இந்தியாவின் பாதுகாப்பு சீர்திருத்தத் திட்டம், மோதல் அல்லது போரின் போது வரையறுக்கப்பட்ட இராணுவ இலக்குகளுடன் குறிப்பிட்ட எதிரி அடிப்படையிலான அரங்குகளில் கூட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒருங்கிணைந்த அரங்கு கட்டளைகளை (integrated theatre commands) உருவாக்குவதற்கான வரைவை இந்திய ஆயுதப்படைகள் சிறப்பாகச் செய்து வருகின்றன.
இந்த சீர்திருத்தமானது, இந்திய இராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை (Indian Air Force (IAF)) ஆகியவற்றைத் தெளிவான இராணுவ பாதுகாப்பு நோக்கங்களுடன் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2019-ம் ஆண்டில் பாதுகாப்புப் படைத் தலைவர் (Chief of Defence Staff (CDS)) பதவியை உருவாக்கி, இந்த திட்டத்தின் மாற்றத்தை மேற்பார்வையிட இராணுவ விவகாரத் துறையை (Department of Military Affairs (DMA)) அமைப்பதன் மூலம் அரசாங்கமானது இந்த சீர்திருத்தத்தைத் தொடங்கியது. பி.ஜே.பி தனது தேர்தல் அறிக்கையில் மிகவும் திறமையான நடவடிக்கைகளுக்கு இராணுவ அரங்கு கட்டளைகளை (military theatre commands) நிறுவுவதாக உறுதியளித்தது.
இந்தியாவின் அரங்கு கட்டளைகளுக்கு (theatre commands) சிறந்த மாதிரியைக் கண்டறிய கடந்த ஐந்து ஆண்டுகளில் பல வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான இறுதி ஒப்புதலை அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.
தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, தற்போதுள்ள திட்டத்தை மேன்மைப்படுத்த இன்னும், விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கீழ் மட்டங்களில் சேவைகளை ஒருங்கிணைக்க மற்ற முயற்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மூன்று பாதுகாப்புச் சேவைகளும் தற்போது, தனித்தனியாக அவற்றின் தனிப்பட்ட செயல்பாட்டுக் கட்டளைகளின் கீழ் இயங்குகின்றன.
அரங்குமயமாக்கலில் (Theaterisation) மூன்று சேவைகளிலிருந்தும் குறிப்பிட்ட பிரிவு பணியாளர்களை ஒரே அரங்கு கட்டளையாளர்களின் (single theatre commander) கீழ் வைக்க வேண்டும். இதனால், அவர்கள் ஒரு போர் அல்லது மோதலில் ஒரே குழுவாக இணைந்து போராடுகிறார்கள். மேலும், இதன் செயல்பாட்டில் தனிப்பட்ட சேவைகளின் மனிதவளம் மற்றும் வளங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்துகிறார்கள்.
மூன்று சேவைகள் ஒவ்வொன்றும் அதன் சொந்த கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளைக் கொண்டுள்ளன. அரங்கு கட்டளைகள் (theatre commands) நிறுவப்படும் போது, இந்த சேவைகளின் பணியாளர்கள், சொத்துக்கள், உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றை அவை ஒன்றாகக் கொண்டுவரும். இந்த ஒருங்கிணைப்பு, குறிப்பிட்ட செயல்பாட்டுப் பகுதிகளில் இராணுவ இலக்குகளை அடைய சுமூகமாக இணைந்து செயல்பட உதவும்.
ஆயுதப்படைகள் ஏற்கனவே அதிக ஒருங்கிணைப்பை நோக்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளன. மும்பையை முதல் முத்தரப்பு பொது பாதுகாப்பு நிலையமாக மாற்றுவது (first tri-service common defence) மற்றும் விநியோகச் சங்கிலிகள் (supply chains) மற்றும் சேவைகளுக்கு இடையேயான இடுகைகளை சீராக்க நாடு முழுவதும் கூட்டு தளவாட முனைகளை அமைப்பது ஆகியவை திட்டங்களில் அடங்கும்.
கட்டளைகள் மற்றும் தலைமையகம்
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜனவரி 2023 இல், இராணுவத்தின் சமீபத்திய வரைவு மூன்று எதிரி அடிப்படையிலான அரங்கு கட்டளைகளைக் (theatre commands) கொண்டுள்ளது. பாகிஸ்தானை எதிர்கொள்ளும் ஒரு மேற்கத்திய அரங்கு கட்டளை (theatre commands), சீனாவை எதிர்கொள்ளும் வடக்கு அரங்கு கட்டளை (theatre commands) மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருந்து வெளிப்படும் அச்சுறுத்தல்களுக்கான கடல் அரங்கு கட்டளை (maritime theatre command) ஆகும்.
ஜெய்ப்பூரில் மேற்கு அரங்கு கட்டளையையும் (western theatre command), லக்னோவில் வடக்கு அரங்கு கட்டளையையும் (northern theatre command) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கார்வார் மற்றும் திருவனந்தபுரம் ஆகியவை பரிசீலனையில் இருந்தாலும், கடல்சார் அரங்கு கட்டளைக்கு (maritime theatre command) கோயம்புத்தூரில் தலைமையிடம் அமைக்கப்படலாம்.
முந்தைய வரைவுகள் சேவைகளுக்கு இடையேயான விவாதங்களின் அடிப்படையில் மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன. ஒரு வான் பாதுகாப்பு ஆணையகம், கூடுதல் அரங்க கட்டளைகள், ஒரு கூட்டு தளவாட கட்டளையகம், ஒரு விண்வெளி கட்டளை மற்றும் ஒரு பயிற்சி கட்டளை ஆகியவற்றிற்கான திட்டங்கள் இருந்தன. இருப்பினும், இதற்கான கட்டமைப்பு மற்றும் அரங்கு கட்டளைகளின் எண்ணிக்கை குறித்து சேவைகளிடையே கருத்து வேறுபாடுகள் தற்போதைய திட்டத்தை வருவதற்கு முன்பு பல மாற்றங்களுக்கு வழிவகுத்தன.
பகுத்தறிவு செயல்முறை
அரங்கு கட்டளைகளை உருவாக்குவது எப்படி தற்போதைய சேவை கட்டளைகளை மேலும் ஒழுங்கமைக்கச் செய்யும்?
தற்போது, இராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக்கு தலா ஏழு கட்டளைகளும், கடற்படைக்கு மூன்று கட்டளைகளும் உள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளை மற்றும் இராஜதந்திர படைகள் கட்டளை (Strategic Forces Command (SFC)), தலைமையகம் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களும் (Headquarters Integrated Defence Staff (HQIDS)) ஆகிய இரண்டு முத்தரப்பு கட்டளைகளும் உள்ளன.
இதில், அரங்கு கட்டளைகளை உருவாக்கிய பிறகு, சேவைகளின் மூன்று கட்டளை தலைமையகங்கள் அரங்கு கட்டளை (theatre command) தலைமையகமாக மாறும். தற்போது, அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளை அரங்கு கட்டளைகளில் ஏதேனும் ஒன்றில் சேர்க்கப்படலாம். மேலும், தலைமையகம் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களும் (Headquarters Integrated Defence Staff (HQIDS)), பாதுகாப்புப் படைத் தலைவரின் கீழ் செயல்படும். இராஜதந்திர படைகள் கட்டளை (Strategic Forces Command (SFC)) தொடர்ந்து சுதந்திரமாக செயல்படும்.
ஜெனரல் அல்லது அதற்கு சமமான பதவியில் இருக்கும் அதிகாரிகள் மூன்று அரங்கு கட்டளைகளுக்கு தலைமை தாங்குவார்கள். அவர்கள் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான தேசிய பாதுகாப்புக் குழுவுக்கு அறிக்கை அளிப்பார்கள். மேலும், துணை பாதுகாப்புப் படைத் தலைவர் ஆகியோரை நியமிக்கும் திட்டங்களும் உள்ளன. துணை பாதுகாப்புப் படைத் தலைவர், ஒரு பொது அல்லது அதற்கு சமமான, இராஜதந்திர திட்டமிடல், திறன் மேம்பாடு மற்றும் கொள்முதல் ஆகியவற்றைக் கையாளுவார். துணை பாதுகாப்புப் படைத் தலைவர், ஒரு லெப்டினன்ட் ஜெனரல் அல்லது அதற்கு சமமானவர். அரங்குகளின் செயல்பாடுகள், உளவுத்துறை மற்றும் அதற்கான சொத்து ஒதுக்கீடு ஆகியவற்றை நிர்வகிப்பார்.
முப்படைகளின் தலைவர்களும் சேவைகளை உயர்த்துதல், பயிற்சி அளித்தல் மற்றும் நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவார்கள். மூன்று அரங்கு கட்டளையாளர்கள் (theatre commanders) செயல்பாடுகளை கையாளுவார்கள். இந்த திட்டங்கள் எதுவும் இதுவரை அரசின் இறுதி ஒப்புதலைப் பெறவில்லை.