முக்கிய அம்சங்கள்:
• கடந்த வாரத்திலிருந்து, கடும் வெப்பத்திற்குப் பதிலாக இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை பொழிந்து, வெப்பநிலையைக் கணிசமாகக் குறைத்துள்ளது.
• மேற்கத்திய இடையூறுகள் (Western Disturbances) என்பவை மழையைப் பொழிவிக்கும் ஒரு முக்கிய காற்றழுத்த மண்டலங்களாகும். இவை ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் பகுதிகளைத் தாண்டி உருவாகி, கிழக்கு நோக்கி இந்தியாவை நோக்கி நகரும்போது மெடிட்டரேனியன் கடல், கருங்கடல், காஸ்பியன் கடல் மற்றும் அரபிக்கடல் ஆகியவற்றிலிருந்து ஈரப்பதத்தை (moisture) சேகரித்துக்கொள்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், இந்தியாவைப் பாதிக்கும் மேற்கத்திய இடையூறு காற்று ஓட்டங்களின் நிகழ்வெண்ணும் (frequency) தீவிரமும் (intensity) குறைந்துள்ளதால், மழை மற்றும் பனிப்பொழிவு நேரடியாகப் பாதிப்புகளை சந்தித்துள்ளது.
• கடந்த வாரம் அடுத்தடுத்து வந்த இரண்டு தீவிரமான 'மேற்கத்திய இடையூறுகள்' மார்ச் 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவைக் கடந்து சென்றபோது, இந்தப்போக்கு மாறியது.
• இதன் விளைவாக கடுமையான வானிலை நிகழ்வுகள் — இடியுடன் கூடிய மழை, மின்னல் , ஆலங்கட்டி மழை (hailstorm), குறுகிய காலத்திலேயே அதிக மழை (24 மணி நேரத்தில் 115 மிமீக்கு மேல்) மற்றும் பனிப்பொழிவு, மேற்கு இமயமலைப் பகுதிகள், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா, தென் இந்தியாவின் சில பகுதிகளில் பதிவாகின. அண்டை நாடான பாகிஸ்தானும், சில நாட்களுக்கு முன்பு கடுமையான வானிலையைச் சந்தித்தது.
• வளிமண்டலக் கீழடுக்குகளில் ஏற்பட்ட இடையூறுகளுடன் சேர்த்து, ஒரு காற்று சுழற்சி (cyclonic circulation) நீண்டகாலம் நீடித்தது. மேலும், வங்காள விரிகுடாவிலிருந்து இப்பகுதிக்கு ஈரப்பதத்தைக் கொண்டுவந்த வலுவான தென்மேற்கு அல்லது தெற்கு திசைக்காற்றும் வீசியது. இது மத்திய மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளில் காற்றுகள் ஒன்றிணையும் சூழலை உருவாக்கியது. இதேபோன்ற வானிலை மார்ச் 2023-லும் பதிவானதாக, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department (IMD)) வல்லுநர்கள் தெரிவித்தனர்.
உங்களுக்குத் தெரியுமா?
• மார்ச் மாதத்தின் நடுப்பகுதியை ஒட்டி ஏற்பட்ட பல்வேறு வானிலை காரணிகளின் கூட்டு விளைவாக, நாடு முழுவதும் ஆலங்கட்டி மழை பொழிந்தது. முதலாவதாக, பருவமழை பொழியாத மாதங்களில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை), மேற்கத்திய இடையூறுகள் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் மழைப்பொழிவையும் (உயரமான மலைப்பகுதிகளில் பனிப்பொழிவையும்) ஏற்படுத்துகின்றன. குளிர்காலத்தின் தாக்கம் இன்னும் முழுமையாக விலகாத நிலையில் மார்ச் மாதத்தின் தொடக்கத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
ஆலங்கட்டி மற்றும் இடியுடன் கூடிய மழை பொழிவதற்கு மார்ச் மாதமே மிகவும் ஏற்ற மாதமாக அமைகிறது. மார்ச் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு வெப்பநிலை உயரத் தொடங்குகிறது; அப்போது சாதகமான வானிலை சூழல்கள் ஏற்படும் பட்சத்தில், இடி, மின்னல் மற்றும் தீவிர மழைப்பொழிவு ஏற்படக்கூடும்.
கிழக்கு இந்தியப் பகுதிகளில், வடமேற்குக் காற்றால் உருவாகும் திடீர் புயல்கள் (Nor’westers”) மேற்கு வங்கத்தில் 'Kalbaisakhi' என்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் காற்றுகள், இந்தக்காலகட்டத்தில் திடீரெனத் தீவிரமான புயல்கள், கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை ஆகியவற்றை உருவாக்கக்கூடும்.
• 'வெப்ப அலை' (Heatwave) என்பது அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழக்கத்திற்கு மாறாக மிக அதிக வெப்பநிலை நிலவும் ஒரு காலகட்டத்தைக் குறிக்கிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட சூழலை 'வெப்ப அலை' என்று அறிவிப்பதற்கான அளவுகோலானது, அந்த ஆண்டின் அப்போதையக் காலகட்டத்தில் அப்பகுதியில் நிலவும் வெப்பநிலையைச் சார்ந்தே தீர்மானிக்கப்படுகிறது.
• இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விதிமுறைகளின்படி, "சமவெளிப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு வானிலை நிலையத்தின் அதிகபட்ச வெப்பநிலை குறைந்தது 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும், மலைப்பகுதிகளில் பகுதிகளில் குறைந்தது 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும் பதிவாகும் பட்சத்தில்," அந்தப் பகுதியில் 'வெப்ப அலை' நிலவுவதாக அறிவிக்கப்படுகிறது.
இயல்பான வெப்பநிலையிலிருந்து ஏற்படும் விலகலின் அடிப்படையில், இந்த விலகல் 4.5°C முதல் 6.4°C வரை இருந்தால் அது 'வெப்ப அலை' (Heatwave) என்றும்; இந்த விலகல் 6.4°C-க்கு மேல் இருந்தால் அது 'கடுமையான வெப்ப அலை' (Severe Heatwave) என்றும் அறிவிக்கப்படுகிறது.
உண்மையான அதிகபட்ச வெப்பநிலையின் அடிப்படையில், அதிகபட்ச வெப்பநிலை 45°C-க்கு மேல் இருந்தால் அது 'வெப்ப அலை' என்றும்; வெப்பநிலை 47°C-க்கு மேல் இருந்தால் அது 'கடுமையான வெப்ப அலை' என்றும் இந்திய வானிலை மையம் (IMD) தெரிவிக்கிறது.
• 'மேற்கத்திய இடையூறுகள்' (Western disturbances) என்பவை மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் புயல்களாகும். இவை டெல்லிக்குக் கிழக்குக் காற்றைக் கொண்டுவருவதுடன், காற்றில் ஈரப்பதத்தின் அதிகரிப்பு மற்றும் மேகமூட்டம் அல்லது மழையையும் ஏற்படுத்துகின்றன. இவை குளிர்காலத்தில் வழக்கமாக நிகழும் நிகழ்வுகளாகும். பருவமழை மற்றும் கோடைக்காலங்களில், இவை அதிகமாக வெப்பமண்டல (tropical) பண்புகளைக் கொண்டு மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை ஏற்படுத்துகின்றன. குளிர்காலத்தில், இவை மலைப்பகுதிகளில் மழையும் பனிப்பொழிவும் ஏற்படுத்தி, சமவெளி பகுதிகளுக்கு அதிக ஈரப்பதத்தையும் கொண்டு வருகின்றன. மேகமூட்டம் காரணமாக இரவு நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரிக்கிறது. அதே சமயம் பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை குறைகிறது.
Original Link: What are western disturbances?