அண்டார்டிகாவில் முறைப்படுத்தப்படாத சுற்றுலாவை (unregulated tourism) இந்தியா தொடர்ந்து எதிர்க்க வேண்டும்.
கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் 46-வது அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தில் (Antarctic Treaty Consultative Meeting (ATCM)) 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டம் இம்மாத இறுதிவரை நடைபெறும். இந்தக் கூட்டம் "ஆலோசனைக் கட்சிகளை" (Consultative Parties) ஒன்றிணைக்கிறது. அவை கண்டத்தை நிர்வகிப்பது குறித்து வாக்களிக்கும் உரிமையைக் கொண்ட 29 நாடுகளின் கூட்டம் ஆகும். மற்ற வாக்களிக்காத நாடுகள் பார்வையாளராக கூட்டத்தில் பங்கேற்கின்றனர். மேலும், நிபுணர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இதில் சுற்றுலா தொடர்பாக விவாதிக்க உள்ளனர். இந்தியா உள்ளிட்ட "ஒத்த சிந்தனையைக்" (“like-minded”) கொண்ட நாடுகளின் குழு, அண்டார்டிகாவில் சுற்றுலா ஒழுங்குமுறைத் திட்டத்தை முன்மொழிகின்றன. மற்ற கண்டங்களைப் போல் அண்டார்டிகாவில் பழங்குடி மக்கள் இல்லை.
அண்டார்டிகா மற்ற இடங்களைப் போல் பொதுவான சுற்றுலா தலமாக இல்லை. அண்டார்டிகாவிற்கு அனைவராலும் எளிதில் பயணிக்க முடியாது இது வழக்கமான இடங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அதுதான் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் ஆராயப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்ட உலகில், அண்டார்டிகாப் பகுதி காடு மற்றும் பனி அடுக்குகளின் கீழ் மறைந்துள்ளது. தனித்துவமான அனுபவங்களைத் தேடும் செல்வந்தர்கள் விரும்பும் இடமாக அண்டார்டிகா மாறியுள்ளது.
டாஸ்மேனியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் சமீபத்திய ஆய்வில், அண்டார்டிகாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1993-ல் 8,000-லிருந்து 2022-ல் 105,000 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளால் நடத்தப்படும் அறிவியல் பயணங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. அண்டார்டிகாவிற்கு வருகை தரும் விஞ்ஞானிகளைவிட இப்போது அதிகமான சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்து இருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. 1966-ஆம் ஆண்டுமுதல் ஆலோசனைக் கூட்டங்களின் போது அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்து விவாதிக்கப்படுகிறது. அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகைக் காரணமாக பிராந்தியத்தின் பல்லுயிரியலுக்கு தீங்கு விளைவிக்கும் மாசு மற்றும் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அமெரிக்காவும் மெக்சிகோவும் இணைந்த அளவு பெரிய பகுதியான அண்டார்டிகாவை சுத்தமாக வைத்திருக்க அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் பிராந்திய உரிமைகோரல்களைத் தடை செய்யும் ஒப்பந்தம் இருந்தபோதிலும், எதிர்காலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கவலை அதிகரித்துள்ளது. ஒரு நாட்டிலிருந்து அதிகமான பார்வையாளர்கள் தங்களுக்குச் சாதகமாக விதிகளை உருவாக்க முடியுமா என்று சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். இந்தியா இப்போது சில சுற்றுலாப் பயணிகளை அண்டார்டிகாவிற்கு அனுப்பினாலும், அதன் வளர்ந்து வரும் செல்வம் காரணமாக அது மாறக்கூடும். இந்தியா சுற்றுலா விதிமுறைகளை ஆதரிக்கும் அதே வேளையில், எதிர்கால சுற்றுலாவை பாதிக்கும் விதிமுறைகளை ஏற்காமல் கவனமாக இருக்க வேண்டும்.