Showing posts with label Women. Show all posts
Showing posts with label Women. Show all posts

வரதட்சணை பழக்கம் பெண்களை அவமதிக்கிறது, ஆண்களை சிறுமைப்படுத்துகிறது. இந்தியாவில் இதற்கு இடமில்லை. -லட்சுமி பூரி


வரதட்சணை சட்டவிரோதமானது என்பதால் மட்டுமல்ல, அது ஒழுக்கமற்றது நாகரிகமற்றது என்பதாலும் ஒழிக்கப்பட வேண்டும். அது பெண்களை வன்மையாகத் தாக்குகிறது, ஆண்களைக் சிறுமைப்படுத்துகிறது, குடும்பத்தைச் சீரழிக்கிறது. மேலும், சமமான பங்களிப்பின் அடிப்படையில் அமைய வேண்டிய திருமணத்தை மோசமானதாக்குகிறது.


ஐக்கிய நாடுகள் பெண்கள் (UN Women) அமைப்பில் பணியாற்றிய ஆண்டுகளில், லத்தீன் அமெரிக்காவின் பெலேம் டோ பாரா மாநாடு (Latin America’s Belém do Pará Convention) மற்றும் பெண்ணினக் கொலை மீதான அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான மாதிரிச் சட்டம் (Inter-American Model Law on femicide/feminicide) ஆகியவற்றில் பிரதிபலிக்கும் வகையில், பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண்களாக இருப்பதாலேயே கொல்லப்படுதல் என்ற கருத்தாக்கத்தை அங்கீகரிப்பதை நாங்கள் ஊக்குவித்தோம். இந்தியாவில் எந்தவொரு குற்றத்தையாவது உண்மையாகவே பெண்ணினக் கொலை (femicide) என்று வகைப்படுத்த முடியுமானால், அது வரதட்சணைக் கொலைதான்.

வரதட்சணையுடன் தொடர்புடைய ஒவ்வொரு துயரச் சம்பவமும், அடுத்த செய்திச் சுழற்சியில் மறைந்துபோவதற்கு முன்பாக, தேசத்தின் மனசாட்சியை உலுக்குகிறது. தற்போது விசாரணையில் உள்ள சம்பவங்கள், பரபரப்பு அல்லது உணர்ச்சிப் பொங்குதல்களுக்கான சந்தர்ப்பங்களாக மாறக்கூடாது. மாறாக, அவை ஒரு நாகரிக முரண்பாட்டைப் பிரதிபலிக்கும் சமூகத்தை நிர்பந்திக்க வேண்டும். பெண்களைத் திரிதேவிகள், லட்சுமி, சரஸ்வதி மற்றும் பார்வதியாகப் போற்றும் இந்தியாவானது எப்படி அவர்களின் கண்ணியத்தை எப்படிப் பணையம் வைத்து, நாரி சக்தியை அவமதிக்க முடியும்? 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை அடைய விரும்பும் இந்தியாவில், மகள்களைக் கார்கள், பணம், தங்கம் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ஈடாக எடைபோடுவதை எப்படி அனுமதிக்க முடியும்?


வரதட்சணை (Dowry) என்பது ஒரு பழக்கமோ, பரிசோ, அல்லது திருமணங்களின் பகட்டிற்குப் பின்னால் மறைந்திருக்கும் 'குடும்பக் கௌரவமோ' அல்ல. அது திருமணம் தன் ஆன்மாவை இழக்கும் ஒரு சந்தை ஆகும்.


பெண்ணின் சொத்து என்ற கோட்பாடு (concept of stree dhan) வரதட்சணை கொடுக்கும் வழக்கத்தை நியாயப்படுத்தாது. பாரம்பரியமாக, அது ஒரு மகளின் நிதிப் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் சுதந்திரத்தை வழங்குவதற்காக, அவருடைய தனிப்பட்ட உரிமை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ், அவருக்குத் தானாக முன்வந்து வழங்கப்படும் சொத்துக்கள், நகைகள், உடைமைகள் அல்லது பரிசுகளைக் குறித்தது. அதன் நோக்கம் பெண்ணுக்கு அதிகாரம் அளிப்பதே தவிர, கணவனின் குடும்பத்தை வளப்படுத்துவதல்ல. நவீன வரதட்சணை என்பது, தொடக்கத்தில் ஒரு பாதுகாப்புக் கருத்தாக இருந்ததன் ஒரு பயங்கரமான திரிபு ஆகும்.


வரதட்சணை என்பது ஒரு பழைய சமூகத் தீமை மட்டுமல்ல. அது வன்முறையின் ஒரு தொடர்ச்சி. அது கோரிக்கையாகத் தொடங்கி, உரிமை கோரலாக வளர்ந்து, வற்புறுத்தலாக இறுகி, பெரும்பாலும் துன்புறுத்தல், தாக்குதல், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் கொலைக்குக் கூட வழிவகுக்கிறது. அது வர்க்கம், சாதி, மதம் மற்றும் பிராந்தியம் ஆகிய எல்லைகளைக் கடந்து பரவியுள்ளது. 2024-ம் ஆண்டில் இந்தியாவில் 5,737 வரதட்சணைக் கொலைகள் பதிவாகியுள்ளன.  இதன் பொருள், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 16 பெண்கள் இறக்கின்றனர். விசாரணைகள் முடிவடைந்த வழக்குகளில், சுமார் 35 சதவிகித வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதேபோக்கு, பெரும்பாலான பிற தெற்காசிய நாடுகளிலும் காணப்படுகிறது. வரதட்சணையானது, பாலின சமத்துவம், பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் மற்றும் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை ஒழித்தல் ஆகியவற்றுக்கு உலகை அர்ப்பணிக்கும் நிலையான வளர்ச்சி இலக்கு-5-ன் மீதான ஒரு நேரடித் தாக்குதலாகவும் உள்ளது.


வரதட்சணை என்பது ஒரு ஆணின் கண்ணியத்திற்கு இழைக்கப்படும் அவமதிப்புமாகும். வரதட்சணையைக் கேட்கும் அல்லது ஏற்கும் ஒருவன், தனக்குத்தானே ஒரு சந்தை விலையை நிர்ணயித்துக் கொள்கிறான். அவன் தனது புருஷார்த்தத்தையும் புருஷத்துவத்தையும், அதாவது தனது திறமை, குணம் மற்றும் ஆண்மையையும் பலவீனப்படுத்திக் கொள்கிறான். இத்தகைய ஆண்மை, தன்னை மற்றவர்கள் அங்கீகரிப்பதற்காக மிரட்டிப் பறிப்பதைச் சார்ந்துள்ளது. இது ஆண்மையின் ஒரு பலவீனமான மற்றும் பிறரைச் சார்ந்த வடிவமாகும்.


