PM E-Drive: திட்டத்தின் முதல் மாதத்திலேயே ₹320 கோடி ஊக்கத்தொகையை அரசாங்கம் வழங்கத் தொடங்குகிறது. -எஸ்.ரோனேந்திர சிங்

 அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10,900 கோடி ரூபாய்  செலவில் மொத்தம் 28,81,436 யூனிட் மின்சார வாகனங்கள் ஊக்குவிக்கப்படும். 


அக்டோபர் 1 முதல்,  புதுமையான வாகன மேம்பாட்டுத் திட்டத்தின்  (PM E-DRIVE)  கீழ் மின்சார வாகனங்களான இரண்டு சக்கர (e2W), மூன்று சக்கர (e3W) மற்றும் இ-கார்ட் / ரிக்ஷாவுக்கு அரசாங்கம் சுமார் 320 கோடியை ரூபாய் வழங்கியுள்ளது. 


கனரக தொழில்துறை அமைச்சகத்தின் படி (Ministry of Heavy Industries (MHI)),  அக்டோபர் 28 நிலவரப்படி ஏற்கனவே 52 சதவீத இரண்டு சக்கர மின்சார வாகன  விற்பனையையும், மூன்று சக்கர மின்சார வாகன (L5) பிரிவில் 73 சதவீதத்தையும் அடைந்துள்ளது. மொத்தம் ₹10,900 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். 


முதல் ஆண்டில்,  இரண்டு சக்கர மின்சார வாகனங்களின் (e2W) உச்சவரம்பு 10,64,000 யூனிட்கள் உள்ளது. அதில் இருந்து இரண்டு சக்கர மின்சார வாகன நிறுவனங்கள், அக்டோபர் 28 நிலவரப்படி 5,49,698 யூனிட்களை விற்றுள்ளன (52 சதவீதம்) மற்றும் அதே தேதியில் 3,28,524 யூனிட்களுக்கான உரிமைகோரல்களை கனரக தொழில்துறை அமைச்சகத்தின் போர்ட்டலில் சமர்ப்பித்துள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன. 


மூன்று சக்கர மின்சார வாகனப் பிரிவில் (e3W), முதல் ஆண்டில் 43,371 யூனிட்கள் உள்ளது. உற்பத்தியாளர்கள் அக்டோபர் வரை 912 யூனிட்களை விற்றுள்ளனர் மற்றும் 758 யூனிட்களுக்கு உரிமைகோரல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 


மூன்று சக்கர மின்சார வாகன (e3W)  (L5) வகைக்கு, முதல் ஆண்டில் 80,546 யூனிட்டுகளுக்கு வரம்பு உள்ளது. இதில் அக்டோபர் 28 நிலவரப்படி, உற்பத்தியாளர்கள்  58,640 யூனிட்களை (73 சதவீதம்) விற்க முடிந்தது. மேலும், 40,075 யூனிட்களுக்கான உரிமைகோரல்கள் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் போர்ட்டலில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 


எனவே, மொத்தத்தில் இந்த வகைகளின் 11,87,917 மின்சார வாகனங்கள் (EVs) முதல் ஆண்டில் மானியமாக வழங்கப்படும் என்ற வரம்பு உள்ளது. அவற்றில் அக்டோபர் 28 நிலவரப்படி 6,09,250 வாகனங்கள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன. மேலும், 3,69,357 மின்சார வாகனங்களுக்கான உரிமைகோரல்கள் (51 சதவீதம்) இணைய இடைமுகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


மொத்த செலவினமான ₹1,575 கோடி ரூபாயில், அக்டோபர் 28, 2024 நிலவரப்படி ₹514 கோடி ரூபாய் உரிமைகோரல்கள் போர்ட்டலில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து IFCI (திட்ட மேலாண்மை நிறுவனம்) ₹352 கோடி ரூபாய்க்கு பரிந்துரைத்துள்ளது. கனரக தொழில்துறை அமைச்சகம் ₹320 கோடி ரூபாய்  வழங்கியுள்ளதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 


மீதமுள்ள வாகனங்களுக்கு IFCI-ல் ₹147 கோடிக்கான உரிமைகோரல்களும் நடைமுறையில் உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. 


PM E-Drive திட்டம் மார்ச் 31, 2026 வரை செயல்படுத்தப்படும். மின்சார மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் (Electric Mobility Promotion Scheme (EMPS) 2024, இரண்டு சக்கர மின்சார வாகனம் (e2W)  மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனத்திற்கான (e3W)  ஊக்கத்தொகை  வழங்குதல் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30, 2024 வரை செயல்படுத்தப்பட்டது. 


PM E-DRIVE திட்டமானது இ-ஆம்புலன்ஸ்கள், இ-டிரக்குகள், இ-பஸ்கள் மற்றும் சார்ஜிங் மேம்படுத்தல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ₹10,900 கோடி பட்ஜெட்டில் மொத்தம் 28,81,436 வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

 

2024-25 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட இரண்டு சக்கர மின்சார வாகனம் (e2W) / மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு (e3W) ஒரு  கிலோவாட் மணிக்கு (kWh) ₹5,000 ரூபாய்  மற்றும் திட்டத்தின் 2025-26 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட இரண்டு சக்கர மின்சார வாகனம் (e2W) / மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு (e3W) ஒரு கிலோவாட் மணிக்கு (kWh) ₹2,500 ரூபாய் ஊக்கத்தொகையை அரசாங்கம் வழங்குகிறது. மேலும், திட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு வாகனத்திற்கு ஆண்டு வாரியாக ஊக்கத்தொகை அல்லது இரண்டு சக்கர மின்சார வாகனம் (e2W) / மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு (e3W) தொழிற்சாலை விலையில் 15 சதவீதம், இதில் எது குறைவோ இருக்குமோ அது வழங்கப்படும். 




Original article:

Share: