குழந்தைப் பருவக் கல்வியில் முதலீடுகள் மற்றும் பெற்றோர்களை ஈடுபடுத்துவது இளம் குழந்தைகளுக்கு உதவும்.
"சில குழந்தைகள் பிறக்கும்போதே அதிர்ஷ்டசாலிகள். ஆனால், பலர் அப்படி இல்லை. மேலும், பெரும்பாலான மக்கள் அதை எட்ட முடியாமல் தவிக்கிறார்கள்" என்று நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ஜேம்ஸ் ஹெக்மேன் கூறினார். இது இந்தியாவிற்கும் பொருந்தும். இந்தியாவில் பிறக்கும் குழந்தை ஐந்தில் ஒருவருக்கு வறுமையில் பிறக்கும் வாய்ப்பு உள்ளது. அது அவர்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, கற்றல் மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புகளைப் பாதிக்கிறது. இருப்பினும், இந்த முரண்பாடுகளை வெல்ல ஒரு வழி உள்ளது. உதாரணமாக, உத்தரபிரதேசம் ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்விக்காக 11,000 ஆசிரியர்களை பணியமர்த்துகிறது. மேலும், ஒடிசா சிறு குழந்தைகள் கற்றுக்கொள்ளவும் வளரவும் உதவும் வகையில் ஷிஷு வாடிகாஸ் (Shishu Vatikas) மற்றும் ஜாதுய்பேடி கிட்கள்(Jaduipedi Kits) போன்ற சிறப்புத் திட்டங்களைத் தொடங்குகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் இந்த முயற்சிகள் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு வழியைக் காட்டுகின்றன.
ஹெக்மேன் வளைவு (Heckman curve) ஒரு முக்கியமான பொருளாதார மாதிரியாகும். இது வயதுக்கும் மனித மூலதனத்தில் முதலீடுகளின் மீதான வருமானத்திற்கும் இடையிலான தொடர்பைக் காட்டுகிறது. ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்விக்காக செலவிடப்படும் ஒவ்வொரு டாலரும் $7 முதல் $12 வரை வருமானத்தை ஈட்டுகிறது. இந்த வருமானம் காலப்போக்கில் நீண்ட தாக்கங்களுடன், தரமான ஆரம்பக் கல்வியைப் பெறும் குழந்தைகள் பெரியவர்களை விட நான்கு மடங்கு அதிக வருவாய் ஈட்டவும், வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளவும் மூன்று மடங்கு அதிகமாக வாய்ப்புள்ளது என்று ஹெக்மேன் கண்டறிந்தார். குழந்தைகள் ஐந்து வயதை அடையும் போது, எதிர்கால வருவாய் மற்றும் வாழ்க்கைத் தரம் போன்ற விஷயங்களில் வேறுபாடுகள் ஏற்கனவே காணப்படுகின்றன. குழந்தைகள் ஆரம்பத்தில் வலுவான கற்றல் பழக்கத்தையும் உந்துதலையும் வளர்த்துக் கொள்ளாவிட்டால், அவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையின் பிற்பகுதியில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
கற்றல் முடிவுகள்
ஆனாலும், இந்தியாவின் ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி (Early Childhood Education (ECE)) அமைப்பில் மூன்று பெரிய சிக்கல்கள் உள்ளன.
முதலாவதாக, குழந்தைகளுக்கு போதுமான கற்றல் நேரம் கிடைப்பதில்லை. மூன்று முதல் ஆறு வயது வரையிலான கிட்டத்தட்ட 5.5 கோடி குழந்தைகள் 14 லட்சம் அங்கன்வாடிகளிலும் (Anganwadis) 56,000 அரசு முன் தொடக்கப் பள்ளிகளிலும் (government pre-primary schools) படிக்கின்றனர். ஆனால், அங்கன்வாடி பணியாளர்கள் ஒரு நாளைக்கு திட்டமிடப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பதிலாக 38 நிமிடங்கள் மட்டுமே கற்பிக்கின்றனர். மேலும், முன் தொடக்கப் பள்ளிகளில் 9% மட்டுமே ECE-க்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆசிரியர் உள்ளனர். இது மரங்களை நடவு செய்த பின்பு, அவர்களுக்கு வளரத் தேவையான பராமரிப்பை வழங்காதது போன்றது.
இந்தப் பிரச்சினைகள் குழந்தைகள் எவ்வளவு நன்றாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பாதிக்கின்றன. முன் தொடக்கக் குழந்தைகளில் 15% பேர் மட்டுமே அடிப்படைப் பொருட்களைப் பொருத்த முடியும் என்பதை இந்திய ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வி தாக்க ஆய்வு (Early Childhood Education Impact Study) காட்டுகிறது. முதலாம் வகுப்பில் உள்ள எழுத்துக்களை அடையாளம் காண இந்தத் திறன் முக்கியமானது. இதேபோல், எண்கணிதத்திற்கு அடித்தளமாக இருக்கும் பெரிய மற்றும் சிறிய எண்களை 30% பேர் மட்டுமே அடையாளம் காண முடியும். இதன் விளைவாக, குழந்தைகள் பெரும்பாலும் தங்களுக்குத் தேவையான திறன்கள் இல்லாமல் முறையான பள்ளிப்படிப்பைத் தொடங்குகிறார்கள், பலர் அத்தியாவசிய ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி (ECE) ஆண்டுகளை முற்றிலுமாகத் தவிர்க்கிறார்கள். மூன்று வயது குழந்தைகளில் 2%, நான்கு வயது குழந்தைகளில் 5.1% மற்றும் ஐந்து வயது குழந்தைகளில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு பேர் நேரடியாக முதலாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.
வளங்கள் மற்றும் பெற்றோரை ஈடுபடுத்துதல் பிரச்சினை
இரண்டாவதாக, குழந்தைப் பருவக் கல்விக்கு வளங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது இன்னும் ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குழந்தைக்கு ₹1,263 மட்டுமே ஆரம்பக் கல்விக்கு (early childhood education (ECE)) செலவிடுகிறது. ஆனால் இந்திய அரசு, பள்ளிக் கல்விக்கு ஒரு மாணவருக்கு ₹37,000 செலவிடுகிறது. இந்தப் பணத்தில் பெரும்பகுதி கற்பித்தல் பொருட்களைத் தயாரிப்பதற்குச் செல்கிறது. ஆனால், இந்தப் பொருட்கள் பெரும்பாலும் போதுமான அளவு பயன்படுத்தப்படுவதில்லை.
இந்த வளங்களை முறையாகப் பயன்படுத்த போதுமான ஆசிரியர்கள் இல்லை. மேலும், கவனிப்பதறகான மேற்பார்வை பலவீனமாக உள்ளது. 282 அங்கன்வாடிகளை (குழந்தை பராமரிப்பு மையங்கள்) ஒரு மேற்பார்வையாளர் கண்காணிக்க வேண்டும்.
இதைச் சரிசெய்ய, குழந்தைப் பருவக் கல்வியில் கவனம் செலுத்தும் கூடுதல் மேற்பார்வையாளர்களையும், ஆசிரியர்களையும் பணியமர்த்துவதற்கு நமக்கு குறிப்பாக பணம் தேவை. இந்த நிலைகள் சிறியதாக இருந்தாலும், அவை பெரும் நன்மைகளைத் தரும்.
உத்தரப் பிரதேசம் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்விக்காக கிட்டத்தட்ட 11,000 ECE கல்வியாளர்களை பணியமர்த்துவதில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 13 மாவட்டங்களைச் சேர்ந்த 50 முதன்மை பயிற்சியாளர்களுக்கு ஆறு நாள் குடியிருப்பு பயிற்சித் திட்டத்தையும் மாநிலம் நடத்தியுள்ளது. இந்த பயிற்சியாளர்களுக்கு ஆரம்பக் கல்வி (early childhood education (ECE)) கற்பித்தல் முறைகள் பற்றி கற்பிக்கப்பட்டது. ஐந்து முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளை பள்ளிக்குத் தயாராக்குவதற்காக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஷிஷு வாடிகாக்களை (Shishu Vatikas) திறக்க ஒடிசா முடிவு செய்துள்ளது.
இதற்கு நிதி அதிகரிப்பது விரைவான முன்னேற்றங்களைக் கொண்டுவரும். ஆனால், இந்த மேம்பாடுகளைப் பராமரிப்பது பெற்றோரை இதில் ஈடுபடுத்த வேண்டும். இது மூன்றாவது சவாலாகும்.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியைப் பற்றி அதிகம் அக்கறை கொள்கிறார்கள். இருப்பினும், ஆரம்பகால கற்றலுக்கு எவ்வாறு உதவுவது என்பது பலருக்குத் தெரியாது. பெற்றோருக்கு எளிமையான மற்றும் பயனுள்ள ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி (ECE) கருவிகளை வழங்குவது நிறைய உதவும். எடுத்துக்காட்டாக, பயிற்சித்தாள்களை (worksheets) வழங்குவது அல்லது ஆரம்பக் கல்விக்கு (early childhood education (ECE)) மையங்களில் செயல்பாடுகளில் சேர அவர்களை அழைப்பது அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும்.
மத்தியப் பிரதேசத்தில், மாதாந்திர பால் சௌபால் திட்டம் (Bal Choupal programme) பெற்றோருடன் நேரடியாக இணைகிறது. விளையாட்டு அடிப்படையிலான கற்றல் ஏன் முக்கியமானது என்பதை இது அவர்களுக்குக் காட்டுகிறது. பெரும்பாலான பெற்றோரிடம் திறன்பேசிகள் இருப்பதால், ஈடுபாடு இன்னும் மேம்படும். புலனம் (WhatsApp) அல்லது எட்டெக் கருவிகள் (EdTech apps) போன்ற பயன்பாடுகள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை ஆதரிக்க உதவும்.
தொலைநோக்குப் பார்வை
இந்த சவால்களை மாற்றுவது மிகவும் கடினமாகத் தோன்றலாம். ஆனால் கவனம் செலுத்துவதற்கு நிதி மற்றும் அதிக பெற்றோரின் ஈடுபாட்டுடன், நம் குழந்தைகளுக்கு வலுவான அடித்தளத்தை வழங்க முடியும். 2047-ம் ஆண்டுக்குள், ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் உலகளாவிய பணியாளர்களில் இணைவார்கள். இது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை மாற்றுவதற்கான ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்குகிறது.
ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியில் (ECE) நாம் புத்திசாலித்தனமாக முதலீடுகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தங்கள் குழந்தைகளின் கற்றல் பயணத்தில் பெற்றோரை ஈடுபடுத்துவதும் முக்கியம். இந்த முயற்சிகள் அனைத்தும் சேர்ந்து, 200 மில்லியன் இந்தியர்கள் தாங்கள் பிறக்கும் போது கொண்டிருக்கும் குறைபாடுகளை சமாளிக்க உதவும். இது இன்றைய இளம் கற்பவர்களுக்கு நாளைய தலைவர்களாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்கும். இது, வருங்கால சந்ததியினருக்கு அதிகாரம் அளித்து, உண்மையான உலகளாவிய தலைவராக (Vishwa Guru) மாறுவதற்கான இந்தியாவின் தொலைநோக்கை அடைய இது ஒரு முக்கியமான வழியாகும்.
ஷவேதா சர்மா-குக்ரேஜா Central Square Foundation அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். லூயிஸ் மிராண்டா Indian School of Public Policy தலைவர், இணை நிறுவனர் மற்றும் குடிமை சமூக மையத்தின் தலைவர் ஆவார்.