சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையானது (MSP) நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும் -அஜய் வீர் ஜாக்கர்

 நிலமற்ற தொழிலாளர்கள், குறு மற்றும் சிறு விவசாயிகள், விற்பனை செய்வதற்கு விளைபொருட்கள் இல்லாத அல்லது மிகக் குறைந்த உபரி கொண்டவர்களாகவே உள்ளனர். எனவே அவர்களுக்கு C2 + 50 சதவீத குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றாலும், அது அவர்களுக்கு கௌரவமான வாழ்க்கையை நடத்த போதுமான வருமானத்தை வழங்காது என்பதே நிதர்சனம்.


இந்த மாத தொடக்கத்தில், சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை (legally-guaranteed minimum support price (MSP)) கோரி விவசாயிகள் மீண்டும் போராடினர். முக்கியமாக பஞ்சாபில் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான உட்கட்சி கருத்து வேறுபாடுகள் காரணமாக போராட்டம் வேகத்தை இழந்தது. இருப்பினும், குறைந்தபட்ச ஆதரவு விலையின் நடைமுறைத்தன்மை அல்லது தேவை குறித்த விவாதங்கள் தொடர்கின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலை ஆதரவாளர்களிடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முயற்சிப்பது தீர்க்கப்படாத பல சிக்கல்களை மறைத்துள்ளது. இதனால், பின்னர் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.


குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது பல்வேறு பயிர்களுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையாகும். அவற்றில் சிலவற்றை உணவுப் பாதுகாப்பை ஆதரிப்பதற்கும், விலைகளை உறுதிப்படுத்துவதற்கும் வாங்குகிறது. இது விவசாயிகளுக்கு நிதி ரீதியாக உதவுகிறது. எனவே, இந்த விலையில் பயிர்களை வாங்குவதையும், குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிப்பதையும் அரசுகள் நிறுத்த வாய்ப்பில்லை. சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது இந்த மதிப்பைப் பெற விவசாயிகளுக்கு உரிமை உண்டு.


பல விஷயங்களில் சட்டபூர்வமான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஆதரிப்பவர்களிடையே உடன்பாடு இல்லை. இப்போது அதிகமான விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் பயனடைந்தாலும், அவர்கள் இன்னும் சிறுபான்மையினராக உள்ளனர். தானியங்கள் பயிரிடும் சில விவசாயிகள் 23 பயிர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சட்ட விதிகளால் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், இந்த பயிர்கள் நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியில் 28% மட்டுமே ஆகும். இதேபோல், மற்ற விவசாயிகள் அனைத்து பயிர்களையும் இதனுடன் சேர்க்க விரும்புகிறார்கள். ஆனால், கல்வியாளர்களும் இதை ஏற்கவில்லை. விவசாயிகளின் கோரிக்கையை ஆதரிக்கும் சிலர், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அழிந்துபோகக்கூடிய பொருட்களுக்கு விதிகளை நீட்டிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.


சட்டப்பூர்வமாக குறைந்தபட்ச ஆதரவு விலை (legally-guaranteed minimum support price (MSP)) நடைமுறைக்கு வந்தவுடன், அரசாங்கம் எல்லாவற்றையும் நேரடியாக வாங்க வேண்டும் என்று விவசாயிகள் நினைக்கிறார்கள். ஆனால், கொள்முதல் அல்லது விலை வேறுபாட்டை அரசாங்கம் செலுத்துவது போன்ற பல்வேறு முறைகள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய முடியும் என்பதை பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்கிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்க வர்த்தகர்களை இந்த சட்டம் கட்டாயப்படுத்தினால் அல்லது வழக்கை எதிர்கொண்டால், அது விலையின் மீதான  வேறுபாட்டை அகற்றும் என்று  நம்புகிறார்கள். 


சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை (legally-guaranteed minimum support price (MSP)) அமல்படுத்துவது ஒரு பகுதி சார்ந்த பயிர் திட்டங்களைப் பின்பற்றும். விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள நிலைமைகளுக்கு ஏற்ற பயிர்களை வளர்க்க ஊக்குவிக்கப்படுவார்கள். நெல் பயிரிடும் விவசாயிகள் குறைந்த லாபம் கிடைப்பதால் மற்ற பயிர்களுக்கு மாற மாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டால், வெவ்வேறு பயிர்களுக்கான ஆதரவு நாடு முழுவதும் அதிகரிக்கும். எனவே, ஒரு விவசாய குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்திக்கு தலையீடுகளை மட்டுப்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும். 


இந்த மாற்றம் பஞ்சாபில் கோதுமை மற்றும் நெல் கொள்முதலை மூன்றில் ஒரு பங்கு குறைக்கக்கூடும். இது, மேலும் மோதலுக்கு வழிவகுக்கும். சட்டபூர்வமான  குறைந்தபட்ச ஆதரவு விலை கணக்கீடும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். தற்போது, குறைந்தபட்ச ஆதரவு விலை நாடு தழுவிய செலவுகளின் சராசரியால் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,275 ஆகும். பஞ்சாபில் உற்பத்தி செலவு ரூ.1,503 ஆகவும், சத்தீஸ்கரில் ரூ.1,939 ஆகவும் உள்ளது. பஞ்சாபில் விவசாயிகள் தங்கள் செலவில் 51.36% விவசாயத்தின் மூலம் பெறுகிறார்கள். சத்தீஸ்கரில் இது 17.33% ஆக உள்ளது. பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்கள் விவசாயிகளுக்கு அதிக பயனளிக்கும் வகையில் மாநில குறிப்பிட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை வலியுறுத்தலாம்.


சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (legally-guaranteed minimum support price (MSP)) மத்திய அரசு பணம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கும் என்றும், நிதி ஆயோக் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் செலவினங்களைப் பிரிக்க வேண்டும் என்றும், 41 சதவிகிதம் மாநிலங்களிலிருந்தும், 59 சதவிகிதம் மத்திய அரசிடமிருந்தும் வரும் என்று சில நன்கு அறிந்த நபர்கள் வாதிடுகின்றனர். இந்த நடைமுறை புதிதல்ல. தற்போது, பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜ்னா (Pradhan Mantri Krishi Sinchai Yojana), பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜ்னா (Paramparagat Krishi Vikas Yojana), விவசாயத் தொழில் முனைவோர் திட்டம் (Rashtriya Krishi Vikas Yojana (RKVY)), விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறை மறுமலர்ச்சிக்கான ஊதிய அணுகுமுறைகள் (Remunerative Approaches for Agriculture and Allied sector Rejuvenation (RAFTAAR)) போன்ற அனைத்து ஒன்றிய நிதியுதவித் திட்டங்களும் 60:40 விகிதத்தைப் பின்பற்றுகின்றன. மாநிலங்கள் 40 சதவிகிதம் பங்களிக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டமானால், மாநிலங்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். அவர்கள் உடன்படவில்லை என்றால், நிதி ஆணையத்தின் ஒன்றிய தொகுப்பில் அவர்களின் பங்கு நான்கு சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படலாம்.


பஞ்சாபில் உள்ள விவசாயிகள், முரண்பாடாக, பொருளாதார ரீதியாக தாங்கள் பயனடையும் இந்த அமைப்புக்கு எதிராக போராடுகிறார்கள். அவர்கள் நாட்டிற்கு ஒரு உத்தரவாதத்தைப் பெற்றால், அவர்கள் உண்மையில் இழக்க நேரிடும். பஞ்சாப் முதலமைச்சர் முன்மொழிந்து ஒன்றிய அரசால் ஒப்புக் கொள்ளப்பட்ட மாற்றுப் பயிர்களுக்கான ஒப்பந்த விவசாய (contract farming deal for alternative crops) ஒப்பந்தத்தை விட அவர்கள் தகுதியானவர்கள்.  


இறுதியாக, இப்பிரச்சினையின் ஒவ்வொரு விவாதத்திலும் இல்லாத மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் மக்கள் தொகையில் 42% பேர் நேரடியாக விவசாயத்தை நம்பியுள்ளனர். நிலமற்ற தொழிலாளர்கள், குறு மற்றும் சிறு விவசாயிகள் உட்பட இந்த மக்கள்தொகையில் 90 சதவீதத்தினர் விற்பதற்கு மிகக் குறைவாகவே உள்ளனர் அல்லது உபரி இல்லை. அவர்கள் C2 + 50% குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றாலும், அது கௌரவமான வாழ்க்கைக்கு போதுமான வருமானத்தை வழங்காது. எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மாற்று வழிகளை விவசாய சங்கங்கள் ஏன் பரிசீலிக்கவில்லை? விவசாயிகளுக்கு ஆதரவு தேவைப்பட்டாலும், சரியான தீர்வுகள் இல்லை. அதிக தலைமுறைகள் பாதிக்கப்படுவதற்கு முன்பு,  குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் மட்டுமல்லாமல், பிற பயனுள்ள செயல்கள் மூலமாகவும் சரியான ஆதரவைக் கண்டுபிடிப்பது முக்கியம்.   

 

கட்டுரையாளர் பாரத் கிரிஷக் சமாஜ் அமைப்பின் தலைவர்.




Original article:

Share: