துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் (Sub-Saharan Africa) ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது -தி இந்து தரவுக் குழு

 பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக வறுமை விகிதம் அதிகரித்து வருவதாக உலக வங்கி (World Bank) கூறுகிறது.


உலகளவில் வறுமை குறைந்து வரும் அதே வேளையில், சில பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில், துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் (Sub-Saharan Africa) வறுமையில் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 1990 இல், சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் 278 மில்லியன் ஏழைகள் இருந்தனர். 2019 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 397 மில்லியனாக உயர்ந்துள்ளது. பிராந்தியத்தில் பல நாடுகளில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக 2008 இல் இருந்து இந்த அதிகரிப்பு குறிப்பாக குறிப்பிடத்தக்கது. உலக வங்கி இந்த புள்ளி விவரத்தை அளித்துள்ளது.


இதற்கு நேர்மாறாக, தெற்காசியாவில் (South Asia) வறுமை குறைந்தது. 1990 ஆம் ஆண்டில், தெற்காசியாவில் 1.62 பில்லியன் மக்கள் ஏழைகளாக இருந்தனர். ஆனால் 2019 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 221 மில்லியனாக குறைந்தது. ஆரம்பத்தில், உலகின் 80% ஏழைகள் தெற்காசியாவில் வாழ்ந்தனர். அதே நேரத்தில் 13.8% மட்டுமே துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் வாழ்ந்தனர். இருப்பினும், 2019 வாக்கில், தெற்காசியாவின் பங்கு 31.4% ஆக குறைந்தது. அதே நேரத்தில் துணை-சஹாரா ஆப்பிரிக்காவின் பங்கு 56.6% ஆக அதிகரித்தது. உலகளவில், மொத்த ஏழைகளின் எண்ணிக்கை 1990 

-ல் 2.01 பில்லியனிலிருந்து 2019-ல் 702 மில்லியனாக குறைந்துள்ளது. $2.15/நாள் (2017 Purchasing power parity (PPP)) வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் எண்ணிக்கையை விளக்கப்படம் 1 காட்டுகிறது.


துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், பிராந்தியத்தின் வறுமை விகிதம் 1990-ல் 53.8% ஆக இருந்து 2019-ல் 35.4% ஆகக் குறைந்துள்ளது. தெற்காசியாவில், அதே காலகட்டத்தில் வறுமை விகிதம் 49.8% இலிருந்து 10.5% ஆக கணிசமாகக் குறைந்தது, ஆனால் இது 2018 -ல் 10.4% இலிருந்து 2019-ல் விளக்கப்படம்-2ல் 10.5% ஆக சற்று அதிகரித்துள்ளது.


மேற்கு ஆசியா (West Asia) மற்றும் வட ஆபிரிக்காவில் (North Africa), வறுமை அளவுகள் 1990 வரை குறைந்து கொண்டிருந்தன. ஆனால், அவை 2014 இல் உயரத் தொடங்கி 2018 இல் 9.6% ஐ எட்டியது. இது, 1990 இல் 6.3% ஆக இருந்தது. இந்த அதிகரிப்பு சிரியா, லிபியா மற்றும் ஈராக்கில் உள்நாட்டுப் போர்களின் போதும், யேமனில் மோதல்களிலும், அரபு வசந்தத்திற்குப் காலத்திற்கு  பிந்தைய காலங்களிலும் நிகழ்ந்தது.

துணை-சஹாரா ஆப்பிரிக்காவிற்குள், மடகாஸ்கர், புருண்டி, தெற்கு சூடான் மற்றும் பிற போன்ற பலவீனமான மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் (fragile and conflict-affected states (FCS)) வறுமை அதிகமாக குவிந்துள்ளது என்று உலக வங்கி குறிப்பிடுகிறது. சிரியா மற்றும் யேமனிலும் அதிக வறுமை விகிதங்கள் உள்ளன. அவற்றின் மக்கள்தொகையில் 60% க்கும் அதிகமானோர் வறுமையில் வாழ்கின்றனர். இருப்பினும், பெனின், செனகல் போன்ற பலவீனமான தன்மையைத் தவிர்த்த சில ஆப்பிரிக்க நாடுகள் வறுமையை வெற்றிகரமாக குறைத்தன.



விளக்கப்படம் 3, பலவீனமான மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில், துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள நாடுகளுக்கான சமீபத்திய மதிப்பிடப்பட்ட வறுமை விகிதங்களைக் காட்டுகிறது. தெற்கு சூடான் (South Sudan) மற்றும் புருண்டி (Burundi) ஆகியவை உலகளவில் 70% க்கும் அதிகமான வறுமை விகிதங்களைக் கொண்டுள்ளன. எட்டு துணை-சஹாரா நாடுகளில், வறுமை விகிதம் 60% ஐ விட அதிகமாக உள்ளது. பலவீனமான மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வெளியே, உஸ்பெகிஸ்தான் (Uzbekistan) (28%)) ஆக அதிக வறுமை விகிதத்தைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து பெலிஸ்  Belize (18%), ஜிபூட்டி (Djibouti (17%)), ஹோண்டுராஸ் (Honduras (12%)) மற்றும் சுரினாம் (Suriname (11%)).


2019-ம் ஆண்டில் அதிக வறுமை விகிதங்களைக் கொண்ட 43 நாடுகள் பலவீனமான மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளின் (fragile and conflict-affected states (FCS)) பட்டியலில் இருந்தன அல்லது துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் இருந்தன. பொருளாதார வளர்ச்சிக்கு ஸ்திரத்தன்மை முக்கியமானது. இந்த நாடுகளில் நிலையற்ற தன்மை மற்றும் மோதல்கள் கடன் நெருக்கடியை அதிகரிக்க வழிவகுத்தது. பொருளாதார வளர்ச்சி ஸ்திரத்தன்மையை நம்பியுள்ளது என்று உலக வங்கி (World Bank) குறிப்பிடுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக நிலையாக இருக்கும் சீனாவும் இந்தியாவும், வலுவான பொருளாதார வளர்ச்சியின் மூலம் உலகளாவிய வறுமை குறைப்பில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.




Original article:

Share: