மேற்கத்திய நாடுகளில் வர்த்தகக் கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், ஓமன் ஒப்பந்தம் இந்தியாவின் மேற்கு ஆசிய வர்த்தக உத்தியை (West Asia trade strategy) எவ்வாறு பலப்படுத்துகிறது? -ரவி தத்தா மிஸ்ரா

இந்தியா-ஓமன் வர்த்தக ஒப்பந்தம்: ஓமனுடன், இந்தியாவும் தற்போது மேற்கொண்டுள்ள இந்த வர்த்தக ஒப்பந்தமானது, 2022-ல் கையெழுத்தான ஐக்கிய அரபு அமீரகத்துடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் இரண்டாவது வர்த்தக ஒப்பந்தமாகும். இது ஏன் முக்கியமானது என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது.


இந்தியா–ஓமன் வர்த்தக ஒப்பந்தம் - சமீபத்திய புதுப்பிப்பு : அமெரிக்காவில் வரிவிதிப்புகள் காரணமாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் கார்பன் வரிகள் காரணமாகவும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில், இந்தியா தனது ஏற்றுமதிகளின் பரவலை மேற்கு ஆசியாவில் விரிவுபடுத்துவதற்காக டிசம்பர் 18, வியாழக்கிழமை அன்று ஓமனுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த  தொடர்ச்சியான நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், மேலும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களை (free trade agreements (FTA)) விரைவாக முன்னெடுத்து, அதன் மூலம் புதிய சந்தைகளைப் பாதுகாக்கும் இந்தியாவின் பரந்த உத்தியுடன் ஒத்துப்போகிறது.


ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடும்போது குறைவான தரநிலைகள் காரணமாக, இந்திய ஏற்றுமதியாளர்களும் அரபு பிராந்தியத்தில் சிறந்த சந்தை அணுகலுக்காக அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இது ஏற்றுமதியாளர்களுக்கான இணக்கச் செலவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பெரும்பாலும் ஒரு கட்டணமில்லாத் தடையாகவும் (non-tariff barriers (NTB)) செயல்படுகிறது. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் (Gulf Cooperation Council (GCC)) ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையிலும், ஓமன் ஒப்பந்தம் வந்துள்ளது. இப்போது இந்தியாவுக்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) இரண்டு உறுப்பினர்களான ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தங்கள் உள்ளன.

இந்தியா-ஓமன் வர்த்தகம்


ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பிடும்போது ஓமன் மிகவும் பன்முகத்தன்மை குறைந்ததாகவும், இந்தியாவிற்கு ஒரு சிறிய சந்தையாகவும் இருந்தாலும், அதன் இராஜதந்திர இருப்பிடம் ஒரு முக்கிய மையமாகச் செயல்படுகிறது. அங்கிருந்து இந்தியப் பொருட்கள் இப்பிராந்தியத்திலும், ஆப்பிரிக்காவிலும் உள்ள மற்ற சந்தைகளையும் அடைய முடியும். ஓமனின் மொத்த ஆண்டு இறக்குமதி சுமார் 40 பில்லியன் டாலராகும். ஆனால், அது தனது இயந்திரப் பொருட்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை இறக்குமதி செய்கிறது மற்றும் முதன்மையாக ஒரு எரிசக்தி ஏற்றுமதி நாடாகவும் உள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், ஓமனுக்கு அமெரிக்காவுடன் ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. அது 2009-ல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், ஓமனில் இருந்து பரந்த அளவிலான பொருட்கள் அமெரிக்காவிற்கு வரி இல்லாமல் சென்றடைகின்றன. அமெரிக்காவிற்கு ஓமனின் முக்கிய ஏற்றுமதிகளில் தொழில்துறைப் பொருட்கள், அலுமினியம், உரங்கள், நகைகள் மற்றும் நெகிழி போன்ற எண்ணெய் துணைப் பொருட்கள் ஆகியவை அடங்கும். அதேநேரத்தில் இந்தியா, அதிக வரி தொடர்பான அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள இரத்தினங்கள் மற்றும் நகைகளின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் முயல்கிறது.


இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களை முக்கியமாகக் கொண்ட இந்திய ஏற்றுமதிகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் 3 பில்லியன் டாலரிலிருந்து 6 பில்லியன் டாலராக இருமடங்காக அதிகரித்துள்ளன. நாப்தா மற்றும் பெட்ரோலைத் தவிர, இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களில் இயந்திரங்கள், விமானங்கள், அரிசி, இரும்பு மற்றும் எஃகுப் பொருட்கள், அழகு மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருட்கள், மற்றும் மட்பாண்டப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.


ஓமன் தனது 98 சதவீத வரிப் பிரிவுகளுக்கு சுங்க வரி இல்லாத அணுகலை வழங்கியுள்ளதால், இந்த ஒப்பந்தம் இந்தியத் தொழில்துறை ஏற்றுமதிகளின் போட்டித்தன்மையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஓமனின் ஒப்பீட்டளவில் சிறிய சந்தையில் நீடித்த வளர்ச்சி என்பது தர மேம்பாடுகள் மற்றும் தயாரிப்பு வேறுபாடுகளைப் பொறுத்தே அமையும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.


ஓமன் பெரும்பாலும் கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் உரங்கள், மெத்தில் ஆல்கஹால் மற்றும் நீரற்ற அம்மோனியா போன்ற இரசாயன உள்ளீடுகள், அத்துடன் பெட்ரோலியம் கோக் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது. இந்த பொருட்கள் இந்தியாவின் எரிசக்தித் துறைக்கு மிகவும் முக்கியமானவை மற்றும் இந்தியாவின் பிற தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் ஏற்கனவே குறைந்த வரிவிதிப்புகளை அனுபவித்து வருகின்றன.


இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் சேவைத் துறையில் இந்தியா அதிகப் பலன் பெறக்கூடும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஓமனின் கணிசமான உலகளாவிய சேவை இறக்குமதிகளின் மதிப்பு 12.52 பில்லியன் டாலராகும். இதில் ஓமனின் உலகளாவிய இறக்குமதிப் பட்டியலில் இந்தியாவின் ஏற்றுமதிகளின் பங்கு 5.31 சதவீதமாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, கணினி தொடர்பான சேவைகள், வணிக மற்றும் தொழில்முறை சேவைகள், ஒலி-ஒளி சேவைகள் (Audio-visual services), ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளில் ஓமன் கணிசமான உறுதிமொழிகளை வழங்கியுள்ளது.


"இந்த விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் (Comprehensive Economic Partnership Agreement (CEPA)) ஒரு முக்கிய அம்சம், இந்திய தொழில் நிபுணர்களுக்கான மேம்படுத்தப்பட்ட நகர்வு கட்டமைப்பு (mobility framework) ஆகும். முதல்முறையாக, ஓமன் நாடு முறை-4-ன் கீழ் பரந்த அளவிலான உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. இதில், நிறுவனங்களுக்குள் பணியிட மாற்றம் செய்யப்படுவோருக்கான ஒதுக்கீட்டை 20 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் கணிசமாக அதிகரிப்பது, அத்துடன் ஒப்பந்த சேவை வழங்குநர்களுக்கான நீண்டகாலம் தங்குவதற்கும் அனுமதிப்பது ஆகியவை அடங்கும். இந்த காலம் தற்போதுள்ள 90 நாட்களிலிருந்து இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதற்கான ஒரு ஏற்பாடும் உள்ளது." என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Original link:

How Oman deal adds heft to India’s West Asia trade strategy amid rising trade curbs in the West?



Share: