்பட்ட சேவைகளுடன் இணைந்து பயன்படுத்தப்பட வேண்டும். இந்த சேவைகள் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது பயனாளிகள் உரிமை கோரப்படாத பணத்தைப் பற்றி கண்டுபிடித்து அதற்கான உரிமைக் கோரல்களை தாக்கல் செய்ய அனுமதிக்கும்.