நிதி ஈவுத்தொகை -தலையங்கம்

 இந்திய ரிசர்வ் வங்கி ஒரு பெரிய மிகை தொகையை பரிமாற்றம் (surplus transfer) செய்தது. இது அரசாங்க நிதியை சரிசெய்ய உதவும். 


2023-24 ஆம் ஆண்டிற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் மிகை தொகை பரிமாற்றம் (surplus transfer)  செய்யப்பட்ட ரூ.2,10,874 கோடியானது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தொகை அடுத்த அரசாங்கத்தின் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு உதவியாக இருக்கும். இந்த பரிமாற்றம் 2022-23 ஆம் ஆண்டிற்கு மாற்றப்பட்ட ₹87,416 கோடியை விட 141% அதிகமாகும். மேலும், இது இந்திய ரிசர்வ் வங்கி அரசாங்கத்திற்கு அனுப்பிய மிக உயர்ந்த பணப்பரிமாற்றமாகும். 2019-ம் ஆண்டில் பிமல் ஜலான் குழுவின் (Bimal Jalan committee) ஆலோசனையின் பேரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார மூலதன கட்டமைப்பின் பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதியான தற்செயல் ஆபத்து இடையகத்திற்கு (contingency risk buffer) பங்களித்த பின்னர் உபரி தீர்மானிக்கப்பட்டது.


மேம்பட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்ப, இந்திய ரிசர்வ் வங்கியானது நிதியாண்டு-2024 க்கான அதன் இருப்புநிலைக் குறிப்பில் தற்செயல் ஆபத்து இடையகத்திற்கான (contingency risk buffer) ஒதுக்கீட்டை 6.5% ஆக அதிகரித்தது. மெதுவான வளர்ச்சி மற்றும் தொற்றுநோய் காரணமாக நிதியாண்டு-2019 மற்றும் நிதியாண்டு-2022 க்கு இடையில் இந்த ஒதுக்கீடு 5.5% ஆக இருந்தது.


கடந்த நிதியாண்டில் மிகப் பெரிய மிகைத் தொகை ஏற்பட்டது. ஆனால், ஏன் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு-2024 ஆண்டு அறிக்கை வெளிவரும் போது மட்டுமே நமக்குத் தெரியும். இந்திய ரிசர்வ் வங்கியின் பணத்தின் பெரும்பகுதி வெளிநாட்டு நாணயத்தில் இருப்பதாலும், 2024 நிதியாண்டில் அது சுமார் 17% வளர்ச்சியடைந்துள்ளதாகவும் ஆரம்ப தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் பிற முன்னேறிய பொருளாதாரங்களில் உயர்ந்த வட்டி விகிதங்கள் இந்த சொத்துக்களில் இருந்து வருமானங்களை உயர்த்தியிருக்கலாம். இந்தியாவில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் இந்திய அரசாங்க பத்திரங்களிலிருந்து வருமானத்தை அதிகரித்திருக்கும். அந்நியச் செலாவணி சந்தையில் தலையீடுகளிலிருந்து ஆதாயங்களும் பங்களித்தன. செலவினப் பக்கத்தில், உள்நாட்டு பணப்புழக்கம் சரிசெய்தல் வசதி (liquidity adjustment facility (LAF)) செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி செலவு உதவியது. இந்திய ரிசர்வ் வங்கி சிறப்பாக செயல்பட்டதாக தெரிகிறது. ரூபாய் மற்றும் அரசாங்கப் பத்திரங்களின் வருவாயை சீராக வைத்து விஷயங்களை சமப்படுத்தினார்கள். மேலும், அவர்கள் பெரிய வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ (portfolio) வரவுகளைக் கையாண்டனர். மேலும் அவர்கள் அரசாங்கத்திற்கு மாற்றுவதற்கான உபரியை அதிகப்படுத்தினர்.


2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ஈவுத்தொகை மற்றும் உபரியாக கணிக்கப்பட்ட ₹1,02,000 கோடியை விட நிதியாண்டு-2024 இல் அறிவிக்கப்பட்ட உபரி தொகை மிக அதிகம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 முதல் 0.3% வரையிலான கூடுதல் பரிமாற்றம், நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் மற்றும் சந்தைக் கடன் வாங்குவதைக் குறைக்கும். மாற்றாக, உள்கட்டமைப்பு செலவினங்களுக்கு ஒன்றிய அரசு நிதியைப் பயன்படுத்தலாம். குறைந்த சந்தை கடன் நிதி ஒருங்கிணைப்பை விரைவுபடுத்த உதவும். இது 2025-26 க்குள் 4.5% நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைய உதவும். காகித விநியோகத்தைக் குறைப்பது என்பது, ரிசர்வ் வங்கியானது அரசு கடன் வாங்குவதற்கு உதவ வேண்டியதில்லை. மாறாக, அதன் ₹70 லட்சம் கோடி இருப்புநிலைக் குறிப்பைக் குறைக்கும். மேலும், குறைவான அரசாங்கப் பத்திரங்கள் G-sec விளைச்சல்கள் மற்றும் சந்தை விகிதங்கள் குறையும், இது பணவியல் கொள்கைக்கு (monetary policy) முக்கியமானது.  




Original article:

Share: