இந்திய ரிசர்வ் வங்கியின் மிகைத் தொகைப் பரிமாற்றம் அடுத்து வரும் அரசாங்கத்தை நம்பிக்கையுடன் தொடங்குவதற்கு உதவும்.
2023 மற்றும் 2024-ம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ.2.11 லட்சம் கோடியை ஒன்றிய அரசுக்கு மாற்றுவதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் வாரியத்தின் முடிவானது அடுத்து வரும் புதிய அரசாங்கத்திற்கு வரவேற்கக் கூடியதாகும். இது 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால ஒன்றிய வரவுசெலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்ட முந்தைய ஆண்டின் ரூ.87,416 கோடி செலுத்தப்பட்ட வங்கி மற்றும் நிதி அமைப்பு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து ரூ.1.02 லட்சம் கோடி ஈவுத்தொகை மற்றும் மிகைத் தொகை ரசீதுகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த மாற்றம் அடுத்த நிதியமைச்சருக்கு வரவுசெலவு மற்றும் நிதி அமைப்பு திட்டமிடும்போது நிறைய நெகிழ்வுத்தன்மையை வழங்க வேண்டும். இந்த மாற்றத்தக்க மிகைத் தொகையின் அதிகரிப்பு இந்திய ஒன்றிய வங்கி சொத்துக்களை கவனமாக நிர்வகிப்பதை பிரதிபலிக்கிறது. உலகளவில் நிச்சயமற்றத் தன்மை மற்றும் பல ஒன்றிய வங்கிகள் விலைகளை உறுதிப்படுத்த கொள்கைகளைக் கடுமையாக்கி வரும் நேரத்தில் இது நடந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 2023-24 இருப்புநிலைக் குறிப்பின் விவரங்கள் வரும் நாட்களில் அறியப்படும் அதே வேளையில், அதன் வெளிநாட்டுப் பத்திரங்கள் மற்றும் அந்நியச் செலாவணி சந்தையில் அதன் தலையீடுகளின் மூலம் ரூபாயின் ஏற்ற இறக்கத்தை சீராக்குவது மற்றொரு காரணியாகும். இவை இணைந்து உபரியைப் பெருக்கியது. மார்ச் 29ஆம் தேதி நிலவரப்படி, மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பு 12 மாதங்களில் 67.1 பில்லியன் டாலர் அதிகரித்து 645.58 பில்லியன் டாலராக இருந்தது என்று வாராந்திரப் புள்ளி விவரம் காட்டுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி தனது அணுகுமுறையில், குறிப்பாக தற்செயல் இடர் தாங்கலின் (Contingent Risk Buffer (CRB)) கீழ் வழங்குவதில் கவனமாக உள்ளது. இது பொருளாதாரத்தில் ஏற்படும் எதிர்பாராத தற்செயல்கள் மற்றும் அபாயங்களை ஈடுகட்ட ஒதுக்கப்பட்ட நிதியை அதிகரித்துள்ளது. ஒன்றிய வங்கி 2023-24ஆம் ஆண்டிற்கான அதன் இருப்புநிலை அளவின் 6.5% க்கு 50 அடிப்படை புள்ளிகளால் வழங்குவதற்கான அளவை உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை உள்நாட்டுப் பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தில் அதன் அதிகரித்த நம்பிக்கையை தெளிவாகக் காட்டுகிறது. உலகளாவிய நிதிய அமைப்பில் (global financial system) எதிர்பாராத முன்னேற்றங்களில் இருந்து நிலைத்தன்மைக்கான திடீர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இது தாங்கலை பலப்படுத்துகிறது. ஜூன் 4ஆம் தேதி நடந்துவரும் பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய அரசாங்கத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து குறிப்பிடத்தக்க மிகைத் தொகைப் பரிமாற்றம் கிடைக்கும். இந்த மிகைத் தொகையின் மூலதன செலவினங்களை அதிகரிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக, தனியார் நுகர்வு செலவினம் இன்னும் போராடி வருகிறது. நிதி இடைவெளியைக் குறைக்க இந்த கூடுதல் பணத்தில் சிலவற்றைப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் நிதி நிலையை மேம்படுத்தலாம் மற்றும் நிதி ஒருங்கிணைப்புக்கான அதன் உறுதிப்பாட்டைப் பற்றி முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் பொருளாதாரத்தின் மீள்திறன் மீதான நம்பிக்கையுடன் அடுத்த அரசாங்கத்திற்கு அமைதியாகக் களம் அமைத்துக் கொடுத்துள்ளன.