Showing posts with label Delimitation. Show all posts
Showing posts with label Delimitation. Show all posts

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டாட்சிக் குழப்பம் -ரங்கராஜன் ஆர்.

மக்களவை இடங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியபோது, அனைத்து மாநிலங்களின் இடங்களும் விகிதாச்சார அடிப்படையில் 50 சதவீதம் உயர்த்தப்படும் என்று ஒன்றிய அரசு உறுதியளித்தது. இருப்பினும், இந்தத் தொகுதிகள் அதிகரிப்பு மக்களவையை கட்டுப்படுத்தும் மாநிலங்களவையின் அதிகாரத்தைக் குறைக்கக்கூடும். அதேவேளையில், மக்களவை இயங்கும் நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியின் பிரச்சினைகளை மக்களவையில் எழுப்புவதற்குக் குறைந்த நேரமே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.


தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய 543 என்பதிலேயே நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிப் பகிர்வை அப்படியே தொடர வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது. மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை தொகுதிகளுக்கு இடையேயான 2.2:1 என்ற தற்போதைய விகிதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், 2029 பொதுத்தேர்தல் முதல் மகளிருக்கு மக்களவையில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும், அதை எந்தவொரு எதிர்கால மக்கள்தொகை கணக்கெடுப்பு அல்லது தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடனும் இணைக்கக்கூடாது என்றும் தமிழ்நாடு சட்டமன்றம் வலியுறுத்தியுள்ளது




தொகுதி மறுவரையறை என்றால் என்ன?


தொகுதி மறுவரையறை (Delimitation) என்பது மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையையும், அவற்றின் எல்லைகளையும் தீர்மானிக்கும் செயல்முறையாகும். நாடாளுமன்றச் சட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் ‘தொகுதி மறுவரையறை ஆணையத்தால்’ (Delimitation Commission) இந்த செயல்முறை நடத்தப்படுகிறது. இந்தியாவில் கடைசியாக 1971-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் தொகுதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது.


‘ஜனநாயகம்’ என்றால் ‘மக்களின் ஆட்சி’ என்று பொருள். இதன் அடிப்படையில், ‘ஒரு குடிமகன் - ஒரு வாக்கு - ஒரு மதிப்பு’ என்ற கோட்பாட்டுடன் பெரும்பான்மை வாக்குகள் பெறப்பட்டு அரசு தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு-81(2)-ன்படி, ஒரு மாநிலத்தின் மக்கள்தொகைக்கும் அதன் தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள விகிதம், சாத்தியமான வரை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். 1971-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள்தொகை               54.8 கோடியாக இருந்தபோது, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543-ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது ஏறக்குறைய ஒரு தொகுதிக்கு சராசரியாக 10.1 லட்சம் என்கிற அளவில் மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. இருப்பினும், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, தொகுதிகளின் எண்ணிக்கை 1971-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படியே முடக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மக்கள்தொகையை அதிகம் பெருக்கும் மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைப்பது தவிர்க்கப்பட்டது. இந்த முடக்கம் 42-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் 2000-ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் 84-வது சட்டத் திருத்தத்தின் மூலம் 2026-ஆம் ஆண்டு வரையிலும் நீட்டிக்கப்பட்டது. 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி (2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு) இந்தத் தொகுதிகளின் எண்ணிக்கை மீண்டும் மாற்றியமைக்கப்பட வேண்டும். 2023-ஆம் ஆண்டில், 106-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம், நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்டமியற்றியது. இது 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெறும் தொகுதி மறுவரையறைக்குப் பிறகே நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதில் உள்ள பிரச்சனைகள்


கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சி சீரற்றதாகவே இருந்துள்ளது. உத்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைவிட மிக அதிகமாக உள்ளது. 2026-ஆம் ஆண்டிற்கான மாநிலங்களின் கணிக்கப்பட்ட மக்கள்தொகையோடு தற்போதுள்ள தொகுதிப் பங்கீட்டைப் ஒப்பிட்டுப் பார்த்தால், அது "ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு" என்ற ஜனநாயகக் கோட்பாட்டை முழுமையாகப் பின்பற்றவில்லை (அட்டவணை 1). தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகள் மறுபங்கீடு செய்யப்பட்டு, மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 848-ஆக உயர்த்தப்பட்டால் (அட்டவணை 2), பெரிய வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது தென்மாநிலங்கள், சிறிய வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய மாற்றம் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பையே பலவீனப்படுத்தக்கூடும். மேலும், 1971-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி எண்ணிக்கையை முடக்கி வைத்ததற்கான நோக்கத்தையே இது சிதைத்துவிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. மக்கள்தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய மாநிலங்கள், தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் சுட்டிகாட்டப்படுகிறது.


ஒன்றிய அரசின் தற்போதைய வரைவு முன்மொழிவு


மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை தற்போதைய 550-லிருந்து 850-ஆக உயர்த்தும் வகையில், 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய உள்துறை அமைச்சர், ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் இடங்களும் விகிதாச்சார அடிப்படையில் (Pro-rata basis) 50 சதவீதம் உயர்த்தப்படும் என்று உறுதியளித்தார். இருப்பினும், இந்த மசோதா மக்களவையில் தோல்வியடைந்தது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் 50 சதவீதம் இடங்களை உயர்த்தும் தெளிவான விதிகளுடன், கூடிய விரைவில் இந்த மசோதாவை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பெரிய அளவிலான தாக்கங்கள்


மக்களவை இடங்களை 50 சதவீத விகிதாச்சாரப்படி அதிகரிப்பதற்கு ஆதரவாக இரண்டு முக்கிய வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, இது மக்களவையில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தற்போதைய பிரதிநிதித்துவ விகிதத்தைத் தக்கவைக்கும். இரண்டாவதாக, இது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எளிதாக்கும்; அதாவது, சுமார் 816 இடங்களைக் கொண்ட ஒரு விரிவுபடுத்தப்பட்ட அவையில், பெண்களுக்கு கூடுதலாக 272 இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


இருப்பினும், இத்தகைய எண்ணிக்கை அதிகரிப்பு சில சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. தற்போது மாநிலங்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 245 ஆகும். இது மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் இடையே சுமார் 2.2:1 என்ற விகிதத்தை உருவாக்குகிறது. மாநிலங்களவை இடங்களை அதிகரிக்காமல், மக்களவை இடங்களை மட்டும் 50 சதவீதம் உயர்த்தினால், இந்த விகிதம் 3.3:1-ஆக அதிகரிக்கும்.




மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கிடையே ஒரு மசோதா குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அந்தச் சிக்கலைத் தீர்க்க கூட்டு அமர்வை நடத்த அரசியலமைப்பு வழிவகை செய்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை 3 முறை மட்டுமே இது பயன்படுத்தப்பட்டிருந்தாலும், மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்படும்போது, மசோதாக்களை நிறைவேற்ற இந்த கூட்டு அமர்வைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். இது, மக்களவைக்கு ஒரு பலமான அதிகாரச் சமநிலையாக செயல்படும் மாநிலங்களவையின் பங்கை பலவீனப்படுத்தக்கூடும். மற்றொரு கவலை என்னவென்றால், மக்களவை ஒரு வருடத்திற்கு வெறும் 60 நாட்கள் மட்டுமே கூடுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்புவதற்கும் விவாதங்களில் பங்கேற்பதற்கும் கிடைக்கும் பயனுள்ள நேரம் குறையும். இதனால், அந்த அவை ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்துவதைவிட, வெறும் எண்ணிக்கை பிரதிநிதித்துவமாக மட்டுமே சுருங்கிவிடும் அபாயம் உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.


இறுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (MPLADS) அதிகரிக்கும் செலவினங்கள் உட்பட, இந்தக் கூடுதல்  நாடாளுமன்ற உறுப்பினர்களால் அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையும் செலவுகளும் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.


இணக்கமான நல்லிணக்கம்


தற்போதைய தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கையில், ஜனநாயகக் கொள்கைகளுக்கும் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்படுவது போல் தோன்றுவதே இந்தப் பிரச்சனைக்கு காரணம் ஆகும். இருப்பினும், இரண்டிற்கும் சம முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இரண்டையும் சரியாகச் சமநிலைப்படுத்த முடியும். பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள், இரயில்வே, தொலைத்தொடர்பு மற்றும் வரிகள் போன்ற ஒன்றிய அரசுக்கான அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புகளில் சட்டங்களை இயற்றுவதும், ஒன்றிய அரசைப் பொறுப்பேற்கச் செய்வதுமே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் முக்கியப் பணியாகும். ஒன்றிய அரசின் பெரும்பாலான திட்டங்கள் மாநில அரசுகளாலேயே செயல்படுத்தப்படுகின்றன. எனவே, மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தற்போதைய 543 இடங்களிலேயே தொடரலாம் என்கின்றனர். இதன் மூலம் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு, கூட்டாட்சிக் கொள்கை பாதுகாக்கப்படும். இந்த 543 இடங்களில் 33 சதவீதத்தைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். அதேநேரத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அந்த மாநிலத்தின் தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ளலாம். இது மக்களின் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது.


ரங்கராஜன் ஆர். ஒரு முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் ‘Courseware on Polity Simplified’ என்ற நூலின் ஆசிரியர் ஆவார். இவர் தற்போது ‘Officers IAS Academy’-யில் பயிற்சி அளித்து வருகிறார். 


Original Link: The federal dilemma of delimitation.

Share:

தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியலமைப்புத் திருத்தம் எதுவும் இல்லையென்றால் என்ன நடக்கும்? -வர்கீஸ் கே ஜார்ஜ்

 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத்தரவுகள் வெளியிடப்பட்ட பிறகு, அரசியலமைப்பின் 81 மற்றும் 82-வது பிரிவுகளில் திருத்தம் செய்யப்படாவிட்டால், அந்தப்பிரிவுகளில் உள்ள தற்போதைய விதிகளின் அடிப்படையில் புதிய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவைத்தொகுதிகள் மாநிலங்களுக்கு மறு அளவீடு  செய்யப்படும்.


தற்போதைய செய்தி: மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் நடவடிக்கையைத் புதிதாகத் தொடங்க பாரதிய ஜனதா கட்சி ஆர்வமாக உள்ளது. இதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற அந்த  கட்சி முயற்சித்து வருகிறது. 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தத்திருத்த மசோதாவைக்கொண்டுவந்தபோதிலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. மத்திய அரசு தனது துல்லியமான முன்மொழிவுகளை இதுவரை வெளியிடவில்லை. முந்தைய கூட்டத்தொடரில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்த முன்மொழிவுகள் பின்வருமாறு:


1) மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையை அதிகபட்சமாக 850 ஆக அதிகரித்தல்; 2) 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடு முழுவதும் தொகுதிகளைப் புதிதாக மறுவரையறை செய்து, இந்த இடங்களை மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளித்தல் மற்றும் 3) மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்குதல்


தற்போதைய அரசியலமைப்பு விதிகளின்படி, 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் வெளியிடப்பட்ட பின்னரே புதிய தொகுதி மறுவரையறைக்கான பணிகளை மேற்கொள்ள முடியும். அதனுடன் சேர்த்து பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்த முடியும்.


தொகுதி வரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்தம் எதுவும் செய்யப்படாவிட்டால் என்ன நடக்கும்?


புதிய தொகுதி வரையறை நடைபெறுவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவையில்லை. 2027-ஆம் ஆண்டு  மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தரவுகள் வெளியிடப்பட்ட உடனேயே புதிய தொகுதி வரையறை தொடங்கும். அடுத்த தொகுதி மறுவரையறைக்கான விதிமுறைகள் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள  81 மற்றும் 82-வது பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. தொகுதி மறுவரையறை தொடர்பான தற்போதைய அரசியலமைப்பு விதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டிய சூழலில் மட்டுமே, அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படும்.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 81 மற்றும் 82-வது பிரிவுகளின்படி, 2026-ஆம் ஆண்டிற்குப்பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகள் வெளியிடப்பட்டதும் இரண்டு நிகழ்வுகள் கட்டாயமாக நடைபெறும்.


முதலாவது, நடத்தப்பட்ட மக்கள் தொகைக்கணக்கெடுப்பில் பதிவாகும் மக்கள் தொகையின் அடிப்படையில், தற்போதைய மக்களவை உறுப்பினர் இடங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே மறுபங்கீடு செய்வதாகும்.   அது 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பாக இருக்கும். இரண்டாவது, ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் தனித்தனி மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதாகும்.


அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யப்படாவிட்டால், 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகள் வெளியிடப்பட்ட பின்னரே தொகுதி மறுவரையறைப் பணி தொடங்கப்பட வேண்டும்.


2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் புதிய தொகுதி மறுவரையறைப் பணிகளை, 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே நிறைவு செய்ய முடியுமா?


நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். கடந்த காலங்களில், தொகுதி மறுவரையறை பணிகள் பல ஆண்டுகள் நீடித்தன. 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப்பிறகு, உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையில், 2002-ஆம் ஆண்டு ஜூலை 12-அன்று கடைசியாக தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரைகள் 2008-ஆம் ஆண்டில்  நடைமுறைக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து, புதிதாக வரையறுக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் 2009-ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.


கடைசியாக மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்போது, ​​ மாநிலங்களுக்கான தனி இடங்கள் மறுபகிர்வு செய்யப்படவில்லை. மாறாக, ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் இருந்த தொகுதிகளின் எல்லைகள் மட்டுமே மாற்றியமைக்கப்பட்டன. மாநிலங்களுக்கிடையிலான மக்களவை இடங்கள் கடைசியாக 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் 1973-ல் மறுபகிர்வு (reallocated) செய்யப்பட்டன. அந்த விகிதாச்சாரம் இன்றும் தொடர்கிறது.


2027-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், தரவு சேகரிப்புப் பணிகள் முழுமையாக மின்னணுமயமாக்கப்பட்டுள்ளன. கோட்பாட்டளவில், மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுப் பகுப்பாய்வு மற்றும் தொகுதி மறுவரையறை செயல்முறை போன்றவை முன்பைவிட விரைவாக நடைபெற வாய்ப்புள்ளது. 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்தப் பணிகள் நிறைவடையாவிட்டால், பணிகள் அடுத்த மக்களவை மற்றும் அடுத்த அரசாங்கத்தின் பதவிக்காலத்திலும் தொடரக்கூடும்.


கடைசி தொகுதி மறுவரையறை ஆணையம் ஏ. பி. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்டது. பணிகள், 2004-ஆம் ஆண்டு மக்களவைத்தேர்தல் இடையில் நடைபெற்ற நிலையில், மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் முதல் பதவிக்காலத்தில் நிறைவடைந்தன. அடுத்த தொகுதி மறுவரையறை ஆணையத்தின் விவகாரத்திலும் இதே நிலை ஏற்படலாம்.


அரசியலமைப்புத் திருத்தம் இல்லாத பட்சத்தில், அடுத்த தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அதிகாரம் என்னவாக இருக்கும்?




பிரிவுகள் 81 மற்றும் 82-ன் தற்போதுள்ள விதிகளின்கீழ் ஒரு புதிய தொகுதி மறுவரையறை தொடங்கப்பட்டால், பின்வரும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.


தற்போது, ​​மாநிலங்களுக்கிடையேயான 543 மக்களவைத் தொகுதிகளின் பங்கீடு, 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த அடிப்படை அளவுகோல் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையிலிருந்து, 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பதிவாகும் மக்கள்தொகைக்கு மாற்றப்படும்போது, தொகுதிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.


பொதுவாகப் பார்த்தால், தென் மாநிலங்கள்  தங்களிடம் உள்ள தொகுதிகளை இழக்கக்கூடும். அதேவேளையில், இந்தி பேசும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கூடுதல் தொகுதிகளைப் பெறக்கூடும். மக்களவையின் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 550 வரை அதிகரிக்கக்கூடும். நாடு முழுவதும் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.


எனவே, எந்தவொரு அரசியலமைப்பு திருத்தமும் இல்லாத பட்சத்தில், பின்வரும் படிநிலைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது: முதலாவதாக, மாநிலங்களுக்கு இடையே மக்களவை இடங்களை மறுஒதுக்கீடு செய்தல்; இரண்டாவதாக, மாநிலங்களுக்குள் தொகுதிகளை மறுவரையறை (delimitation) செய்தல் மற்றும் மூன்றாவதாக, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துதல், இவை அனைத்தும் 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்போடு இணைக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு மாநிலத்திற்குமான இட ஒதுக்கீடு எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது?


இந்தியாவை ஒரு பெரிய கூட்டுக் குடும்பமாகவும், மாநிலங்களை அந்தக் கூட்டுக் குடும்பத்தின் அங்கங்களாக உள்ள தனித்தனி குடும்ப அலகுகளாகவும் கற்பனை செய்து பாருங்கள். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு ஏக்கர் நிலம் சொந்தம் என்று வைத்துக்கொள்வோம். ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர், ஏழு உறுப்பினர்களைக்கொண்ட மற்றொரு குடும்பத்திற்கு ஏழு ஏக்கர்களையும் என அந்தந்தக் குடும்பங்கள் நிலத்தைப் பெற்றன. ஒவ்வொரு குடும்பமும் தனது பங்கை அதன் உறுப்பினர்களிடையே பிரித்துக் கொண்டது. அந்த நிலையில், அனைவருக்கும் ஏறக்குறைய சமமான பங்கு கிடைத்தது. அரசியல்ரீதியாக, ஒவ்வொரு வாக்கும் ஏறக்குறைய சமமான மதிப்பைக் கொண்டிருந்தது. ஆனால், காலம் கடந்தது. சில குடும்பங்கள் மற்ற குடும்பங்களைவிட மிக வேகமாக வளர்ந்தன. பெரிய குடும்பங்களில், அதே நிலத்தை அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதே சமயம், சிறிய குடும்பங்களில் குறைவான நபர்களே அந்த நிலத்தைப் பகிர்ந்துகொண்டனர். இதன் விளைவாக, ஒவ்வொரு நபருக்கும் கிடைத்த நிலப் பங்கீட்டின் அளவில் வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கின.


இந்தியாவில் வாக்குகள் மற்றும் பிரதிநிதித்துவம் தொடர்பான விவகாரத்தில் ஒரு வகையில் இதுதான் நிகழ்ந்துள்ளது. 1967-ஆம் ஆண்டில், பெரும்பாலான முக்கிய மாநிலங்களில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 4 முதல் 5 லட்சம் வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால் இன்று, கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 14 லட்சம் வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அதேவேளையில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இந்த எண்ணிக்கை 19 லட்சமாக உள்ளது.


மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவந்து நிலைப்படுத்திய மாநிலங்களைத் தண்டித்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன், 1976 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் அனைத்துக்கட்சிகளும் எடுத்த திட்டமிட்ட முடிவின் விளைவே இந்த வேறுபாடாகும். அரசியலமைப்புச் சட்டம் இது போன்ற நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது. மக்களவைத் தொகுதிகளின் அளவு, ஒரு தொகுதிக்கு 18 லட்சம் வாக்காளர்கள் என்ற தேசிய சராசரியை அடிப்படையாகக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. 81-வது பிரிவு, மாநிலங்களுக்கு இடையே "முடிந்தவரை" (so far as practicable), ஒரு தேசிய சராசரியின் அடிப்படையில் (national average) இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.


இத்தகைய நெகிழ்வுத்தன்மை, ஒன்றுக்கொன்று முரண்படக்கூடிய இரண்டு கோட்பாடுகளுக்கு இடையே சமநிலையைப் பாதுகாக்க உதவுகிறது: அவை கூட்டாட்சி அல்லது மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் மக்களாட்சி அல்லது 'ஒரு வாக்கு, ஒரு மதிப்பு' என்ற கொள்கையாகும்.


மேலும் அதுதான், தொகுதி மறுவரையறை குறித்த தற்போதைய விவாதம் தீர்க்க வேண்டிய முக்கிய முரண்பாடாகும்.


'அரசியல் ஆதாயத்திற்கான தொகுதி எல்லை மறுவரையறை' (Gerrymandering) என்றால் என்ன, அது தேர்தல் முடிவுகளை எவ்வாறு பாதிக்கக்கூடும்?


'ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு' என்ற ஜனநாயகக் கொள்கையைப் பற்றிப் பேசும்போது, ​​ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஏறக்குறைய சமமான எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்பது முதல் தேவையாகும். ஆனால், வாக்காளர்களின் எண்ணிக்கை சமமாக இருப்பது மட்டுமே ஒவ்வொரு வாக்கிற்கும் சமமான மதிப்பை உறுதி செய்துவிடாது. ஏன்? ஏனெனில், தொகுதிகளில் சமமான எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருந்தாலும், அந்த வாக்காளர்கள் தொகுக்கப்படும் விதம் தேர்தல் முடிவுகளைப் அதிக அளவில் பாதிக்கக்கூடும்.


ஒரு எளிய உதாரணத்தைக் கருத்தில் கொள்வோம் படம் 2-ன் மூலம் தெரிந்து கொள்வோம். மொத்தம் 50 வாக்காளர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இதில் 'கட்சி A'-க்கு 20 ஆதரவாளர்களும், 'கட்சி B'-க்கு 30 ஆதரவாளர்களும் உள்ளனர். தலா 10 வாக்காளர்களைக் கொண்ட ஐந்து தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


முதல் நிலையில், ஐந்து தொகுதிகளிலும் வாக்காளர்கள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுகிறார்கள். இதன் முடிவு, ஒட்டுமொத்த வாக்குப் பங்கைப் பொதுவானதாகக் காட்டுகிறது. கட்சி A மற்றும் கட்சி B ஆகியவை தங்களுக்கு உள்ள ஆதரவின் விகிதத்திற்கு ஏற்றவாறு தொகுதிகளில் வெற்றி பெறுகின்றன.


இரண்டாவது சூழ்நிலையில், கட்சி A-வின் வாக்காளர்கள் பல்வேறு தொகுதிகளில் பரவலாகவும், குறைந்த எண்ணிக்கையிலும் பிரிக்கப்படுகிறார்கள். இது சிதறடித்தல் (Cracking) எனப்படுகிறது. கட்சி A-க்கு மொத்த வாக்காளர்களில் 40% ஆதரவு இருந்தாலும், ஒரு தொகுதியைக்கூட வெல்லத் தேவையான அளவுக்கு ஆதரவு கிடைக்காமல் போகலாம். இதனால், 40% வாக்காளர்களுக்கு எந்தவிதப் பிரதிநிதித்துவமும் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம்.


மூன்றாவது சூழ்நிலையில், 'கட்சி B'-யின் வாக்காளர்கள் ஒரு சில தொகுதிகளில்  அதிக அளவில் குவிந்துள்ளனர். இது 'குவித்தல் (packing) என்று அழைக்கப்படுகிறது. 'கட்சி B' அத்தொகுதிகளில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அதன் வாக்குகள் வீணடிக்கப்படுகின்றன. இதனால், ஒட்டுமொத்த ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும் 'கட்சி A'-யால் அதிக இடங்களைக் கைப்பற்ற முடிகிறது.


தொகுதி எல்லைகள் வரையறுக்கப்படும் விதம், ஜனநாயகப்பிரதிநிதித்துவத்தையும் (democratic representation) தேர்தல் முடிவுகளையும் ஆழமாகத் தீர்மானிக்கக்கூடியாதகும்.


Original articles: What happens if there is no Constitutional Amendment on Delimitation? -Varghese K  George

Share:

அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, தொகுதி மறுவரையறை மற்றும் வரிப் பகிர்வு தொடர்பான சவால்களுக்கு ஒரு தீர்வாகாது. -சி ரங்கராஜன் மற்றும் ஜே கே சதியா

எந்தவொரு மாநிலமும் தங்களது பிறப்பு விகிதத்தை (Fertility rate) அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் இன்னும் நிலையான மக்கள் தொகையை எட்டும் இலக்கிலிருந்து வெகு தொலைவில்தான் இருக்கிறோம். மக்கள்தொகை பற்றாக்குறை ஒன்றும் மாநிலங்களின் அதிவேக வளர்ச்சிக்குத் தடையாக இல்லை.


சமீபத்தில், மாதிரி பதிவு முறை (Sample Registration System (SRS)) மற்றும் ஆறாவது சுற்று தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (National Family Health Survey (NFHS-6)) ஆகியவை தங்களது ஆய்வு முடிவுகளை வெளியிட்டன. இந்த முடிவுகள் இந்தியாவின் எதிர்கால மக்கள்தொகை அளவைப் பற்றி என்ன சொல்கின்றன? வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு, 2017-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் (Total Fertility Rate (TFR)) 1.9-ஆக இருக்கும் என்று கணித்ததுடன், நாட்டின் மக்கள் தொகை 2048-ஆம் ஆண்டில் 160 கோடியை எட்டி உச்சத்தைத் தொடும் என்றும் கணித்திருந்தது.                   இருப்பினும், மாதிரி பதிவு முறையின் (SRS) அறிக்கையின்படி இந்தியாவின்               பிறப்பு விகிதம் (TFR) 2024-ஆம் ஆண்டிலேயே 1.9 என்ற அளவை எட்டிவிட்டதால், முந்தைய கணிப்பு மிகவும் முன்கூட்டியே நடந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. தொடர்ந்து மக்கள்தொகை கணிப்புகளைப் புதுப்பித்து வரும் ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை பிரிவு, இந்தியாவின் மக்கள் தொகை 2062-ஆம் ஆண்டில்                     170 கோடியை எட்டி உச்சத்தைத் தொடும் என்றும், அதன் பிறகு குறையத் தொடங்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது. தற்போதைய புதிய தரவுகளின் அடிப்படையில், இதுவே நடப்பதற்கு அதிக சாத்தியமுள்ள ஒன்றாகத் தெரிகிறது.


முன்னேற்றம் மிகவும் மெதுவாக இருப்பதால், பல சவால்கள் இன்னும் நீடிக்கவே செய்கின்றன. பொதுவாக பிறப்பின் போது இயல்பான பாலின விகிதம் (Normal sex ratio) 955-ஆக இருக்க வேண்டும். ஆனால், 2022-24-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த பிறப்பு பாலின விகிதம் (Sex Ratio at Birth (SRB)) 918-ஆக மட்டுமே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்ந்து "பெண் குழந்தைகள் பற்றாக்குறை" நிலவுவதைக் காட்டுகிறது. இதற்கு முன்னதாக 2018-20-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இது 907-ஆக இருந்தது. தற்போதைய முன்னேற்ற வேகத்தின்படி பார்த்தால், இயல்பான அளவை எட்டுவதற்கே இன்னும் சுமார் 13 ஆண்டுகள் ஆகும். மேலும், இந்தப் பெண் குழந்தைகள் பற்றாக்குறை நிலை இன்னும்                 நீண்டகாலத்திற்குத் தொடர வாய்ப்புள்ளது.


மிகப் பெரிய கவலை என்னவென்றால், மாநிலங்களுக்கு இடையே உள்ள மக்கள்தொகை சார்ந்த இடைவெளிதான். ஒட்டுமொத்த இந்தியாவின் மொத்த  பிறப்பு விகிதம் (TFR) 1.9-ஆக இருக்கும் வேளையில், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே 2.9 மற்றும் 2.6 என்ற மிக உயர்ந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளன. தற்போதைய வீழ்ச்சி வேகம் இப்படியே தொடர்ந்தால், மக்கள்தொகை காலப்போக்கில் நிலைத்தன்மை அடைவதற்கான 'மாற்று நிலை பிறப்பு விகிதமான' (Replacement fertility rate) 2.1 என்ற அளவை எட்டுவதற்கு பீகாருக்கு சுமார் 18 ஆண்டுகளும், உத்தரப் பிரதேசத்திற்கு சுமார் 10 ஆண்டுகளும் ஆகும்.


இதற்கு ஒரு சாத்தியமான தீர்வு என்னவென்றால், அதிக  பிறப்பு விகிதம் (fertility rate) கொண்ட மாநிலங்களில் மக்கள்தொகை பெருக்கத்தை வேகமாகக் குறைப்பதும், அதேநேரத்தில் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட மாநிலங்களில் அதை அதிகரிக்குமாறு ஊக்குவிப்பதும் ஆகும். பெண்களின் முன்னேற்றமும், பிறப்புக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் எளிதாகக் கிடைப்பதுமே பிறப்பு விகிதம் குறைவதற்குக் காரணமான முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.                          இந்தியா முழுவதும், ஆறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் 73.7% பேர் பள்ளிக்குச் சென்றுள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கை பீகாரில் (64.1%) மற்றும் உத்தரப் பிரதேசத்தில் (70.1%) மிகவும் குறைவாக உள்ளது. அதேபோல், இந்தியா முழுவதும் உள்ள பெண்களில் 46.4% பேர் குறைந்தது 10 ஆண்டுகள் பள்ளிப் படிப்பை முடித்துள்ளனர். ஆனால், பீகாரில் 33.1% பெண்களும்,                   உத்தரப் பிரதேசத்தில் 42.5% பெண்களும் மட்டுமே 10 ஆண்டுகள் படிப்பை முடித்துள்ளனர். 15 முதல் 49 வயதுடைய திருமணமான பெண்களிடையே ஏதேனும் ஒரு பிறப்புக் கட்டுப்பாட்டு முறையைப் பயன்படுத்துவது தேசிய அளவில் 69.1%-ஆக உள்ளது. ஆனால், இது பீகாரில் வெறும் 59.3%-ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் 62.4%-ஆகவும் மட்டுமே இருக்கிறது. பெண்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்ய வேண்டுமானால், இந்த மாநிலங்களில் பெண்களின் கல்வி, அவர்களின் முன்னேற்றம் மற்றும் குடும்ப நலச் சேவைகள் அவர்களுக்குக் கிடைப்பதற்கான வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.


மிகக் குறைவான பிறப்பு விகிதம் உள்ள மாநிலங்களில்,                                     அதை அதிகரிப்பதற்கு என்ன செய்ய முடியும்? சமீபத்தில், ஆந்திரப் பிரதேசம் சரிந்து வரும் பிறப்பு விகிதத்தை எதிர்கொள்ளும் வகையில் ஒரு புதிய மக்கள்தொகைக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மூன்றாவது குழந்தை பிறப்பிற்கு ₹30,000 மற்றும் நான்காவது குழந்தை பிறப்பிற்கு ₹40,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், மூன்றாவது குழந்தைக்கு மாதந்தோறும் ₹1,000 ஊட்டச்சத்து உதவித்தொகை, 18 வயது வரை இலவசக் கல்வி மற்றும் நீட்டிக்கப்பட்ட மகப்பேறு விடுப்பு ஆகியவையும் இதில் வழங்கப்படுகின்றன. இருப்பினும், 1945-ஆம் ஆண்டு ஸ்வீடனில் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துவரும் பிரச்சனை குறித்து ஆய்வு செய்த ஆல்வா மிர்டல், தனது "Nation and Family" என்ற புத்தகத்தில்,                   இது போன்ற ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


இருப்பினும், எந்தவொரு மாநிலமாவது தனது குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டுமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. இந்தியாவில், மாநிலங்களுக்கு இடையே மக்கள்தொகை வளர்ச்சியில் காணப்படும் வேறுபாடுகள், பொருளாதாரரீதியாக மட்டுமின்றி அரசியல்ரீதியாகவும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதில் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது ஒரு முக்கிய கவலையாக உள்ளது. ஏனெனில், எந்தவொரு மாநிலமும் தனது அரசியல் முக்கியத்துவத்தை இழக்க விரும்புவதில்லை. எனவே, இந்தச் சிக்கலுக்கு மக்கள்தொகைக் கொள்கையைத் தவிர்த்து, பிற வழிமுறைகளின் மூலமாகவே தீர்வு காணப்பட வேண்டும்.


எந்தவொரு மாநிலமும் தங்களுடைய குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா இன்னும் மக்கள்தொகை நிலைத்தன்மையை அடைவதிலிருந்து சற்று தொலைவிலேயே உள்ளது. மக்கள்தொகை பற்றாக்குறை என்பது மாநிலங்களின் வேகமான வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு காரணி அல்ல. அதற்குப் பதிலாக, மக்கள்தொகையின் அளவு ஒரு மாநிலத்தின் அரசியல் செல்வாக்கைத் தீர்மானிப்பதாக அமைந்துவிடக் கூடாது என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். மாநிலங்களுக்கு மத்திய வரிகளைப் பகிர்ந்து அளிப்பதில், மக்கள்தொகையின் அளவு மற்றும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங்களின் செயல்பாடு ஆகிய இரண்டு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டது.


இந்தியா தனது மக்கள்தொகையின் அளவு மற்றும் தரம் ஆகிய இரண்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS), பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் மொத்த பிறப்பு விகிதத்தை (TFR), மாதிரி பதிவு முறையின் (SRS) மதிப்பீடுகளைவிடக் குறைவாக இருப்பதாகக் கணித்துள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியா தனது மக்கள்தொகை நிலைத்தன்மையை எதிர்பார்த்ததைவிட விரைவாகவே எட்டிவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நாட்டின் மக்கள்தொகை குறித்து மிகவும் துல்லியமான மற்றும் நம்பகமான தரவுகளைப் பெறுவதற்கு முறையான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிவுகள் அவசியமாகின்றன.


ரங்கராஜன், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (PM-EAC) முன்னாள் தலைவரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் ஆவார். சாதியா, இந்திய பொதுச் சுகாதார நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும் ஆவார்.


Original Link: More children isn’t the answer to delimitation, tax challenges.

Share:

தொகுதி மறுவரையறைக்காக இடங்களை இலக்கு சார்ந்த முறையில் பிரிக்குமாறு EAC-PM பரிந்துரைத்துள்ளது. அனைத்துப் பெரிய மாநிலங்களிலும் இடங்களின் எண்ணிக்கையை 50% உயர்த்த அனுமதிக்கும் மாதிரியை இது முன்வைக்கிறது. - வர்கீஸ் கே. ஜார்ஜ், அபினய் லக்ஷ்மண்

 

EAC-PM : Economic Advisory Council to the Prime Minister - பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு


வாக்காளர் பங்கேற்பு, தொகுதியின் அளவு மற்றும் ஒவ்வொரு தொகுதியின் ஐந்து முக்கியக் கட்டமைப்பு அம்சங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான 'புள்ளிவிவரத் தொடர்பை' (statistical relationship) மதிப்பிடுவதற்காக, 2009 முதல் 2024 வரையிலான மக்களவைத் தேர்தல் தரவுகளைத் தொகுத்ததாக ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. இந்த மாதிரியின் அடிப்படையில், மக்களவை இடங்களின் எண்ணிக்கை 824-ஆக அதிகரிக்கிறது. இது, கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களைக் (Delimitation-related Bills)  கொண்டுவந்து, அவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தவறியபோது முன்மொழிந்த திட்டத்துடன் இந்த மதிப்பீடு பெருமளவில் ஒத்துப்போகிறது.


மக்கள்தொகை பரவலை மட்டும் கணக்கில் கொள்ளாமல், மறுபகிர்வு செய்வதற்குப் பல காரணிகளைக் கொண்ட அளவுகோல்களின் அடிப்படையில், இந்தியாவின் அடுத்தகட்ட நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையின்போது,  தொகுதிக்கான இடங்களை "குறிப்பிட்ட இலக்குகளின் அடிப்படையில்" (targeted) பிரிக்குமாறு பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. அதேவேளையில், அனைத்து பெரிய மாநிலங்களுக்கும் தற்போது கொண்டுள்ள மக்களவை இடங்களின் எண்ணிக்கையை இது மாற்றமின்றி அப்படியே தக்கவைக்கிறது.



இந்த அளவுகோல்களின் அடிப்படையில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) உருவாக்கிய மாதிரியின்படி, உதாரணமாக, கேரளாவின் மக்களவை இடங்கள் 20-லிருந்து 30-ஆகவும், தமிழ்நாட்டின் இடங்கள் 39-லிருந்து 59-ஆகவும், உத்தரப் பிரதேசத்தின் இடங்கள் 80-லிருந்து 120-ஆகவும் உயர்கின்றன. இந்த மதிப்பீடுகள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை (Delimitation-related Bills) மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியபோது முன்வைத்த திட்டத்துடன் பெருமளவில் ஒத்திருக்கின்றன.


பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC-PM) மாதிரியில் இந்த அளவுகோல்களைப் பயன்படுத்தியதன் மூலம், மிசோரம், புதுச்சேரி, சிக்கிம், லடாக், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், நாகாலாந்து, சண்டிகர் மற்றும் லட்சத்தீவு போன்ற சிறிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மக்களவை இடங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் தெரியவந்துள்ளது.


தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், மொத்தம் 170 தொகுதிகளைப் பிரிக்குமாறு பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC-PM) மாதிரி பரிந்துரைக்கிறது. இவற்றில், 59 தொகுதிகளை இரண்டு பகுதிகளாகவும், மற்ற 111 தொகுதிகளை மூன்று பகுதிகளாகவும் பிரிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


800-க்கும் மேற்பட்ட இடங்களைக் கொண்ட மக்களவை


இந்த மாதிரியின்படி, மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 824-ஆக உயரும். இந்தக் குழுவின் (Council) கணிப்பின்படி, தென்னிந்திய மாநிலங்களின் (தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு) மக்களவை இடங்களின் மொத்தப் பங்கு தற்போதுள்ள 23.7%-லிருந்து 23.6%-ஆக மாறும். அதேவேளையில், அதிக மக்கள்தொகை கொண்ட ஆறு வட மாநிலங்களின் (ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், பீகார் மற்றும் மகாராஷ்டிரா) பங்கு, தற்போதுள்ள 45.6%-லிருந்து 45.2%-ஆக அமையும் என்று இந்தக் குழு மாதிரி (model) தெரிவிக்கிறது.



மாநிலங்களுக்கிடையிலான தற்போதைய தொகுதி இடப்பகிர்வு 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஏற்பாடு 1976-ல் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முடக்கப்பட்டது (மாற்றப்படாமல் அப்படியே வைக்கப்பட்டது).


அடுத்த தொகுதி மறுவரையறை நடவடிக்கை மிக முக்கியமானது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) குறிப்பிடுகிறது. ஏனெனில், 1971-க்குப் பிறகு மாநில வாரியான இடங்களின் எண்ணிக்கையை மாற்றுவதற்கு இதுவே முதல் வாய்ப்பாக அமையும். இருப்பினும், மாநிலங்களுக்கான இடங்களின் தற்போதைய விகிதாச்சாரத்தை பெரும்பாலும் அப்படியே தக்கவைப்பதற்கான கொள்கை குறித்து இந்தக் குழு விரிவாகக் கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக, மாநில வாரியான இடங்களின் எண்ணிக்கையை 50% வரை அதிகரிக்கும் அம்சத்தை "மதிக்கும்" வகையிலேயே தங்கள் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மட்டுமே அது கூறுகிறது.


பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) உறுப்பினரான ஷாமிகா ரவி மற்றும் இந்தியப் புள்ளிவிவர நிறுவனத்தைச் (Indian Statistical Institute) சேர்ந்த முதித் கபூர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த ஆய்வறிக்கை, பின்வரும் கேள்விகளுக்கு விடை காண்பதே தங்கள் முக்கிய நோக்கம் என்று கூறுகிறது. அவை, "எந்தெந்தத் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும்?, அவை எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும்? மற்றும் எந்த அளவுகோலின் அடிப்படையில் அவை பிரிக்கப்பட வேண்டும்?" என்பனவாகும்.


இதன் ஒரு பகுதியாக, 2009 முதல் 2024 வரையிலான மக்களவைத்  தேர்தல்களுக்கான தரவுத்தொகுப்புகளைக் கொண்டு, வாக்காளர் பங்கேற்பு, தொகுதிகளின் அளவீடு மற்றும் தொகுதியின் ஐந்து முக்கியக் கூறுகள் (நகர்ப்புற மக்கள்தொகை விகிதம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் பங்கு, மொழிசார்ந்த முக்கியத்துவம் மற்றும் மொழிசார் பன்முகத்தன்மை) ஆகியவற்றுக்கு இடையேயான "புள்ளிவிவரரீதியான தொடர்பை" மதிப்பிட்டதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) தெரிவித்துள்ளது.



இந்த மதிப்பீடு செய்யப்பட்ட புள்ளிவிவரத் தொடர்பைப் பயன்படுத்தி, "மிகப்பெரிய மற்றும் வாக்காளர் பங்கேற்பு விகிதத்தில் அதிக மாற்றங்களை வெளிப்படுத்தும் தொகுதிகளை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிப்பதன் மூலம், வாக்காளர் பங்கேற்பை அதிகபட்சமாக்கும் தொகுதி மறுவரையறைத் திட்டம்" ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.


தொகுதிகளைப் பிரிப்பதற்கான அளவுகோல்கள்


இந்த ஆய்வறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், தொகுதிகளைப் பிரிப்பதற்கு "ஒரே மாதிரியான அளவுகோலுக்கு" (uniform criterion) பதிலாக "குறிப்பிட்ட இலக்கு சார்ந்த அளவுகோலை" (targeted criterion) பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) பரிந்துரைக்கிறது. மேலும், "2027-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு அமைக்கப்படவுள்ள தொகுதி மறுவரையறை ஆணையம் (Delimitation Commission), தொகுதிகளைப் பிரிப்பதற்குத் தொகுதி அளவை மட்டுமே அடிப்படையாகக் கருதாமல், அந்தத் தொகுதியின் மக்கள்தொகை மற்றும் மொழிசார் அம்சங்களின் கூட்டுப் பின்னணியைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றும் அது வலியுறுத்துகிறது.


அடுத்தகட்ட தொகுதி மறுவரையறைப் பணியை, "வாக்குச்சாவடிகளைச் சீரமைக்கும் புதிய நடைமுறையுடன்" (fresh booth rationalising cycle) இணைந்து மேற்கொள்ளுமாறு இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் புள்ளியியல் அமைச்சகத்திற்கு அக்குழு பரிந்துரைத்தது. அத்துடன், "2027 மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகள் மற்றும் பாலின வாரியான வாக்காளர் புள்ளிவிவரங்கள்" ஆகியவை திட்டமிட்டபடி வெளியிடப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.


தொகுதிகள் பிரிக்கப்பட்ட பிறகும் நகர்ப்புறங்களில் பெண்களின் வாக்காளர் பங்கேற்பு விகிதத்தில் ஒரு இடைவெளி நீடித்திருப்பதை அந்த ஆய்வறிக்கையின் மாதிரி கணக்கீடுகள் (model calculations) காட்டுவதாக அது மேலும் குறிப்பிட்டது. எனவே, பெண்களுக்கென பிரத்யேக வாக்குச்சாவடிகளை அமைத்தல், நகர்ப்புறங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்ற வகையில் மாலை நேரங்களில் வாக்களிக்க வாய்ப்பளித்தல், வாக்குச்சாவடிகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பெண்களைக் குறிவைத்து வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் சிறப்பு முகாம்களை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கிய வகையில் தொகுதி மறுவரையறையைத் திட்டமிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு அது பரிந்துரைத்தது.


6 முக்கியக் கண்டுபிடிப்புகள்


தங்கள் ஆய்வறிக்கை மற்றும் கொள்கை விளக்கக் குறிப்பில், ரவி மற்றும் கபூர் ஆகியோர் தங்கள் மறுஆய்வை ஆறு முக்கியக் கண்டுபிடிப்புகளாகப் பகுத்து விளக்கியுள்ளனர். இவை, பல்வேறு காரணிகளுக்கும் தொகுதி வாரியான வாக்காளர் பங்கேற்புக்கும் இடையிலான தொடர்பை விவரிக்கின்றன. ஒரு முக்கியக் கண்டுபிடிப்பாக, அவர்கள் முன்மொழிந்த மாதிரியானது, அடுத்த பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்காளர் பங்கேற்பு விகிதத்தில் ஒட்டுமொத்தமாக 2.3 சதவீதப் புள்ளிகள் வரை அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், வாக்காளர் பங்கேற்பில் ஏற்படும் மாற்றம் என்பது எந்தப் புள்ளிவிவர மாதிரியைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும் என்று அவர்கள்ள் ஒரு நிபந்தனையுடன் இதைக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், வாக்காளர் தொகுதியின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பு மாறாமல் அதன் அளவு குறைக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை ஆராயும் வகையிலேயே இந்த மாதிரி வடிவமைக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்தனர்.


2009 மற்றும் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில், மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய தொகுதிகளுக்கும் இடையிலான வாக்காளர் பங்கேற்பு விகித வேறுபாடு பாதியாகக் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. "2024-ல் பெரிய தொகுதிகளை விடச் சிறிய தொகுதிகளில் வாக்காளர் பங்கேற்பு அதிகமாக இருப்பதற்கு, அவை சிறியதாக இருப்பது மட்டுமே காரணமல்ல. மாறாக, அதிகப் பழங்குடியினர் (ST) எண்ணிக்கை, குறைந்த நகர்ப்புற மக்கள்தொகை மற்றும் மிதமான மொழிசார்ந்த முக்கியத்துவம் போன்ற வாக்காளர் பங்கேற்புக்குச் சாதகமான சமூகக் கட்டமைப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதே அதற்குக் காரணமாகும்" என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.




மேலும், ஒரு தொகுதியின் ஐந்து "கட்டமைப்பு அம்சங்கள்" (compositional features) மற்றும் அவற்றுக்கும் தொகுதியின் அளவு மற்றும் வாக்காளர் பங்கேற்புக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்ந்ததில், காலப்போக்கில் இவை ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகவோ இல்லை என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. அதோடு, பெண்களின் வாக்களிப்பு விகிதத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான கட்டமைப்புப் பண்பு, நகர்ப்புற வாக்காளர்களின் விகிதமே என்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்தது. "இன்று, தொகுதி அளவைப் பொருட்படுத்தாமல், முழுமையான நகர்ப்புறத் தொகுதிகளில் வசிக்கும் பெண்கள், கிராமப்புறத் தொகுதிகளில் வசிக்கும் பெண்களைவிட சுமார் 5 சதவீதப் புள்ளிகள் குறைவான விகிதத்திலேயே வாக்களிக்கின்றனர் என்று அது குறிப்பிட்டது. அதேவேளையில், ஆண்களைப் பொறுத்தவரை இந்த இடைவெளி சுமார் 2 சதவீதப் புள்ளிகளாகவே உள்ளது."


தங்கள் ஆய்வு மற்றும் முடிவுகள் குறித்த பிற குறிப்புகளில், இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்ட மக்கள்தொகை மற்றும் மொழிசார் தரவுகள் 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டவை என்றும், எதிர்காலத்தில் மிகவும் நம்பகமான மறுமதிப்பீட்டிற்கு 2027-ம் ஆண்டு கணக்கெடுப்புத் தரவுகளைக் கொண்டு இவை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) தெரிவித்துள்ளது.


Original article : EAC-PM recommends targeted splitting of seats for delimitation, shows model allowing 50% rise for all large States. -Varghese K. George, Abhinay Lakshman

Share:

தொகுதி வரையறை மற்றும் சமத்துவமான அரசியல் பிரதிநிதித்துவத்தின் அரசியலமைப்பு நோக்கம். - திலீப் பி சந்திரன்

சமத்துவமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகள், தொகுதி மறுவரையறை (Delimitation) மூலமாகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைப்பதில் உள்ள அரசியல் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த சவால்கள் யாவை?


குறிப்பிடத்தக்க மக்கள்தொகை வளர்ச்சியைச் சந்திக்கும் தொகுதிகளுக்கு நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், நாடாளுமன்றத் தொகுதிகளின் காலமுறைத் தொகுதி வரையறை (Periodic delimitation) மற்றும் மறுஒதுக்கீடுகள் பெரும்பாலும் 'ஒரு நபருக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு' எனும் ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகின்றன.


ஆனால், பிரதிநிதித்துவ ஏற்றத்தாழ்வைச் (representational imbalance) சரிசெய்வதற்கான இந்த முயற்சி, கூட்டாட்சிச் சமநிலையின்மீது எப்படிபட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது? ஒவ்வொரு கூட்டாட்சி அலகிற்கும் சமமான அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் அரசியலமைப்பு நோக்கத்துடன் இது ஏதேனும் முரண்பாட்டைக் கொண்டுள்ளதா?ஆனால் அதற்கு முன், 'தொகுதி வரையறை' (Delimitation) என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்?


'தொகுதி வரையறை' (Delimitation) என்றால் என்ன, அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?


தொகுதி வரையறை என்பது, ஒரு நாட்டில் அல்லது சட்டமன்றம் உள்ள ஒரு பகுதியில் உள்ள தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் செயல்முறையைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்பின் 81-வது பிரிவு, ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள்தொகைக்கு விகிதாசாரமாக இடங்களைப் பெற வேண்டும் என்று குறிப்பிடுகிறது. மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்களை வெளிக் காட்டும் வகையிலும், சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையிலும்,   பத்தாண்டுகளுக்கு ஒரு முறை  மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகும் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு, இடங்கள் மறுஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பிரிவு 82 குறிப்பிடுகிறது.


தொகுதி வரையறை ஆணையச் சட்டவிதிகளின்கீழ்  குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஒரு தொகுதி மறுவரையறை ஆணையம் அல்லது தொகுதி மறுவரையறை ஆணையத்தால் எல்லை வரையறை மேற்கொள்ளப்படுகிறது.  ஆணையம் பொதுவாக மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்: தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மாநிலத் தேர்தல் ஆணையர் ஆகியோர்  உறுப்பினர்களாக இருப்பார்கள்.


இதுவரை நான்கு தொகுதி மறுவரையறை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன: அவை,


1952-ஆம் ஆண்டில், 1952-ஆம் ஆண்டின் “தொகுதி மறுவரையறை ஆணையச் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.


1963-ல், 1962-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை ஆணையச் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.


1973-ல், 1972-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.


2002-ஆம் ஆண்டில், 2002-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.


1951, 1961 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் மூன்று தொகுதி மறுவரையறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1971-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், கடைசியாக  தொகுதி மறுவரையறைப் பணி 1976-ல் நிறைவு செய்யப்பட்டது. 1976-ஆம் ஆண்டில், 42-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், 1971-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 25 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டது.


இருப்பினும், 2001-ஆம் ஆண்டின் 84-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2026-ஆம் ஆண்டிற்கு பிறகான காலகட்டதின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வெளியிடப்படும் வரை இந்த முடக்கத்தை நீட்டித்தது. 1971-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து தீர்மானித்து வந்தபோதிலும், 1991-ஆம் ஆண்டின் தொகுதிப் பிரிவினைக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையாக கருத்தில் கொள்ளப்பட்டது .


அதன்பிறகு, 2003-ஆம் ஆண்டின் 87-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், மக்களவை அல்லது சட்டமன்றங்களில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களின் எண்ணிக்கையைப் பாதிக்காமல், 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களில் உள்ள  தொகுதிகளை மறுசீரமைக்க வழிவகை செய்தது.


இதன் பின்னணியில், 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று மக்களவையில் மூன்று மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன: அவை,


(i) அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026.


(ii) யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026.


(iii) தொகுதி மறுவரையறை மசோதா, 2026 ஆகும்.


இந்த மசோதாக்கள், முக்கியயாக தொகுதி வரையறை தொடர்பான 82-வது சட்டப்பிரிவைத் திருத்துவதன் மூலம், மக்களவை இடங்களை (2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில்) 543-லிருந்து 850-ஆக விரிவுபடுத்தவும், இந்த தொகுதி வரையறையின் அடிப்படையில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை வழங்கவும் முயன்றன.


தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதற்காக, ஒரு தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைக்குமாறு 2026-ஆம் ஆண்டின் தொகுதி மறுவரையறை மசோதா முன்மொழிந்தது. இருப்பினும், 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவின்  மூலமாக  மக்களவையை விரிவுபடுத்தவும், மாநிலங்களுக்கான இடப் பங்கீட்டை மறுஒதுக்கீடு செய்யவும் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, மக்களவையில் நிறைவேறவில்லை.


அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி  தொடர்பான கேள்விகள்


இந்தத் தோல்வி, பின்வரும் முக்கியமான அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது: தொகுதி மறுவரையறை செயல்முறைக்கு, சட்டப்பிரிவின் 368-வது பிரிவின் கீழ் அரசியலமைப்புத் திருத்தம் ஏன் தேவைப்படுகிறது? மக்களவை மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களின் இடங்களை விரிவுபடுத்துவதில் உள்ள அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சவால்கள் யாவை? முன்மொழியப்பட்ட இந்த தொகுதி மறுவரையறை, ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான கூட்டாட்சி உறவை (federal relationship) எவ்வாறு வடிவமைக்கும்?


முன்னர் குறிப்பிட்டபடி, அரசியலமைப்பின் 81-வது பிரிவின்படி, ஒவ்வொரு மாநிலமும் பிராந்தியத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும். அவ்வாறு பிரிக்கப்படும்போது, ​​ஒவ்வொரு தொகுதியின் மக்கள் தொகைக்கும் அதற்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம், முடிந்தவரை, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மேலும், மக்களவையில் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையையும் இந்த பிரிவு  குறிப்பிடுகிறது.


பிரிவு 81(3), இட மறுஒதுக்கீட்டின் நோக்கத்திற்காக 'மக்கள்தொகையை' நிர்ணயிப்பதற்கான முடக்கும் ஆண்டை  வரையறுக்கிறது. அரசியலமைப்பின்  பிரிவு 82, ("ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகான மறுசீரமைப்பு") மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் இடங்களை “மறுசீரமைப்பதை” (readjustment) கட்டாயமாக்குகிறது.


மாநில சட்டமன்றங்களின் அமைப்பு மற்றும் அவற்றின் தொகுதிகளின் மறுவரையறை ஆகியவை சட்டப்பிரிவின் 170-வது பிரிவின்படி மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு முடக்கத்தின் காரணமாக, 2026-ஆம் ஆண்டிற்குப்  பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பே அதிகமாக மறுசீரமைப்புக்கான ஒரு குறிப்பாகச் செயல்படுகிறது.


எனவே, எல்லை நிர்ணயம் மற்றும் இட ஒதுக்கீடு மறுஒதுக்கீடு தொடர்பான  அனைத்து செயல்முறைகளுக்கும், 368-வது பிரிவின்கீழ் வகுக்கப்பட்டுள்ள நடைமுறையின் மூலம், இந்த அரசியலமைப்பு விதிகளைத் திருத்துவது  முக்கியதுத்வம் பெறுகிறது. நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மாற்றியமைக்கும் எந்தவொரு திருத்தத்திற்கும், சபையில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் (2/3) குறையாத உறுப்பினார்கள்  வாக்களிக்க வேண்டும். மேலும், சட்டம் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களின் சட்டமன்றங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பின் பிரிவு 368(2) வலியுறுத்துகிறது.


மக்கள்தொகைக் குறியீடுகளில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள், மக்களவையில் நியாயமான இடப் பங்கீட்டில் தேவையற்ற சிரமங்கள் எதிர்கொள்ளமல் இருப்பதை உறுதிசெய்வதே, ஒரு குறிப்பு ஆண்டின் (reference year) அடிப்படையில் தொகுதி மறுவரையறையை நிறுத்தி வைப்பதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாகும்.


இருப்பினும், சில மாநிலங்கள், குறிப்பாக இந்தியாவின் தென் மாநிலங்கள், வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியில் அரசியலமைப்பு முடக்கம் நீக்கப்படுவது, குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதை உறுதி செய்வதில் தங்களுக்குப் பாதகமாக அமையும் என்று  கருதுகின்றன.





மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம், தங்களின் மக்களவை  இடங்கள் கணிசமாகக் குறையக்கூடும் என்று சில மாநிலங்கள் கருதுகின்றன. அதே நேரத்தில், மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக உள்ள, வட மாநிலங்கள், விகிதாச்சாரத்திற்கு அதிகமாக இடங்களைப் பெறக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது,


குறிப்பாக, குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதமானது, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக, பொருளாதார மேம்பாட்டின் பிற துறைகளில் செய்யப்பட்ட வெற்றிகரமான முதலீடுகளின் விளைவாகவே ஏற்பட்டது. எனவே, சில தென்  மாநிலங்கள், தொகுதி மறுவரையறையானது மக்கள்தொகையின் அளவை மட்டுமே சார்ந்திருக்காமல், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic Product (GSDP)) மற்றும் பொருளாதார மேம்பாட்டின் பிற குறிகாட்டிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றன.


முன்னோக்கிச் செல்வதற்கான வழி என்னவாக இருக்கலாம்?


முன்னர் குறிப்பிட்டபடி, கணிசமான மக்கள்தொகை வளர்ச்சியை அனுபவிக்கும் தொகுதிகளுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், 'ஒரு நபருக்கு ஒரு வாக்கு, ஒரு மதிப்பு' என்ற ஜனநாயகக் கொள்கையின் அடிப்படையில் அவ்வப்போது தொகுதி மறுவரையறை மற்றும் இட மறுஒதுக்கீடு செய்வது நியாயப்படுத்தப்படுகிறது.


எனவே, தொகுதி மறுவரையறைப் பணியை நீண்டகாலமாக நிறுத்தி வைத்திருப்பது, கூட்டாட்சிக்கு சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பு நோக்கத்திற்கு முரணாகத் தோன்றுகிறது. தொகுதி மறுவரையறைக்கான ஒரு சுதந்திரமான மற்றும் நிரந்தரமான அரசியலமைப்பு அமைப்பு, ஒன்றியத்திற்கும் கூட்டாட்சிக்கும் இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்துவதன் மூலம் உதவக்கூடும்.


மாநிலங்களுக்கு இடங்களை மறுஒதுக்கீடு செய்வதில் உள்ள சிக்கல்களைத் தவிர, விரிவான தொகுதி மறுவரையறைத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள நிர்வாகச் செலவுகள் மற்றும் நிதி நெருக்கடிகளையும் அரசாங்கம் கவனதில் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், தொகுதி மறுவரையறை விவகாரங்களில் நீதிமன்றத் தலையீட்டைத் தவிர்ப்பது, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான கேள்விகள் எழும்போது, ஒரு சிறந்த கூட்டாட்சித் தத்துவத்துடன் (Ideal Federalism) முழுமையாகப் பொருந்தாது.


சட்டப்பிரிவு 329(a), தொகுதிகளின் எல்லை நிர்ணயம் மற்றும் அவற்றுக்கான இடஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதைத் தடைசெய்தாலும், 2024-ஆம் ஆண்டு கிஷோர்சந்திர சங்கன்லால் ரத்தோட் (Kishorchandra Chhanganlal Rathod Case) வழக்கில், தொகுதி மறுவரையறை ஆணையத்தின் ஓர் உத்தரவு தெளிவாகத் தன்னிச்சையானதாகவும் அரசியலமைப்பு கொள்கைகளை மீறுவதாகவும் இருந்தால், அதனை மறுஆய்வு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


Original Link: Delimitation and constitutional objective of equitable political representation.


Share:

தொகுதி மறுவரையறை: தேவையா இல்லையா?. -கே.எஃப். வில்ஃபிரட்

தொகுதி மறுவரையறை குறித்த விவாதம், மக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் சமூக சமத்துவம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.


அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா, 2026 (Constitution 131st Amendment Bill, 2026), யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 (Union Territories Laws Amendment Bill, 2026) மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா, 2026 (Delimitation Bill, 2026) ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளை மாற்றி அமைப்பதையும், புதிய தொகுதி மறுவரையறை நடவடிக்கையின் அடிப்படையில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதையும் இவை நோக்கமாகக் கொண்டிருந்தன. இந்தத் திட்டமானது, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் சட்டமன்றங்களைக் கொண்ட யூனியன் பிரதேசங்களுக்கு இடையே இடங்களைப் பகிர்ந்தளிக்கவும், தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கவும் முன்மொழிந்தது. மேலும், மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 850-ஆக உயர்த்தவும் இதில் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்கள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தக் கூட்டத்தொடர் நடத்தப்பட்டது, பல எதிர்க்கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


சட்டமும் அதன் நடைமுறையும்


இந்திய அரசியலமைப்பின் 82 மற்றும் 170(3) ஆகிய பிரிவுகளின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் எல்லைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். சுதந்திர இந்தியாவில் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தொகுதி மறுசீரமைப்பு, 1950–51-ஆம் ஆண்டில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (Election Commission of India (ECI)), ஒவ்வொரு மாநிலத்திற்குமான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக்களின் உதவியுடன் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டியிருந்ததாலும், 1951-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முழுமையடையவில்லை என்பதாலும், இந்த முதல் முயற்சியின்போது மக்கள் தொகை ஆணையர் (Census Commissioner) வழங்கிய மார்ச் மாதம் 1-ஆம் தேதி, 1950-ஆம் ஆண்டு வரையிலான மதிப்பீட்டு மக்கள் தொகை புள்ளிவிவரங்களே பயன்படுத்தப்பட்டன.


அரசியலமைப்புச் சட்டத்தின் தேவைக்கேற்ப, முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1951-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மீண்டும் செய்யப்பட்டது. இதே போன்ற மாற்றங்கள் 1961 மற்றும் 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளுக்குப் பிறகும் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1971-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட தொகுதி மறுவரையறை 1976-ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. பின்னர், அரசியலமைப்பின் 42-வது திருத்தச் சட்டம் (42nd Amendment Act), 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை அடுத்தகட்ட தொகுதி மறுவரையறையை நிறுத்தி வைத்தது. மக்கள்தொகை கட்டுப்பாட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக இந்தத் தற்காலிகத் தடையை இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்தது. மக்கள்தொகையை வெற்றிகரமாகக் குறைத்த மாநிலங்கள் தங்கள் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது என்பதையும், அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெற்றுவிடக்கூடாது என்பதையும் இது நோக்கமாகக் கொண்டிருந்தது.


மக்கள்தொகை வளர்ச்சி தொடர்பான சிக்கல்


தொகுதிகள் மறுவரையறை செய்வதற்கான தற்காலிகத் தடை 2001-ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அப்போதைய அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் அப்படியே தொடர முடிவு செய்தது. அதற்குப் பதிலாக, தொகுதி எல்லைகளை மட்டும் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஏனெனில், 1971-ஆம் ஆண்டிற்குப் பிறகு தொழில் மற்றும் வாழ்வாதாரத்திற்காக மக்கள் அதிகளவில் இடம் பெயர்ந்ததால், தொகுதிகளுக்கு இடையே இருந்த மக்கள்தொகை சமநிலை மாறியிருந்தது. இதற்காக, 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல் தொகுதிகளின் எல்லைகளை மட்டும் மாற்றி அமைக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.


அரசியலமைப்புச் சட்டத்தின் (எண்பத்தி நான்காவது திருத்தம்) சட்டம், 2001-ன் 'நோக்கங்கள் மற்றும் காரணங்களுக்கான அறிக்கையில்' (Statement of Objects and Reasons) விவரிக்கப்பட்டுள்ளதாவது: தேசிய மக்கள்தொகை கொள்கையின்கீழ் (National Population Policy) குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு, புதிய தொகுதி மறுவரையறைக்கான தடையை 2026-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க அரசு முடிவு செய்தது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள மாநிலங்களை ஊக்கப்படுத்துவதே இதன் நோக்கமாகக் கூறப்பட்டது.


எனவே, அனைத்து மாநிலங்களிலும் மக்கள்தொகை வளர்ச்சி 25-ஆண்டுகளுக்குள் சீராகும் என்று அக்காலத்தில் நம்பப்பட்டது. 2001-ஆம் ஆண்டின் 84-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி (84th Constitutional Amendment Act), சட்டப்பிரிவுகள் 82 மற்றும் 170(3)-ன்கீழ், தொகுதிகள் மறுவரையறை செய்வதற்கான தடை, 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள் வெளியாகும் வரை தொடரும் என்கின்றனர். இதற்கிடையில், தாமதமான 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பதிலாக, தற்போது புதிய தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.


மக்களவைத் தொகுதி மறுவரையறை மசோதா, 2026-ன் (Delimitation Bill, 2026) நோக்கங்கள் மற்றும் காரணங்களுக்கான அறிக்கையில் சில முக்கிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம்பெயர்ந்தது போன்ற காரணங்களால், தொகுதிகளுக்கு இடையே மக்கள்தொகை அடர்த்தி சமச்சீரற்ற நிலையில் உள்ளது. இந்தச் சிக்கலைச் சரிசெய்வதையே இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் சமமான மக்கள் தொகை பங்கீட்டை உறுதி செய்ய, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகளைப் பயன்படுத்த இந்த மசோதா பரிந்துரைக்கிறது. இதன்மூலம், தற்போது செய்யப்படவுள்ள மாற்றங்கள் சுமார் 15 ஆண்டுகள் பழமையான மக்கள்தொகை புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே  அமையும் என்கின்றனர்.


முன்னோக்கிப் பார்க்கையில்

2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு இடப்பெயர்வு (Migration) குறைந்துவிட்டது என்று சொல்வதற்கும், அல்லது மக்கள்தொகை வளர்ச்சி அனைத்துப் பகுதிகளிலும் சமமாக நிலைபெற்றுள்ளது என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. எனவே, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு முடியும் காலத்திற்குள், அந்தத் தொகுதிகளின் மக்கள்தொகையும் வாக்காளர்களின் எண்ணிக்கையும் சமமாகவே இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.


சில ஆண்டுகளில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, அவற்றில் பல தொகுதிகள் தற்போதைய மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்களின் அறிக்கையில் (Statement of Objects and Reasons) குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டும், தெளிவான நடைமுறை முரண்பாடுகளைக் கொண்டிருப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்திய அரசியலமைப்பின் விதி 81(2) [Article 81(2)], ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்களவை இடங்களை எவ்வாறு ஒதுக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. இதன்படி, அனைத்து மாநிலங்களிலும் மக்கள்தொகைக்கும் இடங்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம் சமமாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வகுக்கப்பட்டுள்ளது.


இந்தக் கட்டுரையில் மக்கள்தொகை முதன்மையான அளவுகோலாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அரசியலமைப்பின் பரந்த பார்வை மாநிலங்கள் தங்களுடைய தற்போதைய பிரதிநிதித்துவ நிலையைத் தக்கவைத்துக் கொள்வதையும் ஆதரிக்கிறது. கடந்த காலங்களில் செய்யப்பட்ட சிறிய அளவிலான சீர்திருத்தங்களைப் போலல்லாமல், இந்த முறை நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் தொகையுடன் மற்ற காரணிகளையும் கருத்தில் கொள்ள வாய்ப்புள்ளது. முடிவாக, மாநிலங்கள்தான் இந்திய ஒன்றியத்தின் அடிப்படைத் தூண்கள்; வலுவான மாநிலங்களே ஒரு வலுவான ஒன்றியத்தை உருவாக்குகின்றன.


கே.எஃப். வில்ஃபிரட், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் மூத்த முதன்மைச் செயலாளர் ஆவார்.


Original Link: Delimitation — a case of to be or not to be.


Share:

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்ட நிலையில், அரசியல் நிர்ணய சபையிலேயே இதனை எதிர்த்த பெண்களை நினைவுகூர்தல் - சித்தி தேஷ்முக்

அரசியலமைப்பு நிர்ணய சபையின் விவாதங்களில், பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டங்களுக்கு ஹன்சா மேத்தாவும் ரேணுகா ரேயும் தலைமை தாங்கினர். இதற்கு ஆதரவாக இருந்த ஒரேநபர், ஒரு ஆண் ஆர். கே. சௌத்ரி ஆவார்.


இந்தியாவில் பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான சட்ட வரலாறு மிகவும் சிக்கலானதாக இருந்து வருகிறது. இன்று இது ஒரு முன்னேற்றமாகக் கருதப்பட்டாலும், அதன் தொடக்கம் 1946-ஆம் ஆண்டு முதல் 1950-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அரசியலமைப்பு சபை விவாதங்களிலேயே தொடங்கியது.


இந்த விவாதங்களில், சபையின் ஒரு பகுதியாக இருந்த 15 பெண்களில் இருவர், பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராகத் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கு ஆதரவாக இருந்த ஒரே நபர் ஒரு ஆண்  ஆர். கே. சௌத்ரி ஆவார்.


மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யக்கோரும் அரசியலமைப்புத் திருத்த மசோதா (Women’s Reservation Bill, 2023) 2008-ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டபோது, இந்த விவாதம் மீண்டும் அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. இருப்பினும், இந்தச் சட்டம் நிறைவேற மேலும் 15 ஆண்டுகள் ஆனது. 023-ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, 2023 ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இது அரசியலமைப்பின் 106-வது திருத்தச் சட்டமாக மாறியது.

தற்போது, இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில் உள்ளது. ஆனால், தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்த பிறகே இது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை உயர்த்தக் கோரிய மற்றொரு சட்டத்திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


அந்தக் கருத்தை எதிர்த்த பெண்கள்


அரசியலமைப்பு நிர்ணயசபை விவாதங்களின்போது, ​​பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான முக்கிய நபர்களாக ஹன்சா மேத்தா மற்றும் ரேணுகா ரே ஆகியோர் இருந்தனர். இந்த இரண்டு நபர்களும் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய செயற்பாட்டாளர்கள் ஆவர். ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சுதேசி இயக்கங்களில் பங்கேற்றதுடன், பெண்களின் நலனை மேம்படுத்துவதற்காகச் செயல்படும் 'அகில இந்தியப் பெண்கள் மாநாடு' (All India Women’s Conference) எனப்படும் ஒரு அரசு சாரா அமைப்பிலும் பணியாற்றியுள்ளனர்.


பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் துணைக் குழுவில் (United Nations subcommittee on the Status of Women) உறுப்பினராக இருந்ததன் காரணமாக மேத்தா முக்கியத்துவம் பெற்றார். அதேவேளையில், ரே 1949-ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர்.


1946-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின்போது, ​​சுதந்திரப் போராட்டத்தின் எல்லைகளைப் பெண்கள் மத்தியில் விரிவுபடுத்தியதற்காக மகாத்மா காந்திக்கு மேத்தா தனது நன்றியைத் தெரிவித்தார். 1937-ஆம் ஆண்டு பம்பாய் சட்டமன்றப் பேரவையில் பொதுப் பிரிவைச் சேர்ந்த வேட்பாளராகப் போட்டியிட்ட மேத்தா, பெண்கள் ஒருபோதும் சிறப்புச் சலுகைகளைக் கோரியதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.


"நாங்கள் கேட்டதெல்லாம் சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி மட்டுமே. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமமான மதிக்கத்தக்க உறவு மேம்பட வேண்டுமானால், அதற்கு அடிப்படையான 'சமத்துவத்தை' தான் நாங்கள் கோருகிறோம். அது இல்லாமல், இருபாலினருக்கும் இடையே உண்மையான ஒத்துழைப்பு சாத்தியமில்லை," என்றும் அவர் கூறினார்.


தனித் தொகுதிகள் அல்லது இடஒதுக்கீட்டுக் கோரிக்கைகள் மீது மேத்தாவுக்கு இருந்த தயக்கமானது, அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற்றிருந்த பெண்களை ஒன்றிணைத்த ஒற்றுமை உணர்விலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது.


1947-ஆம் ஆண்டு, ரே மேத்தாவின் கருத்தை வலுவாக ஆதரித்தார். 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தில் (Government of India Act) பெண்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை, தான் எதிர்த்ததை அவர் நினைவுகூர்ந்தார்.


பெண்களுக்கு எனத் தனி இடஒதுக்கீடு இருக்கும்போது, ​​அவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், பொதுப் பிரிவின்கீழ் வரும் இடங்களுக்கு அவர்களைப் பரிசீலிக்கும் கேள்வி வழக்கமாக எழுப்பப்படாது என்று அவர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, பெண்கள் தங்கள் தகுதியின் அடிப்படையில்  அல்லது அவர் குறிப்பிட்டது போல, ‘திறமையின்’ அடிப்படையில் மட்டுமே முன்னேற வேண்டும். மேலும், இடஒதுக்கீடு என்பது பெண்களின் வளர்ச்சிக்கு ஒரு தடையாகவும், எங்கள் அறிவுத்திறன் மற்றும் ஆற்றலுக்கே இழைக்கப்படும் அவமதிப்பாகவும் அமையும் என்றும்  குறிப்பிட்டார்.


அந்தக் காலக்கட்டத்தில் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக மட்டுமல்லாமல், இந்தியத் தூதராகவும் பணியாற்றிய விஜயலட்சுமி பண்டிட்டை அவர் சுட்டிக்காட்டினார். பண்டித் அவர்கள் தூதராக நியமிக்கப்பட்டது அவர் ஒரு பெண் என்பதற்காக அல்ல, மாறாக அவரது “நிரூபிக்கப்பட்ட தகுதியின்” காரணமாகவே என்று ரே குறிப்பிட்டார்.


மாற்றுக் கருத்து


நவம்பர் மாதம் 9-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டுநடைபெற்ற விவாதத்தில், ஆர். கே. சௌத்ரி ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை முன்வைத்தார். அதாவது, ஒரு பெண் நம்மிடம் ஏதாவது கேட்கும்போது, அதை எளிதாகப் பெற்று அவருக்குக் கொடுத்துவிடலாம் என்பது நமக்குத் தெரியும் என்று அவர் கூறினார். ஆனால், அவர் எதையும் குறிப்பாகக் கேட்காதபோது, அந்தப் பெண் என்ன விரும்புகிறாள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகிவிடுகிறது என்று தெரிவித்தார். 


ஒரு "நாடாளுமன்ற உறுப்பினராகவும், உலகியல் அனுபவம் வாய்ந்த மனிதராகவும்" தான் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் பேசுவதாக அவர் கூறினார். ஆண்களிடம் அன்றாட வாழ்வில் காணப்படும் ஒருவித அக்கறையின்மையே பெண்களுக்கு எதிரான கட்டமைப்புரீதியான பாகுபாட்டிற்கு வழிவகுக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார்.  அதன் அடிப்படையிலேயே அவரது வாதம் அமைந்திருந்தது. அந்தக்குழுவில் இருந்தவர்கள் "பெண்களுடன் குடும்ப உறவு இல்லாதவர்கள்" என்றும், அதன் காரணமாகவே பெண்களுக்குச் சாதகமான சட்டங்களைக் கொண்டுவர அவர்கள் தயங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், அவைக்கு வெளியேயும் இந்தியாவின் வீதிகளிலும் ஆண்களிடம் இருந்த 'பெண்களை மதிக்கும் பண்பு' மறைந்துவிட்டதாக அவர் வருத்தப்பட்டார்.  பெண்கள் பொதுவாக ஆண்களின் கண்ணியத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்றும்  இன்றைய இளைஞர்கள் பேருந்துகளிலும் ரயில்களிலும் கூட பெண்களுக்கு உரிய மரியாதையை அளிப்பதில்லை  என்றும் அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.


சௌத்ரியின் வாதத்தை ரே அவர்கள் உடனடியாக மறுத்தார். அதே நேரத்தில், அவரை கிண்டலாக "பெண்களின் ஆதரவாளர் மற்றும் பாதுகாவலர்" என்று அழைத்த அவர், தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.


சௌத்ரி அவர்கள் முன்வைத்த வாதம், சட்டமன்றமானது கோட்பாட்டுரீதியான சமத்துவத்திற்கும் நடைமுறை சமத்துவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கத் தவறியதைச் சுட்டிக்காட்டியது. இந்த இடைவெளியை அவர் ஒரு வகை "அமைப்புரீதியான புறக்கணிப்பு" என்று கருதினார். இடஒதுக்கீடு இந்த இடைவெளியைக் குறைக்க உதவும் என்பதே அவரது பார்வையாக இருந்தது.


இந்தியப் பெண்களை ஒரு குறிப்பிட்ட சமூகமாகப் பிரித்து, அவர்களைத் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒரு குழுவாகச் சித்தரிப்பதாக சௌத்ரியின் வாதம் அமைந்தது. மேலும், பெண்களுக்குத் தனித் தொகுதிகளை ஒதுக்கினால், அவர்கள் பொதுத் தொகுதிகளுக்குள் வராமல், தங்களுக்குள் போட்டியிட்டுக்கொள்ளட்டும். இல்லையெனில், நாம் அவ்வப்போது பலவீனமடைந்து, அவர்களுக்குத் தகுதியற்ற இடங்களை விட்டுக்கொடுத்துவிடுவோம் என்றும் கூறினார். 


அன்றைய நிலை vs  இன்றைய நிலை


1949-ஆம் ஆண்டில், அரசியல் நிர்ணய சபையின் பெண் உறுப்பினர்கள், 'திறமை' மற்றும் 'சம உரிமை' ஆகியவற்றின் து மிகுந்த நம்பிக்கை வைத்தனர். வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை போன்ற திட்டங்கள் மூலம் இந்தச் சமத்துவத்தை அடைந்துவிடலாம் என்றும் அவர்கள் நம்பினர்.


ஆனால், புள்ளிவிவரங்கள் காலப்போக்கில் வேறுபட்ட உதாரணத்தை காட்டுகின்றன. இன்று, மக்களவையில் பெண் உறுப்பினர்கள்  13.6%-ஆக உள்ளனர். இது 1951–52-ஆம் ஆண்டின் முதல் பொதுத் தேர்தலில் இருந்த 4.9% உறுப்பினர்களைவிட ஒரு தெளிவான முன்னேற்றம் என்றாலும், சமமான பிரதிநிதித்துவத்தை அடைய இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது.


இந்தக்கட்டுரையின் ஆசிரியர், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'  இதழில் ஒரு பயிற்சிப் பணியாளராகப் பணியாற்றுகிறார்.


Original Link: As Bill on women’s reservation in Houses is defeated, remembering the women who opposed it in Constituent Assembly,


Share: