இந்தியாவின் வேளாண்துறையை எல்லோருக்கும் திறந்துவிடுவது, அத்துறைக்கு கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் -மன்பிரீத் சிங் பாதல்

 இந்தியா தனது விவசாய அமைப்புகளை அகற்றி, சர்வதேச சந்தை சக்திகளுக்கு திறக்க வேண்டும் என்ற அழுத்தம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தங்களது சொந்த விவசாயத்தை நிதியுதவி செய்து கொண்டிருக்கவில்லை என்றால் மட்டுமே நியாயமானதாக இருக்கும்.


வேளாண் துறையானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது என்று சொல்வதும், சிறு விவசாயிகளின் குடும்பங்கள் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கின்றன என்று கூறுவதும் போதாது. இந்த புள்ளிவிவரங்கள் கதையின் முழு அளவையும் குறிப்பிடவில்லை. குறிப்பாக இந்தியாவிற்கு வெளியே, இந்தியாவின் விவசாய மற்றும் கிராமப்புறங்களை அறியாதவர்களுக்கு, இந்தத் தரவு ஒரு பெரிய நிகழ்வை மறைக்கிறது.


ஒரு விவசாயியாகவும் முன்னாள் நிதியமைச்சராகவும் நான் இதைச் குறிப்பிடுவதாவது, திறந்தவெளி விவசாயத்தின் விளைவுகள் பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்டவை. இதில், சமூக நிலைத்தன்மையானது ஆபத்தில் உள்ளது. மற்றும் இது நாம் தயாராக இல்லாத ஒரு கலாச்சார எழுச்சியை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, 250 மில்லியன் மக்கள் நேரடியாக விவசாயத்தை சார்ந்துள்ளனர். மேலும், 700 மில்லியன் இந்தியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயம் மற்றும் கிராமப்புறத் துறையுடன் தொடர்புடையவர்கள் ஆவர். வேளாண் துறையைப் பாதுகாப்பது என்பது வெறும் கொள்கை மட்டுமல்ல. இது மில்லியன் கணக்கான மக்களின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும். இது பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சார நிலைத்தன்மையை பராமரிப்பதற்கு மிகவும் முக்கியமானது.


வேளாண் மானியம் (subsidy) மற்றும் வரிவிதிப்புகள் (tariffs) பற்றிய வாதம் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price (MSP)) மையமாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பகுதியிலும், விதிமுறைகளும் அணுகுமுறையும் வேறுபடுகின்றன. ஆனால், பிரச்சினை அப்படியே உள்ளது. இந்தியாவில் MSP இருந்தால், அமெரிக்காவில் ERP, PLC, ARC மற்றும் DMC உள்ளன. இவற்றைப் பற்றி மேலும் விளக்குகிறேன்.


ERP என்பது MSPக்கு இணையான பயனுள்ள ஒரு குறிப்பு விலையாகும் (Reference Price). அமெரிக்காவில், சந்தை விலைகள் இந்த நிலைக்குக் கீழே விழுந்தால், விவசாயிகள் அரசாங்கத்திடமிருந்து நேரடி பணம் பெறுகிறார்கள். மேலும், இது விலை இழப்பு பாதுகாப்பு (Price Loss Coverage (PLC)) என்று அழைக்கப்படுகிறது. PLC மற்றும் வேளாண் இடர் பாதுகாப்பு (Agriculture Risk Coverage (ARC)) இரண்டும் கோதுமை மற்றும் சோளம் முதல் சோயாபீன் மற்றும் பருத்தி வரை 22 முக்கியப் பயிர்களை உள்ளடக்கியது. இந்த அமைப்புகள் விவசாயத்திற்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. ஏனெனில், அவை பால்வள வருவாய் பாதுகாப்பு (Dairy Margin Coverage (DMC)) திட்டத்தின் கீழ் பால் துறைக்கும் நீட்டிக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான வேளாண் கொள்கை (Common Agricultural Policy (CAP)), விலைகள் தலையீட்டு அளவைவிடக் குறையும்போது, அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலைகளைப் போலவே செயல்படும்போது, பணம் வழங்கப்படுகின்றன.


இந்தியாவில், அரசாங்கம் MSP-யில் பயிர்களை கொள்முதல் செய்தாலும், அமெரிக்காவில் அரசாங்கம் பயிர்களை கொள்முதல் செய்வதில்லை, மாறாக விலைகள் குறைந்தபட்சத்தைவிடக் குறைவாக இருந்தால் விவசாயிகளுக்கு நேரடியாகப் பணம் செலுத்துகிறது. இந்தியாவில் கல்வியறிவு நிலைகள் மற்றும் பல்வேறு EU மற்றும் US கொள்கைகளில் சேர தேவையான ஆவணங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய விவசாயிகளை இந்த அமைப்புகளுக்கு மாறச் சொல்வது அதிகாரத்துவத்தின் மற்றொரு அடுக்கைச் சேர்க்கும். இந்தியாவில் US மற்றும் EU மாதிரிகளை செயல்படுத்த பல ஆண்டுகள் அல்லது பல காலங்கள் ஆகும்.


அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் சொந்த வேளாண் துறைகளுக்கு மானியம் வழங்காவிட்டால், அதன் வேளாண் வழிமுறைகளை அகற்றி, சர்வதேச சந்தை சக்திகளுக்குத் திறக்க இந்தியா மீதான அழுத்தம் நியாயமானதாக இருக்கும். அமெரிக்கா சுமார் 20 பில்லியன் டாலர்களையும் EU சுமார் 50 பில்லியன் டாலர்களையும் விவசாய மானியங்களுக்கு செலவிடுகிறது. உண்மையில், இந்த மானியங்களில் பல மறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்தியாவின் MSP அமைப்பு மிகவும் வெளிப்படையானது.


அமெரிக்க மானியங்களின் கவனம் பெரிய வேளாண் சார்ந்ததாக உள்ளது. அதே நேரத்தில், இந்திய வேளாண் கொள்கை சிறு விவசாயிகளை மையமாகக் கொண்டுள்ளது. அமெரிக்க கொள்கை முன்னுரிமைகளில் சந்தை நிலைப்படுத்தல், வருமான பாதுகாப்பு மற்றும் காலநிலை தழுவல் ஆகியவை அடங்கும். அதே நேரத்தில், இந்தியா சிறு விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களை ஆதரிப்பதில் கவனம் செலுத்துகிறது. கிராமப்புற பொருளாதாரத்தின் நிலையான மேம்பாட்டை உறுதி செய்வதும் ஆகும். ஐரோப்பிய ஒன்றிய மானியங்கள் வருமான ஆதரவு, சுற்றுச்சூழல் இலக்குகள், காலநிலை மற்றும் பல்லுயிர் இலக்குகளை நோக்கமாகக் கொண்டுள்ளன.


அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதியில், 80 சதவீத மானியங்கள் பெரிய பண்ணைகளுக்குச் செல்கின்றன. அதே நேரத்தில் இதற்கு நேர்மாறாக இந்தியாவில், 80 சதவீத மானியங்கள் சிறு மற்றும் நடுத்தர வேளாண்களுக்குச் செல்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம், அதன் சமீபத்திய பட்ஜெட் திட்டங்களில், சிறு விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம், அமெரிக்க மாதிரியிலிருந்து விலகி, இந்திய மாதிரிக்கு நெருக்கமான ஒன்றைப் பின்பற்றி செயல்படுத்துகிறது. உண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான விவசாயக் கொள்கையில் (CAP) சமீபத்திய ஏற்பாடு 2021-2027-ஆம் ஆண்டிற்கான 387 பில்லியன் யூரோக்கள் ($451 பில்லியன்) ஆகும். மேலும் சமீபத்தில் கடந்த மாதம், பெரிய விவசாயிகளிடமிருந்து சிறிய விவசாயிகளுக்கு ஆதரவை மாற்றும் முயற்சியில், ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு 1,00,000 யூரோக்கள் என்ற வரம்பை அவர்கள் முன்மொழிந்தனர். அதாவது ஒரு விவசாயிக்கு ஒரு கோடி மானியம் என்ற உச்சவரம்பைக் குறிக்கிறது.


இந்தியாவைப் பொறுத்தவரை, உண்மையான பிரச்சினை நியாயமான மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒப்பந்தங்களை வைத்திருப்பதுதான். இந்திய MSP தெளிவானது, வெளிப்படையானது மற்றும் இந்திய சூழலை மையமாகக் கொண்டது போலவே, CAP, ERP, PLC, ARC மற்றும் DMC ஆகியவற்றின் அமைப்புகள் அமெரிக்க மற்றும் EU சூழல்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்ணோட்டம் பொருளாதாரத்திலிருந்து மட்டுமல்ல, சமூகம், அரசியல் மற்றும் கலாச்சாரத்திலிருந்தும் வருகிறது. அமெரிக்கா மற்றும் EU மானியங்கள் சந்தையை தங்களுக்கு சாதகமாக சிதைக்கும்போது, முழு வேளாண் துறையையும் அனைவருக்கும் இலவசமாகத் திறப்பது ஒரு வகையான சமச்சீரற்ற போரை உருவாக்கும். இது இந்திய சமூகத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக ஏற்படும் எழுச்சி மிகப்பெரியதாக இருக்கும்.


இந்த நிலைப்பாடு மிக உயர்ந்த மட்டங்களில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், "எங்களுக்கு, எங்கள் விவசாயிகளின் நலன் முதன்மையானது. இந்தியா அதன் விவசாயிகள், பால் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்யாது. இந்த நிலைப்பாட்டிற்கு தான் தனிப்பட்ட முறையில் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருப்பதாகவும், ஆனால் அதற்குத் தயாராக இருப்பதாகவும்" குறிப்பிட்டிருந்தார்.


எழுத்தாளர் பஞ்சாபின் முன்னாள் நிதியமைச்சர் ஆவார்.



Original article:

Share: