இந்த மசோதாவின்கீழ் முன்மொழியப்பட்டுள்ள மூன்று குழுக்களிலும் மாநில உயர்கல்வி குழுக்களுக்குப் (State Higher Education Council) பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்ட தேசிய கல்விக் கொள்கையைச் (National Education Policy 2020 (NEP)) சட்டப்பூர்வமாக அமல்படுத்துவதை வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கல்வி நிறுவன மசோதா (Viksit Bharat Shiksha Adhisthan (VBSA)) முன்மொழிகிறது. இந்த மசோதா ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவால் (Joint Parliamentary Committee (JPC)) பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது ஆசிரியர்கள், மாணவர்கள், மாநில அரசுகள் மற்றும் குடிமைச் சமூகம் ஆகியோருக்குத் தங்கள் திருத்த முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய நிலையில், இந்த மசோதாவானது ஒரு அரசியலமைப்பு மீதான வரம்பு மீறலாகப் பாரக்கப்படுகிறது. இது ஒன்றிய அரசுப் பட்டியலின் 66-வது பிரிவானது, உயர்கல்வி நிறுவனங்களில் (HEI) ஒருங்கிணைப்பு மற்றும் தரநிலைகளை நிர்ணயிப்பதற்கு மட்டுமே நாடாளுமன்றத்திற்கு வரையறுக்கப்பட்ட மற்றும் குறிப்பிட்ட சட்டமியற்றும் அதிகாரத்தை வழங்குகிறது. இப்போது, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கல்வி நிறுவன (VBSA) மசோதாவானது, தரநிலைகளை நிர்ணயிப்பதற்கும், ஆய்வுகளை நடத்துவதற்கும், சுதந்திரமான, வரம்பற்ற அதிகாரங்களையும் செயல்பாடுகளையும் செயல்படுத்துவதற்கும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குழுக்களுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்குகிறது. இந்த மசோதாவின்கீழ், உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை கல்வி அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முடிவெடுக்கும் செயல்பாடுகளில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை இந்த மசோதா கருத்தில் கொள்ளவில்லை. இந்த மசோதாவின் ஒவ்வொரு பிரிவிலும் அதிகாரத்துவத்தின் மீது அதீதக் கட்டுப்பாடு காணப்படுகிறது. உயர்கல்வியை மறுசீரமைத்து மேம்படுத்தும் பொறுப்பு அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) ஆலோசனைத் தேவைகளை இந்த மசோதா பலவீனப்படுத்துகிறது. பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் 13-வது பிரிவு, ஒரு பல்கலைக்கழகத்தின் நிதித் தேவைகள் அல்லது அதன் கற்பித்தல், தேர்வு நடைமுறைகள் மற்றும் ஆராய்ச்சியின் தரநிலைகளைக் கண்டறியும் நோக்கத்திற்காக ஆய்வுகளை மேற்கொள்ள வழிவகை செய்கிறது. சட்டப்படி, பல்கலைக்கழகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கல்வி நிறுவன மசோதா (VBSA), இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IITs), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIMs) மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மையங்களின் (Inter-University Centres) நிர்வாகக் குழுக்களுக்கு உள்ள நிர்வாக சுயாட்சியைப் பறிக்கிறது.
இந்திய அறிவுத்திறன் (Bhartiya Knowledge) என்ற பெயரில், இந்த மசோதா இந்துத்துவா கொள்கைகளுடன் தொடர்புடைய கருத்துக்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது. இது இந்திய அறிவின் பன்முக கலாச்சார தன்மையை வெளிப்படையாகவே பலவீனப்படுத்துகிறது. இது அதிகாரிகளுக்கு அதிகாரத்துவக் கட்டுப்பாடு, வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறையின் மையப்படுத்தப்பட்ட அமைப்புகள், தரநிலைகளை நிர்ணயித்தல் மற்றும் அங்கீகாரச் செயல்முறை ஆகியவற்றை அனுமதிக்கிறது. இந்த மசோதா தீவிர உலகமயமாக்கலை ஊக்குவிக்கவும், உலகளாவிய தரவரிசைகளின் அடிப்படையில் திட்டத்திற்கான செயல்திறனை அளவிடுவதில் கவனம் செலுத்துகிறது. இது தேசிய அளவிலான கண்டுபிடிப்புகள், சுய-சார்பு மற்றும் சமூகநீதி ஆகியவற்றிற்கான முடிவுகளை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பொதுநலனுக்காக, கல்வியை ஒரு பொது நிதியுதவித் திட்டமாக ஊக்குவிக்கும் கடமையிலிருந்து ஒன்றிய அரசு விலகிக்கொள்ளவும், உயர்கல்விக்காக மாணவர்கள் கடன்களைச் சார்ந்து இருக்கும் நிலையை உருவாக்கவுமே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் (SC/STs) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCs) இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி சார்ந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதை இந்த மசோதா உறுதி செய்வதில்லை. இது கல்வி நிறுவனங்களுக்கு இடையிலோ, மாநிலங்களுக்கு இடையிலோ அல்லது பிராந்தியங்களுக்கு இடையிலோ சமமான நீதியை இந்த மசோதா உறுதி செய்வதில்லை.
ஜனநாயகப்படுத்துதல் மற்றும் மாநிலங்களுக்கான நீதிக்காகச் சட்டத்திருத்தம்
தேசிய கல்விக்கொள்கை (NEP) 2020-ன்படி, மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி நிதியை வழங்குவதற்காக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (National Research Foundation (NRF)) உருவாக்கப் பரிந்துரைக்கப்பட்டது. தற்போதைய நிலையில், ஒருங்கிணைந்த கல்விசார் செயல்பாடுகளுக்காக மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு மொத்த மானியங்களை வழங்குவதற்கான எந்த ஏற்பாடுகளும் இந்த மசோதாவில் குறிப்பிடப்படவில்லை. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கல்வி நிறுவன (VBSA) மசோதாவின்கீழ் முன்மொழியப்பட்டுள்ள குழுக்களில் மாநில உயர்கல்வி குழுக்களுக்கு (SHECs) உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். இவை ஒருங்கிணைந்த உத்திக்கான பாதையைப் முன்னெடுத்துச் செல்வதற்காக, குழுக்கள் ஒருமித்த முடிவெடுக்கும் முறையை பின்பற்ற வேண்டும். மேலும், மாநில உயர்கல்வி குழுக்கள், உயர்கல்வி நிறுவனங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தெளிவான பங்கையும், செயல்படுவதற்கான போதுமான வாய்ப்பையும் பெற்றிருக்க வேண்டும். உயர்கல்வி நிர்வாகத்தின் திட்டமிடல் மற்றும் முன்னேற்றம் குறித்த கருத்துக்களைச் சேகரிப்பதில் உயர்கல்வி நிறுவனங்களின் அவைகள் மற்றும் கல்விக் குழுக்களை ஈடுபடுத்துவதன் மூலம், உயர்கல்வி நிர்வாகத்தில் மாணவர் அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களின் சங்கங்களின் பங்களிப்பை இந்த மசோதா வெளிப்படையாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இம்மசோதாவின் கீழ், நிர்வாகம் மற்றும் நிறுவன ரீதியான விதிகளைச் செயல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக 'ஒழுங்குமுறை அமைப்பு' (Viniyaman Parishad) திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதா, நிறுவனங்களுக்கு முறையான அங்கீகாரம், அதிகாரமளித்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றில் ஒன்றிய அரசுக்கு முழுச்சுதந்திரத்தையும் பொறுப்பையும் வழங்கக்கூடாது. இது இப்போது ஒழுங்குமுறை விதிமீறல்களுக்குப் தரவரிசைப்படுத்தப்பட்ட நிதி அபராதங்களை இம்மசோதா தற்போது அறிமுகப்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனமும், அது அமைந்துள்ள மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மூடப்படக்கூடாது. இந்த மசோதாவின்படி, அங்கீகார அமைப்பு (Accreditation Council) தர நிர்ணயப் பணியை மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் என்றும் இது முறையான ஆலோசனைகளைத் தவிர்ப்பதோடு, உயர்கல்வி நிறுவனங்கள் சமூகத்திற்கு வழங்க வேண்டிய நற்பயன்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்றும் எச்சரிக்கின்றனர். தர நிர்ணய அமைப்பானது (Gunvatta Parishad) தொழில்நுட்பம் சார்ந்த தர மதிப்பீட்டை வழங்குகிறது. ஆனால், ஒழுங்குமுறை அணுகுமுறை என்பது ஆலோசனைகள் மற்றும் நடைமுறைகள் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, வெறும் உத்தரவுகளாக இருக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றனர்.
உயர்கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்குப் பல்கலைக்கழகம் ஒரு முக்கிய நிறுவன அமைப்பாக உள்ளது. வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடும் (காப்புரிமைகள் மற்றும் வெளியீடுகள்), கல்விசார் வெளியீடுகளின் அடிப்படையில் நிறுவனங்களை மதிப்பிடுவதும் (கற்றல் நிலைகள் மற்றும் வேலைவாய்ப்புத் திறன்), விரும்பத்தக்க விளைவுகளுடன் முழுமையாக வெளிப்படுத்தாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது. மதிப்பீடு என்பது அளவிடக்கூடிய வெளியீடுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், விளைவுகள் மற்றும் உண்மையான தாக்கத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். டெல்லியில் கூடும் தர நிர்ணயக் குழுவிடமிருந்து, கல்விப் பட்டங்கள், தொழிற்கல்வி ஒருங்கிணைப்பு, பாரதிய அறிவு அமைப்புகள் அல்லது மாணவர் பரிமாற்றம் என அனைத்து வகையான உயர்கல்விக்குமான தரங்களையும் பண்புகளையும் வரையறுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தரநிலைகள், தொழில்துறை மற்றும் மாநில வாரியாக வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் தரநிலைகளின் சர்வதேசமயமாக்கல், உயர்கல்வி நிறுவனங்களை, பெருநிறுவனங்களின் செயல்திட்டத்தை அமைப்புரீதியாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு நகர்த்துவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பகிரப்பட்ட பொறுப்பு
அரசியலமைப்பு ரீதியாகப் பார்த்தால், கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ள ஒரு துறையாகும். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கல்வி நிறுவன (VBSA) மசோதாவின் விதிகள் அனைத்து மாநில அரசுகளுக்கும் பொருந்தும் என்கின்றனர். தரநிலைகள், அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறைகளை நிர்ணயிப்பதில் மாநில அரசுகளின் பங்களிப்பு இருக்க வேண்டும். தரநிலைகள், அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறைகளை நிர்ணயிப்பது என்பது மேலிருந்து கீழ்நோக்கி திணிக்கப்படும் ஒரு விஷயமாக இருக்கக் கூடாது. தற்போது, உயர்கல்வி நிறுவனங்களுக்கு முதன்மையான நிதி வழங்குபவர்களாக அந்தந்த மாநில அரசுகளே உள்ளன. இந்த மசோதா சமூக மற்றும் பிராந்தியங்களுக்கு இடையேயான சமத்துவத்தை வழங்கவில்லை. இதன்கீழ், தனியார் துறை உயர்கல்வி நிறுவனங்கள் சமத்துவத்தையும் சமூக நீதியையும் வழங்குவதில்லை. பள்ளிக் கல்விக்கான பங்களிப்பு, சுற்றுச்சூழல், காலநிலை, உள்ளூர் வளங்களைப் புதுப்பித்தல் மற்றும் உள்ளூர் பொருளாதார மேம்பாடு போன்ற முன்னுரிமைகளை மாநில அரசுகள் கவனித்துக்கொள்ள முடியும் என்கின்றனர். இந்த முன்னுரிமைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும் என்பதால், பல்வேறு அம்சங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் மாறுபட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
திருத்தப்பட்ட இந்த மசோதாவானது, கல்வி ஒழுங்குமுறை, அங்கீகாரம் மற்றும் தரநிலைகளை நிர்ணயிக்கும் செயல்முறைகளில், மாநில உயர்கல்விக் குழுக்களுக்கும் (SHECs) ஒன்றிய அரசின் குழுக்களுக்கும் தலா 50% முக்கியத்துவத்தை வழங்க வேண்டும். இதன் மூலம், பிராந்தியங்களுக்கிடையிலான சமத்துவம், மொழி மற்றும் கலாச்சார சுயாட்சி, சமூக நீதி, தேசிய அளவிலான புதிய கண்டுபிடிப்புகள், அடிப்படை அறிவியல், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய சிறப்பு ஆகிய இலக்குகளில் கவனம் செலுத்த முடியும் என்கின்றனர். மேலும், வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக-தொழில்நுட்ப அம்சங்களைக் கருத்தில் கொண்டு, பிராந்திய அளவிலான குழுக்களை உருவாக்கும் அம்சத்தையும் இந்த மசோதாவில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
முடிவுரை
திருத்தப்பட்ட இந்த மசோதா, உயர்கல்வி நிர்வாகத்திற்கான ஒரு மாற்று கட்டமைப்பை வழங்க வேண்டும். இது தேவையான வசதிகளை உருவாக்கி, உயர்கல்வியை ஒரு கூட்டுப் பொறுப்பாக மாற்ற வேண்டும். கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் சமூகத்தொடர்பு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பதற்காகக் கல்வி அமைச்சகத்திற்குக் கிடைக்கும் நிதியை விநியோகிக்க, இந்த மசோதாவில் ஒரு உயர்கல்வி மானியக் குழு (Higher Education Grants Council (HEGC)) இடம்பெற வேண்டும் என்றும் தெளிவுபடுத்துகின்றனர். இந்தக் குழுவானது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் (INIs) மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட ஒன்றிய கல்வி நிறுவனங்களுக்கு வழக்கமான நிதியுதவியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இது வரலாற்று ரீதியான பாகுபாடுகள், கட்டமைப்புக் குறைபாடுகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கான ஆதரவின்மையால் ஏற்பட்ட இடைவெளிகளை நிரப்ப உதவும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
முன்மொழியப்பட்ட மூன்று தனித்தனி குழுக்களின் வாயிலாக பிரிவுகள் மூலம் தரநிலைகள், அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை கூட்டாகச் செயல்படுத்தும் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற, உயர்கல்வி நிறுவனங்களின் (SHECs) பங்களிப்பும் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். ஒழுங்குமுறை, அங்கீகாரம் மற்றும் தரநிலை நிர்ணயம் ஆகியவற்றுக்கான குழுக்கள் கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களால் பராமரிக்கப்பட வேண்டும். மேலும், அவற்றுக்குத் தனித்தனியான நிதிநிலை அறிக்கைத் திட்டங்கள் இருக்க வேண்டும். இந்தச் செயல்முறையை நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு பகிரப்பட்ட பொறுப்பாக மாற்றுவதற்கு ஏதுவாக, உயர்கல்வி நிறுவனக் குழுக்களால் (HEGC) உயர்கல்வி நிறுவனங்களுக்கு உரிய நிதி வழங்கப்பட வேண்டும். பகிரப்பட்ட பொறுப்பைச் செயல்படுத்துவதற்காக தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து வரிகளும் உயர்கல்வி நிறுவனக் குழுக்களின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். திருத்தப்பட்ட சட்ட மசோதாவில், எந்த அமைப்பு எதைக் ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். முன்மொழியப்பட்ட இலக்குகளை அடைவதற்காக நிதியை ஒதுக்கும்போது, உயர்கல்வியின் பொதுவான நோக்கங்கள் மற்றும் பயன்கள் குறித்துத் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தினேஷ் அப்ரோல், புது தில்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் 'நிலைத்தன்மை ஆய்வுகள் குறித்த பல்துறைசார் ஆராய்ச்சிக் குழுமத்தில்' (Transdisciplinary Research Cluster on Sustainability Studies) பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
Original Link: An alternative proposal on Viksit Bharat Shiksha Adhisthan Bill.