இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் சரிவடையும் ரஷ்யாவின் ஆதிக்கம் -தி இந்து தரவுக் குழு

 கடந்த 15 ஆண்டுகளில், ஆயுதங்களுக்காக ரஷ்யாவை நம்பியிருப்பதை இந்தியா குறைத்துள்ளது. ஸ்வீடிஷ் சிந்தனைக்  குழுவான (Swedish think tank) ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International Peace Research Institute (SIPRI)) புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது. 2009 முதல் 2013 வரை, ரஷ்யா இந்தியாவிற்கு 76% ஆயுதங்களை வழங்கியது. ஆனால் 2019 முதல் 2023 ஆயுத இறக்குமதியில், 36% குறைந்துள்ளது.


ரஷ்யா, இந்தியாவின் சிறந்த ஆயுத வழங்குநராக இருந்தாலும் சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா பிரான்ஸ் (France) மற்றும் அமெரிக்காவிடம் (U.S.) இருந்து அதிக ஆயுதங்களை வாங்கியுள்ளது. 2009-13ல், இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் பிரான்ஸ் 0.9% மட்டுமே வழங்கியது. ஆனால், 2019-23 இல், அதன் பங்கு 33% ஆக உயர்ந்தது. பிரான்ஸ் இந்தியாவின்  இரண்டாவது பெரிய ஆயுத வழங்குநராக ஆனது. 2009-13ல் 8% ஆக இருந்த அமெரிக்காவின் பங்கு 2019-23ல் 13% ஆக உயர்ந்தது. முதல் ஐந்து ஏற்றுமதியாளர்களிடமிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட ஆயுதங்களின் அளவை விளக்கப்படம் அளவிடுகிறது. இது முக்கிய ஆயுதங்களின் உற்பத்தி செலவைப் பார்க்கும் ஒரு சிறப்பு முறையைப் பயன்படுத்துகிறது. இந்த முறை மாற்றப்பட்ட இராணுவ வளங்களைக் காட்டுகிறது. 2019-23 முதல், இந்தியாவின் ஆயுத இறக்குமதி முந்தைய ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 4.7% அதிகரித்துள்ளது.


2019-2023 காலகட்டத்தில் சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா மாறியது. இந்தியாவின் உலகளாவிய ஆயுத இறக்குமதி பங்கு 9.1 சதவீதத்திலிருந்து 9.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சவுதி அரேபியாவின் பங்கு 11 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதமாக குறைந்துள்ளது. 


2014-18 ஆம் ஆண்டில் உலகளாவிய ஆயுத இறக்குமதியில் மிகக் குறைவான பங்கைக் கொண்டிருந்த உக்ரைன் (Ukraine), பிப்ரவரி 2022 இல் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு அதன் ஆயுத இறக்குமதி பங்கை 4.9% ஆக அதிகரித்தது. சமீபத்திய ஆண்டுகளில், பாகிஸ்தான் தனது உலகளாவிய ஆயுத இறக்குமதியை 2.9% முதல் 4.3% வரை அதிகரித்துள்ளது. அதே, நேரத்தில் சீனாவின் பங்கு 4.9% முதல் 2.9% வரை குறைந்துள்ளது.


ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன (Stockholm International Peace Research Institute (SIPRI)) கூற்றுப்படி, ஆசிய (Asia), ஓசியானியா (Oceania) மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் (West Asia) ஐரோப்பாவை விட அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்தன. 2019-2023 முதல் 10 ஆயுத இறக்குமதியாளர்களில் ஒன்பது பேர் இந்த பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள். இரண்டு ஐந்தாண்டு காலங்களில் உலகளாவிய ஆயுத இறக்குமதியில் சிறந்த நாடுகளின் பங்குகளைக் காட்டுகிறது.


ஒரு முக்கிய ஆயுத வழங்குநராக ரஷ்யாவின் பங்கு உலகளவில் சரிந்தது. 2014-2018 முதல், உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யா 21% பங்களித்தது. ஆனால், இது 2019-23ஆண்டில் 11% (வரைபடம் 3) ஆக குறைந்தது. அளவின் அடிப்படையில், இந்த காலகட்டங்களில் ரஷ்யாவின் ஏற்றுமதி 52% குறைந்துள்ளது.


2019ஆம் ஆண்டில், ரஷ்ய ஆயுத ஏற்றுமதி நிலையானதாக இருந்ததாக சிந்தனைக்  குழு (think tank)  குறிப்பிடுகிறது. அளவில் பெரிய மாற்றங்கள் இல்லை. இருப்பினும், 2020 இல் தொடங்கி ஏற்றுமதியில் வேகமான சரிவு ஏற்பட்டது. இந்த குறைவு 2021 மற்றும் 2022 இல் தொடர்ந்தது. 2023 இல், ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயுதங்களின் அளவு 2019 இல் இருந்த அளவை விட 74% குறைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில், ரஷ்யா 31 நாடுகளுக்கு முக்கிய ஆயுத வழங்குநராக இருந்தது. 2022 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 14 ஆகவும்,  2023 இல் இது 12 ஆகக் குறைந்தது. இதற்கிடையில், உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்கா தனது பங்கை 34% முதல் 42% வரை அதிகரித்துக்கொண்டது .   


கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா கொள்முதல் செய்த ஆயுதங்களில்,  பெரும்பாலான கொள்முதல்கள் ஏவுகணைகளுக்கானவை, அவற்றில் பெரும்பாலானவை  ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் நாடுகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டன.  மற்ற கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களில் இயந்திரங்கள், கவச வாகனங்கள் மற்றும் விமானங்கள் அடங்கும். பெரும்பாலும் ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து  பெறப்பட்டன.




Original article:

Share: