Showing posts with label Case. Show all posts
Showing posts with label Case. Show all posts

டெல்லி வழக்கறிஞர் சங்கம் வாக்காளர் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டது ஏன் சட்டரீதியான பிரச்சனைகளைத் தூண்டியுள்ளது? -அமால் ஷேக்

 வழக்கறிஞர் சங்கம் விவரங்களை வெளியிட்ட  சிறிது நேரத்திலேயே, வழக்கறிஞர்கள் ஏராளமான பிரச்சாரச் செய்திகளைப் பெறத் தொடங்கினர். எனவே, தேர்தல்கள் என்ற பெயரில் ஒரு சட்டப்பூர்வ தொழில்முறை அமைப்பு (statutory professional body) எவ்வளவு தனிப்பட்ட தகவல்களை பொது வெளியில் வைக்க முடியும்?


டெல்லி வழக்கறிஞர் சங்க (Bar Council of Delhi (BCD)) தேர்தலுக்கு முன்னதாக, வழக்கறிஞர் சங்கம் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை அதன் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தது. பெயர்கள் மற்றும் பதிவு எண்களுடன், பட்டியலில் மொபைல் எண்கள், குடியிருப்பு முகவரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் புகைப்படங்கள் இருந்தன.


செய்திகள் வெளி வந்த பின்னர், வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் பிரச்சாரம் தொடர்பான தகவல்களை பெறத் தொடங்கினர். குறுஞ்செய்தி சேவை (short message service (SMS)), மின்னஞ்சல், வாட்ஸ்அப் செய்திகள், தொலைபேசி அழைப்புகள், பிரச்சார சுவரொட்டிகள் மற்றும் விரைவு அஞ்சல் வழியாகவும்  தகவல்களை பெற்றனர். சில வழக்கறிஞர்கள் முன் அனுமதியின்றி வாட்ஸ்அப் குழுக்களில் சேர்க்கப்பட்டதாகக் கூறினர்.


டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு, தரவுகளை வெளியிடுவதையே சவால் செய்கிறது.


பிப்ரவரி 18 அன்று, தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு, இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று கூறியது. வழக்கறிஞர்ளின் தனியுரிமையை மீற முடியாது என்றும், அனுமதியின்றி வழக்கறிஞர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றும், வழக்கறிஞர்களின்  தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும், வழக்கறிஞர்களின் தனியுரிமை உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.


இந்த எண்ணிக்கை மற்றும் மக்கள் தொடர்புகளின் அதிர்வெண் ஒரு பரந்த கேள்வியை எழுப்புகிறது: தேர்தல்களை நடத்துவதற்காக ஒரு அதிகாரப்பூர்வ தொழில்முறை அமைப்பு எவ்வளவு தனிப்பட்ட தகவல்களை  பொது வெளியில் பகிர முடியும்?


மனுவில் என்ன சொல்லப்பட்டுள்ளது?


வாக்காளர் பட்டியல் வெளியீட்டை, அங்கீகரிக்கப்படாத வெளியீடு, பரப்புதல் மற்றும் வழக்கறிஞர்களின் முக்கியமான தனிப்பட்ட தரவுகளை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு விவரிக்கிறது. வெளியீட்டின் காரணமாக, வழக்கறிஞர்கள் தேவையற்ற அழைப்புகள், செய்திகள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனு சுட்டிக்காட்டுகிறது.


மனுவில், பிரிவு 21 மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி  vs இந்திய ஒன்றிய (Justice K.S. Puttaswamy (Retd.) v. Union of India) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலைப் பகிர்வது பிரிவு 21-ன் கீழ் உள்ள தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை தெளிவாக மீறுவதாகவும், சட்டப்பூர்வமானது, அவசியமானது மற்றும் விகிதாசாரமானது என்ற சட்டத் தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


தேர்தல்களை நடத்துவது ஒரு சட்டபூர்வமான நோக்கமாக இருக்கலாம் என்றாலும், "அத்தகைய தரவுகளை வெளியிடுவது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு முக்கியமானதாக இல்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்தத் தகவலைப் பகிர்வது பின்தொடர்தல், துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள், அடையாளத் திருட்டு, ஆன்லைன் மோசடி, தரவு தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பிற வகையான தீங்குகளுக்கு வழிவகுக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.


சட்டப்பூர்வ கட்டமைப்பில், மனு இந்திய வழக்கறிஞர் சங்க விதிகளை குறிப்பிடுகிறது. இது வாக்காளர் பட்டியலில், "வரிசை எண்; மாநில பட்டியலில் உள்ள எண்; பட்டியலில் உள்ள வழக்கறிஞர்களின் பெயர் மற்றும் வழக்கறிஞரின் முகவரி" ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்று வழங்குகிறது. தனிப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது விதிகளின்கீழ் கருதப்படவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


டெல்லி வழக்கறிஞர் சங்கவிதிகளின் பிரிவு 13-ஐக் குறிப்பிட்டு, வாக்காளர் பட்டியல்கள் இந்திய வழக்கறிஞர் சங்க விதிகளின்படி கண்டிப்பாக தயாரிக்கப்பட வேண்டும் என்றும், கூடுதலாக தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவது முற்றிலும் அனுமதிக்க முடியாது (wholly impermissible) என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த மனுவில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2023 பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சேர்க்கை மற்றும் ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவை, ஒப்புதல் இல்லாமல் வேறு காரணங்களுக்காகப் பகிர முடியாது என்று கூறுகிறது. டெல்லி வழக்கறிஞர் சங்க, தரவு முதலில் சேகரிக்கப்பட்ட நோக்கத்திற்காக மட்டுமே அதைப் பயன்படுத்தவும் பகிரவும் சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளது என்றும் கூறுகிறது.


சட்டம்  என்ன சொல்கிறது


வழக்கறிஞர்கள் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்புகளாக வழக்கறிஞர் சங்கங்கள் உள்ளன. இது அவர்களுக்கு சட்டப்பூர்வ அதிகாரங்களை வழங்குகிறது. மேலும், அவர்கள் நடவடிக்கை எடுக்கும்போது, ​​அவர்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற வேண்டும். அரசியலமைப்பு விதிகள் அவர்களை இணையதளத்திலும் பின்தொடர்கிறது.


இந்த மனு ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி vs இந்திய ஒன்றிய வழக்கை அடிப்படையாகக் கொண்டது. இதில் உச்சநீதிமன்றம் பிரிவு 21-க்குள் தனியுரிமையை (privacy) அங்கீகரித்தது. தனிப்பட்ட தகவல்களின் மீதான கட்டுப்பாடு கண்ணியம் மற்றும் சுதந்திரத்திற்கு முக்கியமானதாகும் என்பதை தீர்ப்பு அங்கீகரித்தது. டிஜிட்டல் காலகட்டத்தில், தனியுரிமைக்கு அச்சுறுத்தல்கள் அரசுக்கு மட்டும் அல்ல; தனிநபர்கள் அல்லது அமைப்புகளாலும் அச்சுறுத்தப்படலாம் என்று நீதிமன்றம் கூறியது. மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் எப்படி, எப்போது பகிரப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்த உரிமை உண்டு என்றும், அனுமதியின்றி அதைப் பகிர்வது அந்த உரிமையை மீறுவதாகும் என்றும் நீதிபதி நாரிமன் வலியுறுத்தினார்.


சிறிய தரவுகள் பாதிப்பில்லாததாகத் தோன்றலாம். ஆனால், ஒன்றாக இணைக்கப்படும்போது, ​​அவை தனிப்பட்ட சுயவிவரத்தை வெளியிடலாம் என்று நீதிமன்றம் எச்சரித்தது. ஒரு பெயர், தொலைபேசி எண், முகவரி அல்லது புகைப்படம் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், ஒன்றிணைந்து பாதுகாப்பு இல்லாமல் பகிரப்பட்டால், அவை எளிதாகத் தேடக்கூடிய ஒரு கோப்பை உருவாக்குகின்றன.


அந்த ஆபத்து தற்போதைய சர்ச்சையை உருவாக்குகிறது


டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், ஒப்புதல் என்பது தனிப்பட்ட தரவு செயல்முறையை ஒழுங்கமைக்கும் கொள்கையாகும். தகவலறிந்த, தன்னார்வ ஒப்பந்தத்தால் ஆதரிக்கப்படும்போது மட்டுமே செயல்முறை சட்டபூர்வமானதாக கருதப்படும்.


முதலாவதாக, நோக்க வரம்பு என்பது தனிப்பட்ட தரவு சேகரிக்கப்பட்டு, தெளிவான, குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். உதாரணமாக, வழக்கறிஞர் சங்கம்  தேர்தல்களை நடத்துவதே குறிக்கோள் என்றால், தொடர்பு விவரங்கள் மற்றும் புகைப்படங்களைப் வெளிப்படையாகப் பகிர்வது முக்கியமானதா என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவதாக, தரவு குறைப்பு (data minimisation) என்பது கூறப்பட்ட நோக்கத்திற்கு தேவையான தகவல்களைச் செயல்படுத்துவதற்கு மட்டுமே பொருந்தும்.


ஒரு நடைமுறை சிக்கலும் உள்ளது. பாதுகாப்புகள் இல்லாமல் ஒரு முழுமையான தரவுத்தளம் இணையதளத்தில் பகிரப்பட்டல், அதை அதிக முறை நகலெடுக்க முடியும். பின்னர், அதை நீக்குவது தகவல் பரவுவதைத் தடுக்காது. இணையதளத்தில்  பகிர்வது என்பது ஒரு பலகையில் ஒரு அறிவிப்பை ஒட்டுவது போன்றது அல்ல: இது ஆயிரக்கணக்கான பிரதிகளை அச்சிட்டு காற்றில் பறக்க விடுவது போன்றதாகும்.


சூழலுக்கு ஏற்ப, இணைய உலகில் அரசியலமைப்பு அமைப்புகளின் ஒழுங்குமுறைப் பொறுப்பை நீதிமன்றங்கள் ஏற்கனவே அங்கீகரித்துள்ளன. த்ரோனே திவான் vs இந்திய தேர்தல் ஆணைய வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் பிரிவு 324-ன் கீழ், நியாயமான தேர்தல்களைப் பாதிக்கக்கூடிய தவறான இணைய பிரச்சார தகவல்களை தேர்தல் ஆணையம்  தடுக்க வேண்டும் என்று கூறியது. நீதிமன்றம் ஆணையத்திற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைச் சரியாகச் சொல்லவில்லை. ஆனால், அதன் அரசியலமைப்பு கடமையை நினைவுபடுத்தியது. தொலைபேசிகள் மற்றும் இணைய சேவையகங்கள் மூலம் தொடர்புகள் நடைபெற்றாலும், மேற்பார்வை இன்னும் தேவைப்படுகிறது.


Original article : Why Bar Council of Delhi’s publication of voter details online has sparked a legal tussle?. -Amaal Sheikh

Share:

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சிறப்பு நீதிமன்றம் ஏன் அமலாக்கத்துறைக்கு எதிராக தீர்ப்பளித்தது? -அபூர்வா விஸ்வநாத்

காங்கிரஸின் மற்ற நிர்வாகிகளுடன் சேர்ந்து, காந்தி குடும்பத்தினர், பொதுப் பங்கு நிறுவனமும் நேஷனல் ஹெரால்டு நாளிதழின் வெளியீட்டாளருமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (Associated Journals Limited (AJL)) நிறுவனத்தின் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக ஒரு குற்றச் சதியில் ஈடுபட்டனர் என்பதே அமலாக்க இயக்குநரகத்தின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.


காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி மற்றும் ஐந்து பேர் மீது நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate’s (ED’s)) தொடர்ந்த வழக்கை விசாரிக்க டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. Rouse அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, அமலாக்க இயக்குநகரத்தின் புகாரின் அடிப்படையில் நீதித்துறை நடவடிக்கைகளைத் தொடங்க மறுத்துவிட்டார்.


காந்தி குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு


அமலாக்க இயக்குநகரத்தின் முதன்மையான குற்றச்சாட்டு, காந்தி குடும்பத்தினர், காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகளுடன் சேர்ந்து, பட்டியலிடப்படாத பொது நிறுவனமும், நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் வெளியீட்டாளருமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்ன் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க ஒரு குற்றவியல் சதியில் ஈடுபட்டனர் என்பதுதான். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்க்கு ரூ.90.21 கோடி கடனாக வழங்கியது. அதைத் தொடர்ந்து, சோனியாவும் ராகுல் காந்தியும் சேர்ந்து 76% பங்குகளை வைத்திருந்த தனியார் இலாப நோக்கற்ற நிறுவனமான யங் இந்தியன், கடனை வசூலிக்கும் உரிமையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடமிருந்து ரூ.50 லட்சத்திற்கு வாங்கியது.


ஏ.ஜே.எல் நிறுவனத்தின் 90.21 கோடி ரூபாய் கடனை, யங் இந்தியன் நிறுவனத்திற்காக தலா 10 ரூபாய் மதிப்புள்ள 9.02 கோடி பங்குகளாக மாற்றி, ஏ.ஜே.எல் பங்குதாரர்களையும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நன்கொடையாளர்களையும் ஏமாற்றியதாக அமலாக்கத்துறை கூறுகிறது. இதுகுறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 2014-ல் அமலாக்கத்துறையிடம் புகார் அளித்திருந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி, அமலாக்கத்துறை இது தொடர்பாக ஒரு குற்றவியல் வழக்குப் பதிவு செய்தது.


சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு


117 பக்க உத்தரவில், நீதிமன்றம் பணமோசடி குற்றத்தை முதன்மையாக இரண்டு காரணங்களுக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது.


தனிப்பட்ட புகார்: சுவாமி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்த 2014-ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட்டின் உத்தரவின் அடிப்படையிலேயே அமலாக்க இயக்குநரகத்தின் வழக்கு தொடுக்கப்பட்டது. செவ்வாயன்று, பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) என்பது சட்ட அமலாக்க முகமையின் விசாரணை அதிகாரியால் அளிக்கப்படும் புகார்களை மட்டுமே கருத்தில் கொள்கிறது, பொதுமக்களால் அளிக்கப்படும் புகார்களை அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


முன்நிபந்தனை குற்றம் இல்லாதது: குற்றத்தின்மூலம் கிடைத்த பணத்தை மறைத்தல், வைத்திருத்தல், பெறுதல் அல்லது பயன்படுத்துதல் போன்ற செயல்களில் உதவுபவர், பங்கேற்பவர் அல்லது சம்பந்தப்பட்ட எவரும் பணமோசடி குற்றத்தைச் செய்தவராகக் கருதப்படுவார் என்று பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) கூறுகிறது.


இங்கு, “குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம்” (proceeds of crime) என்பது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் “பட்டியலிடப்பட்ட குற்றம்” (scheduled offences) அல்லது மூலக் குற்றம் எனப் பட்டியலிடப்பட்ட ஒரு குற்றத்தின் மூலம் ஒரு நபர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறும் எந்தவொரு சொத்தையும் குறிக்கும். செவ்வாயன்று, காந்தி குடும்பத்தினருக்கு எதிராக அத்தகைய எந்தக் குற்றத்திற்காகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததால், அமலாக்க இயக்குநகரத்தின் புகாரை விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.


ஜூலை 2014-ல், சுவாமியின் புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை ஒன்றிய புலனாய்வு முகமைக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தது; 2015-ல் அமலாக்கத்துறை இயக்குநர் ஒன்றிய புலனாய்வு முகமையின் இயக்குநருக்கு எழுதிய கடிதத்திலும் இது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஒன்றிய புலனாய்வு முகமையின் இயக்குனர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. நீதிமன்றம் தனது உத்தரவில், அமலாக்கத்துறை மற்றும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (Financial Action Task Force (FATF)) ஆண்டு அறிக்கைகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்புகளை மீண்டும் ஆய்வு செய்து, "பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடர, அட்டவணைப்படுத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்வது ஒரு முக்கியமான நிபந்தனையாகும்" என்பதை மீண்டும் வலியுறுத்தியது.


கடந்த சில ஆண்டுகளில், பணமோசடி குறித்துத் தனியாக விசாரணை நடத்தலாம் என்று அமலாக்கத்துறை வாதிட்டாலும், தொடர்புடைய அட்டவணைப்படுத்தப்பட்ட குற்றம் இல்லாமல் அத்தகைய விசாரணையைத் தொடங்க முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது.


அடுத்து என்ன நடக்கும்?


அமலாக்கத்துறை வழக்கைத் தவிர, யங் இந்தியன் (Young Indian) நிறுவனம் மீது கூறப்படும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு தொடர்பான ஒரு வழக்கை வருமான வரித் துறை 2017 முதல் விசாரித்து வருகிறது. இருப்பினும், வருமான வரி வழக்குகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் பட்டியலிடப்பட்ட குற்றங்களாக வகைப்படுத்தப்படவில்லை.


கடுமையான பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) கடுமையான பிணை நிபந்தனைகளைக் கொண்டுள்ளது மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்மீது ஆதாரத்தைச் சமர்ப்பிக்கும் சுமையைச் அதிகரிக்க செய்கிறது. மேலும், சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அந்த அமைப்புக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. எனவே, நவம்பரில், டெல்லி காவல்துறை பொருளாதார குற்றப் பிரிவு (Economic Offences Wing (EOW)) அதே வழக்கில் ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இது பணமோசடி விசாரணைக்கு மற்றொரு வழியைத் திறக்கும் நோக்கில் செய்யப்பட்டிருக்கலாம். இந்த புகார் அமலாக்கத் துறையின் உதவி இயக்குநர் சிவ குமார் குப்தாவால் அளிக்கப்பட்டது. மேலும், இது முன்னரே வழங்கப்பட்ட 2014ஆம் ஆண்டு உத்தரவின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    

Original link:

National Herald case: Why special court ruled against ED.


Share: