உலக வர்த்தக அமைப்பின் முதலீட்டு வசதி பேச்சுவார்த்தைகள் சட்டவிரோதமானவை அல்ல

 அபுதாபியில் நடைபெற்ற  உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization (WTO)) 13வது அமைச்சர்கள் மாநாட்டில் (Ministerial Conference  (MC13)) வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி (investment facilitation for development (IFD)) ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாதது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். கூட்டு அறிக்கை, முன்முயற்சி மூலம் இந்தியா உட்பட 70 நாடுகளுடன் வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை 2017 இல் தொடங்கியது. இந்தியா போன்ற நாடுகளின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், நவம்பர் 2023 இறுதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளில் 70% க்கும் அதிகமான நாடுகள், அதாவது, 166 நாடுகளில் 120 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. 


அபுதாபியில் நடைபெற்ற, உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டின் போது 120 நாடுகள் வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி ஒப்பந்தத்தை பன்முக ஒப்பந்தமாக (plurilateral agreement (PA))  மாற்ற விரும்பினர். ஒப்பந்தத்தின் இணைப்பு 4 க்குள் இதை பன்முக ஒப்பந்தமாக  சேர்க்க விரும்பினர். உலக வர்த்தக அமைப்பு முதன்மையாக பலதரப்பு ரீதியாக செயல்படும் போது, பிரிவு II.3 இன் கீழ் பன்முக ஒப்பந்தங்களை அனுமதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளை மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. 


இந்தியாவின் கவலைகள்


வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி ஒப்பந்தம், ஒழுங்குமுறை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும், அதிக அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஒப்பந்தத்தில் சந்தை அணுகல், முதலீட்டு பாதுகாப்பு அல்லது முதலீட்டாளர் மற்றும் அரசுக்கிடையே தகராறு தீர்வு (investor-state dispute settlement (ISDS)) தொடர்பான விதிகள் இல்லை. முதலீட்டாளர்-அரசு தகராறு தீர்வு (investor-state dispute settlement (ISDS)) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்த நாட்டின் மீது வழக்குத் தொடர அனுமதிக்கிறது. இது சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. உலக வர்த்தக அமைப்பின் தகராறு தீர்வு முறையின் தற்போதைய அமைப்பில் நாடுகள் மட்டுமே ஒருவருக்கொருவர் வழக்குத் தொடர மட்டுமே அனுமதிக்கிறது என்பதால், முதலீட்டாளர்-அரசு தகராறு தீர்வை  (investor-state dispute settlement (ISDS)) உலக வர்த்தக அமைப்பு  உடன்  சேர்ப்பது சாத்தியமில்லை என்று தெரிகிறது.


வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி ஒப்பந்தம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் ஒரு பகுதியாக மாறுவதைத் தடுப்பதில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் முக்கிய பங்கு வகித்தன. இந்தியாவின் கவலைகள் வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி  ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தைப் பற்றியது அல்ல, இரண்டு முக்கிய பிரச்சினைகள்  உள்ளன. முதல் பிரச்சினை, முதலீடு உலக வர்த்தக அமைப்பின் பகுதியாக இருக்க முடியுமா என்பதுதான். இரண்டாவது பிரச்சினை, வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி ஒப்பந்தத்தை  உலக வர்த்தக அமைப்பின் விதிப்புத்தகத்தில் சேர்க்கப் பயன்படுத்தப்படும் செயல்முறையாகும்.


முதலீடு என்பது வர்த்தகம் அல்ல


இந்தியாவின் முக்கிய வாதம் என்னவென்றால், முதலீடு என்பது வர்த்தகத்தைப் போன்றது அல்ல. ஏனெனில் இது எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கு வழிவகுக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இது வர்த்தகத்திற்கும் முதலீட்டிற்கும் இடையே வலுவான தொடர்பைக் காட்டும் பொருளாதார ஆய்வுகளுடன் முரண்படுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Organization for Economic Cooperation and Development (OECD)) கருத்துப்படி, உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 70% உலகளாவிய மதிப்புச் சங்கிலிகள் (global value chains) மூலம் நிகழ்கிறது. இந்த சங்கிலிகள் வர்த்தகம் மற்றும் முதலீடு இரண்டையும் உள்ளடக்கியது. அவை எவ்வளவு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.


அதனால்தான் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (Regional Comprehensive Economic Partnership (RCEP)) மற்றும் டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மைக்கான விரிவான மற்றும் முற்போக்கான ஒப்பந்தம் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) போன்ற பல நவீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள், முதலீடு பற்றிய விரிவான விதிகளைக் கொண்டுள்ளன. ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடனான (European Free Trade Association) இந்தியாவின் புதிய வர்த்தக ஒப்பந்தமும் முதலீட்டைப் பற்றி பேசுகிறது. இருப்பினும் அவை முதலீடுகளை எளிதாக்குதல் மற்றும் ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகின்றன.


வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி உடன்படிக்கையை பேச்சுவார்த்தை நடத்தும் செயல்முறை குறித்து, இந்தியா ஒரு முக்கிய கருத்தை தெரிவித்தது. முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு எந்த விதியும் இல்லை என்று இந்தியா கூறியது. 2004 இல், உலக வர்த்தக அமைப்பு ஒரு முடிவை எடுத்தது. இந்த முடிவு வர்த்தகம் மற்றும் முதலீடு எவ்வாறு தொடர்புடையது என்பது பற்றிய பேச்சுக்கள் பற்றியது. இந்தப் பேச்சுக்கள் 'சிங்கப்பூர் பிரச்சினைகள்' (‘Singapore issues’) என்று அழைக்கப்பட்டன. அவைகள் 1996 உலக வர்த்தக அமைப்பின் சிங்கப்பூர் அமைச்சர்கள் மாநாட்டில் தொடங்கியதால் இவ்வாறு அழைக்கப்பட்டன. இந்த பேச்சுவார்த்தைகள் தோஹா சுற்றின் ஒரு பகுதியாக இருக்காது என்று பொதுக்குழு முடிவு செய்தது. தோஹா சுற்றுப் (Doha round) பேச்சுவார்த்தை 2001 இல் தொடங்கியது.


2015 உலக வர்த்தக அமைப்பின் நைரோபி அமைச்சர்கள் ( Nairobi ministerial) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையும் இந்தியா குறிப்பிட்டுள்ளது. புதிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான எந்தவொரு முடிவும் அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் ஒருமித்த ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கூறியது. வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அனைத்து நாடுகளும் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால், பேச்சுவார்த்தைகளும் அதன் விளைவாக வரும் உரையும் விதிகளுக்கு எதிரானவை என்று இந்தியா வாதிடுகிறது.


வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு எதிராக ஒரு விதி இருப்பதாக இந்தியா வாதிடுகிறது. ஆனால் இது இரண்டு கேள்விகளை எழுப்புகிறது. முதலாவதாக, இந்த உத்தரவு, வசதி உட்பட அனைத்து முதலீட்டு அம்சங்களுக்கும் பொருந்துமா என்பது முதல் கேள்வி? 1996இல் பரிந்துரைக்கப்பட்ட முதலீட்டு ஒப்பந்தத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் சந்தை அணுகல் மற்றும் முதலீட்டு பாதுகாப்பு பற்றியது. உலக வர்த்தக அமைப்பில் உள்ள அனைத்து முதலீட்டு விஷயங்களுக்கும் இந்த விதி பொருந்துமா?


இரண்டாவதாக, அனைத்து உறுப்பினர்களுடனும் புதிய பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது விதி. ஆனால் இது சில உறுப்பினர்களால் மட்டுமே தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கியதா? வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி (investment facilitation for development (IFD))  ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் அனைத்து உறுப்பினர்களுடனும் தொடங்கப்படவில்லை. உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தின் பிரிவு X.9 இணைப்பு 4-ல் இருக்கும் பட்டியலில் புதிய ஒப்பந்தத்தைச் சேர்க்க அனைத்து நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. இருப்பினும், புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுக்களை தொடங்க அனைத்து நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் கூறவில்லை.


உலக வர்த்தக அமைப்புக்கு, பழைய விதிகளை புதுப்பித்து, உலகளாவிய வர்த்தகத்திற்காக புதிய விதிகளை உருவாக்குவது என்ற ஒரு முக்கியமான வேலை உள்ளது. ஆனால், உலக வர்த்தக அமைப்பில் முடிவுகளை எடுப்பது மிகவும் கடினம். ஏனென்றால், அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த கருத்தை அடைவது மிகவும் கடினமாக உள்ளது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை போன்ற பன்முக ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவை. இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்து வருகிறது. உலக வர்த்தக அமைப்பில் முன்மொழியப்பட்ட வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி (investment facilitation for development (IFD))  ஒப்பந்தம் போன்ற உடன்படிக்கைகளுக்கான அதன் எச்சரிக்கையான அணுகுமுறையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.




Original article:

Share: