சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் அதன் மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்க ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.
2023-24 நிதியாண்டு, வலுவான வருவாய் மற்றும் சிறப்பான செயல்திறனுடன் முடிந்தது. மார்ச் நடுப்பகுதியில், நிகர நேரடி வரி (net direct tax) வசூல் 19.9% அதிகரித்து. திருத்தப்பட்ட பட்ஜெட் இலக்குகளில் 97% ஐ எட்டியது. கூடுதலாக, சரக்கு மற்றும் சேவை வரி வலுவான ₹20.18 லட்சம் கோடியைக் கொண்டு வந்தது. மார்ச் மாதத்தில், மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வருவாய், 1.78 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. இது ஆறரை ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்சமாகும். ஏப்ரல் 2023 இல் அதிக வசூல் இருந்தது, இது ஆண்டு இறுதி நிதி நடவடிக்கைகளால் அதிகரிக்கப்பட்டது. இந்த மாத வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டி புதிய சாதனை படைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான சராசரி மாதாந்திர வசூல் 11.6% அதிகரித்து ₹1.68 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டின் 21.8% ஐ விட குறைவாக இருந்தாலும், இது எதிர்கால வருவாய் எதிர்பார்ப்புகளுக்கு ஒரு புதிய அடித்தளத்தை அமைக்கிறது. இந்த செயல்திறன் சரக்கு மற்றும் சேவை வரி அதன் வருவாய் கணிப்புகளை பூர்த்தி செய்யாது என்ற அரசாங்கத்தின் கவலைகளை நிவர்த்தி செய்கிறது. 2023-24 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய சரக்கு மற்றும் சேவை வரி வசூல் இடைக்கால பட்ஜெட்டிலிருந்து திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட அதிகமாக உள்ளது. எனவே, நிதி அமைச்சகம் வரவிருக்கும் முழு பட்ஜெட்டில் அதன் 2024-25 இலக்குகளை சரிசெய்ய வேண்டியிருக்கும். வளர்ச்சி விகிதம் 10%க்கும் குறைவாக இருந்தாலும் இந்த இலக்குகளை அடைய முடியும்.
வரி வசூல் அதிகரிப்பு கடந்த கால வரி கோரிக்கைகளை வசூலிப்பதற்கான முயற்சிகள், போலி விலைப்பட்டியல் மற்றும் மோசடி உள்ளீட்டு வரி வரவுகள் போன்ற ஏய்ப்பு தந்திரங்களை முறியடிப்பதன் விளைவாக இருக்கலாம். சமீபத்தில், நிகர சரக்கு மற்றும் சேவை வரி வருவாயின் வளர்ச்சி மற்றும் மார்ச் மாதத்தில் உள்நாட்டு பரிவர்த்தனைகளிலிருந்து மொத்த வசூலில் 17.6% அதிகரிப்பு ஆகியவை 2023-24 கடைசி காலாண்டில் ஒரு நிலையான பொருளாதார நடவடிக்கையைக் கருதுகின்றனர். எவ்வாறாயினும், மார்ச் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் சேகரிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியில் 5% குறைந்துள்ளது. இது பிப்ரவரியில் 8.5% அதிகரிப்பிலிருந்து ஒரு மாற்றமாகும். இந்த சீர்திருத்தங்கள் சரக்கு மற்றும் சேவை வரியின் பல விகித கட்டமைப்புகளை எளிமைப்படுத்துவதற்கான திட்டங்களை புதுப்பிப்பது, மின்சாரம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் போன்ற தற்போது விலக்கப்பட்ட பொருட்களுக்கு வரியை விரிவுபடுத்துவது சிமெண்ட் மற்றும் காப்பீடு போன்ற அத்தியாவசிய பொருட்களின் வரிகளைக் குறைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகையாக கடந்த ஆண்டு ₹1.44 லட்சம் கோடி வசூலிக்கபட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் மாநிலங்களுக்குச் செலுத்தப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்த இது பயன்படுத்தப்படுகிறது. நீட்டிக்கப்பட்ட மார்ச் 2026 காலக்கெடுவை விட முன்னதாகவே திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. புகையிலை போன்ற மோசமான பொருட்களைத் தவிர, மீதமுள்ள பொருட்களுக்கு புதிய வரியை விதிக்காமல் இருப்பது முக்கியம். கலப்பு வாகனங்களுக்கு (hybrid vehicles) 40%க்கு மேல் வரி (cess tax) விதிப்பதில் அர்த்தமற்றது. இது இந்தியாவின் சுற்றுச்சூழல் இலக்குகள் மற்றும் நுகர்வு அதிகரிக்க மற்றும் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு உத்வேகத்தை அளிக்கும்.