ஆப்கானிஸ்தான் மீதான இந்தியாவின் முக்கிய அக்கறைகள் என்ன? - குஷ்பு குமாரி

 1. ஒரு கால் நூற்றாண்டுக்குப் பிறகு, இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கடந்த வாரம் துபாயில் மூத்த இந்திய இராஜதந்திரிகளின் (senior Indian diplomats) குழுவிற்கு தலைமை தாங்கினார். அவர்கள் இரண்டாவது தாலிபான் ஆட்சியின் வெளியுறவுச் செயலாளர் அமீர் கான் முட்டாகியுடன் ஒரு முக்கியமான சந்திப்பை நடத்தினர்.


2. மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அஷ்ரப் கானி அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்னர் காபூலில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்களுடன் இந்தியாவின் "கவனமான ஈடுபாட்டின்" (cautious engagement) முன்னேற்றத்தின் உச்சக்கட்டமாக இந்த சந்திப்பு இருந்தது. 


3. ஆகஸ்ட் 31, 2021 அன்று, கடைசி அமெரிக்க இராணுவ விமானம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, காபூலில் உள்ள புதிய ஆட்சியாளர்களின் வேண்டுகோளின் பேரில், இந்தியா தலிபான்களுடன் தனது முதல் அதிகாரப்பூர்வ தொடர்பை (official contact) மேற்கொண்டது. 


4. இன சிறுபான்மையினருக்கு குறைந்த பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை என்று தாலிபான் அறிவித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா ஒரு "உள்ளடக்கிய அரசாங்கத்திற்கு" அழைப்பு விடுத்தது. இதில், இந்தியாவிற்கு "உடனடி அண்டை நாடு மற்றும் ஆப்கானிய மக்களுக்கு ஒரு நண்பன்" என்ற முறையில் இந்த நிலைமை தனக்கு "நேரடி அக்கறை" (direct concern) என்று இந்தியா கூறியது.


5. டிசம்பர் 2021-ம் ஆண்டில், இந்தியா 1.6 டன் அத்தியாவசிய மருந்துகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. ஆளும் ஆட்சியை ஆப்கானிஸ்தான் மக்களிடமிருந்து பிரிக்க இந்தியா ஒரு அரசியல் முடிவை எடுத்ததை இது காட்டுகிறது. இது தலிபான்களுடன் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் திறந்தது.


6. டிசம்பர் 2022-ம் ஆண்டில், பல்கலைக்கழகங்களில் பெண்கள் மீதான தடை குறித்து இந்தியா கவலை தெரிவித்தது. மேலும், ஆப்கானிஸ்தான் சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சம உரிமைகளை உறுதி செய்யும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்திற்கான அழைப்பை புதுப்பித்தது. 


7. அக்டோபர் 2023-ம் ஆண்டில், இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் பணியை முற்றிலும் நிறுத்தியது. வளங்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையே இதற்குக் காரணம் ஆகும். "ஆப்கானிஸ்தானின் சிறந்த நலன்களுக்கு சேவை செய்ய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய" இது தவறிவிட்டது.


8. முக்கிய தலிபான் தலைவர்களுடனான உரையாடல்களில், தலிபான்கள் "ஈடுபடத் தயாராக உள்ளனர்" என்ற உணர்வை இந்திய அதிகாரிகள் பெற்றுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டின் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப தலிபான்கள் உதவியை எதிர்பார்க்கின்றனர். 

7. ஆப்கானிஸ்தானில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வரும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளைவிட, இந்தியா பின்வாங்க விரும்பவில்லை.


8. தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைமை நிறைய மாறிவிட்டது. ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான ஈரான் பெரிதும் பலவீனமடைந்துள்ளது. ரஷ்யா தற்போது அதன் சொந்தப் போரில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகளுக்காக அமெரிக்கா காத்திருக்கிறது.


9. இந்தியாவானது இதன் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. அதிகாரப்பூர்வ ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டிய நேரம் இது என்று இப்போது முடிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அதன் பல ஆண்டு முதலீட்டைப் பாதுகாக்க வேண்டியது இதன் முக்கியம் ஆகும். இந்தியாவின் முக்கிய கவலையானது பாதுகாப்பு. ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில் இருந்து எந்த இந்திய எதிர்ப்பு பயங்கரவாதக் குழுவும் செயல்பட அனுமதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


1. ஆப்கானிஸ்தானின் புவிசார் அரசியல் முக்கியத்துவமானது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அப்பால் நீண்டுள்ளது. இது ஒரு பல இனக்குழுக்களைக் கொண்ட ஒரு நிலத்தால் சூழப்பட்ட நாடு. அதன் இருப்பிடம் உலக அரசியலில் அதை முக்கியமானதாக ஆக்குகிறது. இது மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவிற்கு அருகில் உள்ளது. இந்த தனித்துவமான இருப்பிடம் உலகளாவிய மற்றும் பிராந்திய சக்திகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


2. 19ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான் ஒரு இடையக மண்டலமாக (buffer zone) இருந்தது. இது ஜாரிச ரஷ்யாவிற்கும், ஏகாதிபத்திய பிரிட்டனுக்கும் இடையில் சிக்கிக் கொண்டது. பனிப்போரின்போது, ​​ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான போட்டியின் மையப் புள்ளியாக மாறியது. 9/11-க்குப் பிறகு, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்", ஆப்கானிஸ்தான் மீண்டும் புவிசார் அரசியலில் முக்கியத்துவத்தைப் பெற்றது. உலகளாவிய சக்திகள் தங்கள் சொந்த தேசிய நலன்களுக்கு சேவை செய்ய ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தின.


3. ஆனால், இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவு பழமையானது. இது சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தையதாகும். இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த உறவின் அடித்தளம் ஜனவரி 4, 1950 அன்று கையெழுத்திடப்பட்ட நட்பு ஒப்பந்தம் (Treaty of Friendship) ஆகும்.


4. இந்தியா ஆப்கானிஸ்தானை நோக்கிய தனது கொள்கையை கவனமாக உருவாக்கியுள்ளது. அதன் தேசிய நலன்களை ஆப்கானிஸ்தான் மக்களின் தேவைகளுடன் சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனநாயக மதிப்புகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இந்தியா வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.


5. 1990-ம் ஆண்டுகளில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (Inter-Services Intelligence(ISI)) ஆதரவு அளித்தது. 1999-ம் ஆண்டுகளில் காந்தஹாரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC814 கடத்தப்பட்ட பிறகு நிலைமை இன்னும் மோசமடைந்தது.


6. இருப்பினும், 2001-ம் ஆண்டில் ஜனநாயகம் ஓரளவு மீட்டெடுக்கப்பட்டபோது இருநாட்டின் உறவு மேம்பட்டது. இதில், ஹமீத் கர்சாய் ஆப்கானிஸ்தானின் அதிபரானார். ஆப்கானிஸ்தானின் மறுகட்டமைப்பில் இந்தியா மீண்டும் ஈடுபட்டது. உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் கவனம் செலுத்தியது.




Original article:

Share: