மதம் மட்டுமே காரணி : கல்கத்தா உயர்நீதிமன்றம் முஸ்லிம்களுக்கான ஓபிசி இடஒதுக்கீட்டை ரத்து செய்தது ஏன்? - அஜய் சிஹ்னா கற்பகம்

 பிரதமர் தலைமையிலான பாஜக, இந்துக்களிடமிருந்து சலுகைகளைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க எதிர்க்கட்சிகள் விரும்புவதாக குற்றம் சாட்டுகிறது.


மார்ச் 2010 மற்றும் மே 2012-க்கு இடையில் மேற்கு வங்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான உத்தரவுகள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அங்கு 77 சமூகங்களுக்கு (75 முஸ்லிம்) மதத்தின் அடிப்படையில் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (Other Backward Classes (OBC)) இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.


தேர்தல் பிரசாரத்தின் போது, ​​முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது, இது பெரும் பிரச்னையாக மாறியது. எதிர்க்கட்சிகள் இந்துக்களிடமிருந்து பலன்களைப் பெற்று முஸ்லிம்களுக்கு வழங்குவதாக பிரதமர் தலைமையிலான பா.ஜ.க. குற்றம் சாட்டுகிறது. 


2010-ல், மேற்குவங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம் 42 பயனாளி வகுப்பினரைக் கண்டறிந்தது, அதில் 41 பேர் முஸ்லிம்கள். 2011-ல் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு, 34 முஸ்லிம்கள் உட்பட மீதமுள்ள 35 பயனாளிகளுக்கு 2012-ல் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.


வழக்கின் உண்மைகள்:


மே 22 அன்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், மார்ச் 5 முதல் செப்டம்பர் 24, 2010 வரை மேற்கு வங்க அரசு அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த அறிவிப்புகள் 42 குழுக்களை, பெரும்பாலும் முஸ்லீம்களை, OBC-களாக வகைப்படுத்தி, அவர்களுக்கு அரசியலமைப்பின் 16(4) பிரிவின் (Article 16(4)) கீழ் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு அளித்தது. அந்த ஆண்டின் செப்டம்பர் 24 அன்று, மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட 108 OBC-களை அரசாங்கம் இரண்டு பிரிவுகளாகப் பிரித்தது: 56 "OBC-A (மேலும் பிற்படுத்தப்பட்டோர்)" மற்றும் 52 "OBC-B (பிற்படுத்தப்பட்டோர்)".  உயர் நீதிமன்றத்தில் முதல் வழக்கு 2011-ல் தாக்கல் செய்யப்பட்டது. 42 வகுப்புகளை OBC-களாக வகைப்படுத்துவது மதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும் அறிவியல் தரவு இல்லை என்றும் அது கூறியது.


மே 2012-ல், மம்தா பானர்ஜி அரசாங்கம் மேலும் 35 வகுப்புகளை OBC-களாக வகைப்படுத்தியது. இதில் 34 பேர் முஸ்லிம்கள். இதையும் எதிர்த்து எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


மார்ச் 2013 இல், மேற்கு வங்கத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் தவிர) காலியிடங்கள் மற்றும் பதவிகள் இட ஒதுக்கீடு சட்டம், 2012, அறிவிக்கப்பட்டது. இது சட்டத்தின் அட்டவணை I-ல் (Schedule I) புதிதாக அடையாளம் காணப்பட்ட 77 OBC-களையும் (42+35) உள்ளடக்கியது. இந்தச் சட்டத்தை எதிர்த்து இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


மதம் மட்டுமல்ல:


கொல்கத்தா உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தின் இந்திரா சஹானி எதிர். இந்திய ஒன்றியம் (மண்டல் தீர்ப்பு)  (Indra Sawhney v Union of India (Mandal judgment)) வழக்கை மேற்கோள் காட்டி, OBC-களுக்கு இடஒதுக்கீடு  மதத்தின் அடிப்படையில் மட்டுமே ஒதுக்க முடியாது என்று கூறியது. 


1992-ல், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மதத்தின் அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று தீர்ப்பளித்தது. எந்தெந்தக் குழுக்கள் OBC பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்பதைக் கண்டறிந்து பரிந்துரைக்க ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (Backward Classes Commission) இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.


இந்த வழக்கில், குடிமக்களின் விண்ணப்பங்களின் அடிப்படையில் 77 வகுப்புகளை ஆணையம் கண்டறிந்து, அவற்றைச் சேர்க்க அரசுக்கு பரிந்துரைத்ததாக ஆணையமும், அரசும் தெரிவித்தன.


2010 பிப்ரவரியில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை முதல்வர் அறிவித்த பிறகு கமிஷனின் பரிந்துரை மிக விரைவாக வந்ததாக உயர்நீதிமன்றம் கவனித்தது. இந்த வகுப்பினரின் பின்தங்கிய நிலையை தீர்மானிக்க தெளிவான அளவுகோல்கள் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


இந்த சமூகங்களை OBC-களாக அறிவிக்க மதம் மட்டுமே காரணம் என்று தோன்றியது. ஆணையம் சமர்ப்பித்த அறிக்கைகள் மதம் சார்ந்த பரிந்துரைகளை மறைப்பதாகத் தோன்றியது.


இந்த சமூகங்கள் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும், அடையாளம் காணப்பட்ட 77 வகுப்பினர் ஒரு வாக்களிக்கும் குழுவாக பார்க்கப்படுவதாகவும் நீதிமன்றம் சந்தேகிக்கின்றது.


இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் துணை வகைப்பாடு:


மேற்குவங்க அரசின் 2012 சட்டத்தின் சில பகுதிகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்தப் பகுதிகளில் (i) OBC இடஒதுக்கீட்டிற்குள் OBC-A மற்றும் OBC-B என "மிகவும் பிற்படுத்தப்பட்ட" (“more backward”) மற்றும் "பிற்படுத்தப்பட்ட" (“backward”) குழுக்களுக்கு துணைப்பிரிவுகளை உருவாக்க அரசாங்கத்தை அனுமதிப்பது மற்றும் (ii) மாநிலத்தை OBC-களின் பட்டியலில் சேர்க்க அனுமதிப்பது ஆகியவை அடங்கும். 


OBC-இடஒதுக்கீட்டிற்குள் துணைப்பிரிவுகளை உருவாக்கும்முன் அரசாங்கம் தனது கருத்தைக் கேட்கவில்லை என்பதை ஆணையம் ஒப்புக்கொண்டது.  துணைப்பிரிவுகள் உட்பட நியாயமான மற்றும் பாரபட்சமற்ற வகைப்பாட்டை அரசாங்கம் ஆணையத்திடம் கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


துணைப்பிரிவுகள் (Sub-classification) பல்வேறு சமூகங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு கஷ்டங்களை சமாளிக்க உதவுகின்றன. இதனைச் சரியாகச் செய்வதற்குத் தேவையான தகவல்கள் ஆணையத்திடம் மட்டுமே இருப்பதாக நீதிமன்றம் கூறியது.




Original article:

Share: