முக்கிய அம்சங்கள்:
• இந்தியப் பெருங்கடலை ஒரு 'வாய்ப்புகளின் கடலாக' மாற்றுவதே எங்களது தொலைநோக்குப் பார்வை" என்று சீஷெல்ஸ் (Seychelles) அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடனான உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பினரும் தங்களுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்துத் துறைகளையும் மறுஆய்வு செய்தனர். மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடக்கும் சட்டவிரோத மீன்பிடிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடல் கொள்ளை உள்ளிட்ட இருநாடுகளுக்கும் பொதுவான நலன்சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர்.
• பின்னர் தேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி, காலநிலை மாற்றத்தால் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள், குறிப்பாகத் தீவு நாடுகள்தான் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும், "நியாயம், பொறுப்புணர்வு மற்றும் சமத்துவம்" ஆகியவற்றின் அடிப்படையில் காலநிலைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காலநிலை மாற்றத்திற்கு மிகக் குறைந்த அளவே காரணமாய் இருந்த நாடுகள், அதனால் ஏற்படும் மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடாது என்றும் குறிப்பிட்டார். "இதுவே காலநிலை நீதியின் சாராம்சம் ஆகும்," என்றும் கூறினார்.
• சீஷெல்ஸ் (Seychelles) நாட்டின் தேசிய தின விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட மோடிக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி மீதான அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக, 'Guardian of the Blue Horizon' (நீலத் தொடுவானின் பாதுகாவலர்) என்ற கௌரவப் பட்டமும் வழங்கப்பட்டது.
• பேச்சுவார்த்தையின் முக்கிய முடிவுகள், இந்திய அரசு இந்தியப் பெருங்கடலில் உத்திசார்ந்த முக்கிய இடத்தில் அமைந்துள்ள இந்தத் தீவு நாட்டுடனான தனது உறவை மேலும் விரிவுபடுத்துவதை உணர்த்துகின்றன. இனிவரும் காலங்களில், இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு என்பது பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புடன் மட்டும் நின்றுவிடாமல், போக்குவரத்துத் தொடர்பு, திறன் மேம்பாடு, வளர்ச்சி பங்களிப்பு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள், விண்வெளித்துறை, சுகாதாரம், வேளாண்மை மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
• இந்தியப் பெருங்கடல் நம் இருநாட்டினருக்கும் பொதுவான ஒன்று என்றும்; அதன் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவை நம் இருவரின் கூட்டுப் பொறுப்பு என்றும் நாங்கள் நம்புகிறோம், என்று இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மோடி கூறினார். மேலும், இருநாடுகளும் தங்களது பொருளாதாரக் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்தும், அதை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தயார்படுத்துவது குறித்தும் விவாதித்ததாக தெரிவித்தார். இருநாடுகளிலும் உள்ள தொழில் துறைகளுக்கான புதிய வாய்ப்புகளை நாங்கள் தொடர்ந்து கண்டறிவோம் என்றும் இந்தியா மற்றும் சீஷெல்ஸ் (Seychelles) இடையேயான போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்தவும் இணைந்து செயல்படுவோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
• கடல்வழி அண்டை நாடுகள் என்ற முறையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது நமது உறவின் மிக முக்கியப் பகுதியாகத் தொடர்கிறது. இந்தியாவின் 'மகாசாகர்' (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான மேம்பாட்டுத் திட்டம்) (Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions (Mahasagar)) தொலைநோக்குத் திட்டத்தில் சீஷெல்ஸ் (Seychelles) நாட்டிற்கு இருக்கும் தனித்துவமான இடத்தை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம். மேலும், கடல் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடிப்பு மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதற்கான நமது கூட்டுப் பொறுப்பையும் நாங்கள் மறுமுறை உறுதி செய்துள்ளோம் என்று ஹெர்மினி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
• கண்காணிப்பு, கடல்சார் வரைவியல் மற்றும் பாதுகாப்புத் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலமாக, சீஷெல்ஸ் (Seychelles) நாட்டின் கடல்சார் திறன்களை வலுப்படுத்த உதவியதற்காக ஹெர்மினி இந்தியாவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
• வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் பல முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. எல்லைதாண்டிய குற்றங்களுக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான குற்றவாளிகள் ஒப்படைப்பு ஒப்பந்தம் (Extradition treaty), விண்வெளியை அமைதிப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம், மற்றும் செஷல்ஸ் நாட்டில் இந்தியாவின் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை இடைமுகம் (Unified Payments Interface (UPI)) அடிப்படையிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஆகியவை இதில் அடங்கும். மேலும், இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் (Export-Import Bank of India (EXIM Bank)) ஒரு பொதுவான கடன் உதவி ஒப்பந்தமும், செஷல்ஸ் நாட்டில் ஒரு புதிய தேசிய மருத்துவமனையைக் கட்டுவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கான ஒப்பந்தமும் இதில் கையெழுத்தாகியுள்ளன.
• இருநாடுகளும் இணைந்து மற்றுமொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டன. அதன்படி, சீஷெல்ஸ் நாட்டிற்கு இந்தியா ஒரு அதிவேக ரோந்துப் படகை பரிசாக வழங்கவுள்ளது. மேலும், சீஷெல்ஸ் பாதுகாப்புப் படைக்கு 10 பயன்பாட்டு வாகனங்களையும், ஐந்து லேசர் ரேடியல் ரகப் படகுகளையும் (Laser Radial class boats) இந்தியா வழங்கவுள்ளது. இதோடு சேர்த்து, சீஷெல்ஸ் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான 'PS Zoroaster' கப்பலை முழுமையாகப் பழுதுபார்த்து புதுப்பித்துத் தரவும், அங்குள்ள டோர்னியர் (Dornier) ரக விமானத்தை நவீன டிஜிட்டல் திரைகள் கொண்ட விமான ஓட்டி அறை (Glass cockpit) வசதியுடன் மேம்படுத்தித் தரவும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
• மத்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில், மேற்கு இந்தியப் பெருங்கடலில் சீஷெல்ஸ் (Seychelles) என்னும் தீவு நாடு அமைந்துள்ளது. புவியியல்ரீதியாக, இது 4° முதல் 11° தெற்கு அட்சரேகை (South latitude) மற்றும் 46° முதல் 56° கிழக்கு தீர்க்கரேகை (East longitude) ஆகியவற்றிற்கு இடையே அமைந்திருக்கிறது. இதன் முதன்மைத் தீவுகள், ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்கு கிழக்கே சுமார் 1,000 மைல் தொலைவிலும், மடகாஸ்கருக்கு வடகிழக்கே சுமார் 700 மைல் தொலைவிலும் உள்ளன. இந்த நாட்டின் தலைநகரமான விக்டோரியா (Victoria), மாஹே (Mahé) என்று அழைக்கப்படும் தீவில் அமைந்துள்ளது.
• இந்தியாவிற்கும் சீஷெல்ஸ் (Seychelles) நாட்டிற்கும் இடையே பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் ஒரு வலுவான பாதுகாப்பு மற்றும் ராணுவக் கூட்டுறவு உள்ளது. ராஜதந்திரரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிகரித்துவரும் கடல் கொள்ளையர்களின் அச்சுறுத்தல் மற்றும் பிற பொருளாதாரக் குற்றங்களே இந்த நெருக்கமான கூட்டுறவுக்கு முக்கியக் காரணமாகும். சீஷெல்ஸ் அதிபர் ஹெர்மினி அவர்கள் பதவியேற்ற முதல் 100 நாட்களுக்குள்ளேயே இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டது, இந்தியா உடனான தனது உறவுக்கு சீஷெல்ஸ் நாடு அளிக்கும் அதிக்கப்படியான முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
• மகாசாகர் (Maritime Head for Active Security and Growth for All in the Region (MAHASAGAR)) கொள்கையானது, ஏற்கனவே உள்ள 'சாகர்' (SAGAR) (Security and Growth for All in the Region (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி)) என்ற திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, இந்தியாவின் கடல்சார் ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்துகிறது. இக்கொள்கை இந்தியாவின் அண்டை நாடுகளை மட்டுமன்றி, பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதையும் உள்ளடக்குகிறது. அத்துடன், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட குவாட் (Quadrilateral Security Dialogue (QUAD)) கூட்டமைப்புடன் இந்தியாவின் ராஜதந்திரரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
Original Link: What is India’s MAHASAGAR (Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions) Vision?