துயரம் என்னவென்றால், வரதட்சணையானது எதிர்பார்ப்பு, தகுதி, 'குடும்பங்களை இணைத்தல்', 'வெறும் ஒரு கார்' அல்லது 'வீடு அமைக்க உதவுதல்' போன்ற பல்வேறு வடிவங்களில் வருகிறது. ஆனால் வரதட்சணைக்கான முதல் கோரிக்கை ஒரு பேரம் பேசுவதல்ல, அது ஒரு எச்சரிக்கை மணி. இளம் பெண்கள் இந்த முதல் அபாயச் சின்னத்தை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கல்வியும் வேலைவாய்ப்பும் முக்கியமானவை. ஆனால் உளவியல்ரீதியான தயார்நிலையும் அதே அளவு முக்கியமானது. வரதட்சணை கேட்கும் உறவிலிருந்து விலகிச் செல்வது என்பது ஒரு தோல்வியுற்ற நிச்சயதார்த்தமோ அல்லது திருமணமோ அல்ல. அது ஒரு சுய மீட்புச் செயல்.


பெண்ணின் பெற்றோருக்கும் ஒரு தீவிரமான பொறுப்பு உள்ளது. முதலாவதாக, அவர்கள் வரதட்சணை கொடுக்கவே கூடாது. திருமணத்திற்குப் பிறகு வரதட்சணை கேட்கப்படும்போது, ​​அவர்களின் உள்ளுணர்வு, 'எப்படியாவது திருமணத்தைக் காப்பாற்று' என்பதிலிருந்து 'எப்படியாவது மகளைக் காப்பாற்று' என்பதற்கு மாற வேண்டும். பல இளம் பெண்கள் அனுசரித்துச் செல்லவோ, சமரசம் செய்துகொள்ளவோ ​​அல்லது குடும்ப கௌரவத்தைப் பற்றி சிந்திக்கவோ அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், வன்முறை நிறைந்த வீட்டில் கௌரவம் இருப்பதில்லை. பெற்றோர்கள் தங்கள் இல்லத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாற்ற வேண்டுமே தவிர, நீதிமன்றமாக அல்ல.

வரதட்சணைக் கொடுமையில் ஈடுபடும் மாமியார், நாத்தனார் அல்லது பெண் உறவினர், மற்றொரு பெண்ணின் அடிமைத்தனத்திற்குக் காவல்காரராக ஆகிறார். ஆணாதிக்கம் என்பது ஆண் ஆதிக்கத்தால் மட்டுமல்ல, பெண்களின் உடந்தையாலும் நிலைத்திருக்கிறது. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்த வலியானது, தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கொடுமையாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.


இந்தியாவில் வரதட்சணையைக் கையாள்வதற்கான சட்டக் கட்டமைப்பு உள்ளது. 1961-ம் ஆண்டின் வரதட்சணைத் தடைச் சட்டம் (Dowry Prohibition Act), வரதட்சணை கொடுப்பதையும் வாங்குவதையும் தண்டிக்கிறது. பாரதிய நியாய சம்ஹிதையின் (Bharatiya Nyaya Sanhita) பிரிவு-80 ஆனது வரதட்சணைக் கொலைகளைக் கையாள்கிறது. அதேசமயம், பிரிவு-85 கொடுமை மற்றும் துன்புறுத்தலைக் கையாள்கிறது. இருப்பினும், முறையாகச் செயல்படுத்தப்படாத ஒரு சட்டம் என்பது சாவி இல்லாத பூட்டப்பட்ட கதவைப் போன்றது. மேலும், அதிக எண்ணிக்கையிலான வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவதை, அந்த வழக்குகள் பொய்யானவை என்பதற்கான ஆதாரமாகக் கருதக்கூடாது. தாமதமான விசாரணைகள், விரோதமான சாட்சிகள், சமூக அழுத்தம், களங்கம் அல்லது நீதிமன்றத்திற்கு வெளியே செய்யப்படும் சமரசங்கள் ஆகியவற்றால் விடுதலைகள் பெரும்பாலும் ஏற்படுகின்றன.


முன்னேறிச் செல்வதற்கான வழி, நான்கு 'பி'க்கள் கட்டமைப்பைச் (P’s framework) சார்ந்திருக்க வேண்டும். தடுப்பு (Prevention) என்பது மணப்பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை உருவாக்குவது மற்றும் கடுமையான அமலாக்கத்தின் மூலம் தடுப்பை வலுப்படுத்துவது ஆகும். பாதுகாப்பு (Protection) என்பது பாதுகாப்பான புகார் அளிக்கும் அமைப்புகள், உதவி எண்கள் மற்றும் உடனடிப் பதிலளிக்கும் காவல் துறை ஆகும். வழக்குத் தொடருதல் (Prosecution) என்பது கணவர், மாமியார்-மாமனார் மற்றும் உடந்தையாக இருப்பவர்கள் மீது விரைவான பொறுப்புணர்வை ஏற்படுத்துவதாகும். நெருக்கடி கால சேவைகளை வழங்குதல் (Provision of crisis response services) என்பது தங்குமிடங்கள், ஆலோசனை, சட்ட உதவி, நிதி உதவி மற்றும் மனநலப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்குவதாகும்.


வரதட்சணை சட்டவிரோதமானது என்பதால் மட்டுமல்ல, அது மனசாட்சியற்றதும் நாகரிகமற்றதும் ஆகும் என்பதாலும் ஒழிக்கப்பட வேண்டும். அது பெண்களை வன்மையாகச் சிதைக்கிறது, ஆண்களைக் சிறுமைப்படுத்துகிறது, குடும்பத்தைச் சீரழிக்கிறது. மேலும், சமமான பங்களிப்பின் அடிப்படையில் அமைய வேண்டிய திருமணத்தை மோசமானதாக்குகிறது. எந்தவொரு சடங்கும் வற்புறுத்தலை ஏற்றுக்கொள்ளச் செய்யமுடியாது. எந்தவொரு குடும்ப கௌரவமும் மிரட்டிப் பணம் பறிப்பதை நியாயப்படுத்த முடியாது. ஒரு விலையுடன் தொடங்கும் திருமணம் புனிதமானதாகக் கருதப்பட முடியாது.


கட்டுரையாளர் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவிப் பொதுச் செயலாளர் மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பின் முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் ஆவார்.

Original link:

Practice of dowry violates women, diminishes men. It has no place in Bharat.

Share:

சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் பெண்கள் ஏன் முக்கியப் பங்குதாரர்களாகத் திகழ்கிறார்கள்? -ரித்விகா பட்கிரி

சில நாட்களுக்கு முன்னர், ஆறு பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2026-ஆம் ஆண்டிற்கான 'கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருதை' (Goldman Environmental Award) பெற்றனர். உலகம் முழுவதிலும், குறிப்பாக  நமது நாட்டில் நடைபெறும் அடித்தள அளவிலான சுற்றுச்சூழல் இயக்கங்களில் பெண்களின் பங்கை இது எவ்வாறு முன்னிலைப்படுத்துகிறது?  


இங்கிலாந்தில் எண்ணெய் துளையிடுதலுக்கு எதிரான பிரச்சாரம், நைஜீரியாவில் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காட்டுத்தீயிலிருந்து அழிவு நிலையில் உள்ள வௌவால்களை பாதுகாக்கும் முயற்சிகள், இந்தியாவில் நடைபெறும் பல்வேறு சுற்றுச்சூழல் போராட்டங்கள் ஆகியவை, சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் அதை மீண்டும் உருவாக்குவதிலும் பெண்கள் வகிக்கும் முக்கியப் பங்கினை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.


சில நாட்களுக்கு முன்னர், ஆறு பெண் ஆர்வலர்கள் 2026-ஆம் ஆண்டிற்கான கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றனர். 1989-ல்  உருவாக்கப்பட்ட, பசுமை நோபல் பரிசு என்றும் அழைக்கப்படும் இந்த விருதை வென்ற ஆறு பேரும், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, பல்வேறு வகையான பிரச்சாரங்களை மேற்கொண்டு, காலநிலை செயல்பாட்டில் தங்குளுக்கான ஒரு தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளனர்.







சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் பெண்கள் முன்னணியில் இருந்து வந்திருந்தாலும், இதற்குப் பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவுகள் குறித்த புரிதலும் முக்கியமானதாகிறது.



ஆறு பெண்களுக்கு 'பசுமை நோபல்' (Green Nobel) விருது




'பசுமை நோபல்' பரிசு வென்ற ஆறு வெற்றியாளர்கள்:


1. நைஜீரியாவின் வெப்பமண்டல சூழலியல் நிபுணரும், இயற்கை பாதுகாவலருமான இரோரோ தான்ஷி.


2.  தென் கொரியாவைச் சேர்ந்த காலநிலை மாற்ற செயற்பாட்டாளர் போரிம் கிம். 


3. பிரிட்டிஷ் காலநிலைச் செயற்பாட்டாளர் சாரா ஃபின்ச்,


4. அமெரிக்கப் பூர்வகுடி காலநிலைச் செயற்பாட்டாளர் அலன்னா அக்காக் ஹர்லி, 


5. கொலம்பிய இளைஞர் காலநிலைச் செயற்பாட்டாளர் யுவெலிஸ் மொராலஸ் பிளாங்கோ, 


6. சுரங்கத் தொழிலால் ஏற்படும் பாதிப்புகளை முடிவுக்குக் கொண்டுவரப் போராடிய பப்புவா நியூ கினிய அரசியல்வாதி தியோனிலா ரோகா மாட்போப் ஆவார்.


இந்த வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் காலநிலை ஆர்வலர் (climate activism)  என்ற தனித்துவமான ஒரு கதை உண்டு. உதாரணமாக, பிரிட்டிஷ் காலநிலை ஆர்வலரான சாரா ஃபின்ச், இங்கிலாந்தில் எண்ணெய் துளையிடுதலுக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அதன் விளைவாக, துளையிடுவதாலும் எரிபொருளை எரிப்பதாலும் ஏற்படும் அனைத்து உமிழ்வுகளையும் கருத்தில் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.


நைஜீரியாவைச் சேர்ந்த வெப்பமண்டல சூழலியலாளரும் இயற்கை ஆர்வலருமான இரோரோ தன்ஷி, மனிதர்களால் ஏற்ப்படும் காட்டுத்தீயிலிருந்து அழிந்துவரும் வௌவால்களைப் பாதுகாப்பதற்காக, மக்களின் பங்களிப்புடன் (community-led campaign) ஒரு வெற்றிகரமான பிரச்சாரத்தைத் தொடங்கினார். இருப்பினும், இந்தக் கதைகளை முக்கியமானவையாக ஆக்குவது, உள்ளூர் சுற்றுச்சூழல் கவலைகளை எவ்வாறு பரந்த உலகளாவிய விளைவுகளுடன் இணைக்கின்றன என்பதுதான்.


உள்ளூர் காலநிலை இயக்கங்கள் 


உள்ளூர் காலநிலை இயக்கங்கள், சமீப காலங்களில் உலகின் வடக்கு மற்றும் தெற்கு நாடுகளிலும் அரசியல் மற்றும் வளர்ச்சி மாதிரிகளின் ஒரு முக்கியப் பகுதியாக இருந்து வருகின்றன. பெரிய அளவிலான உலகளாவிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற இயக்கங்கள் முறையான அமைப்புகள், முறைசாரா குழுக்கள் மற்றும் தனிநபர்களின் ஒரு பன்முகத்தன்மை கொண்ட வலையமைப்பாக இருக்கும் அதே வேளையில், உள்ளூர் இயக்கங்கள் பெரும்பாலும் சுற்றுச்சூழல் பாதிப்பின் உடனடி நேரடி அனுபவங்களிலிருந்தே உருவாகின்றன.


உதாரணமாக, உலகின் வடக்கு பகுதியில் உள்ள இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டம், பல்வேறு கவலைகளை எழுப்பியது. குறிப்பாக, விமானப் போக்குவரத்தால் ஏற்படும் கார்பன் உமிழ்வுகள் அதிகரித்து, அந்த விமான நிலையம் நாட்டிலேயே மிக அதிக பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் விமான நிலையமாக மாறியிருக்கும். இதன் விளைவாக, தேசிய அமைப்புகளும், உள்ளூர் சமூகக் குழுக்களும் ஒன்றிணைந்து, விமான நிலைய விரிவாக்கத்திற்கான அனுமதியை எதிர்த்துப் போராடின.

உலகின் தென் பகுதியில், விளிம்பு நிலையில் உள்ள மக்கள் இயக்கங்கள் எவ்வாறு பரந்த அளவிலான ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்கின்றன என்பதற்குச் சிலி நாடு ஒரு சிறந்த உதாரணமாக இருந்து வருகிறது. நீரை ஒரு தனியார்மயமாக்கப்பட்ட பண்டமாகச் சிலியின் அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. ஆறுகளும் நீர்வளம் தொடர்பான உரிமைகளும் தனியார் ஏலதாரர்களுக்கு ஏலத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நீர் நெருக்கடிகள் ஏற்பட்டதுடன், மனித வாழ்வின் அடிப்படைத் தேவையான தண்ணீரின் சமமற்ற  முறையில் வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும், நாட்டின் முதன்மையான  வேளாண்ப் பயிரான அவகாடோவிற்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. இது நீர்வளப் பங்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, சிலியில் உள்ள  விளிம்பு நிலை இயக்கங்கள் உழவர்கள், தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.


இந்தியாவின் முக்கிய அடித்தள இயக்கங்கள் 


இந்தியாவில், சுற்றுச்சூழல் நலன்களுக்கான முக்கிய அடித்தள மற்றும் பிராந்திய இயக்கங்கள் பின்வருமாறு:


பிஷ்ணோய் இயக்கம் – ராஜஸ்தானில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கேஜர்லி கிராமத்தில் கேஜ்ரி மரங்களை வெட்டுவதற்கு எதிராக பிஷ்ணோய் சமூகத்தால் தலைமையேற்று நடத்தப்பட்ட இயக்கம். கேஜர்லி கிராமத்தைச் சேர்ந்த அம்ரிதா தேவி பிஷ்ணோய் மற்றும் அவரது மூன்று மகள்கள், பிஷ்ணோய் சமூகத்தின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன், மரங்களை அணைத்தபடியே கொல்லப்பட்டனர். இந்தத் தியாகம் பின்னர் 1970களில் சிப்கோ இயக்கத்திற்கு உத்வேகம் அளித்தது.


சிப்கோ இயக்கம் –இந்த இயக்கம் 1973-ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேசத்தின் சமோலி மாவட்டத்தில் (தற்போது உத்தரகாண்ட்) மரங்களை வெட்டுவதற்கு எதிராகவும் சூழலியல் சமநிலையைப்  பாதுகாப்பதற்காகவும் ஒரு பெண்கள் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கும்  வகையில், கிராம மக்கள் மரங்களைக் கட்டிப்பிடித்து அவற்றைச் சூழ்ந்துகொண்டதால், இந்த இயக்கத்திற்கு 'சிப்கோ' (Chipko) அல்லது 'அணைத்தல் / தழுவுதல்' (embrace) எனும் பெயர் ஏற்பட்டது.


அப்பிகோ இயக்கம் – உள்ளூர் மொழியில் ‘அணைத்தல்’ என்ற அப்பிகோ இயக்கம் என்பது, கர்நாடகாவில் நிலவிய ஒற்றைப் பயிர் சாகுபடி முறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதற்காக சிப்கோ இயக்கத்தால் உத்வேகம் பெற்ற ஒரு முறையாகும். ஒரே வகை மரங்களை பெரிய பரப்பளவில் வளர்ப்பதற்கு எதிராக மக்கள் மரங்களை கட்டிப்பிடித்து போராட்டம் நடத்தினர்.


அமைதிப் பள்ளத்தாக்கு இயக்கம் 1977-ஆம் ஆண்டு, கேரள அரசு, அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா வழியாக பாயும் குந்தி ஆற்றின்மீது நீர்மின் திட்டம் அமைக்கத் திட்டமிட்டது. இதற்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஒரு பெரிய சமூக இயக்கத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தின் விளைவாக அமைதிப் பள்ளத்தாக்கின் பசுமை நிறைந்த மழைக்காடு (evergreen rainforest) பாதுகாக்கப்பட்டது.


நர்மதா பச்சாவ் அந்தோலன் (Narmada Bachao Andolan) இயக்கம்– இந்த இயக்கம் 1985-ஆம் ஆண்டு நர்மதை ஆறு மீது மிகப்பெரிய அணைகள் கட்டுவதற்கு எதிராக தொடங்கப்பட்டது. பின்னர், அணைத் திட்டங்களால் இடம்பெயர்க்கப்படும் மக்களின் மறுவாழ்வு உரிமைக்காகவும் போராடியது. வளர்ச்சி திட்டங்கள் வெவ்வேறு சமூகங்களுக்கு வெவ்வேறு வகைகளில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை இந்த இயக்கம் வலியுறுத்தியது.


1970-களின் பெண்கள் இயக்கங்கள், தலித் இயக்கங்கள், பழங்குடியினர் இயக்கங்கள், உழவர்கள் இயக்கங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கும் சுற்றுச்சூழல் நடவடிக்கைக் குழுக்கள் ஆகியவை அத்தகைய “புதிய சமூக இயக்கங்களுக்கு” ​​எடுத்துக்காட்டுகளாகும்.


இந்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு இயக்கங்களில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சிப்கோ இயக்கம் முதல் மேற்கு இமயமலைப் பகுதிகளில் பெண்கள் மேற்கொண்ட நீரூற்றுப் புனரமைப்புத் பங்கேறப்பு வரை, பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே ஒரு சிறப்பு உறவு உண்டு என்பதை வலியுறுத்தும் ஒரு கதை உருவாகியுள்ளது. இதன் பின்னணியில், பெண்களும் இயற்கையும் ஒரே மாதிரியான அடக்கு முறைகளை எதிர்கொள்கின்றன என்ற  தொடர்பை விளக்கும் சிந்தனை வடிவமாக சுற்றுச்சூழல் பெண்ணியம் (Ecofeminism) உருவெடுத்தது..


பெண்களும் இயற்கையும்


1970-களின் முற்பகுதியில், சமகாலப் பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்களில் ஏற்பட்ட ஒரு முக்கிய எழுச்சியுடன் இணைந்து தோன்றிய சூழலியல் பெண்ணியம், இயற்கை வளங்கள் மற்றும் பெண்களின் சுரண்டல் மீது தனது கவனத்தை செலுத்தியது. பெண்கள் 'இயற்கைக்கு' நெருக்கமானவர்கள் என்றும், ஆண்கள் 'பண்பாட்டிற்கு' நெருக்கமானவர்கள் என்றும்  கூறுகிறது. இயற்கையின் ஆதிக்கமும் பெண்களின் ஆதிக்கமும் ஒன்றாகவே நிகழ்கின்றன.


பெண்ணிய இயக்கமும் சுற்றுச்சூழல் இயக்கமும் சமத்துவமான மற்றும் படிநிலை அற்ற அமைப்புகளின் மீதான அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த இரண்டு இயக்கங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சூழலியல் பெண்ணியவாதிகள் வாதிடுகின்றனர்.


இந்தியச் சூழலில், சூழலியல் பெண்ணியம் என்பது, பெண்களுக்கும் இயற்கைக்கும் எதிரான வன்முறை என்பது பொருளாதாரரீதியாகப் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறிவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் வந்தனா சிவாவின் கருத்துக்களுடன் வலுவாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற இந்தியாவில் உள்ள பெண்கள், நீர், உணவு, விறகு போன்றவற்றைச் சேகரிப்பதன் மூலம் இயற்கையிலிருந்து எவ்வாறு தங்கள் வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்கள் என்பதை உதாரணமாகக் கொண்டு, இயற்கையின் அழிவு என்பது பெண்களின் வாழ்வாதார ஆதாரங்களின் அழிவைக் குறிக்கிறது என்று அவர் விளக்குகிறார்.


இருப்பினும், பெண்ணிய பொருளாதார நிபுணரான பீனா அகர்வால், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பற்றிய இந்த அணுகுமுறையை விமர்சித்துள்ளார். சூழலியல் பெண்ணியவாதிகள் (Ecofeminists) வடமேற்கு இந்திய பெண்களின் அனுபவங்களை, வளர்ந்து வரும் நாடுகளில் வாழும் அனைத்து கிராமப்புற பெண்களின் அனுபவங்களாக இணைத்துப்பார்ப்பதாக அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார்.

சாதி மற்றும் வர்க்கம் போன்ற சமூக அடையாளங்களும் பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவைத் தீர்மானிக்கின்றன என்று அவர் அவர் விளக்கியுள்ளார். எனவே, சுற்றுச்சூழலுடனான மனித உறவுகள் எவ்வாறு பொருளாதாரம் தொடர்பான உண்மைகளில் வேரூன்றியுள்ளன என்பதை விளக்க, அகர்வால் அதற்கு மாற்றாக “பெண்ணியச் சூழலியல்” (feminist environmentalism) எனும் சொல்லை முன்மொழிகிறார்.


சுற்றுச்சூழல் சீரழிவின் தாக்கம்


காலநிலை மாற்றத்தை ஒரு அரசியல் பிரச்சினையாகக் கருதி பெண்கள் அதிக அக்கறை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒரு பகுதி காரணம், காலநிலை மாற்றம் பல்வேறு விளிம்புநிலை சமூகங்களைச் சமமற்ற விகிதத்தில் பாதிப்பதே ஆகும். சுற்றுச்சூழல் சீரழிவு பெண்களைப் பாதிக்கும் ஆறு முக்கிய வழிகளை அகர்வால் குறிப்பிட்டார்: அவை நேரம், வருமானம், ஊட்டச்சத்து, உடல்நலம், சமூக வாழ்வாதார வலைப்பின்னல்கள் மற்றும் பழங்குடி அறிவு ஆகும்.


