பிர்சா முண்டா மற்றும் ஆதிவாசி மகாசபை பற்றி…

முக்கிய அம்சங்கள்:


— “ஜார்க்கண்ட் இயக்கத்தின்வீச்சு 2000-ஆம் ஆண்டில் நடந்த பிரதேச மறுசீரமைப்புக்கும் அப்பால் நீண்டு செல்கிறது. அதன் தோற்றத்தை, சுரண்டல் செய்யும் வெளியாட்களைக் (உள்ளூரில் 'திக்கு (diku)' என்று அழைக்கப்படும் சொல்) எதிர்த்து ஆதிவாசிகள் பல நூற்றாண்டுகளாக நடத்திய அணி திரட்டல்களில் அறிஞர்கள் காண்கின்றனர். ஆனால் 1938-ஆம் ஆண்டில் ஆதிவாசி மகாசபாவின் உருவாக்கம் மற்றும் ஜெய்பால் சிங் முண்டாவின் கவர்ச்சிகரமான தலைமையின்கீழ் அதன் மாற்றம் ஆகியவை இயக்கத்திற்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் மையத்தை அளித்தன. அவர் பிரிவினைவாதத்தை நாடாமல், வளங்களைச் சுரண்டும் வெளிப்புற சக்திகளிடமிருந்து பாதுகாப்பையும் நீண்டகாலமாக விளிம்புகளுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு கண்ணியத்தையும் கோரும் சுயாட்சிக்கான கோரிக்கையை அவர் எடுத்துரைத்தார். ”


— “சுதந்திரத்திற்குப் பிறகு, ஆதிவாசி மகாசபா 1950-ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் கட்சியாக மாறியது. இந்த மாற்றம், கலாச்சார உறவுகளையும் பொதுவான சுரண்டலின் வரலாற்றையும் பகிர்ந்து கொண்ட ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர் அல்லாத பூர்வீக மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் வாக்காளர்களை மேலும் பரவலாக்கியது.”


— “1951 மற்றும் 1957-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் கட்சியின் வலுவான செயல்திறன், கோரிக்கையின் நியாயத்தன்மையை உறுதிப்படுத்தியது. இருப்பினும், 1956-ஆம் ஆண்டில், மாநில மறுசீரமைப்பு ஆணையம் தனி ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான திட்டத்தை நிராகரித்தது. ஏனெனில், அது மொழியியல் அளவுகோலை பூர்த்தி செய்யவில்லை. இது இயக்கத்தைப் பிளவுபடுத்தியது, இதன் காரணமாக 1963-ஆம் ஆண்டில் சிங் காங்கிரசுடன் இணைந்தார்.”


— “1973-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. ராய் மற்றும் குர்மி தலைவர் பினோத் பிஹாரி மஹ்தோ ஆகியோருடன் இணைந்து ஷிபு சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) உருவாக்கப்பட்டதன் மூலம் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM), இயக்கத்தின் புவியியல் மற்றும் கற்பனை எல்லையை மாற்றியது.”


— “அரசியல் மையப்புள்ளி சோட்டா நாக்பூர் மற்றும் சந்தால் பர்கானா ஆகிய ஆதிவாசிப் பகுதிகளிலிருந்து ஜாம்ஷெட்பூர் (Jamshedpur), பொகாரோ (Bokaro) மற்றும் தன்பாத் (Dhanbad) ஆகிய தொழில்துறைப் பகுதிகளுக்கு மாறியது. இங்கு, ஆதிவாசி அடையாளம், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் போராட்டங்களுடன் பின்னிப் பிணைந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM)) இந்த இயக்கத்தில் ஒரு வர்க்கப் பரிமாணத்தைச் சேர்த்து, அதன் சமூக அடித்தளத்தை விரிவுபடுத்தியதுடன், வெறும் கலாச்சார உரிமைகளில் மட்டுமில்லாமல், பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான சிந்தனையிலும்  வேரூன்றியது.”


— “1986-ஆம் ஆண்டு நிர்மல் மஹ்தோவின்கீழ் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (All Jharkhand Students Union (AJSU)) உருவாக்கப்பட்டதன் மூலம் இந்த உத்வேகம் தீவிரமடைந்தது. இது ஓரளவுக்கு அனைத்து அசாம் மாணவர் சங்கத்தை மாதிரியாகக் கொண்டது. அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தின் (All Jharkhand Students Union (AJSU)) உறுதியான அரசியல், இயக்கத்திற்குப் புத்துயிர் அளித்ததுடன், ஒரு புதிய தலைமுறையினரைத் தன்வசம் ஈர்த்ததோடு அதற்கு அமைப்புக் கட்டமைப்பு வலிமையையும் இளமைத் துடிப்பையும் அளித்தது.”


— இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியும் நிபந்தனைக்குட்பட்ட ஆதரவை வழங்கத் தொடங்கியது. இருப்பினும், அது ஜார்கண்ட் என்ற கோரிக்கையை வனஞ்சல் (Vananchal) என்று மறுவடிவமைத்தது. இது ஆதிவாசிகள் அடிப்படையில் வனவாசிகள், அதாவது காடுகளில் வாழும் இந்துக்கள் என்ற அதன் சித்தாந்த நிலைப்பாட்டைப் பிரதிபலித்தது. இந்த மறுபெயரிடல் பரவலாக எதிர்க்கப்பட்டதுடன், ஜார்கண்ட் இயக்கத்தின் தனித்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. இது ஆதிவாசி மையத்துடன் கூடிய பிராந்திய அடையாளத்தில் வேரூன்றி இருந்தது. ஆனால், மற்ற விளிம்புநிலை குழுக்களை உள்ளடக்கும் அளவுக்குப் பரந்ததாக இருந்தது. இது, மண்ணின் மைந்தர்கள் என்ற பிரத்தியேக அரசியல் இல்லாமல், பல்வேறு மக்களின் (பஹுஜன்) சிந்தனையை ஒருங்கமைத்தது போல இருந்தது. அங்கீகாரம், மறுபகிர்வு மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை இணைத்த இந்த இயக்கம், ஒரு மாநிலத்தை மட்டுமன்றி, ஒரு சமூக மாற்றத்தையும் கோரியது. ”


— “ஏறக்குறைய 75 ஆண்டுகால போராட்டம் மற்றும் தியாகத்திற்குப் பிறகு, ஜார்க்கண்ட் இறுதியாக நவம்பர் 15-ஆம் தேதி 2000-ஆம் ஆண்டு  உருவாக்கப்பட்டது. பிர்சா முண்டாவின் பிறந்தநாளில் இது நிகழ்ந்தது இந்த சாதனைக்கு ஒரு தார்மீக மற்றும் வரலாற்று மதிப்பு கிடைத்தது. இருப்பினும், 25 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த இயக்கத்தை ஊக்குவித்த விடுதலையின் நோக்கம்  பகுதியளவு மட்டுமே நிறைவேறியுள்ளது.”


— “உள்கட்டமைப்பு, வறுமை ஒழிப்பு, கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஜார்க்கண்ட் மறுக்க முடியாத முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆனால், ஆழமான கட்டமைப்பு சவால்கள் இன்னும் கடுமையாகவே உள்ளன. வளர்ச்சியால் ஏற்படும் இடப்பெயர்வு, ஆதிவாசி சமூகங்களை தொடர்ந்து அச்சுறுத்துகிறது, வெளிநாடுகளுக்கு அல்லது வெளியூர்களுக்குச் செல்வது குறிப்பிடத்தக்க அளவை எட்டியுள்ளது. மேலும், சமூக பதட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மிகவும் வெளிப்படையான பதற்றமான இடம் என்னவென்றால், பழங்குடியினர் தகுதி கோருவது தொடர்பாக ஆதிவாசிகள் மற்றும் குர்மிஸ் (Kudmis) இடையே உள்ள மோதல் ஆகும். இது நீண்டகாலமாக இருந்த சமூகக் குழுக்களை நிலைகுலையச் செய்துள்ளது.”


— “ஜார்க்கண்ட் மாநிலத்தின் 25 ஆண்டு மாநில அந்தஸ்து என்பது ஒரு சம்பிரதாய தருணம் என்பதைவிட மேலாக இருந்து, சிந்தனையை தூண்டும் வகையில் அமைய வேண்டும். மாநிலம் அதன் தலைவர்களை தொலைதூரச் சின்னங்களாக இல்லாமல், ஒரு தீர்வு காணப்படாத போராட்டத்தின் குரல்களாக நினைவுகூர வேண்டும். மேலும், அதன் மக்கள் கண்ணியம், நீதி மற்றும் சமத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு ‘ஜார்க்கண்ட்’ என்ற இயக்கத்தின் முக்கிய வாக்குறுதிக்கு திரும்ப வேண்டும்.”


உங்களுக்குத் தெரியுமா?


— இந்திய அரசியலமைப்பின் 3வது பிரிவானது, புதிய மாநிலங்களை உருவாக்கவும், ஏற்கனவே உள்ள மாநிலங்களை எளிய பெரும்பான்மையுடன் மாற்றவும், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் ஒப்புதலில்லாமல் பிரிக்கவும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.


— அரசாங்கம் ஒரு புதிய மாநிலத்தை உருவாக்க முடிவு செய்து, அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டமன்றம் அல்லது சட்டமன்றங்களின் கருத்துக்களைப் பெறுமாறு குடியரசுத் தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.


— புவியியல், நிதி நிலை, தலைநகரம், உயர்நீதிமன்றம் மற்றும் பல்வேறு கூறுகளைப் பிரிப்பது: அதாவது, பழைய மற்றும் புதிய மாநிலங்களுக்கு இடையேயான சொத்துக்கள், உள்கட்டமைப்பு, மனித வளங்கள், நதிநீர் ஆகியவற்றைப் பிரிப்பது குறித்த விவரங்களுடன் ஒரு மசோதா தயாரிக்கப்பட வேண்டும். சட்டமன்றங்களின் கருத்துக்கள் அனுப்பப்பட்டவுடன், அந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. இது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றவுடன், புதிய மாநிலம் நடைமுறைக்கு வருகிறது.


 Original Article : About the Birsa Munda and the Adivasi Mahasabha.


Share: