நகர்ப்புற சவால் நிதி -குஷ்பு குமாரி

 நகரமயமாக்கல் என்றால் என்ன?, நகர்ப்புற சவால் நிதியம் (Urban Challenge Fund) அதனுடன் தொடர்புடைய சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறது? நகரமயமாக்கலுடன் தொடர்புடைய முக்கியமான சொற்கள் யாவை?, நகராட்சி நிதிகள் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிக்கை நகர்ப்புற நிர்வாகத்தின் தற்போதைய நிலையை எவ்வாறு வெளிப்படுத்துகிறது?


தற்போதைய செய்தி


2025-26-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘நகரங்களை வளர்ச்சி மையங்களாக மாற்றுதல்’ (Cities as Growth Hubs), ‘நகரங்களை ஆக்கப்பூர்வமாக மறுவடிவமைப்பு செய்தல்’ (Creative Redevelopment of Cities) மற்றும் ‘நீர் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல்’ (Water and Sanitation) போன்ற திட்டங்களை செயல்படுத்த ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நகர்ப்புற சவால் நிதியை அரசாங்கம் உருவாக்கும் என்று அறிவித்தார்.



முக்கிய அம்சங்கள்:


1. நகர்ப்புற சவால் நிதி (Urban Challenge Fund) மூன்று அம்சங்களை நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, நகரங்களை பொருளாதார வளர்ச்சியின் உற்பத்தித்திறன் மிக்க மற்றும் திறமையான மையங்களாக மாற்றுவது (வளர்ச்சி மையங்களாக நகரங்கள்); இரண்டாவதாக, அவற்றை ஆக்கப்பூர்வமான முறையில் மேம்படுத்துவது மற்றும் மறுவளர்ச்சி செய்வது (நகரங்களின் ஆக்கப்பூர்வ மறுவளர்ச்சி), மூன்றாவதாக, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது (நீர் மற்றும் சுகாதாரம்) போன்றவையாகும்.


2. முதல் வருடத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்ட இந்த நிதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் உள்ள மிக முக்கியமான சவால்களை நிவர்த்தி செய்ய முயற்சி செய்கிறது.


3. அரசாங்கம் திட்டங்களுக்கு 25 சதவீத நிதியை நகர்ப்புற சவால் நிதி வழங்கும். "இந்த நிதி வங்கிக்கு ஏற்ற திட்டங்களின் செலவில் 25 சதவீதம் வரை நிதியுதவி அளிக்கும். குறைந்தபட்சம் 50 சதவீத செலவு பத்திரங்கள், வங்கிக் கடன்கள் மற்றும் பொது தனியார் கூட்டாண்மை (Public Private Partnership (PPP)) மூலம் நிதியளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கப்படுகிறது. 2025-26-ஆம் ஆண்டிற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு முன்மொழியப்பட்டுள்ளது" என்று நிதி அமைச்சர் கூறினார்.


4. இந்த நிதியின் கீழ், அரசாங்கம் ரூ.10,000 கோடி வழங்க திட்டமிடும் அதே வேலையில், நகரங்கள் மீதமுள்ள ரூ.40,000 கோடியை நகராட்சி பத்திரங்களை வெளியிடுவது, பொது தனியார்  கூட்டாண்மைகளில் இணைவது மற்றும் கடன் வாங்குவதன் மூலம் பெற வேண்டும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.


5. ‘நகரங்களின் ஆக்கப்பூர்வமான மறுவடிவமைப்பு’ (creative redevelopment of cities) என்பதன் கீழ், அளவிலான நெரிசல் உள்ள தற்போதைய நகரங்களை புதுப்பிக்க (refurbished) முடியும் . இந்த நிதி, 2023-2024-ஆம் ஆண்டு வரவு செலவு அறிக்கையில் இருந்து ரூ.10,000 கோடி நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை (Urban Infrastructure Development Fund (UIDF)) மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, இந்த நிதி நகரங்கள் சந்தை நிதியை திரட்ட ஊக்குவிக்கும்.

நகரமயமாக்கல் (Urbanisation) என்றால் என்ன?


நகரமயமாக்கல் என்பது ஒரு சமூகம் கிராமப்புறங்களிலிருந்து பெரும்பாலும் நகர்ப்புறங்களுக்கு பரிணமிக்கும்போது ஏற்படும் மாற்றத்தின் செயல்முறையாகும். இது நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் நாட்டின் மக்கள்தொகையின் விகிதத்தின் அதிகரிப்பை உள்ளடக்கியது. இது நகரங்கள் மற்றும் நகரங்களின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. கூடுதலாக, இது நகரங்களின் விரிவாக்கம் மட்டுமல்லாமல், அவற்றின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களையும் உள்ளடக்கியது.


இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு (Indian Census) 'நகர்ப்புற' பகுதிகளின் இரண்டு வகைகளை அடையாளம் காட்டுகிறது:


1. சட்டப்பூர்வ நகரங்கள் (Statutory towns) - இவை நகராட்சி நிறுவனம் அல்லது நகராட்சி குழு போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட  இடங்களாகும்.


2. மக்கள் தொகை கணக்கெடுபின்படி-  அனைத்தும் நகரங்களும் இந்த 3 நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்:


a) குறைந்தபட்சம் 5000 பேர் கொண்ட குடியிருப்பாளர்கள் இருக்க வேண்டும்.


b) ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் குறைந்தபட்சமாக 400 நபர்கள் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும்.


c) ஆண் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் விவசாயம் அல்லாத நடவடிக்கைகளில் பணிபுரிய வேண்டும்.




நகரமயமாக்கலுடன் தொடர்புடைய முக்கிய சொற்கள்

நகர்ப்புற கூட்டமைப்புகள் (Urban agglomerations) என்பது ஒரு நகரம் மட்டுமல்ல, அதை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள் மற்றும் பொருளாதார, சமூக மற்றும் செயல்பாட்டு தொடர்புகளைப் பகிர்ந்து கொள்ளும் அண்டை நகரங்களையும் உள்ளடக்கிய பரந்த பகுதிகளும் அடங்கும்.

பெருநகரங்கள் (Megacities) என்பது மக்கள்தொகை கொண்ட நகரங்கள், பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இடமாகும். போக்குவரத்து நெரிசல், போதுமான வீட்டுவசதி இல்லாதது மற்றும் நெருக்கடியான உள்கட்டமைப்பு போன்ற அவற்றின் அளவு காரணமாக இந்த நகரங்கள் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கின்றன.

Gentrification (ஜென்ட்ரிபிகேஷன்) என்பது அந்த பகுதியில் முதலீடு மற்றும் வசதியான வர்க்கங்களின் வருகையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் இடம்பெயர்ந்த ஒரு இடம் அல்லது அந்தப் பகுதியில் மாற்றத்தைக் குறிக்கிறது.

நகர்ப்புற விரிவாக்கம் (Urban Sprawl) என்பது நகரங்கள் மற்றும் நகரங்களின் திட்டமிடப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற விரிவாக்கத்தைக் குறிக்கிறது. இதன் காரணமாக நகர்ப்புறங்களை சுற்றியுள்ள கிராமப்புற அல்லது வளர்ச்சியடையாத பகுதிகள் ஆக்கிரமிப்பு (encroachment) செய்யப்படுகின்றன.


நகர்ப்புற விரிவாக்கத்தினால் ஏற்படும் சவால்கள்


1. டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் முக்கிய பிரச்சனைகளாக அதிக மக்கள்தொகை, போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை, வீட்டுவசதி பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகும். அனைவருக்கும் போதுமான தண்ணீர், கழிப்பறைகள், போக்குவரத்து அல்லது சுகாதாரப் பராமரிப்பு இல்லை, எனவே சேவைகள் சிறப்பாக செயல்படவில்லை, மேலும் சுற்றுச்சூழல் மோசமடைந்து வருகிறது.


2. கோடிக்கணக்கான மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். சமூக சமத்துவமின்மை (Social inequality) ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் பெரும்பாலும் வளர்ச்சி வாய்ப்புகளிலிருந்து விலக்கப்படுகின்றன.


3. தனியார் முதலீட்டின் பற்றாக்குறை அரசாங்கத்திற்கு  முக்கிய கவலையாக உள்ளது. தற்போது, ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் நகர்ப்புற உள்கட்டமைப்பில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக நிதியளிக்கின்றன. அதே சமயம் நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள் (Urban Local Bodies (ULB)) தங்கள் சொந்த உபரி வருவாய் மூலம் 15 சதவீதம் நிதியளிக்கின்றன. இந்திய நகரங்களின் உள்கட்டமைப்புத் தேவைகளில் 5 சதவீதம் மட்டுமே தற்போது தனியார் மூலங்கள் மூலம் நிதியளிக்கப்படுகிறது.


நகராட்சி நிதிகள் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிக்கை


1. ரிசர்வ்  வங்கியின் சமீபத்திய நகராட்சி நிதி அறிக்கையின் படி (நவம்பர் 2024), மாநகராட்சிகள் மிகவும் பலவீனமான வருவாய் வசூலை உருவாக்குகின்றன. 2024-ஆம் நிதியாண்டின் உள் நாட்டு உற்பத்தி வெறும் 0.6 சதவீதம் வரை சேர்தது. இது மத்திய அரசு (9.2%) மற்றும் மாநில அரசுகள் (14.6%) வசூலிப்பதை விட மிகக் குறைவு. நகராட்சி நிறுவனங்கள் வசூலிக்கும் பணத்தில் பெரும்பகுதி சொத்து வரிகளிலிருந்து வருகிறது.


2. நகராட்சி நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணத்தையே அதிகம் நம்பியுள்ளன என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2022–23 நிதியாண்டில், மத்திய அரசின் மானியங்கள் 24.9% மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள் 20.4% அதிகரித்துள்ளன. இருப்பினும், நகராட்சி நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் மத்திய அரசின் பணம் 2.5% மட்டுமே உள்ளது.


3. 2036ஆம் ஆண்டுக்குள், 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்திய நகரங்களில் வசிப்பார்கள் என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது. இதன் பொருள் நகரங்கள் நிறைய வளரும். இந்த வளர்ச்சியை ஆதரிக்க, அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா சுமார் 840 பில்லியன் டாலர்கள் (ரூ. 70 லட்சம் கோடி)  அல்லது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 55 பில்லியன் டாலர்கள் (ரூ. 4.6 லட்சம் கோடி)  நகர உள்கட்டமைப்பை மேம்படுத்த செலவிட வேண்டும்.


நகராட்சி பத்திரங்கள் (Municipal Bonds)


நகராட்சி பத்திரங்கள் (muni bonds) நகராட்சி நிறுவனங்கள் (MCs) பணம் திரட்டுவதற்கான ஒரு வழியாகும். இவை உள்ளூர் அரசாங்கங்கள் அல்லது MCs முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் கடன்கள் ஆகும். அதற்கு ஈடாக, அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீட்டாளர்களுக்கு வட்டி செலுத்துகிறது. நகராட்சி பத்திரங்கள் (muni bonds) நல்ல திறனைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுவதால், நகர்ப்புற சவால் நிதி உருவாக்கப்பட்டது.


இந்தியாவில் முதல் நகராட்சி பத்திரங்கள் (muni bonds) 1997ஆம் ஆண்டில் பெங்களூரு மாநகராட்சியால் வெளியிடப்பட்டது. இதன் மூலம் ரூ.125 கோடி திரட்டப்பட்டது. SEBI கூற்றுப்படி, 2017ஆம் ஆண்டு முதல் 17 நகராட்சி பத்திரங்கள் (muni bonds) மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அதன் மூலம் மொத்தம் ரூ.2,800 கோடி திரட்டப்பட்டுள்ளன. இந்த பத்திரங்களை முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பானதாக மாற்ற, SEBI 2015ஆம் ஆண்டில் நகராட்சி பத்திரங்களை வெளியிடுவதற்கான விதிகளை அறிமுகப்படுத்தியது.

Original article:
Share: