வாக்காளர் பட்டியல் மற்றும் வெளிப்படைத்தன்மை பற்றிய நியாயமான கவலைகளை ECI சரிசெய்ய வேண்டும்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பது குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளார். இந்த கவலைகள் மகாராஷ்டிராவில் 2024 சட்டமன்றத் தேர்தலின் போது நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை.
இதில், சில குறிப்பிட்ட பிரச்சினைகள் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். ஒன்று, பொதுத் தேர்தலுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையில் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு. மற்றொன்று, வாக்குப்பதிவு நாளில் மாலை 5 மணிக்குப் பிறகு பதிவான வழக்கத்திற்கு மாறாக அதிக வாக்காளர்களுடைய வாக்குப்பதிவு ஆகும். மூன்றாவது பிரச்சினை, ஒன்றிய அரசு 1961 தேர்தல் நடத்தை விதிகளை மாற்றியது. இந்த மாற்றம் வாக்குப்பதிவு செயல்முறையின் சிசிடிவி காட்சிகளை அணுகுவதை கட்டுப்படுத்த 1961 தேர்தல் நடத்தை விதிகளை ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வந்தது போன்ற குறிப்பிட்ட பிரச்சினைகள் உள்ளன.
தேர்தல் ஆணையர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். 2023 உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றாததற்காக ஒன்றிய அரசை அவர் விமர்சித்தார். தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இந்திய தலைமை நீதிபதியையும் சேர்க்க அந்தத் தீர்ப்பு பரிந்துரைத்திருந்தது.
கடந்த காலங்களில், பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன. இருப்பினும், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்புகள் இருந்ததால், இந்தக் கவலைகளில் பல நெருக்கமான பரிசோதனையின் போது நிலைத்திருக்கவில்லை.
இப்போது, காங்கிரஸ் ஒட்டுமொத்த தேர்தல் செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அது ஆழமான மற்றும் அடிப்படையான பிரச்சினைகளை எழுப்புகிறது. இந்தப் பிரச்சினைகள் தனித்தனியாக விவாதிக்கப்பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைப் பற்றிய தி இந்துவின் முதற்கட்ட பகுப்பாய்வு, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களில் தீவிரமான அதிகரிப்புக்கு முன்னுதாரணங்கள் இருப்பதைக் காட்டுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆறு மாதங்களில் 39 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இருப்பினும், 2014-ஆம் ஆண்டிலும் இதே போன்ற அதிகரிப்புகள் காணப்பட்டன. ஏறக்குறைய நான்கு மில்லியன் வாக்காளர்களின் அதிகரிப்பு ஒரு பெரிய எண்ணிக்கையாகும் மற்றும் ECI ஆனது சரிபார்ப்பதற்காக வாக்காளர் பட்டியலின் இயந்திரம் படிக்கக்கூடிய தரவை முன்கூட்டியே வெளியிட வேண்டும். மாலை 5 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவின் அதிகரிப்பு அசாதாரணமானது என்ற குற்றச்சாட்டு குறித்து, இந்த வாதத்தில் வலுவானதாகவோ அல்லது நம்பத்தகுந்ததாகவோ இல்லை. இது தற்காலிக வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும், மாலை 5 மணிக்குப் பிறகு வாக்களிப்பதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) தரவு காட்டுகிறது. மகாராஷ்டிராவில் இந்திய தேர்தல் ஆணையத்தால் (Election Commission of India (ECI)) செயலி மூலம் பகிரப்படும் தற்காலிக வாக்குப்பதிவு புள்ளிவிவரங்கள் முற்றிலும் துல்லியமாக இல்லை. ஏனெனில், இவை தேர்தல்களின்போது வாக்கு எண்ணிக்கைகளை கைமுறையாக உள்ளிடுவதைச் சார்ந்தது (entered manually during elections) மற்றும் துல்லியமான இயந்திர எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது முரண்பாடுகள் இருக்கலாம். ஒவ்வொரு வாக்கு சாவடியிலிருந்தும் படிவம் 17-C தரவு மூலம் இறுதிப் புள்ளி விவரங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் வெளியிடப்படும் என்பதால், தற்காலிக வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களை நம்புவது தவறாகும். எவ்வாறாயினும், ECI-ன் பதிலுக்கு தகுதியான மற்றொரு கருத்து உள்ளது. CCTV காட்சிப் பதிவுகளைத் தக்கவைத்தல் மற்றும் புகார்களை ஆராய கட்சிகள் மற்றும் அவர்களின் வேட்பாளர்களுக்கு அணுகலை வழங்குதல். வாக்காளர் பட்டியல்களை புதுப்பிக்கும் செயல்முறை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் மற்றும் ஆய்வு மற்றும் சரிபார்ப்புக்கு அரசியல் கட்சிகளை ஈடுபடுத்த வேண்டும். புகார்களை எழுப்ப அவர்கள் முடிவுகள் வரும்வரை காத்திருக்கக்கூடாது. இறுதியில், தேர்தல் செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாக மாற்றுவது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். இதில் வாக்காளர் பட்டியலை தெளிவாகப் பகிர்வது மற்றும் சிசிடிவி காட்சிகளை மதிப்பாய்வுக்குக் கிடைக்கச் செய்வது ஆகியவை அடங்கும்.