மாநில அரசுகள் தலையிடத் தயங்குகின்றன. இப்பகுதி சிக்கலானது மற்றும் மருத்துவ மற்றும் சட்ட நிபுணர்களின் கவனம் தேவை.
இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் கேரள மாநிலம் திருச்சூரில் 30 பேர் வாழ்க்கைக்கான விருப்புறுதி ஆவணங்களை (living wills) எழுதி வைத்தனர். 2018 இல் வாழ்க்கைக்கான விருப்புறுதி ஆவணங்கள் (living wills) சட்டப்பூர்வமாக்கப்பட்டன. இந்திய உச்ச நீதிமன்றம் இறுதி நிலையில் உள்ள நோயுற்ற நோயாளிகளுக்கு ஒரு செயல்முறையை உருவாக்கியது. அது, குணமடைவார்கள் என்ற நம்பிக்கை இல்லாத நோயாளிகள், சிகிச்சையை நிறுத்திவிட்டு கண்ணியத்துடன் இறப்பதைத் தேர்வு செய்வதற்குமான செயல்முறையாகும். சில நேரங்களில் நோயாளிகள் சுயநினைவின்றி இருந்தால் அல்லது டிமென்ஷியா (dementia) இருப்பதால் அவர்களால் சுயமாகப் பேச முடியாதபோதும், நோயாளிகள் எதிர்கால மருத்துவப் பராமரிப்பு குறித்து முடிவு செய்ய வாழ்க்கைக்கான உயில் / விருப்புறுதி ஆவணம் (living wills) அனுமதிக்கிறது. ஆனால், இதற்கான தீர்ப்பு வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆகியும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்னும் நீதிமன்றத்தின் நடைமுறைப்படுத்தவில்லை. மாநில அரசுகளின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் அதிகாரிகள் இதை செயல்படுத்த மாட்டார்கள்.
நீதிமன்றத்தின் நடைமுறை
நீதிமன்றம் செயல்முறையை உருவாக்கியபோது, அது நடைமுறைப்படுத்த முடியாத சிக்கலானதாக தோன்றியது. "நோயாளியின் சொத்தை வாரிசாக அல்லது வேறுவிதமாக அபகரிக்க விரும்பும் நேர்மையற்ற நபர்கள்" இந்த செயல்முறையை துஷ்பிரயோகம் செய்யலாம் என்று நீதிமன்றம் கவலைப்பட்டதால், அதில் சில விரிவான அதிகாரத்துவ நடைமுறைகளை பாதுகாக்க சில விதிமுறைகளை உருவாக்கியது. இதில், ஒரு குறிப்பிட்ட தேவைக்காக வாழ்க்கைக்கான உயில்களில் (living wills) நீதித்துறை மாஜிஸ்திரேட்டால் கையொப்பமிடப்பட வேண்டும். இது, நேர்மையற்ற நபருக்கு மிகவும் சுமையாக இருந்தது. தீர்ப்புக்குப் பிறகு முதல் ஐந்து ஆண்டுகளில் சில உயில்கள் (living wills) நிறைவேற்றப்பட்டன. ஜனவரி 2023 இல், நீதிமன்றம் ஒவ்வொரு உயிலுக்கும் கையொப்பமிடுவதற்கு ஒரு நீதிபதியைக் கோருவது அதன் தீர்ப்பின் நோக்கத்தை 'முழுமையாகத் தோற்கடிக்கவில்லை என்றால்' பாதிக்கப்படும் என்று அங்கீகரித்து, நடைமுறையை நெறிப்படுத்தியது.
இப்போது, ஒரு உயிலை (living wills) உருவாக்க, அதை சரிபார்க்க உங்களுக்கு இரண்டு சாட்சிகள் மற்றும் ஒரு நோட்டரி அல்லது அதிகாரி தேவை. பின்னர், அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்கும் உள்ளூர் அரசாங்க அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். இறுதி நிலையில் உள்ள நோயின் காரணமாக நோயாளி முடிவெடுக்க முடியாவிட்டால், அதிகாரப்பூர்வ அல்லது டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகளுடன் உயில்களை (living wills) அங்கீகரிக்க அனுமதிக்கும். விருப்புறுதி ஆவணங்களை (living wills) உருவாக்குவது தானாகவே அது செயல்படும் என்பதைக் குறிக்காது. சிகிச்சையை நிறுத்தி வைப்பது அல்லது திரும்பப் பெறுவது குறித்த முடிவுகள் முதலில் முதன்மை மருத்துவக் குழுவினால் சான்றளிக்கப்பட்டு, பின்னர் இரண்டாம் நிலை மருத்துவக் குழுவால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கோருகின்றன. இரண்டாம் நிலை குழுவில் தலைமை மருத்துவ அதிகாரியால் பரிந்துரைக்கப்படும் மருத்துவர் இருக்க வேண்டும். நடைமுறையில், நோயாளி இருக்கும் மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி ஒரு டாக்டரை பரிந்துரைக்காத வரை மருத்துவமனைகளில் இரண்டாம் நிலை மருத்துவ வாரியங்கள் இருக்க முடியாது என்பதே இதன் பொருள். விருப்புறுதி ஆவணங்களில்/உயில்களில் (living wills) நோயாளிகள் உட்பட, நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் முக்கியமான மருத்துவப் பாதுகாப்புத் தேர்வுகளைத் தீர்மானிக்க முடியாமல் போகலாம்.
