தேசிய சுகாதாரக் கணக்குகளின் (National Health Accounts NHA) சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், வரவுக்கு மீறிய செலவு தொகை (out-of-pocket expense (OOPE)) 2014-ல் 63%-லிருந்து 2021-22 நிதியாண்டில் 39% ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், உலகத் தரங்களுடன் ஒப்பிடும்போது இந்த சதவீதம் இன்னும் அதிகமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய சுகாதாரச் செலவு தரவுத்தளத்தின்படி, 2022-ல் 46% விகிதத்துடன், உலகளவில் OOPE பிரிவில் இந்தியா இரண்டாவது பிரிவில் இருந்தது.
பொருளாதாரத்தை வளர்க்க, தனியார் செலவினங்களை அதிகரிக்க வேண்டும். இதற்காக, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு, மக்கள் செலவழிக்க அதிக பணம் புழக்கத்தில் இருக்க வேண்டும். இந்த வழியை சுகாதாரம் மற்றும் கல்விக்கான அவர்களின் செலவுகளைக் குறைப்பதன் மூலம் அடையலாம். இருப்பினும், ஒன்றிய அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. பொது சுகாதார வசதிகளைப் பயன்படுத்த அதிக மக்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். இப்போது மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், நிலைத்தன்மையை கொண்டுள்ளது. இது பெரிய ஆபத்துக்களை எடுத்து துணிச்சலான திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இருப்பினும், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை இந்த அணுகுமுறையைக் காட்டவில்லை. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கையும் பழைய முறையையே பின்பற்றியது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (Department of Health and Family Welfare (DoHFW)) சுகாதார அமைச்சகத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். இது முக்கிய பொது சுகாதார திட்டங்களை நிர்வகிக்கிறது. ஒன்றிய அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கையில் அதன் வரவு செலவு மதிப்பீடுகள் (Budget Estimates (BE)) முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் (Revised Estimates (RE)) ஒப்பிடும்போது 11% மட்டுமே அதிகரித்துள்ளது. இது மூன்று ஆண்டுகளில் மிகக் குறைந்த அதிகரிப்பு ஆகும். முந்தைய ஆண்டின் செலவினங்களுடன் ஒப்பிடும்போது வரவு செலவு அறிக்கை ஒதுக்கீடு இன்னும் சிறியதாகத் தெரிகிறது. 2023ஆம் ஆண்டு வரை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செலவினம் குறித்த தரவு நம்மிடம் உள்ளது. 2023ஆம் ஆண்டில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ₹80,292 கோடி செலவிட்டது. 2024ஆம் ஆண்டில், அதன் திருத்தப்பட்ட மதிப்பீடு 7.8% மட்டுமே அதிகரித்து ₹86,582 கோடியாக இருந்தது. 2021ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு அறிக்கையில் முந்தைய ஆண்டின் செலவினங்களுடன் ஒப்பிடும்போது 6% முதல் 8% வரை அதிகரித்துள்ளது. இருப்பினும், 2022-23ஆம் ஆண்டில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நிதி 2021-22-ல் அதன் செலவினங்களுடன் ஒப்பிடும்போது 7% குறைந்துள்ளது.
சுகாதாரத் துறையில் தேசிய காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY)) மீது தொடர்ந்து கவனம் செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டு, இந்த திட்டத்திற்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது 24% அதிகரித்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 2023-ல் செலவினத்தைவிட 41% அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் (National Health Mission (NHM)), 2024 திருத்தப்பட்ட மதிப்பீடுகளிலிருந்து இந்த ஆண்டு வரவு செலவு அறிக்கையில் 3.4% மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார திட்டத்தின் நகர்ப்புற கூறு கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையுடன் ஒப்பிடும்போது 4.3% சிறிய அதிகரிப்பைக் கண்டுள்ளது. இது தேசிய சுகாதார இயக்கத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய சுகாதார இயக்கம் என்பது கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதாரம் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு தேசிய திட்டமாகும். பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதால், வேலைகள் மற்றும் ஊதியங்கள் குறித்த கவலைகள் உள்ளன. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான பலவீனமான மற்றும் நிதி இல்லாத சுகாதார அமைப்பு சுகாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் தீங்கு விளைவிக்கும். 2015ஆம் ஆண்டு முதல் தேசிய சுகாதார இயக்கம் என்பது ஒவ்வொரு ஆண்டும் மதிப்பிடப்பட்டதைவிட அதிகமாக செலவிட்ட அரசாங்கத்தின் திட்டங்களில் ஒன்றாகும். ஒரே விதிவிலக்கு 2021ஆம் ஆண்டு, தொற்றுநோய் ஆண்டாகும். அப்போது ஒதுக்கப்பட்ட நிதி செலவினத்தை விட அதிகமாக இருந்தது. முந்தைய ஆண்டின் செலவினங்களுடன் ஒப்பிடும்போது NHMக்கான ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்படுகிறது. இருப்பினும், அதிகரிப்பு மிகக் குறைவாக உள்ளது.
காப்பீட்டுத் திட்டங்கள் தனியார் வசதிகளைச் சேர்ப்பதன் மூலம் மருத்துவமனை விருப்பங்களை விரிவுபடுத்துகின்றன. இருப்பினும், காப்பீட்டு அடிப்படையிலான சுகாதார அமைப்பு முக்கியமாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பில் கவனம் செலுத்துகிறது. இது கடுமையான நோய்களுக்கான சிகிச்சையை உள்ளடக்கியது.
இதற்கு நேர்மாறாக, காப்பீட்டுத் திட்டங்களில் தனியார் வசதிகளை ஈடுபடுத்துவதன் மூலம் மருத்துவமனை விருப்பங்களின் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கின்றன. இருப்பினும், காப்பீட்டு அடிப்படையிலான சுகாதார அமைப்பு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மற்றும் குணப்படுத்தும் சேவைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு பொது சுகாதார அமைப்பு, அடிப்படை நோய்களுக்கு சிகிச்சையளித்தல், வழக்கமான பரிசோதனைகள் மற்றும் காப்பீடு உள்ளடக்காத தடுப்பு சேவைகளை வழங்குதல் போன்ற முதன்மை பராமரிப்பில் கவனம் செலுத்துகிறது. தனியார் மருத்துவமனைகள் கண் அறுவை சிகிச்சை போன்ற சேவைகளை வழங்க முடியும். மேலும் காப்பீடு ஏழைகளுக்கு அவற்றை எளிதாக அணுக உதவுகிறது. இருப்பினும், பிற சுகாதார பிரச்சினைகளுக்கு முதன்மை சிகிச்சை தேவைப்படுகிறது. இது காப்பீட்டின் கீழ் இல்லை.
சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் மூலம் வழங்கப்படும் முதன்மை சுகாதார சேவைகளுக்கான எண்கள் வரவு செலவு அறிக்கையில் காட்டப்படவில்லை. இருப்பினும், தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் (National Urban Health Mission (NUHM)) மதிப்பீடுகள் வரவு செலவு அறிக்கை ஒதுக்கீட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் இல்லை என்பதைக் காட்டுகின்றன.
சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி (2019-2021), நமது சுகாதாரப் பராமரிப்பில் கிட்டத்தட்ட 50% தனியார் துறையால் வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில், 10% பேர் மட்டுமே அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கு (PHC) முதன்மை பராமரிப்புக்காக வருகிறார்கள். மேலும், நகர்ப்புறங்களில் இது 5% ஆகக் குறைகிறது. இருப்பினும், காப்பீடு வழங்காத சுகாதார சேவைகளுக்கான மிகப்பெரிய பூர்த்தி செய்யப்படாத தேவை உள்ளது.
எடுத்துக்காட்டாக, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உதய்பூர் மற்றும் அஜ்மீர் போன்ற சில பகுதிகளில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு (Urban Primary Health Centres (UPHCs)) சிகிச்சைக்காக தினசரி வருகைகள் உள்ளன. சிறப்பாக செயல்படும் மையங்களில் 250 வரை எட்டக்கூடும். மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளைவிட இந்த வருகைகள் மிகக் குறைவு என்றாலும், அவை இன்னும் பல உயர்மட்ட UPHCகளின் திறனைவிட அதிகமாக உள்ளன. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறைந்த அளவிலான சுகாதார சேவைகளைக் கையாண்டாலும், அவற்றின் குறைந்த திறன் இருந்தபோதிலும் அவை நிறைய சேவைகளை வழங்குகின்றன.
இருப்பினும் பல சூழல்களில், வசதிகள் இல்லாதது சவாலாக உள்ளது. உதாரணமாக, கர்நாடகாவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் 38% பற்றாக்குறை உள்ளது. நாடு முழுவதும் இது போன்ற பணியாளர் பற்றாக்குறை உள்ளது. நிபுணர்கள், துணை செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் சுகாதார திட்ட மேலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் பற்றாக்குறையும் உள்ளது. ஊழியர்கள் இல்லாதபோது அல்லது காத்திருப்பு நேரம் நீண்டதாக இருக்கும்போது மக்கள் குறைவான வசதிகளைப் பயன்படுத்துகின்றனர்.
குறைந்த ஒட்டுமொத்த சுகாதார ஒதுக்கீடுகளும் காப்பீட்டில் கவனம் செலுத்துவதும் "நடுத்தர வர்க்கத்தை" நாம் விலக்குகிறோம் என்பதைக் குறிக்கிறது. நடுத்தர வர்க்கம் தான் வளர்ச்சியை அதிகரிக்கும் செலவுகள் கொண்டவர்கள், மேலும் அவர்களுக்கு அதிக நிதி உதவி தேவைப்படுகிறது. இருப்பினும், இந்த மக்கள் காப்பீட்டுத் திட்டங்களால் காப்பீடு பெறுவதில்லை. மேலும், சுகாதாரச் செலவுகளைக் குறைக்க பொது சுகாதார அமைப்பைச் சார்ந்துள்ளனர். குறிப்பாக, நகர்ப்புற இந்தியாவில் வரவு செலவு அறிக்கையில் பலவீனமான சுகாதார ஒதுக்கீடுகளால் இந்தக் குழு மிகவும் பாதிக்கப்படும்.
ஆண்டு செல்லச் செல்ல, அரசாங்கம் தனது வரவு செலவு சுகாதார அறிக்கையை மறுபரிசீலனை செய்து தேசிய சுகாதார இயக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் அதிக ஊழியர்களை பணியமர்த்துவதன் மூலம் முதன்மை பராமரிப்பை மேம்படுத்துவது இதில் அடங்கும். பயன்பாட்டை அதிகரிக்கவும் பராமரிப்புக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கைகள் அவசியம்.
வலுவான பொது சுகாதாரத் துறையால் இயக்கப்படும் பொருளாதார வளர்ச்சி நிலையானதாகவும் சவால்களைக் கையாளக்கூடியதாகவும் இருக்கும். வரவு செலவு அறிக்கை முன்னுரிமைகள் இலக்கைப் பூர்த்தி செய்ய வேண்டிய நேரம் இது.
எழுத்தாளர் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தின் (Centre for Social and Economic Progress (CSEP)) உறுப்பினராக உள்ளார்.