எல் நினோ மற்றும் தேர்தல் ஆண்டு காரணமாக உணவு விலைகள் அதிகரித்தது. பருப்பு வகைகளில் நாட்டின் தன்னிறைவு வளர்ச்சியை சீர்குலைத்தது.
ஏப்ரல் 2024-ல், தானியங்களின் நுகர்வோர் விலை குறியீட்டு எண் (consumer price index (CPI)) ஏப்ரல் 2023 உடன் ஒப்பிடும்போது 8.63% அதிகரித்துள்ளது.
இருப்பினும், ரொட்டியின் விலை உயர்வு அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் (government’s flagship food security scheme) திட்டத்தின் காரணமாக பல ஏழை மற்றும் நடுத்தர வர்க்க இந்தியர்களை அதிகம் பாதிக்கவில்லை. இந்தத் திட்டம் சுமார் 813.5 மில்லியன் மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமையை இலவசமாக வழங்குகிறது.
ஏப்ரல் 2024-ல் பருப்புகளின் வருடாந்திர சில்லறை பணவீக்கம் (annual retail inflation) 16.84% ஆக இருந்தது. இது தானியங்களைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த அதிகரிப்பு மிகவும் சிரமமாக இருந்திருக்கும். ஏனெனில் ரொட்டியைப் போலல்லாமல், பருப்பு பொதுவிநியோக முறையின் மூலம் பரவலாகக் கிடைக்காது. குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் உட்பட நுகர்வோர் பெரும்பாலும் திறந்த சந்தையில் இருந்து வாங்க வேண்டும். இது விலை உயர்ந்ததாக இருக்கும்.
நுகர்வோர் விவகாரத் துறையின் (Department of Consumer Affairs) கூற்றுப்படி, இந்தியாவில் சனா கொண்டைக்கடலையின் (chickpea) சராசரி விலை மே 23 அன்று ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.70-ஆக இருந்தது. ஆனால், தற்போது ஒரு கிலோவுக்கு ரூ.85-ஆக விலை அதிகரித்துள்ளது. துவரம் பருப்பு விலை கிலோவுக்கு ரூ.120 முதல் ரூ.160 ஆகவும், உளுந்து (black gram) மற்றும் பாசிப்பயறு பச்சை பயறு (green gram) விலை ரூ.110 முதல் ரூ.120 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேசமயம், மசூர் அல்லது சிவப்பு பருப்பு விலை கிலோ ரூ.95-ல் இருந்து ரூ.90 ஆக குறைந்துள்ளது.
பருப்பு விலை உயர்வு ஏன்?
எல் நினோவால் ஏற்பட்ட ஒழுங்கற்ற பருவமழை மற்றும் குளிர்கால மழையே முக்கியக் காரணம். உள்நாட்டு பருப்பு வகைகள் உற்பத்தி 2021-22-ஆம் ஆண்டில் 27.30 மில்லியன் டன்களிலிருந்தும், 2022-23ஆம் ஆண்டில் 26.06 மில்லியன் டன்னிலிருந்தும் 2023-24ஆம் ஆண்டில் 23.44 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது என்று வேளாண் அமைச்சகத்தின் (Agriculture Ministry) மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அதிக பணவீக்கம் கொண்ட இரண்டு பருப்பு வகைகள் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க சரிவுகளை சந்தித்துள்ளன:
1) சன்னா 2021-22-ல் 13.54 மெட்ரிக் டன்னிலிருந்து 2022-23-ல் 12.27 மெட்ரிக் டன் மற்றும் 2023-24-ல் 12.16 மெட்ரிக் டன்
2) அர்ஹார் / துர் (arhar/tur), 4.22 மெட்ரிக் டன் முதல் 3.31 மெட்ரிக் டன் மற்றும் 3.34 மெட்ரிக் டன்.
வர்த்தக வட்டாரங்கள் இந்த ஆண்டு சன்னா உற்பத்தி 10 மெட்ரிக் டன்னுக்கும் குறைவாகவும், அர்ஹார் / துவரை (arhar/tur) உற்பத்தி 3 மெட்ரிக் டன்களுக்கும் குறைவாகவும் இருக்கும் என்று மதிப்பிடுகிறது.
மோசமான பயிர்கள், குறிப்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒழுங்கற்ற அல்லது பற்றாக்குறையான மழை காரணமாக விவசாயிகள் குறைந்த பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். அவர்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை (minimum support prices (MSP)) விட சானா மற்றும் அர்ஹர்/துர் வர்த்தகத்திற்கு வழிவகுத்துள்ளனர். உதாரணமாக, சானா தற்போது மகாராஷ்டிரா லத்தூரில், குவிண்டால் ஒன்றுக்கு சராசரியாக ரூ.6,500 ஆகவும், கர்நாடகா கலபுர்கியில், அர்ஹர்/தூர் ரூ.12,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஜனவரி-பிப்ரவரி மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அறுவடை காலத்தில் கூட, சனா மொத்தமாக ரூ. 5,700-5,800 ஆகவும். அர்ஹர்/துர் ஒரு குவிண்டாலுக்கு ரூ.9,500-10,300 ஆகவும் விற்கப்பட்டது.
விளைவு: இறக்குமதி அதிகரிப்பு
2023-24 (மார்ச்-ஏப்ரல்) நிதியாண்டில் இந்தியா $3.75 பில்லியன் மதிப்புள்ள பருப்பு வகைகளை இறக்குமதி செய்தது. இது 2015-16 மற்றும் 2016-17ஆம் ஆண்டுகளில் $3.90 பில்லியன் மற்றும் $4.24 பில்லியன் என்ற சாதனைக்குப் பிறகு அதிகபட்சமாக இருந்தது.
அளவைப் பொறுத்தவரை, முக்கிய பருப்பு வகைகள் இறக்குமதி 2023-24-ஆம் ஆண்டில் மொத்தம் 4.54 மில்லியன் டன் ஆக இருந்தது. இது முந்தைய இரண்டு நிதியாண்டுகளில் 2.37 மில்லியன் டன் மற்றும் 2.52 மில்லியன் டன்னிலிருந்து அதிகரித்துள்ளது. இருப்பினும் 2015-16, 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் முறையே 5.58 மில்லியன் டன், 6.36 மில்லியன் டன் மற்றும் 5.41 மில்லியன் டன்களை விட குறைவு.
இறக்குமதியின் அதிகரிப்பு நாடு அடைந்த ஒப்பீட்டு தன்னிறைவின் தலைகீழ் மாற்றத்தைக் காட்டுகிறது, உள்நாட்டுப் பருப்பு வகைகள் உற்பத்தி 2015-16 மற்றும் 2021-22-க்கு இடையில் 16.32 மில்லியன் டன்னிலிருந்து 27.30 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. M.S.P அடிப்படையிலான கொள்முதல் மற்றும் வரிகளை விதிப்பது உள்ளிட்ட, பருப்பு வகைகளை வளர்க்க விவசாயிகளை ஊக்குவிக்கும் அரசாங்கக் கொள்கைகளால் இது எளிதாக்கப்பட்டது. இது 2022-23-க்குள் இறக்குமதி, குறிப்பாக மஞ்சள், வெள்ளை பட்டாணி (மாதர்) மற்றும் சனா ஆகியவற்றை கிட்டத்தட்ட நிறுத்த வழிவகுத்தது. குறுகியகால சன்னா மற்றும் பாசிப்பயறு வகைகளின் வளர்ச்சியுடன் உள்நாட்டு உற்பத்திக்கு மேலும் ஆதரவு கிடைத்தது. முந்தைய பயிர்களிலிருந்து எஞ்சிய மண் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி, குறைந்தபட்ச நீர்ப்பாசனத்துடன் சாகுபடி செய்ய அனுமதிக்கிறது. 50-75 நாள் பாசிப்பயறு வகைகள் ஆண்டுக்கு நான்கு பயிர்கள் வரை நடவு செய்ய உதவுகின்றன. அதாவது, காரீப்- பருவமழைக்கு பிந்தைய காலம் (kharif- post-monsoon), ராபி -குளிர்காலம், வசந்த காலம் மற்றும் கோடை காலத்தில் (rabi -winter, spring and summer) பயிரிடப்படுகிறது.
பணவீக்கம், எல் நினோ மற்றும் தேர்தல்கள்
உணவு விலை மீண்டும் உயர்ந்து வருவதால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு பெரும்பாலான பருப்பு வகைகள் இறக்குமதி மீதான கட்டணங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கியது.
மே 15, 2021 அன்று, அர்ஹார் / துவரம் பருப்பு இறக்குமதிக்கான வரம்புகளும், உளுந்து மற்றும் பாசிப்பயறு இறக்குமதிக்கான வரம்புகளும் 10% சுங்க வரியுடன் நீக்கப்பட்டன. ஜூலை 26, 2021 அன்று, மசூர் இறக்குமதி மீதான வரி 10% முதல் பூஜ்ஜியமாக சென்றது.
முன்னதாக, மஞ்சள், வெள்ளை பட்டாணி இறக்குமதிக்கு ஆண்டு வரம்பு 0.1 மில்லியன் டன், 50% வரி மற்றும் குறைந்தபட்ச விலை கிலோவுக்கு ரூ.200 ஆக இருந்தது. இந்த கட்டுப்பாடுகள் டிசம்பர் 8, 2023 அன்று நீக்கப்பட்டன. இந்த ஆண்டு மே 3 அன்று, நாட்டு சனா இறக்குமதி மீதான 60% வரி நீக்கப்பட்டது. இருப்பினும், பாசிப்பயறு இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் பிப்ரவரி 11, 2022 அன்று மீண்டும் அமல்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கைகள், எல் நினோ மற்றும் பருப்பு விலையைக் கட்டுப்படுத்த தேர்தல் அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் வகையில், கீழே உள்ள அட்டவணையில் பிரதிபலிக்கிறது. மசூர் இறக்குமதி, முக்கியமாக ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் இருந்து, 2023-24ல் 1.7 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டியது. கனடா, ரஷ்யா மற்றும் துருக்கியில் இருந்து மஞ்சள், வெள்ளை பட்டாணி இறக்குமதி பூஜ்ஜியத்தில் இருந்து 1.2 மில்லியன் டன்னாக உயர்ந்தது. இந்த மாத தொடக்கத்தில் வரி நீக்கம் நடந்தாலும், பெரும்பாலும் தான்சானியா, சூடான் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து சானா இறக்குமதியும் அதிகரித்தது.
முக்கியமாக மொசாம்பிக், தான்சானியா, மலாவி மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து அர்ஹர்/துர் இறக்குமதி செய்யப்படுகிறது. மியான்மரில் இருந்து உளுத்தம் பருப்பு இறக்குமதியானது குறைந்துள்ளது.
எதிர்காலத்தில்
வரவிருக்கும் மாதங்களில், பருப்பு விலை உயர்வு பெரும்பாலும் தென்மேற்கு பருவமழையைப் பொறுத்து இருக்கும். பருவமழை காலத்தின் பிற்பகுதியில் (ஜூன்-செப்டம்பர்) எல் நினோ அடுத்த மாதம் "நடுநிலை" (“neutral”) நிலைக்கு மாறக்கூடும் என்றும், பொதுவாக துணைக்கண்டத்தில் நல்ல மழைப்பொழிவைக் கொண்டு வரும் லா நினாவிற்கும் (La Niña) மாறலாம் என்று காலநிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், நிச்சயமற்ற உள்நாட்டு விநியோக நிலைமை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது அரசாங்க முகவர் குறைந்த பட்ச சனாவை கொள்முதல் செய்தல் மற்றும் கணிக்க முடியாத பருவமழை முறைகள் காரணமாக, அதிக இறக்குமதியைத் தவிர்க்க முடியாததாக ஆக்குகின்றன.
இதைத் தீர்க்க, அரசாங்கம் ஏற்கனவே மார்ச் 31, 2025 வரை arhar/tur, urad, masoor, and desi chana ஆகியவற்றின் வரியில்லா இறக்குமதியை அனுமதித்துள்ளது. இந்த அனுமதியை மஞ்சள், வெள்ளை பட்டாணி இறக்குமதிகளுக்கு தற்போதைய காலக்கெடுவான அக்டோபர் 31, 2024-ஐத் தாண்டி நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.
மஞ்சள், வெள்ளை பட்டாணி கிலோ ரூ. 40 முதல் 41 விலையில் இறக்குமதி செய்யப்படுகிறது மற்றும் சானாவுக்கு மாற்றாக மலிவானது. இதேபோல், பல இடங்களில் சாம்பார் செய்வதற்கு பயன்படும் அர்ஹர்/தூருக்கு பதிலாக மசூர் பருப்பு இப்போது பயன்படுத்தப்படுகிறது. இந்த பருப்பு வகைகளின் இறக்குமதி, முக்கியமாக கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவிலிருந்து, கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் மியான்மரில் இருந்து அர்ஹர்/துர் மற்றும் உராட் உள்ளிட்டவற்றை விட அதிகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.