நம்மில் பலரைப் போலவே பல அதிகாரிகளும் மரணம், இறப்பு மற்றும் வாழ்க்கையின் இறுதி பராமரிப்பு பற்றி விவாதிப்பதில் சங்கடமாக உணர்கிறார்கள். இதைப் பற்றிய முழு வழிமுறையும் குழப்பமானது. சில நேரங்களில், இதற்கான விதிகள் தெளிவாக இல்லை. மேலும், இதன் நிலைமையை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு நோயாளிக்கு விருப்புறுதி ஆவணங்கள் (living wills) இல்லையென்றால், சிகிச்சையைத் திரும்பப் பெறுவதற்கு அல்லது நிறுத்துவதற்கு முன்பு முதன்மை மருத்துவ வாரியம் (primary medical board) 'நெருங்கிய உறவினர்களிடமிருந்து' எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கோருகிறது. இருப்பினும், இந்திய சட்டம் 'நெருங்கிய உறவினர்கள்' என்பதை தெளிவாக வரையறுக்கவில்லை. குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்வது என்பதில் உடன்படாதபோது, யாருடைய முடிவு மேலோங்க வேண்டும் என்று சட்டம் கூறவில்லை. தெளிவான சட்ட வழிகாட்டுதல் இல்லாததால் இது வாதங்களுக்கு வழிவகுக்கும். தெளிவான சட்ட வழிகாட்டுதல் இல்லாமல் உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரிகள் தயங்குகிறார்கள். அவர்கள் தங்கள் மேலதிகாரிகளிடமிருந்து நேரடி உத்தரவுகளைப் பெற விரும்புவதுடன், இதைச் செயல்படுவதற்கு முன்பு மாநில அரசு ஒரு விரிவான செயல்முறையை உருவாக்க வேண்டும். மேலும், சொந்தமாக முடிவுகளை எடுக்க விரும்பவில்லை. நாட்டின் அரசியல் அமைப்புக்கு உறுதியான அடித்தளத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
மாநிலங்களுக்கு முன்னோக்கிய பாதை
இந்த சிக்கலான பகுதியில் ஈடுபட மாநில அரசுகள் தயங்குகின்றன. இதற்கு மருத்துவ மற்றும் சட்ட வல்லுநர்களின் கவனம் தேவை. கடந்த ஆண்டு, ஹரியானா சிவில் அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் தீர்ப்பைப் பின்பற்றுமாறு கூறியது. ஆனால், அதை எப்படி செய்வது என்பது குறித்து தேவையான வழிகாட்டுதலை வழங்கவில்லை. இதற்கு மாறாக, ஒடிசா இன்னும் விரிவான அணுகுமுறையை எடுத்து வருகிறது. அங்குள்ள மாநில அரசு ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியுள்ளது. தீர்ப்பை அமல்படுத்த விரிவான வரைவு ஆணைகளை (detailed draft orders) உருவாக்கும் பணியில் இக்குழு ஈடுபட்டுள்ளது. மேலும், பல மாநிலங்கள், இதைப் பின்பற்றும் என்று நம்புகிறோம். தீர்ப்பை திறம்பட செயல்படுத்துவதற்கான நம்பிக்கையையும் வழிகாட்டலையும் மாநில அரசுகளுக்கு வழங்கக்கூடிய மாதிரி உத்தரவுகள் (model orders) மற்றும் நெறிமுறைகளை உருவாக்கி வெளியிடுவதன் மூலம் ஒன்றிய அரசு நிபுணத்துவ இடைவெளியைக் குறைக்க முடியும்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, உச்ச நீதிமன்றம் இந்தியர்களுக்கு கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு என்று கூறியது. ஆனால், இதை நனவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை நமது அரசுகள் எடுக்கவில்லை. இவர்கள் தீர்ப்பை அமல்படுத்தும் வரை, மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளின் விருப்பங்களை மதிப்பதன் விளைவுகளைப் பற்றி கவலைப்படுவார்கள். தீவிர சிகிச்சை மருத்துவர்களின் 2023 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு, வாழ்க்கையின் இறுதி முடிவுகளை எடுப்பது சட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் நம்புவதைக் காட்டியது. இந்த நம்பிக்கை, தீவிர சிகிச்சைப் பிரிவில் பெரும் தடையாக உள்ளது. அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலிருந்தும் தெளிவான வழிகாட்டுதல் மற்றும் தொடர்ச்சியான முயற்சியுடன் மட்டுமே மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளின் சிறந்த நலன்களுக்காக செயல்பட நம்பிக்கையுடன் இருக்க வைக்கிறது.
நிஹால் சாஹு ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் புது தில்லியின் சட்டக் கொள்கைக்கான விதி மையத்தில் (Vidhi Centre for Legal Policy) ஆராய்ச்சியாளர் ஆவார்.