சுற்றுச்சூழல் சீரழிவு பெண்களின் உழைப்புச் சுமையை அதிகரிக்கிறது. உதாரணமாக, வங்கதேசத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு, வளப் பற்றாக்குறை மற்றும் ஆண்களின் இடம்பெயர்வு ஆகியவை சேர்ந்து, பெண்கள் எரிபொருள் சேகரித்தல், தண்ணீர் எடுத்தல் மற்றும் பிற பராமரிப்புப் பணிகளில் செலவிடும் நேரத்தை அதிகரிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இது பெண்கள் வேளாண் உற்பத்தியில் குறைந்த நேரத்தைச் செலவிட வழிவகுத்து. அதன் மூலம் குடும்ப வருமானத்தைக் குறைக்கக்கூடும்.


சுற்றுச்சூழல் சீரழிவு பெண்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து உட்கொள்ளலிலும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. காடுகள் மற்றும் கிராமப் பொது நிலங்களின் சரிவு, ஏழைக் குடும்பங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய வளங்கள் கிடைப்பதையும் குறைக்கிறது. கிராமப்புறப் பெண்களும் குழந்தைகளும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, குடும்பத்திற்குள் உணவு மற்றும் பிற வளங்கள் சமமாகப் பகிரப்படாததால், அவர்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலை  மோசமடைகிறது.

சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் பெண்களின் பங்கை வலுப்படுத்துதல்


வளரும் நாடுகளில் கடன் சுமை அதிகரிக்கும்போது பெண்களே அதிகமாக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்று சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு ஒன்று மேலும் கண்டறிந்துள்ளது. கடன் நெருக்கடியின் விளைவாக அரசாங்கங்கள் பொதுச் செலவினங்களைக் குறைக்கும்போது, ​​கல்வி மற்றும் பராமரிப்பு போன்ற துறைகளில் அதிக எண்ணிக்கையில் உள்ள பெண்கள்    வேலைகளை இழக்கிறார்கள். வளரும் நாடுகள் இன்று எதிர்கொள்ளும் காலநிலை தொடர்பான கடன் சுமைகளுக்கும் இது பொருந்தும். இந்தச்சுமைகள் பெண்களைக் கடுமையான வறுமை நிலைக்குள் தள்ளுவதுடன், அவர்களது ஊதியமற்ற பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளின் அளவும் அதிகரிக்க வழிவகுக்கிறது.


ஆகவே, பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவு எவ்வாறு உருவாகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் பெண்கள் சமமற்ற வழிகளில் பாதிக்கப்படுவதாலும், அவர்களின் வாழ்வியல் சூழல்களும், அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களில்  முன்னணிப் பங்களிப்பாளர்களாக உருவெடுக்கின்றனர்.


 சுற்றுச்சூழல் நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மையில் பெண்கள் முக்கியப் பங்குதாரர்களாக உள்ளனர். எனவே, அவர்களின் நிலம் மற்றும் சொத்துரிமைகளை வலுப்படுத்துவதும், தூய்மையான ஆற்றல், நீர், சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய வாழ்வாதாரங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதும், உள்ளூர் நிர்வாகத்தில் முடிவெடுக்கும் நிறுவனங்களில் அவர்களின் தீவிரப் பங்கேற்பை உறுதி செய்வதும்  முக்கியமானதாகிறது.



Original Link: Why women are key stakeholders in environmental governance.


Share:

தக்க தோல்வி : அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா, 2026 முறியடிக்கப்பட்டது குறித்து . . .

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் கடைபிடிக்கப்பட்ட அணுகுமுறை தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன.


ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டபடியே, அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா, 2026-ஆனது, ஒரு அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறியது. மொத்தம் 298 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 230 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில், மசோதா நிறைவேற 352 வாக்குகளே தேவைப்பட்டன. இது அவையில்  வந்திருந்த வாக்களித்த 528 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்காகும். இதைத் தொடர்ந்து, துணை மசோதாக்களான 'தொகுதி மறுவரையறை மசோதா' (Delimitation Bill) மற்றும் 'யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா' (Union Territories Laws (Amendment) Bill) ஆகியவற்றைத் தனித்தனியாகப் பார்க்க இயலாது என்று கூறி, அவற்றை அரசு ஒத்திவைத்தது. விவாதத்திற்குப் பதிலளிக்கும்போது, ​​உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு வாய்மொழி உத்தரவாதத்தை அளித்தார். அதாவது, 816 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அவற்றின் தற்போதைய பங்கிற்குச் சமமான விகிதத்திலேயே அதிகரிக்கும் என்று அவர் கூறினார். மேலும், 50 சதவீத சீரான அதிகரிப்பை அதிகாரப்பூர்வத் திருத்தமாகச் சேர்த்து மசோதாவை மறுவரைவு செய்ய, அவையை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கவும் அவர் முன்வந்தார். எதிர்க்கட்சிகள் இதை நிராகரித்தன. அது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியது. விகிதாசார அதிகரிப்புதான் எப்போதும் நோக்கமாக இருந்ததென்றால், அது ஏன் மசோதாவில் இடம்பெறவில்லை? தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் வாசகங்கள், தொகுதி மறுவரையறையை மிகச் சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் (தற்போது 2011-ம் ஆண்டைய கணக்கெடுப்பு) அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. இது, இந்தி பேசும் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட தென், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவப் பங்கைக் குறைத்திருக்கும். 2026-27-ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இத்தகைய சர்ச்சைக்குரிய அரசியலமைப்புத் திருத்தத்தை அவசர அவசரமாக நிறைவேற்ற முயன்றது ஏன்? மேலும், அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தைப் பெற்றுள்ள 'பெண்களுக்கான இடஒதுக்கீடு' மசோதாவை, தொகுதி மறுவரையறை விவகாரத்துடன் இந்த முறையில் இணைக்கவேண்டிய அவசியமே இல்லை. எதிர்க்கட்சிகளைக் குழப்பிப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் கையாளப்பட்ட இந்த விசித்திரமான, கண்துடைப்பு நாடக அணுகுமுறை, நாடாளுமன்ற நடைமுறையையே கேலிக்கூத்தாக்கியது.


இந்தத் திட்டமிட்ட நகர்வுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஒன்றுபட்டு வாக்களித்தது பாராட்டுக்குரியது. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திமுக போன்ற கட்சிகள் தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளைக் கடந்து, அவையில் ஒருங்கிணைப்பை உறுதிசெய்தன. இதற்கு மாறாக, மசோதாவின் வாசகத்தில் முரண்பாடான சொற்கள் இருந்தபோதிலும், உள்துறை அமைச்சரின் வாய்மொழி உறுதிமொழிகளின் அடிப்படையில் மசோதாவிற்கு ஆதரவாகப் பேசிய தெலுங்கு தேசம் கட்சி மற்றும் அதிமுகவின் அறியாமையைக் கவனிக்க வேண்டும். மசோதாவின் நிபந்தனைகளின்படியே ஆந்திரப் பிரதேசம் ஐந்து இடங்களையும், தமிழ்நாடு 11 இடங்களையும் இழக்க நேரிட்டபோதும், இக்கட்சிகள் அவ்வாறு பேசின. இந்தத் தோல்வி அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும். அது இப்போது அரசியலமைப்புச் சட்டப்படி கட்டாயமாக்கப்பட்ட வழிமுறையின் மூலம் மகளிர் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும். முதலில், அது 2026-27 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நிறைவு செய்து, தொகுதி மறுவரையறை மற்றும் மக்களவை விரிவாக்கம் ஆகியவற்றை உண்மையான ஒருமித்த கருத்திற்காக நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டும். பரந்த உடன்பாடு இல்லாமல் தொலைநோக்குக் கட்டமைப்பு மாற்றங்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்ற வரம்பு துல்லியமாக உள்ளது. மேலும் அந்தப் பாதுகாப்பு இன்று நிலைநிறுத்தப்பட்டது.


Original Link: Deservedly dead: On the defeat of the Constitution (131st Amendment) Bill, 2026


Share:

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு, ஒரு பின்னணியும் கடந்துவந்த கடினமான பயணமும் உள்ளது. -பிரியங்கா சதுர்வேதி

 இந்தியாவில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த விவாதம், 2023-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam (NSVA)) எனப்படும் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தோடு தொடங்கிவிடவில்லை. இது இந்தியத் தேசியப் போராட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து நடந்துவருகிறது. 1931-ஆம் ஆண்டில், பேகம் ஷா நவாஸ் மற்றும் சரோஜினி நாயுடு ஆகியோர் பிரிட்டிஷ் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பெண்களுக்குச் சிறப்புச் சலுகைகளைக் கோருவது என்பது, 'அரசியலில் முழுமையான சமத்துவம் வேண்டும்' என்ற பெண்களின் கோரிக்கைக்கு எதிராக அமைந்துவிடும் என்று குறிப்பிட்டனர். தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சலுகைகள் தேவையில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அதேபோல், 1947-ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ரேணுகா ராய், சுதந்திரம் கிடைத்தவுடன் பெண்களுக்கான உரிமைகளும் சுதந்திரமும் உறுதிசெய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட்டாலும், இந்தியக் குடிமக்களாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படும் என்பதால், அப்போது அது தேவையற்ற ஒன்றாகவே கருதப்பட்டது.


அடுத்தடுத்த ஆண்டுகளில், பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருவது தெளிவாகத் தெரிந்தது. 1951-ஆம் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெறும் 5 சதவீதம் மட்டுமே பெண்களாக இருந்தனர். பல ஆண்டுகள் கடந்தும், 2024-ஆம் ஆண்டில்கூட இந்த எண்ணிக்கை வெறும் 14 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.


இதன் விளைவாக, பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது கொள்கை விவாதங்களில் மீண்டும் மீண்டும் பேசப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளது. 1971-ஆம் ஆண்டு கல்வி மற்றும் சமூக நல அமைச்சகத்தால் நிறுவப்பட்ட, புல்ரேணு குஹா தலைமையிலான இந்தியப் பெண்களின் நிலை குறித்த குழு (Committee on the Status of Women in India), பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக நிலையை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டது. இக்குழு 1974-ஆம் ஆண்டில் சமர்ப்பித்த 'சமத்துவத்தை நோக்கி' (Towards Equality) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கை, குறைந்து வரும் பாலின விகிதம், நலிவடைந்த கல்வி மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றை வெளிக்காட்டியது. இது பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் கொள்கை முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 1989-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டு வந்தார். ஆனால், அது மாநிலங்களவையில் தோல்வியடைந்ததாகவும், பின்னர் 1992 மற்றும் 1993-ஆம் ஆண்டுகளில், 73 மற்றும் 74-வது சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவாக இன்று 14.5 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகப் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க 1996, 1998, 1999 மற்றும் 2008-ஆகிய ஆண்டுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


2023-ஆம் ஆண்டில், சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நாரி சக்தி வந்தன் அதினியம் (NSVA) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தியதா? என்ற கேள்விக்கு, 'இல்லை' என்றே புள்ளிவிவரங்கள் பதில் கூறுகின்றன. அரசியல் கட்சிகள் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளித்தாலும், அதன் உண்மையான நோக்கத்தை அவை பின்பற்றவில்லை என்று விமர்சிக்கின்றனர். இதற்கு அடுத்ததாக கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தல்களில், மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்களில் 14.4 சதவீதம் பேரும், தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களில் 11.8 சதவீதம் பேரும் மட்டுமே பெண்களாக இருந்தனர். சுமார் 27.6 சதவீதத் தொகுதிகளில் பெண் வேட்பாளர்களே போட்டியிடவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டில் உள்ள மொத்தம் 4,666 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களில் வெறும் 464 பேர் மட்டுமே பெண்கள் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms (ADR)) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, 


140 தொகுதிகளைக் கொண்ட கேரளா மாநிலத்தின் இந்த தேர்தல்களில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) - 12 பெண் வேட்பாளர்களையும், இந்தியத் தேசிய காங்கிரஸ் - ஒன்பது பேரையும், பாரதிய ஜனதா கட்சி - 14 பேரையும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி - ஐந்து பேரையும் களம் இறக்கியுள்ளன. இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி முதன்முறையாக இரண்டு இடங்களை பெண்களுக்கு வழங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது 291 வேட்பாளர்களில் 52 பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம், தான் போட்டியிடும் 164 இடங்களில் 18 இடங்களையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தனது 167 இடங்களில் 20 இடங்களையும் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.


2023-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீடு சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன. இருப்பினும், 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பே இது கொண்டு வரப்பட்டதால், அதனை நடைமுறைபடுத்துவதற்கான காலம் குறித்துப் பலத்த சந்தேகங்கள் எழுந்தன. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இருந்துதான் நடைமுறைக்கு வரும் என்பதால், பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றுடன் இணைப்பதில் உள்ள சிக்கல்களையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.


தற்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. ஏனெனில், பல தாமதங்களுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, 2029-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாகத் தொகுதி மறுவரையறை பணிகளை முடிப்பது சாத்தியமில்லை. இதன் காரணமாக, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 816-ஆக உயர்த்தவும், அதேபோல் மாநிலச் சட்டமன்ற இடங்களை விரிவுபடுத்தவும் அரசு இப்போது பரிந்துரை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

நிதிநிலை கூட்டத்தொடரை நீட்டிக்கும் முடிவு, அதன் காலநேரம் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. முக்கிய சட்டங்களைக் கொண்டுவரும்போது வழக்கமாக நடப்பதைப் போலவே, இப்போதும் எதிர்க்கட்சிகளுடன் முறையான ஆலோசனை நடத்தப்படவில்லை என்கின்றனர். அரசியல் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மட்டுமே தொடர்பு கொள்ளப்பட்டது. தற்போதும் கூட, பெரும்பாலான தகவல்கள் ரகசியத் தகவல்கள் அல்லது ஊடகக் கசிவுகள் மூலமாகவே வெளிவருகின்றன. எனவே, இந்தியத் தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (INDIA bloc), அரசாங்கத்தின் திட்டம் என்ன மற்றும் திருத்தப்பட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரியுள்ளது. இருப்பினும், அரசாங்கம் இந்தக் கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. மாறாக, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்குச் சற்று முன்பாகவும், தேர்தல் நடந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை இந்தச் சட்டத்தின் மீதான விவாதம் நடைபெறும் என்றும் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என்றும்  ரகசியத் தகவல்கள் மூலம் அறிவித்துள்ளது.


மற்றவர்களுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் பாரதிய ஜனதா கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்பதை இந்த நடவடிக்கை தெளிவுபடுத்துகிறது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கின்றன. இந்தத் திட்டத்தின் நோக்கம் மற்றும் அது கொண்டு வரப்பட்ட நேரம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினால், எதிர்க்கட்சிகள் 'பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள்' என்ற ஒரு பிம்பத்தை பாஜக உருவாக்கிவிடும் என்றும் மாறாக, அவர்கள் இதற்கு உடன்பட்டால், அவர்கள் பணிந்து போவது போலத் தோன்றும் என்கிற சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது


இரு தரப்பினரும் இதை நினைவில் கொள்ள வேண்டும்: இந்திய நாட்டுப் பெண்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து இந்த இடஒதுக்கீடு சட்டத்தை ஆதரித்தோம். இந்தச் சட்டத்தைத் திருத்தம் செய்ததற்கான முழுப் பெருமையையும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளக் கூடாது. மக்கள் பிரதிநிதித்துவத்தை ஆதரிப்பது என்பது நாட்டு மக்கள் அனைவரின் கூட்டு வாக்குறுதி என்பதை நாட்டின் பெண்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும்.  இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


பிரியங்கா சதுர்வேதி, மாநிலங்களவையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தற்போது சிவசேனா கட்சியில் உள்ளார்.


Original article : The Women’s Reservation Bill has a backstory and an arduous journey -Priyanka Chaturvedi

Share:

உமிழ்நீர் (saliva) அல்லது கன்னச் சளி மாதிரி (cheek swab) பரிசோதனை மூலம், உயர்மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஒரு பெண்ணின் தகுதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? -மிஹிர் வஸவ்தா

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் எந்தவொரு பெண்ணும் இனி கட்டாயமாக பாலின நிர்ணயப் பகுதி Y (Sex-determining Region Y(SRY)) மரபணுப் பரிசோதனை அல்லது பாலினப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (International Olympic Committee (IOC)) கூறியுள்ளது. இதன் பொருள் என்ன? இது பற்றி ஒரு தெளிவான விளக்கம் கீழே குறிப்பிட்டுள்ளது.


வியாழக்கிழமையன்று எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவில், சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC), திருநங்கைப் பெண்கள் (transgender women) மற்றும் பாலின வளர்ச்சி வேறுபாடுகள் (Differences in Sex Development(DSD)) உள்ள விளையாட்டு வீரர்கள் பெண்கள் பிரிவுகளில் போட்டியிடுவதற்குத் தடை விதித்துள்ளது. மேலும், சர்வதேச விளையாட்டுகளில் போட்டியிட விரும்பும் எந்தவொரு பெண்ணும் இனி கட்டாயமாக SRY மரபணுப் பரிசோதனை அல்லது பாலினப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தக் குழு கூறியுள்ளது.




பாலின நிர்ணயப் பகுதி Y (Sex-determining Region Y(SRY)) மரபணு என்றால் என்ன?


SRY என்பது ‘பாலினத்தை நிர்ணயிக்கும் பகுதி Y’ (sex determination region Y) என்பதன் சுருக்கமாகும். SRY மரபணு என்பது டிஎன்ஏ-வின் ஒரு சிறிய பகுதியாகும். இது பெரும்பாலும் Y குரோமோசோமில் காணப்படும். SRY மரபணுவின் இருப்பு, பொதுவாக விந்தகங்களின் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுவதாகவும், "டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியின் மூலம் ஆண் பாலின வளர்ச்சியைத் தூண்டுவதாகவும்" சர்வதேச ஒலிம்பிக் குழு கூறியுள்ளது.


1990-ல் முதன்முதலில் SRY மரபணுவைக் கண்டுபிடித்த பேராசிரியர் ஆண்ட்ரூ சின்க்ளேர், SRY மரபணு ஒரு முழுமையான துல்லியமான குறிப்பான் அல்ல என்று கடந்த ஆண்டு கூறியிருந்தார். "SRY மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு, சரியாகச் செயல்படவில்லை என்றால், ஒருவருக்கு விந்தகங்கள் உருவாகாமல் போகலாம் என்று அவர் மேலும் விளக்கினார். அத்தகைய சந்தர்ப்பங்களில், அந்த நபர் உயிரியல்ரீதியாகப் பெண்ணாக இருக்கலாம்," என்று அவர் கடந்த ஆண்டு 'தி கான்வர்சேஷன்' இதழில் எழுதியிருந்தார்.


அப்படியானால், சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC), பெண்கள் பிரிவில் போட்டியிட விளையாட்டு வீரர்களை அனுமதிப்பதற்கு முன்பு, SRY மரபணு சோதனை செய்ய அவர்களை ஏன் முடிவு செய்துள்ளது?


பெண்களுக்கான போட்டிகளில் திருநங்கைகள் மற்றும் பாலின வளர்ச்சி வேறுபாடுகள் (Differences of Sex Development (DSD)) உள்ள விளையாட்டு வீரர்களின் பங்கேற்பு பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது விளையாட்டுத் துறையில் மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. முன்னதாக, உயிரியல்ரீதியான பெண்களைவிட திருநங்கைகளுக்கு நியாயமற்ற அல்லது விகிதாசாரமற்ற அனுகூலம் இருப்பதாகத் தானாகவே கருதக்கூடாது என்று சர்வதேச ஒலிம்பிக் குழு கூறியிருந்தது. இருப்பினும், ஆண்களுக்குரிய குரோமோசோம்களைக் கொண்டிருப்பது, பெண்களுக்கு எதிரான போட்டிகளில் உடல்ரீதியான அனுகூலத்தை அளிக்கக்கூடும் என்று பிற்கால அறிவியல் ஆய்வுகள் காட்டின.


எனவே, "பெண் பிரிவைப் பாதுகாக்கவும், அவர்களின் நியாயம் மற்றும் பாதுகாப்பிற்காகவும்" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உலக விளையாட்டு அமைப்பு கூறியுள்ளது. அறிவியல் சான்றுகளின் அடிப்படையில், “SRY மரபணு வாழ்நாள் முழுவதும் நிலையானது மற்றும் ஒரு விளையாட்டு வீரர் ஆண் பாலின வளர்ச்சியை அடைந்துள்ளார் அல்லது அடையவுள்ளார் என்பதற்கு இது மிகவும் துல்லியமான சான்றாகும்” என்று அது மேலும் கூறியது.


பெண் விளையாட்டு வீரர்களைவிட ஆண் விளையாட்டு வீரர்களுக்கு இருக்கும் சாதகத்தின் அளவு என்ன?


தனது கொள்கை ஆவணத்தில், உயர்மட்ட அளவில் உள்ள வேறுபாட்டை சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) விளக்கியுள்ளது. அவை,


பெரும்பாலான ஓட்டப்பந்தயம் மற்றும் நீச்சல் போட்டிகளில், பெண் விளையாட்டு வீரர்களைவிட ஆண் விளையாட்டு வீரர்கள் 10-12% செயல்திறன் கொண்ட சாதகத்தைக் கொண்டுள்ளனர். பெரும்பாலான எறிதல் மற்றும் தாண்டுதல் போட்டிகளில், ஆண்களின் செயல்திறனின் மேன்மை 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.


வெடிக்கும் ஆற்றல் தேவைப்படும் போட்டிகளில், இந்த வேறுபாடு இன்னும் அதிகமாக இருக்கலாம். உதாரணமாக, மோதல் விளையாட்டுகள் (collision), பளு தூக்குதல் (lifting) மற்றும் குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் (punching sports) ஆண்களின் செயல்திறனானது 100 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடும்.


SRY மரபணுப் பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?


தடகளம் மற்றும் குத்துச்சண்டை ஆகியவை, இக்கொள்கையை ஏற்கனவே நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ள சில விளையாட்டுத் துறைகளில் அடங்கும். இந்தியத் தடகளக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய செய்தித் தொடர்பாளருமான அடில் சுமாரிவாலா, விளையாட்டு வீரர்கள் ஏதேனும் ஒரு பரிசோதனை மையத்தில் (diagnostic lab) தங்கள் உமிழ்நீர் மாதிரியை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். பரிசோதனை மையம் (diagnostic laboratory) மாதிரியைப் பெற்றபிறகு, அதை ஆய்வு செய்து இது தொடபான அறிக்கைகளை வெளியிட ஒரு வாரம் வரை ஆகலாம். பின்னர், அம்முடிவுகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக, அந்தந்த விளையாட்டின் சர்வதேச நிர்வாக அமைப்பிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.


உயர்மட்ட விளையாட்டுகளில் போட்டியிட விரும்பி, ஒலிம்பிக்கில் பங்கேற்பதை நோக்கமாகக் கொண்ட விளையாட்டு வீரர்கள் மட்டுமே இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த விதி அடிமட்ட விளையாட்டுகளுக்கோ (grassroots sports) அல்லது பொழுதுபோக்கிற்காக விளையாடுபவர்களுக்கோ பொருந்தாது. ஏனெனில், இவை சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை ஆகும். இருப்பினும், விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டு வாழ்க்கையின் தொடக்கத்திலேயே இப்பரிசோதனையை மேற்கொள்ளுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், "பெண்கள் பிரிவில் போட்டியிடுவதற்காகத் தாங்கள் மேற்கொள்ளும் முதலீடுகள் குறித்து, விளையாட்டு வீரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் (entourage) தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்." இந்தப் பரிசோதனையில் இளம் வயது விளையாட்டு வீரர்கள் ஈடுபட்டிருந்தால், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளையும் உறுதி செய்ய வலுவான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) கூறியுள்ளது.


சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) பின்வருமாறு குறிப்பிட்டதாவது, "பரிசோதனையின் முடிவானது 'எதிர்மறையாக' (negative) வந்திருந்தும், அதில் ஏதேனும் பிழை இருக்கக்கூடும் என்று நம்புவதற்குப் போதுமான காரணம் இருந்தால் தவிர, இப்பரிசோதனை ஒருவரின் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளப்படும்." SRY மரபணுப் பரிசோதனையில் எதிர்மறையான முடிவைப் பெறும் விளையாட்டு வீரர்கள், பெண்கள் பிரிவில் போட்டியிட நிரந்தரமாகத் தகுதி பெறுவார்கள்.


ஒரு விளையாட்டு வீரர் இப்பரிசோதனையை மேற்கொள்ள மறுக்க முடியுமா?


ஆம். ஒரு விளையாட்டு வீரர் பரிசோதனை செய்துகொள்ள மறுக்கலாம். ஆனால் அத்தகைய சூழலில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக், இளையோர் ஒலிம்பிக் மற்றும் குளிர்கால இளையோர் ஒலிம்பிக் உள்ளிட்ட, சர்வதேச ஒலிம்பிக் குழுவால் (IOC) ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு போட்டியிலும் அந்த விளையாட்டு வீரர் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்.


தனிப்பட்ட விளையாட்டு துறைகளும் இந்தக் கொள்கையைப் பின்பற்றுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) அறிவுறுத்தியுள்ளது. அத்துறைகள் இதனை நடைமுறைப்படுத்தினால், பரிசோதனை செய்துகொள்ள மறுக்கும் விளையாட்டு வீரர்கள், அந்தத் துறையைச் சார்ந்த சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


பரிசோதனை முடிவு 'நேர்மறையாக' (positive) வந்தால் என்ன நடக்கும்?


ஒரு விளையாட்டு வீரருக்கு SRY மரபணுப் பரிசோதனையில் நேர்மறை முடிவு கிடைத்தால், அவர் 'பெண்கள் பிரிவில்' போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார். இருப்பினும், அவர்கள் ஆண்கள் பிரிவில் போட்டியிடத் தகுதி பெறுவர். இதில், கலப்புப் பிரிவுகளில் (mixed category) ஆண்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள், 'திறந்த பிரிவுகள்' (open category) அல்லது விளையாட்டு வீரர்களைப் பாலின அடிப்படையில் வகைப்படுத்தாத விளையாட்டுப் போட்டிகளிலும் அவர்கள் பங்கேற்கலாம். இதில் ஒரு விதிவிலக்கு உள்ளது. முழுமையான ஆண்ட்ரோஜன் உணர்வின்மை நோய்க்குறி (Complete Androgen Insensitivity Syndrome (CAIS)) மற்றும் டெஸ்டோஸ்டிரோனின் வளர்சிதை மாற்ற மற்றும்/அல்லது செயல்திறனை மேம்படுத்தும் விளைவுகளிலிருந்து பயனடையாத பிற அரியவகை XY பாலின வளர்ச்சி வேறுபாடுகளைக் (DSD) கொண்ட XY-பாலின வளர்ச்சி வேறுபாடுகள் (DSD) கொண்ட விளையாட்டு வீரர்கள், பெண் பிரிவில் போட்டியிடத் தகுதி பெறுவர்.


சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) கூற்றுப்படி, மிகச் சில சோதனைகளே நேர்மறை முடிவுகளைத் தருகின்றன. இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அரிதானவை. மொத்தச் சோதனைகளில் இவை 1 சதவீதத்திற்கும் குறைவான அளவே உள்ளன. பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்த விளையாட்டு வீரர்கள், தங்கள் தகுதி நிலையைத் தெளிவுபடுத்திக்கொள்ள மருத்துவரீதியான பரிசோதனையை (clinical diagnosis) நாடலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) கூறியுள்ளது. SRY மரபணு தொடர்பான அனைத்துப் பரிசோதனைகளிலும், 99 சதவீத முடிவுகள் எதிர்மறையாகவே (negative) உள்ளன.


Original Link: How sex test using saliva or cheek swab will determine a woman’s eligibility to compete in elite sports?.


Share: