குறைந்த வாக்குப்பதிவு நிலையை ஆராய்தல் -அடானோ விஸ்வாஸ்

 விரிவான வாக்காளர் வாக்குப்பதிவு தரவுகளின் ஆய்வு பல பரிமாணங்களாக இருக்க வேண்டும். 


இந்தியாவில் நடந்து வரும் 2024 மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. இது ஒரு குறிப்பிடத்தக்க போக்கைக் காட்டுகிறது.  இதன் மூலம் யார் பயனடைவார்கள்?


1957 முதல் 2019-வரை நடந்த மக்களவை தேர்தல்களில் ஆறு முறை வாக்குப்பதிவு  சதவீதம்  குறைந்துள்ளது. வாக்குப்பதிவு அதிகரித்த போது, ​​ஆட்சியில் இருந்தவர்கள் பத்தில் ஆறில் முறை வெற்றி பெற்று, நான்கு முறை தோல்வியடைந்துள்ளனர். வாக்குப்பதிவு குறைந்தபோது, ​​ஆறு தேர்தல்களில் நான்கு முறை வெற்றி பெற்று, இரண்டு முறை தோல்வியடைந்தனர். வாக்கு எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் ஆட்சியில் இருப்பவர்களுக்கு  சாதகமாகவோ அல்லது எதிராகவோ இருக்காது என்று இந்தத் தரவு சுட்டிக் காட்டுகிறது. இருப்பினும், விரிவான வாக்காளர் வாக்குப்பதிவுத் தரவை பகுப்பாய்வு செய்வதற்குப் பல பரிமாண அணுகுமுறை தேவைப்படுகிறது.


பாரம்பரியமாக, இந்திய தேர்தல்களில் அதிக வாக்குப்பதிவு ஆட்சியில்  இருப்பவர்களுக்கு எதிராக முடிவு அமையக்கூடும் என்று நம்பப்படுகிறது. ஆனாலும், 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் தேர்தலில் அலை வீசியது இந்த முறை, முன்பு போல் அலை இல்லையென்றால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பாதகம் ஏற்படுமா?


அமெரிக்கா மீதான நம்பிக்கை


பல நாடுகளில், பாரம்பரிய அரசியல் அறிவு அனைவருக்கும் உள்ளது. உதாரணமாக, அமெரிக்காவில், அதிக வாக்குப்பதிவு ஜனநாயகக் கட்சியினருக்கு உதவும் என்று பலர் நம்புகிறார்கள். 2016 தேர்தல்களில், வாக்காளர் வாக்குப்பதிவு சற்று அதிகமாக இருந்திருந்தால், டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்திருக்கலாம். ஏனெனில் அதிக ஜனநாயகக் கட்சி வாக்குகளளால் பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய பகுதிகளில் முடிவு மாறியிருக்கக்கூடும் என்று சிலர் வாதிட்டனர்.


இருப்பினும், "The Turnout Myth: Voting Rates and Partisan Outcomes in American National Elections" (2020) என்ற புத்தகத்தின் ஆசிரியர்களான டாரன் ஆர். ஷா மற்றும் ஜான் ஆர். பெட்ரோசிக் ஆகியோரின் கூற்றுப்படி, ஹிலாரி கிளிண்டனின் ஆதரவு வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெரிய அளவில் மாறவில்லை என்பதைக் கண்டறிந்தனர். 2018-ல், மிலன் வைஷ்ணவ் மற்றும் ஜொனாதன் கே 1980 முதல் 2012 வரையிலான 18 முக்கிய இந்திய மாநிலங்களில் தேர்தல் தரவுகளை ஆய்வு செய்தனர். மேலும் வாக்காளர் பங்கேற்பு பதவியில் இருப்பவருக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இல்லை என்பதைக் கண்டறிந்தனர். மாறாக, அது ஒவ்வொரு தேர்தலின் குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவுகள் இருக்கும். 


கட்சியின் வெற்றி வாய்ப்புகள் குறித்த கருத்து


2024-ஆம் ஆண்டில், வாக்குப்பதிவு குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. மிகவும் வெப்பமான வானிலை, கோவிட் -19 தொற்றுநோயின் விளைவுகள், விலைவாசி உயர்வு, வேலை இழப்புகள் மற்றும் வாக்காளர்களின் அக்கறையின்மை ஆகியவை இதில் அடங்கும். சில நேரங்களில், ஒரு கட்சி எளிதில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை மக்கள் வாக்களிப்பதை ஊக்கப்படுத்தக்கூடும்.


உதாரணமாக, 1996 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில், பில் கிளிண்டன் கருத்துக்கணிப்புகளில் பாப் டோலை விட மிகவும் முன்னணியில் இருந்தார். இதன் விளைவாக 72-ஆண்டுகளில் மிகக் குறைந்த வாக்குப்பதிவாக 49% மட்டுமே நிகழ்ந்தது. தேர்தலுக்கு சற்று முன், ஹாரிஸ் கருத்துக்கணிப்பு நிறுவனத்திடம் ‘பில் கிளிண்டன் அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது உறுதி என்று கருத்துக் கணிப்புகள் காட்டினால், 9% வாக்காளர்கள், வாக்களிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று அவர்கள் கருதினால், "வாக்களிக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளனர்.


 இதனால் அரசியல் கட்சிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படுத்தும்? ஹாரிஸின் கருத்துக்கணிப்பின்படி, கிளிண்டன் ஆதரவாளர்களில் 10% மற்றும் டோல் ஆதரவாளர்களில் 9% பேர் வாக்களிக்கத் தயங்கினர். இருப்பினும், டோல் ஆதரவாளர்களில் 14% மற்றும் கிளிண்டன் ஆதரவாளர்களில் 54% மட்டுமே கிளின்டன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நம்பினர். எனவே, அதிகமான கிளிண்டன் ஆதரவாளர்கள் வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்கலாம். பொதுவாக, யாருடைய ஆதரவாளர்கள் முன்கூட்டிய முடிவை மிகவும் உறுதியாக நம்புகிறார்களோ அந்தக் கட்சிதான் அதிக பாதிப்படைகிறது. 


ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு சமூகப் பொருளாதார பின்னணியில் இருந்து அதன் சொந்த ஆதரவாளர்கள் வேறுபடுகின்றனர். அமெரிக்காவில், அரசியல் விஞ்ஞானிகளான மைக்கேல் டி. மார்டினெஸ் (Michael D. Martinez) மற்றும் ஜெஃப் கில் (Jeff Gill) ஆகியோர் வாக்குப்பதிவு எண்ணிக்கை தேர்தல் முடிவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்தனர். அவர்கள் 1960 முதல் 2000 வரையிலான ஐந்து தேர்தல்களை அவர்கள் ஆய்வு செய்தனர். அதிக வாக்குப்பதிவு பொதுவாக ஜனநாயகக் கட்சியினருக்கும், குறைந்த வாக்குப்பதிவு குடியரசுக் கட்சியினருக்கும் உதவி இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். இந்தப் போக்கு நிலையானது மற்றும் 1960 முதல் தொடர்ந்து, அமெரிக்கத் தேர்தல்களில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது.


மற்றொரு ஆய்வு, ஸ்பென்சர் கோய்டல், தியாகோ மொரேரா மற்றும் ப்ரென்னா ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் 2010 முதல் 2020 வரையிலான அமெரிக்க தேர்தல்களை அமெரிக்க அரசியல் ஆராய்ச்சியில் (American Politics Research) 2023-ல் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையை  ஆய்வு செய்தனர். அவர்கள் மார்டினெஸ் (Martinez) மற்றும் கில்லின் அணுகுமுறையை (Gill’s methodology) உருவாக்கினர். எடுத்துக்காட்டாக, வாக்குப்பதிவை 5% அதிகரிக்க, வாக்குப்பதிவு 5% அதிகரிக்கும் வரை வாக்களிக்காத வாக்காளர்களைச் சேர்த்தனர். புதிய வாக்காளர்களின் கணிக்கப்பட்ட கட்சி விருப்பங்களின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு ஒவ்வொரு கட்சியையும் எவ்வாறு பாதித்தது என்பதை அவர்கள் கணக்கிட்டனர். 2010-ல், 15% வாக்குப்பதிவு அதிகரிப்பு ஜனநாயகக் கட்சியின் வாக்குகளை 1.5% உயர்த்தியிருக்கும். ஆனால் 2020-ல் 0.4% மட்டுமே உயர்ந்தது. 


இந்தியாவில்


இந்தியச் சூழலில் இதுபோன்ற ஆராய்ச்சியைக் காண முடியவில்லை. ஆனால், பழக்கமான வாக்காளர்களின் வாக்களிப்பு முறைகள், கணிக்க கடினமாக இருக்கும் பழக்கமில்லாத வாக்காளர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. மேலும், இந்தியாவில் பழக்கமில்லாத வாக்காளர்களின் சில சதவீதப் புள்ளிகளின் தாக்கம், இருகட்சி அமைப்பைக் கொண்ட அமெரிக்காவைவிட  கணிக்க மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. கூடுதலாக, சூழல்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்படும் வரை, வாக்குச்சாவடிகளில் வழக்கத்திற்கு மாறான வாக்காளர்கள் திடீரென தோன்றுவது அரசியல் விமர்சகர்கள் முடிவு குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளனர் என்பதை எடுத்து காட்டுகிறது. வழக்கத்திற்கு மாறான வாக்காளர்கள் பங்கேற்கவில்லை என்றால், எல்லாவற்றையும் புரிந்துகொள்வது எளிது. மேலும் நிலைமை கணிக்கக்கூடியதாக இருக்கிறது.


அதானு பிஸ்வாஸ், புள்ளியியல் பேராசிரியர், இந்திய புள்ளியியல் நிறுவனம், கொல்கத்தா.




Original article:

Share: