நல்லாட்சி என்றால் என்ன? - குஷ்பு குமாரி, ரோஷ்னி யாதவ்

  முக்கிய எடுத்துக்காட்டுகள்: 


• நல்லாட்சி தினமாக (Good Governance Day) அனுசரிக்கப்படும் மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25, 2019 அன்று தொடங்கப்பட்ட இந்த குறியீடு (index) விவசாயம், பொருளாதார நிர்வாகம், பொது சுகாதாரம் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட ஆளுமை உள்ளிட்ட துறைகளில் 50 க்கும் மேற்பட்ட குறிகாட்டிகளை உள்ளடக்கியது. 2019 மற்றும் 2021-ஆம் ஆண்டு தரவரிசையில் பெரிய மாநிலங்களில் தமிழகம் மற்றும் குஜராத் முறையே முதலிடம் பிடித்தன. 


• சமீபத்தில் டிசம்பர் 7 அன்று, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறை (Department of Administrative Reforms and Public Grievances (DARPG)) 2023 குறியீட்டை வெளியிட திட்டமிட்டது. டிசம்பர் 19 முதல் டிசம்பர் 24 வரை பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான தேசிய பிரச்சாரமான 'பிரஷசன் கான் கி ஓரே' (‘Prashasan Gaon Ki Ore’)  அறிவித்த DARPG, "சிறப்பு பிரச்சாரம் 4.0, நல்லாட்சி குறியீடு 2023 மற்றும் CPGRAMS-ன் ஆண்டு அறிக்கை குறித்த மதிப்பீட்டு அறிக்கை இந்த வாரத்தில் வெளியிடப்படும்" என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 


• மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் டிசம்பர் 25, 2021-ஆம் ஆண்டு  அன்று வெளியிடப்பட்ட 2021-ஆம் ஆண்டு குறியீடு, 10 துறைகளில் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது. கூட்டு தரவரிசையில் குஜராத் முதலிடத்தில் இருந்தாலும், 20 மாநிலங்கள் 2019 முதல் கூட்டு மதிப்பெண்களில் முன்னேற்றத்தைக் காட்டின. 


உங்களுக்குத் தெரியுமா?


• 2014-ஆம் ஆண்டில், மத்திய அரசு டிசம்பர் 25 "நல்லாட்சி தினமாக" கொண்டாடுவதாக அறிவித்தது. இந்த நாள் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளாகும். 


• பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட நல்லாட்சி குறியீட்டு அறிக்கையின்படி, "நல்லாட்சி என்பது குடிமக்களின் முன்னேற்றத்தை முதன்மையான முன்னுரிமையாக வைத்து முடிவுகளை செயல்படுத்தும் (அல்லது செயல்படுத்தப்படாத) ஒரு பயனுள்ள மற்றும் திறமையான செயல்முறையாக குறிப்பிடப்படலாம். வள ஒதுக்கீடு, முறையான நிறுவனங்களை உருவாக்குதல், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமைத்தல் போன்றவை இந்த இலக்கை அடைவதற்கான ஒரு பகுதியாகும். 


• நல்லாட்சி வாரம் (Good Governance Week) டிசம்பர் 19, 2024 முதல் டிசம்பர் 24, 2024 வரை நடந்தது. இந்த வார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்தியாவின் அனைத்து மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் "கிராமங்களை நோக்கி நிர்வாகம்" (“Prashasan Gaon Ki Ore”) என்ற நாடு தழுவிய பிரச்சாரம் தொடங்கப்பட்டது.




Original article:

Share: