கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கு மாணவர் ஈடுபாடு முக்கியமானது, இருப்பினும் இந்தியாவின் பெரும்பாலான வகுப்பறைகளில் இது இல்லை.
14-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 86.8% க்கும் அதிகமானோர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் 2-ஆம் வகுப்பு பாடத்தைக்கூட தங்கள் வட்டார மொழிகளில் சரளமாக படிக்க முடியவில்லை என்று 2023 ஆம் ஆண்டின் கல்வி நிலை அறிக்கை கூறுகிறது.
கற்றல் குறைபாடு
இந்தியா பல ஆண்டுகளாக கற்றல் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. பிரதாமின் வருடாந்திர ஆய்வுகள் (Pratham’s annual surveys) காரணமாக விழிப்புணர்வு அதிகரித்த போதிலும், சிறிய முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால், அதிகம் மாறவில்லை. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால், பதிவுசெய்யப்பட்ட குழந்தைகளின் கற்றல் திறனும் குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக, மானவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பள்ளி பற்றிய அதிக ஈடுபாடு இல்லை. மாணவர்களின் செயல்திறன் குறைவாக இருப்பதற்கு குறைவான வருகைப்பதிவே காரணம் என்று அரசு ஆசிரியர்கள் அடிக்கடி குற்றம் சாட்டுகின்றனர். மாணவர்கள் வகுப்பைத் தவிர்க்கும்போது, ஆசிரியர்கள் அவர்களை கற்றல் திறனில் ஈடுபடுத்துவதற்கான உந்துதலை இழக்கிறார்கள். இது ஒரு சுழற்சியை உருவாக்குகிறது.
மாணவர்கள் ஊக்கமளிக்கும் போது கற்றுக்கொள்கிறார்கள். இது அர்த்தமுள்ள மற்றும் உளவியல் ரீதியாக பாதுகாப்பான வகுப்பறைகளில் நடக்கிறது. இருப்பினும், பல இந்திய வகுப்பறைகளில், ஆசிரியர்கள் முன் வரிசையில் உள்ள மாணவர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். கேள்விகள், மற்றும் பதில்களை, எழுத கரும்பலகையைப் பயன்படுத்துகின்றனர். மேலும், மாணவர்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை, ஆசிரியர்கள் கரும்பலகையில், எழுதுவதை பார்த்து தங்களின் நோட்டு புத்தகங்களில் குறிப்பு எடுப்பதில் செலவிடுகிறார்கள். ஆசிரியர்கள் அடிக்கடி வெளியே செல்கிறார், அந்த நேரத்தில் மாணவர்கள், ஒன்றாக பதில்களை மீண்டும் எழுத விட்டுவிடுகிறார். இது செயலில் கற்றல் போல் தோன்றினாலும், மாணவர்களை உண்மையில் மனரீதியாகவோ, அல்லது உணர்ச்சி ரீதியாகவோ, கற்பதில் ஈடுபடுத்தவில்லை. இந்திய கல்விமுறை மனப்பாடம் செய்வதை பெரிதும் நம்பியுள்ளது. ஆனால், இந்த அணுகுமுறை அனைவருக்கும் பொருந்தாது, குறிப்பாக உலகம் மிக விரைவாக மாறி வருகிறது.
இருவழி தொடர்பு (two-way communication)
ஒவ்வொரு குழந்தையும் தோராயமாக அழைக்கப்படும் ஒரு வகுப்பறையை கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் அனைவரும் விழிப்புடனும், ஆர்வமாகவும், கற்றலில் கவனம் செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். கணிதக் கருவிகள் மற்றும் அறிவியல் கருவிகள் போன்ற கற்றல் பொருட்களைப் பயன்படுத்தி மாணவர்கள் ஒருவருக்கொருவர் விவாதித்து சிக்கல்களைத் தீர்க்கலாம். குழந்தைகள் கற்கும் போது ஆசிரியர் வகுப்பறையில் இருந்து சரியான நேரத்தில் அவர்களுக்கு சிறந்த கருத்துக்களை வழங்குகிறார். மாணவர்கள் உண்மையில் கற்றலைப் பற்றி சிந்திக்கிறார்கள் மற்றும் அவர்களின் கற்றலின் உரிமையை எடுத்துக்கொள்கிறார்கள், வகுப்பறை அனைவருக்கும் அர்த்தமுள்ள இடமாக மாறுகிறது.
ஆசிரியர் பங்கேற்காத வரை, மாணவர்களின் ஈடுபாடு இருக்காது. பாலினம், சாதி, மதம், சிறப்புத் தேவைகள் அல்லது இயலாமை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் வகுப்பறையில் கற்றல் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை தீவிரமாக கற்றலில் ஈடுபடுத்தும்போது, அவர்கள் சிறப்பாக கற்றுக்கொள்கிறார்கள். இது எளிமையானதாகத் தெரிகிறது. ஆனால், போதுமான ஆசிரியர்கள் இல்லாதது, பழமையான கற்பித்தல் முறைகள் மற்றும் கற்றலில் போதிய ஆதரவு இல்லாமை போன்ற சிக்கல்கள் காரணமாக உண்மையான வகுப்பறைகளில் இவற்றை செய்வது கடினம்.
சவால்கள் பல இருந்தபோதிலும் ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும், கற்பிக்கும் ஆசிரியர்கள் பலர் உள்ளனர். இருப்பினும், நம்மிடம் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், கற்பித்தல் மற்றும் நல்ல மாணவர் வருகையும் இருந்தால் கூட, குழந்தைகள் எப்போதும் கற்றுக் கொள்வதில்லை. பல ஆசிரியர்கள் தங்களை ஈடுபாட்டுடன், கற்பிக்கும் செயலில் ஈடுபடுவதில்லை. எனவே, மாணவர்களை படிப்பில் கவனம் செலுத்துவதை தங்கள் வேலையாக அவர்கள் பார்க்கவில்லை. கற்பித்தல் பெரும்பாலும் ஒரு வழி தகவல்தொடர்பாகக் காணப்படுகிறது. ஆசிரியர் மாணவர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறவில்லை. கற்பவரின் மனதில் என்ன நடக்கிறது என்பதை ஆசிரியருக்குத் தெரியாது, எனவே கற்பவரின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களின் கற்பித்தலைத் தனிப்பயனாக்க முடியாது.
ஆசிரியருக்கு கற்பித்தல்
இந்தியாவில் ஆசிரியர் கல்வியும் பயிற்சியும் பெரும்பாலும் தத்துவார்த்தமாகவே இருக்கிறது. அவை வழக்கமாக ஒரு கருத்தரங்கு பாணியில் நடக்கும், ஒரு வழி தகவல்தொடர்பில் கவனம் செலுத்துகிறது. அதாவது மாணவர்களை எவ்வாறு திறம்பட கேள்வி கேட்பது போன்ற கற்றல் திறன்களைப் பயிற்சி செய்வதற்கு ஆசிரியர்கள் அதிக வாய்ப்பைப் பெறுவதில்லை. ஆசிரியர்களும் கற்பவர்கள் என்பதை, நினைவில் கொள்வது அவசியம். பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் கற்றல் சூழல் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். பயிற்சியில் 70% செய்முறை (practical) பயிற்சிகள் மற்றும் 30% கோட்பாடு (theory) இருக்க வேண்டும். இந்த அணுகுமுறை இரண்டு நோக்கங்களுக்காக உதவுகிறது: இது ஆசிரியர்களுக்குத் தேவையான திறன்களைப் பயிற்றுவிக்கிறது மற்றும் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கற்பவர்களாக இருப்பதன் அனுபவத்தை அவர்களுக்கு வழங்குகிறது.
தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்த இலவச அணுகல் தேவை
பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு போதிய ஆதரவு கிடைப்பதில்லை. புதிய முறைகளைக் கடைப்பிடிக்க அனைவருக்கும் பயிற்சி தேவை, ஆனால் ஆசிரியர்கள் பெரும்பாலும் அதைப் பெறுவதில்லை.
பல வகுப்பறைகளில் மாணவர்களுக்கு கற்றலில் ஈடுபாடு இல்லை, இது சிறந்த கற்றலுக்கு முக்கியமானது. கட்டமைக்கப்பட்ட பாடங்கள், மற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான நல்ல உறவுகள் போன்ற எளிய மாற்றங்களால் கற்றல் விளைவுகளை மேம்படுத்தலாம். கல்வி உரிமை பற்றி மட்டும் பேசாமல், கற்றல் உரிமை, குறித்து கவனம் செலுத்த இது ஒரு நல்ல நேரம். இல்லையெனில், ஒவ்வொரு ஆண்டு கல்வி நிலை அறிக்கையை (Annual Status of Education Report (ASER)) படிப்பது அதிக ஏமாற்றத்தையே ஏற்படுத்தும்.
ஊர்மிளா சௌத்ரி ஒரு கல்வியாளராக 35 வருட அனுபவம் கொண்டவர் மற்றும் தற்போது கல்வி இயக்குனராக பீபுல் (Education Director at Peepul) என்ற கல்வி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.