ஊட்டி, கொடைக்கானல் செல்லும் மலைப்பகுதி சாலைகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது வரவேற்கத்தக்கது.
'மலைகளின் ராணி' என்றும் 'மலைகளின் இளவரசி' என்றும் பிரபலமாக அழைக்கப்படும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகியவை தமிழ்நாட்டில் கடுமையான போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்த கட்டுப்பாடற்ற சுற்றுலா மற்றும் மக்கள் நடமாட்டம், இந்த மலைகளுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மெட்ராஸ் உயர் நீதிமன்றமும் தமிழ்நாடு அரசும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலிக்க வழிவகுத்தது.
வனம் தொடர்பான விஷயங்களை கவனிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்சுக்கு பதிலளித்த மாநில அரசு, மலைப்பகுதிகளில் அமைக்கப்படும் சாலைகள் அவற்றின் 'சுமந்து செல்லும் திறனை' (carrying capacity) தீர்மானிப்பதன் மூலம் வாகன போக்குவரத்தை நிர்வகிக்க கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது. ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா தலைமையில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் சமீபத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு நாளும் மலைப்பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படும் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையை அரசு வரம்பு நிர்ணயிக்கும்.
நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பகுதிகளான உதகமண்டலம் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் உள்ள பல்வேறு வழக்குகளை இந்த அமர்வு விசாரித்து வருகிறது. யானை வேட்டையாடுதல், மின்சாரம் மற்றும் ரயில் விபத்துக்களால் ஏற்படும் யானைகள் இறப்பு, காடுகளில் இருந்து ஆக்கிரமிப்பு உயிரினங்களை அகற்றுதல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை போன்ற கவலைகள் இதில் அடங்கும்.
மலைவாழிடங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை விசாரித்த நீதிமன்றம், சோதனைச் சாவடிகளை அமைக்க உத்தரவிட்டது. இந்த சோதனைச் சாவடிகள் அனைத்து நுழைவு வாயில்களிலும் சுற்றுலாப் பயணிகளை சோதனை செய்யவும், தண்ணீர் பாட்டில்கள் உட்பட தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வருவதைத் தடுப்பதற்கும் உள்ளன. இந்த பகுதிகளில் கட்டண நீர் விநியோகிப்பாளர்களை (paid water dispensers) அமைப்பதையும் நீதிமன்றம் ஊக்குவித்தது. இந்த முயற்சிக்கு கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (corporate social responsibility (CSR) ) முயற்சிகள் ஆதரவளிக்க வேண்டும்.
காலி மதுபாட்டில்களால் காடுகளில் உள்ள விலங்குகளுக்கு காயம் ஏற்படுகிறது என்பதை அறிந்த நீதிமன்றம் அதற்க்கு மாற்று வழியைக் கூறியது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation (TASMAC)) ஒரு திட்டத்தை தொடங்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது. இந்த திட்டம் மதுபான கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெருவதாகும் இதன் மூலம் அவற்றின் விலைய குறைக்கலாம்.
காடுகளை மேலும் பாதுகாக்க, வழக்கறிஞர்கள் செவனன் மோகன் மற்றும் ராகுல் பாலாஜி ஆகியோர் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எடுத்துரைத்தனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் ஆதரிக்கப்பட்ட இந்த முடிவு, மணாலி மற்றும் ரோஹ்தாங் பாஸ் இடையே அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியது. ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சாலைகளுக்கும் இதே வரம்பை நிர்ணயிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரைத்தனர். இந்த யோசனை நீதிமன்றமும் ஒப்புக்கொண்டுள்ளது. சுற்றுலா காலங்களில் வாகன போக்குவரத்து பெரிதும் அதிகரிப்பதால், உள்ளூர் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு தீங்கு ஏற்படுகிறதுகி.
வாகன இயக்கம் குறித்த விவரங்களை நீதிமன்றம் கேட்டபோது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் எம்.அருணா, வழக்கமாக இந்த சாலைகளில் தினமும் சுமார் 2,000 வாகனங்கள் செல்வதாக தெரிவித்தார். இருப்பினும், சுற்றுலா காலங்களில் இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 20,000 ஆக உயரக்கூடும் என தெரிவித்தார்.
நீலகிரி கலெக்டர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்புகளின் தோராய மதிப்பீட்டை வழங்கினார். 5,620 அறைகளுடன் 1,035 வணிக கட்டிடங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இவற்றில் ஒரே நேரத்தில் சுமார் 20,000 பேர் தங்க முடியும். இருப்பினும், விரிவான அறிவியல் ஆய்வு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். மலைவாழ் தலங்களுக்குச் செல்லும் சாலைகளில் அதிகபட்சமாக எத்தனை வாகனங்கள் கையாள முடியும் என்பதை இந்த ஆய்வு தீர்மானிக்கும்.
இந்த தகவலை கேட்ட நீதிபதிகள், இந்த வரம்பு குறித்து மாநில அரசு மட்டுமே இறுதி முடிவெடுக்க முடியும் என்பதை உணர்ந்தனர். இந்த விவகாரம் குறித்து தலைமைச் செயலாளருடன் விவாதிக்குமாறு அட்வகேட் ஜெனரலுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து அட்வகேட் ஜெனரல் மீண்டும் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தார். நீதிமன்றத்தின் ஆலோசனையை அரசு கொள்கையளவில் ஏற்றுக்கொள்கிறது என்றார். ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் மலைச் சாலைகளில் அறிவியல் மதிப்பீடு (scientific assessments) நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கு பின், இந்த பணியை துவக்க உள்ளனர் என்று கூறினார்.
இந்த முடிவு ஒரு நேர்மறையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஊட்டி மற்றும் கொடைக்கானல் குளிர் காலநிலையைக் கொண்ட அழகான மலைவாழ் தலங்கள். இருப்பினும், அதிக சுற்றுலா பயணிகள் வருவதால் அங்கு சிக்கல்கள் ஏற்படுகிறது. இது பல ஆண்டுகளாக அங்கு உள்கட்டமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மலைவாழிடங்கள் சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ளன. இந்த நடவடிக்கைகளை அமல்படுத்துவது மிக முக்கியமானது. அவை நிலையான சுற்றுலாவை ஊக்குவித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும்.