ஞாயிற்றுக்கிழமை மே 19-ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோர் உயிரிழந்தனர். ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அடர்ந்த மூடுபனியின் போது இது நடந்தது. விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணத்தை தெஹ்ரான் இன்னும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும், பல வல்லுநர்கள் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பெல் 212 (Bell 212 chopper) ஹெலிகாப்டர் 30 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மேலும் அது 45 ஆண்டுகள் பழமையானது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பழைய விமானங்கள் நம்பகமானவை மற்றும் பாதுகாப்பானவை என்று ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால் ஈரான் ஜனாதிபதி ஏன் இவ்வளவு பழைய ஹெலிகாப்டரைப் பயன்படுத்தினார்?
பொருளாதாரத் தடைகள் மற்றும் ஈரானின் விமானத் துறை
1979 புரட்சிக்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஈரான் மீது பல தடைகளை விதித்துள்ளன. 2022-வரை, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் வரை, ஈரான் உலகளவில் அதிக பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டது என்று ப்ளூம்பெர்க் (Bloomberg) தெரிவித்துள்ளது. இந்த தடைகள் ஈரானை உலகளவில் தனிமைப்படுத்தி அதன் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது. குறிப்பாக, ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறையை கடுமையாக பாதித்துள்ளது.
அல் ஜசீராவின் கூற்றுப்படி, அமெரிக்கத் தடைகள் ஈரானுக்கு 10%க்கும் அதிகமான அமெரிக்கத் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு பாகங்களைக் கொண்ட விமானம் அல்லது விமானப் பாகங்கள் பெறுவதைத் தடுக்கின்றன. இதேபோன்ற தடைகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தனிப்பட்ட மேற்கத்திய நாடுகளாலும் விதிக்கப்படுகின்றன. பெரும்பாலான விமானங்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தயாரிக்கப்படுவதால், இந்த தடைகள் தெஹ்ரானை மேற்கத்திய விமானங்களை வாங்குவதையும் அதன் பழைய கடற்படையை இயங்க வைப்பதற்கான பாகங்களைப் பெறுவதையும் நிறுத்துகின்றன.
விமானங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தவிர, பொருளாதாரத் தடைகள் ஈரான் பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவியைப் பெறுவதையும் தடுக்கிறது. ரைசியின் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை தயாரித்த அமெரிக்க நிறுவனமான பெல் டெக்ஸ்ட்ரான் (Bell Textron), "பெல் ஈரானில் எந்த வியாபாரமும் செய்யவில்லை அல்லது அவர்களின் ஹெலிகாப்டர்களுக்கு உதவவில்லை" என்று கூறினார். ரஷ்ய விமானங்களும் அமெரிக்க பாகங்களைச் சார்ந்துள்ளன. இதன் பொருள் மாஸ்கோவால் தெஹ்ரானுக்கும் முழுமையாக உதவ முடியாது என்பதாகும். கூடுதலாக, உக்ரைன் போர் மற்றும் அதன் விளைவாக பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, ரஷ்யாவில் விமானங்கள் மற்றும் பாகங்கள் குறைவாக உள்ளது.
ஈரானின் வயதான மற்றும் நம்பமுடியாத கடற்படை
பொருளாதாரத் தடைகளின் விளைவாக ஈரானின் பயணிகள் கடற்படையின் சராசரி விமான வயது கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆக்கியுள்ளது. இது உலகளாவிய சராசரியை விட இரு மடங்கு அதிகம் என்று விமான தரவு குழு சிரியம் (Cirium) தெரிவித்துள்ளது. ஈரான் ஏர், 40ஆண்டுகளுக்கும் மேலான பழமையான விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.ஒப்பிடுகையில், கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் சராசரியாக 9 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை .
ஒரு விமானம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் போது அதன் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. விபத்து விகிதங்களுக்கும் 18 ஆண்டு வரையிலான விமான பயன்பாட்டிற்கும் இடையே தொடர்பு எதுவும் இல்லை. இருப்பினும், 20 ஆண்டுகளுக்கும் மேலான விமானங்களால் விபத்துகள் அதிகரிக்கிறது என்று பாஸ்டனில் உள்ள மாசசூசெட்சு தொழில்நுட்பக் கழக (Massachusetts Institute of Technology, Boston) பேராசிரியரான ஆர் ஜான் ஹான்ஸ்மேனின் விளக்குகிறார்.
பொருளாதாரத் தடைகள் தொடங்கியதிலிருந்து ஈரான் மோசமான விமானப் பாதுகாப்பு பதிவைக் கொண்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு முதல், ஈரானில் 73 விமான விபத்துக்கள் (ஹெலிகாப்டர்கள் தவிர) நடந்துள்ளன. இது 2,286 இறப்புகளை ஏற்படுத்தியது. ஜெனீவாவை தளமாகக் கொண்ட விமான விபத்துக் காப்பகப் பணியகம் (Bureau of Aircraft Accidents Archives (B3A)) தெரிவித்துள்ளது. 1979 மற்றும் 2002-க்கு இடையில் ஈரானில் 109 விமான விபத்துக்கள் ஏற்பட்டதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க் (Aviation Safety Network (ASN)) கூறுகிறது.
ஒப்பீட்டளவில், இதே காலகட்டத்தில், பாகிஸ்தானில் 42 விபத்துகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக 854 பேர் உயிரிழந்துள்ளனர் என்று B3A தெரிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்குப் பிறகு, சில மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை நிக்கின. இதன் மூலம் ஈரான் போயிங் (Boeing) மற்றும் ஏர்பஸ் (Airbus) நிறுவனங்களுடன் $40 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்துவிட்டது. இருப்பினும், 2018-ல் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் செய்யப்பட்ட மாற்றமானது ஈரான் கடற்படையின் முன்னேற்றத்திற்கு தடைசெய்தது.
அந்த காலகட்டத்தில் ஈரான் மூன்று ஏர்பஸ் ஜெட் விமானங்கள் மற்றும் 13 சிறிய சுழல்விசை முந்துகை (turboprop) விமானங்கள் மட்டுமே வாங்க முடிந்தது என்று அல் ஜசீரா (Al Jazeera) அறிக்கை தெரிவித்துள்ளது.