IRDAI பற்றி… -ரோஷ்ணி யாதவ்

முக்கிய அம்சங்கள்:


— திருத்தப்பட்ட விதிகளின்படி, காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது தொடர்புடைய நிறுவனங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்காமல் இருந்தால், விசாரணைக்கு தேவையான தகவல்களை மறைத்தால் அல்லது பதிவுகளை அழிக்க முயற்சித்தால் என்று சந்தேகிக்க நியாயமான காரணம் இருந்தால், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) தலைவருக்கு சோதனை, பறிமுதல் மற்றும் ஆய்வு நடத்த உத்தரவிடும் அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்த அதிகாரங்கள், சட்டவிரோத கமிஷன் அல்லது தள்ளுபடி கொடுத்தல், புத்தகங்கள், கணக்குகள், ரசீது, தகவல் அறிக்கைகள் அல்லது பிற பதிவுகளை மாற்றுதல் அல்லது அழித்தல் போன்ற சந்தேகமான மீறல்களைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.


— காப்பீட்டு இடைத்தரகர்களில் முகவர்கள், தரகர்கள், வங்கிகள் போன்ற கார்ப்பரேட் முகவர்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (Non-Banking Financial Company (NBFC)), நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு தயாரிப்புகளை வழங்கும் பிற நிறுவனங்கள், காப்பீட்டுக் கொள்கைகளை ஒப்பிட்டு விற்கும் இணையதளங்கள் போன்ற வலைத் திரட்டிகள், சுகாதார காப்பீட்டு கோரிக்கைகள் மற்றும் சேவைகளை நிர்வகிக்கும் மூன்றாம் தரப்பு நிர்வாகிகள் (third-party administrators (TPA)), ஆய்வாளர்கள் மற்றும் இழப்பு மதிப்பீட்டாளர்கள் மற்றும் காப்பீட்டு சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (insurance marketing firms (IMF)) ஆகியவை அடங்கும்.

— முன்மொழியப்பட்ட மசோதாவின்படி, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) தலைவர் ஒரு மூத்த அதிகாரியை (துணை இயக்குநர் பதவிக்கு குறையாதவர்) அங்கீகரிக்கலாம். அந்த அதிகாரி: ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடத்தில் நுழைந்து சோதனை செய்யலாம், சாவி கிடைக்கவில்லையெனில் பூட்டுகளை உடைக்கலாம், தொடர்புடைய பதிவுகளை பறிமுதல் செய்யலாம், விசாரணைக்கு தேவையான ஆவணங்களை குறிக்கவோ அல்லது நகலெடுக்கவோ செய்யலாம். மேலும், பயனுள்ள ஒழுங்குமுறை மேற்பார்வையை உறுதிப்படுத்த, காப்பீட்டு நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் வருமான அறிக்கைகள், அறிக்கைகள் மற்றும் தகவல்களை ஆய்வுசெய்ய பல்வேறு இடங்களில் ஊழியர்களை நியமிக்க இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) அதிகாரம் வழங்கப்படுகிறது.


— தற்போது, ​​சந்தை ஒழுங்குமுறை ஆணையமான இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India (SEBI)), விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறுவதாக சந்தேகித்தால், ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களைத் தேடி பறிமுதல் செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.


— இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு (IRDAI) மேம்படுத்தப்பட்ட அமலாக்க அதிகாரங்கள் கிடைக்கும். அதில் காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது இடைத்தரகர்கள் பெற்ற தவறான ஆதாயங்களை திரும்பப் பெறும் அதிகாரமும் அடங்கும் என்று கூறப்படுகிறது. 


— கூடுதலாக, இந்தத் திருத்தங்கள் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரத்தை வலுப்படுத்துகின்றன. அதன்படி, பொது நலனுக்காக காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிணைப்பு உத்தரவுகள் பிறப்பிக்கலாம், பாலிசி வைத்திருப்பவர்களைப் (policyholders) பாதுகாக்கலாம், தவறான நிர்வாகத்தைத் தடுக்கலாம் அல்லது நல்ல நிர்வாகத்தை உறுதி செய்யலாம். காப்பீட்டு நிறுவனங்கள் இத்தகைய உத்தரவுகளுக்கு கட்டாயம் இணங்க வேண்டும். ஆனால், அவற்றுக்கு எதிராக தனிப்பட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, அவற்றுக்குக் கேட்க நியாயமான வாய்ப்பு வழங்கப்படும்.


— காப்பீட்டு முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு வழங்கப்படும் தரகுத்தொகை மற்றும் ஊதியத்தை ஒழுங்குபடுத்துவதற்கு, ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மேம்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படும். இதன் நோக்கம் தவறான விற்பனையைத் தடுப்பது மற்றும் பாலிசிதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பது. இதற்காக வரம்புகளை நிர்ணயித்தல், வெளிப்படுத்தல் விதிமுறைகளை பரிந்துரைத்தல், கட்டண கட்டமைப்புகளைக் குறிப்பிடுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவானது மக்களவையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்  தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. 


— காப்பீட்டுச் சட்டத் திருத்தம் மசோதா, 2025 (சப்கோ பீமா சப்கோ ரக்ஷா) இந்தியாவின் காப்பீட்டுத் துறை கட்டமைப்பை சீர்திருத்தும் நோக்கில் 1938 காப்பீட்டுச் சட்டம், 1956 ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டம் மற்றும் 1999 இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள்  மேற்கொள்வதற்கான நடைமுறையானது  கடந்த செவ்வாய்கிழமை, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 


— இந்தத் திருத்தம், இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்துகிறது. இது முதலீட்டை ஈர்க்கவும், தொழில்நுட்பப் பரிமாற்றத்தை எளிதாக்கவும், காப்பீட்டு ஊடுருவலை அதிகரிக்கவும், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் உதவும் என்கின்றனர்.


— வெளிநாட்டு மறுகாப்பீட்டு நிறுவனங்களுக்குத் தேவையான நிகர சொந்த நிதி ரூ.5,000 கோடியிலிருந்து ரூ.1,000 கோடியாகக் குறைக்கப்படும்.

Original link:

About IRDAI


Share: