இது ஒரு கவலையளிக்கும் செய்தியாக உள்ளது - புவி வெப்பமடைதலின் ஆபத்தான தாக்கங்களைத் தணிக்கும் அளவுக்கு கார்பன் நீக்க முயற்சி வலுவாக இல்லை.
2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் உலக கார்பன் உமிழ்வு புதிய உச்சத்தை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பிரேசிலில் நடைபெற்று வரும் 30வது காலநிலை மாநாட்டுடன் ஒப்பிட்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை இதனைத் தெரிவிக்கிறது. 2024-ஆம் ஆண்டைவிட அமெரிக்கா 1.9 சதவீத அதிகரிப்பையும், அதைத் தொடர்ந்து இந்தியா 1.4 சதவீதத்தையும், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 0.4 சதவீதம் அதிகரித்துள்ளன. இருப்பினும், உலகளாவிய கார்பன் திட்டத்துடன் பணிபுரியும் 130 விஞ்ஞானிகள் குழு தயாரித்த அறிக்கை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பெரிய அளவிலான பயன்பாடு காரணமாக, 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வெளியேற்றம் மிகவும் மெதுவாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டுகிறது. இந்த ஆண்டு ஒப்பீட்டளவில் குளிர்ந்த கோடைக்காலமும், முன்கூட்டியே தொடங்கிய பருவமழையும் இந்தியாவின் மின்சாரத் துறை உமிழ்வு 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 2024-ன் அதே காலகட்டத்தைவிட குறைவாக இருக்க காரணமாக அமைந்தன. இந்தியாவின் பொருளாதாரத்தில் கார்பன் தீவிரத்தை குறைப்பதற்கான நீண்டகால போக்கின் ஒரு பகுதியாகவும் இந்த மந்தநிலையைப் பார்க்க வேண்டும் - 2004-2015-ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாக இருந்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் சராசரி வளர்ச்சி 2015-2024-ஆம் ஆண்டில் 3.6 சதவீதமாகக் குறைந்தது. இதற்கு நேர்மாறாக, அமெரிக்காவின் புள்ளிவிவரங்கள் நாட்டின் உமிழ்வில் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக நிலவிய கீழ்நோக்கிய போக்கின் (downward trend) தலைகீழ் மாற்றத்தைக் காட்டுகின்றன.
உலகளாவிய கார்பன் திட்டம் (Global Carbon Project) முக்கிய நாடுகளில் உமிழ்வைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், கார்பனைக் குறைப்பதற்கான முயற்சிகள் புவி வெப்பமடைதலின் ஆபத்தான விளைவுகளைத் தடுக்க போதுமானதாக இல்லை என்றும் எச்சரிக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலக்கரியை மின்சாரத்தின் முக்கிய ஆதாரமாக மாற்றியுள்ளது. அந்த சூழலிலும், எரிசக்தி மீதான தேவை அதிகரித்து வருவதால், புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டில் எந்தக் குறைவும் இல்லை. உலகளாவிய உமிழ்வுகள் 2030-ஆம் ஆண்டில் குறையக்கூடும். ஆனால், அது பாரிஸ் ஒப்பந்த இலக்கான 1.5°C-க்குக் கீழே வெப்பமயமாதலைத் தக்கவைக்க போதுமானதாக இருக்காது. தற்போதைய விகிதத்தில் உமிழ்வு தொடர்ந்தால், பாரிஸ் ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்பட்ட கார்பன் வரம்பை உலகம் கிட்டத்தட்ட பயன்படுத்திவிடும் என்று அறிக்கை எச்சரிக்கிறது. 30வது காலநிலை மாநாட்டுடன் உடன் இணைந்து வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுவது போல், உலகம் 2.6 டிகிரி வெப்பநிலை உயர்வை நோக்கிச் செல்கிறது என்று கூறுகிறது.
பிரேசிலில் ஒன்றுகூடியுள்ள பேச்சுவார்த்தையாளர்களுக்கு இந்தச் செய்தி தவறாக சென்று விடக் கூடாது. 30-வது கால நிலை மாநாடு, சுத்தமான எரிசக்தி பயன்பாட்டுக்கான ஒரு தெளிவான எதிர்கால திட்டத்தை (roadmap) வழங்க சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், வெள்ளம், வறட்சி, புயல், புவி வெப்பமடைதலின் காரணமாக ஏற்படும் பேரிடர்களுக்கு எதிராக உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதில் அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டிய நேரம் இது.
Original Article: Global Carbon Project underlines need for investments in clean energy, building people’s resilience.