திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை (marital rape) குறித்த ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரம் -ஷ்ரத்தா சவுத்ரி

 “திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்த விதிவிலக்கு” (marital rape exception) அடிப்படை உரிமைக்கு எதிரானதா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு.

 

திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்த விதிவிலக்கு (Marital Rape Exception (MRE)) பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNA)) 2023-ன் பிரிவு 63, விதிவிலக்கு 2-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.  இது இந்திய தண்டனைச் சட்டம், 1860-ன் பிரிவு 375, விதிவிலக்கு 2-இல் இருந்தது. ஒரு ஆண் தனது மனைவியுடன் பாலியல் ரீதியான உறவு கொண்டால் அல்லது பாலியல் செயல்களில் ஈடுபட்டால், மனைவி 18 வயதுக்கு குறைவானவராக இல்லாவிட்டால், அது பாலியல் ரீதியான உறவாக கருதப்படாது என்று இந்த சட்டம் கூறுகிறது. இந்த விதியை எதிர்த்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்த விதிவிலக்கிற்கு ஆதரவாக ஒன்றிய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. 


எதிர்பார்ப்பு விவகாரம்  (The issue of ‘expectation’)


திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்த விதிவிலக்கிற்கு  ஆதரவாக ஒன்றிய அரசு முன்வைத்த வாதங்களில் பெரும்பாலானவை திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை  குறித்த விவாதத்தைப் பற்றி அறிந்தவர்களுக்கு ஏற்கனவே தெரிந்தவை. திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களை திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை விதிவிலக்கு சட்டங்கள்  வித்தியாசமாக நடத்துவது இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவை மீறவில்லை என்று ஒன்றிய அரசு வாதிடுகிறது. 


பிரிவு 14 சமத்துவத்திற்கான உரிமையை (right to equality) உறுதிப்படுத்துகிறது. திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் ஒரே நிலையில் இல்லை என்று ஒன்றிய அரசு கூறுகிறது. திருமணம் நியாயமான பாலியல் அணுகலுக்கான வாய்ப்பை உருவாக்குகிறது. இந்த எதிர்பார்ப்பு அந்நியர்களுடனான உறவுகளிலோ அல்லது பிற நெருக்கமான உறவுகளிலோ இல்லை. திருமணத்திற்குள் மற்றும் திருமணத்திற்கு வெளியே பாலியல் வன்முறை வித்தியாசமாக அணுக சட்டமன்றத்திற்கு இந்த வேறுபாடு போதுமானது என்று பிரமாணப் பத்திரம் கூறுகிறது.  இந்த சட்ட வாதம் தெளிவாக இல்லை மற்றும்  பிரச்சனைகளை எழுப்புகிறது. "நியாயமான பாலியல் அணுகுமுறை" (reasonable sexual access) என்றால் என்ன என்பதை யார் தீர்மானிப்பது? என்ன அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன? இது தனிப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டதா (தனிநபர் தீர்மானிக்கிறார்) அல்லது அனைவரும் பின்பற்ற வேண்டிய தரநிலையா? இதில் பல்வேறு வகையான பாலியல் செயல்கள் உள்ளதா அல்லது அவை எவ்வளவு அடிக்கடி நிகழ்கின்றன, அல்லது இரண்டும் உள்ளதா?

 


திருமணம் நியாயமான பாலியல் அணுகலுக்கான தொடர்ச்சியான எதிர்பார்ப்பை உருவாக்குகிறது என்ற கூற்று ஆரம்பத்தில் இருந்தே உள்ளது. மிக முக்கியமாக, இது திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை விதிவிலக்கிற்கான (marital rape exception’) வலுவான சட்ட வாதம் என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. பாரம்பரிய பாலின விதிமுறைகளின்படி, திருமணம் என்பது கணவன் தனது மனைவியை நிதி ரீதியாக கவனித்துக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இருப்பினும், ஒரு மனைவி தன் கணவனின் கார்களை எடுத்து  அனுமதியின்றி விற்றால் அந்த பெண் திருடவில்லை என்று கூற முடியாது. திருமணம் ஏன் இந்த எதிர்பார்ப்புக்கு மட்டும் இட்டுச் செல்கிறது என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் உறவு முறைகள் (live-in relationships) போன்ற பிற நெருங்கிய உறவுகள் அவ்வாறு செய்யவில்லை.


பொதுவாக, எதிர்பார்ப்பு (expectation) என்பது என்ன நடக்கும் என்பது பற்றிய தனிப்பட்ட ஒருவரின் நம்பிக்கை. இது சம்பந்தப்பட்ட நபர்களைப் பொறுத்து எந்த வகையான உறவிலும் இருக்கலாம். அடிப்படைக் கருத்து என்னவென்றால், திருமணத்தில் பாலியல் அணுகலை எதிர்பார்ப்பது சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கலாம். அதே சமயம் திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் உறவில் இது போன்ற எதிர்பார்ப்பு இல்லை. இது உண்மையாக இருந்தாலும், பாலின சுதந்திரம் (sexual autonomy) மற்றும் கண்ணியம் உள்ளிட்ட தனிமனித உரிமைகள் அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் இடத்தில் இது ஏன் சட்டப்பூர்வமாக முக்கியமானது என்பதை இன்னும் விளக்க வேண்டும். 


“நிறுவனம்” மற்றும் “துஷ்பிரயோகம்”


  ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரத்தில் சில வழக்கமான வாதங்களும் உள்ளன. ஒன்று, திருமணத்தை ஒரு குற்றமாக அங்கீகரிப்பது திருமணத்தின் புனிதத்திற்கு தீங்கு விளைவிக்கும். மற்றொரு வாதம் என்னவென்றால், இது திருமண பாலியல் வன்முறை பற்றிய தவறான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், நான் முன்பு வாதிட்டது போல, திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை  அங்கீகரிப்பது திருமணம் என்ற பந்தத்தின் வலிமையை பாதிக்கிறது என்பதைக் காட்டும் எந்த ஆதாரமும் இல்லை. ஒரு கணவன் தன் மனைவியை பாலியல் ரீதியான அனுகலை  அனுமதிப்பதையே திருமணம் சார்ந்திருக்கிறது என்றால், அது அதன் மதிப்பை மறுபரிசீலனை செய்வதற்கும் மாற்றங்களைச் செய்வதற்கும் ஒரு காரணமாக இருக்கலாம். 


திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை  சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவது பற்றிய வாதம் தவறானது. மேலும், விசாரணையின் முக்கிய நோக்கம் ஒரு குற்றம் உண்மையில் நடந்ததா என்பதைக் வலுவான ஆதாரங்களுடன் கண்டறிவதாகும். கூடுதலாக, புள்ளிவிவரங்கள்  திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை சார்ந்த குற்றங்கள் தொடர்பாக புகாரளிக்கப்படுவதில்லை என்பதைக் காட்டுகின்றன. மேலும் திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை  குற்றச்சாட்டை உண்மை என்று நிரூபிப்பதில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.


அதிகார வரம்பு  (jurisdiction) குறித்த வாதங்கள் 


திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை  ஒரு சமூகப் பிரச்சினை சட்டப்பூர்வமானது அல்ல. எனவே, அதை நீதிமன்றத்தால் கையாளக் கூடாது என்று ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரம் கூறுகிறது. இருப்பினும், சட்டம் வாழ்க்கை மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கும் என்பதால், சமூக மற்றும் சட்ட சிக்கல்களுக்கு இடையே தெளிவான பிரிவினை எவ்வாறு இருக்க முடியும் என்பது தெளிவாக இல்லை. குறிப்பாக சட்டம் மனித வாழ்க்கை மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒழுங்குபடுத்துகிறது. 


மேலும், ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரம் பிரிவு 14 (சமத்துவத்திற்கான உரிமை) மற்றும் 21 (வாழ்வதற்கான உரிமை) பற்றி விவாதிக்கிறது. இந்த பிரிவுகளில் ஒரு சட்ட சிக்கல் இருப்பதைக் காட்டுகிறது. எது கிரிமினல் குற்றமாக இருக்க வேண்டும் அல்லது இருக்கக்கூடாது என்பதை தீர்மானிப்பது சட்டத்தின் வேலை, நீதித்துறை அல்ல என்று ஒரு வாதம் எழுகிறது. இந்த கூற்றுக்கு சில தகுதிகள் உள்ளன. ஆனால், இங்கே முழுமையாக இது பொருந்தாது. இந்த வழக்கில், நீதிமன்றம் திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமையை ஒரு குற்றமாக அறிவிக்க தேவையில்லை. பிரச்சினை சில நேரங்களில் அந்த வழியில் எழுந்தாலும் கூட. அதற்கு பதிலாக, நீதிமன்றத்தின் பங்கு தற்போதுள்ள சட்டத்தின் அரசியலமைப்புத்தன்மையை பாதுகாப்பதாகும். 


திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை விதிவிலக்கு ஒரு "சட்டம்" என்பதால், இது அடிப்படை உரிமைகளைக் கையாளும் இந்திய அரசியலமைப்பின் பகுதி III-ன் (Part III)  கீழ் உள்ளது. திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை  ஒரு குற்றமாக இருக்க வேண்டுமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கக்கூடாது. ஆனால் திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை விதிவிலக்கு  (marital rape exception’) ஏதேனும் அடிப்படை உரிமைகளை மீறுகிறதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியும். அவ்வாறு செய்தால், நீதிமன்றம் அதை ரத்து செய்யலாம். எனவே, ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரம் திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமை  விதிவிலக்கிற்கு ஆதரவாக பல பழக்கமான வாதங்களை மறுபரிசீலனை செய்கிறது. ஆனால், இந்த வாதங்களின் சட்ட தகுதி கேள்விக்குரியது. 


ஷ்ரத்தா சவுத்ரி, உதவிப் பேராசிரியர், சட்டப் பள்ளி, பி.எம்.எல் முஞ்சால் பல்கலைக்கழகம்.




Original article:

Share: