வெப்ப அழுத்தத்திற்கான புதிய அளவீடு, காலநிலைச் சவாலை மறுவடிவமைக்கிறது.



35°C ஈரப்பத வெப்பநிலை (wet-bulb temperature) மனிதர்கள் தாங்கக்கூடிய அதிகபட்ச வெப்ப நிலையாக கருதப்படுகிறது. ஆனால், 'Nature Communications' இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய ஆய்வு, இந்த பாதுகாப்பான வரம்பு உண்மையில் இதைவிட மிகவும் குறைவாகவே இருக்கலாம் என்று கூறுகிறது.


காலநிலை மாற்றத்தின் தொடக்கமானது, மனிதர்களுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைப் பற்றிய புரிதலை அடிப்படையாக மாற்றியுள்ளது. உலகின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள் வெப்பமான காலநிலையை மாற்றத்தை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், வெப்பநிலை நிலை அதிகரிப்பால் ஏற்படும் ஈரப்பதத்தின் தன்மைகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வியர்வை ஆவியாகினால், மனிதர்கள் அதிக வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டவர்கள் இருப்பார்கள். இருப்பினும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, ​​வியர்வை தோலில் தேங்கிவிடுகிறது. மேலும், உடலின் வெப்ப ஒழுங்குமுறை அமைப்பு அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறது. மனித ஆரோக்கியத்தின் மீது இந்த இரண்டு காரணிகளின் ஒருங்கிணைந்த விளைவு மருத்துவ அறிவியலுக்கு முற்றிலும் அறியப்படாத ஒன்றல்ல. உதாரணமாக, 'ஈரப்பத வெப்பநிலை அணுகுமுறை' (Wet-bulb approach) என்பது வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகிய இரண்டையும் கணக்கில் கொண்டு, வெப்பநிலையை மறுவரையறை செய்ய முயல்கிறது. பொதுவாக, 35°C ஈரப்பத   வெப்பநிலையே மனித உடலால் தாங்கிக்கொள்ளக்கூடிய வெப்பத்தின் கோட்பாட்டு ரீதியான உச்ச வரம்பாகக் கருதப்படுகிறது.  சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் சார்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு 'Nature Communications' இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, இந்த பாதுகாப்பான வரம்பு அதைவிட குறைவாக இருக்கலாம் என்று கூறுகிறது. 31°C ஈரப்பத வெப்பநிலையும் முதியவர்கள் மற்றும் வெளியில்  பணிக்கு  செல்பவர்களுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கலாம்.


இந்தப் புதிய புரிதல், இந்தியாவின் காலநிலை சவாலை மறுவரையறை செய்கிறது. பல நகரங்களில், ஈரப்பத வெப்பநிலை 35°C-க்கு கீழே இருந்தாலும், மனிதர்கள் தாங்கும் வரம்பை எட்டும் அளவுக்கு வெப்பக் குறியீடுகள் (heat index) தொடர்ந்து பதிவாகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நவி மும்பை நகரில் ஏற்பட்ட துயரமான சம்பவத்தில், வானிலைத் துறையின் கணக்குப்படி வெப்பநிலை 35°C இருந்தபோதிலும்,  வெப்பத்தின் தாக்கத்தால் 13 பேர் உயிரிழந்தனர். இது கோடை காலத்தில் மனித நலனை மதிப்பிடும் அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.  புதிய தேவைகளுக்கு ஏற்ப திட்டமிடல்  மெதுவாகவே உள்ளது. அதிக கான்கிரீட் கட்டிடங்கள் கொண்ட பகுதிகள், குறைந்த மரங்கள், மற்றும் மோசமான காற்றோட்டம் உள்ள பகுதிகள் “நகர்ப்புற வெப்பத் தீவுகளாக” (urban heat island) மாறுகின்றன.  வெப்பநிலை, அருகிலுள்ள கிராமப்புற பகுதிகளை விட பல   அளவு அதிகமாக இருக்கும்.  இது போன்ற சூழலில், இரவு நேரங்களிலும் பகலில் ஏற்பட்ட வெப்ப அழுத்தத்திலிருந்து மீள்வதற்கான வாய்ப்பை வழங்காது. மேலும், வெப்பத்தை தாங்கும் வரம்புகளாலும் சமூக சூழ்நிலைகளாலும் கடுமையான பாதிப்புக்களை  சந்திக்கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயிகள்  ,தெருவோர விற்பனையாளர்கள் மற்றும் குறுகிய கால ஒப்பந்த  பொருளாதாரம்  பணியில் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு, அதிக வெப்பமும் ஈரப்பதமும் தொழில் சார்ந்த அபாயங்களாக  இருந்து வருகின்றன.


கடந்த சில ஆண்டுகளில், இந்திய நகரங்கள் வெப்பம் தொடர்பான விரிவான திட்டங்களை வகுக்க முயன்றுள்ளன. இருப்பினும், இந்தத் திட்டங்கள் வறண்ட வெப்ப வரம்புகளை அடிப்படையாகக் கொண்டவையே தவிர, வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகிய மிகவும் அபாயகரமான கலவையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. மேலும், அவற்றில் பெரும்பாலானவை உள்ளூர் தன்மைகளுக்கு ஏற்ப அமைவதில்லை. வெப்பம், ஈரப்பதம் மற்றும் மழையிலிருந்து மக்களைப் பாதுகாக்க நுணுக்கமான அறிவு தற்போது தேவைப்படுகிறது. ஒரு புதிய வகை வெப்ப அலையை சமாளிக்க, பல்வேறு காரணிகளை ஒருங்கிணைக்க வேண்டியிருக்கும். நிலைமை அவசரமானது என்பதால், இந்தியாவின் நகரங்கள் விரைவாகச் செயல்பட வேண்டும்.



 Original Link: New measure for heat stress reframes climate challenge.


Share: