முக்கிய அம்சங்கள்:
— “மாற்றம் ஒன்றே மாறாதது. சமூகம் வளர்ச்சியடையும்போது, நிறுவனங்களும் அதற்கேற்ப தங்கள் முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இது கொலீஜியம் (Collegium) அமைப்புக்கும் பொருந்தும். இது ஒரு காலத்தில் இருந்ததைவிட இன்று நிச்சயமாக மிகவும் வெளிப்படையானதாகவும் தெளிவாகவும் உள்ளது. ஆனாலும், இதை இன்னும் சிறப்பாக்க எப்போதும் வாய்ப்பு உள்ளது,” என்று அவர் கூறினார்.
— இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கொலீஜியம் (Collegium) அமைப்பு காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தாலும், “எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் அல்லது நடைமுறையாக இருந்தாலும், எவ்வளவு நன்கு நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், ஏதோ ஒரு கட்டத்தில் மேம்பாடு தேவைப்படும்” என்று தலைமை நீதிபதி (Chief Justice of India (CJI)) கூறினார். வேட்பாளர்களுடன் நேரடி கலந்துரையாடலை அறிமுகப்படுத்தியதை அவர் “மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை” என்று சுட்டிக்காட்டினார். மேலும், இது உறுப்பினர்கள் நடுநிலையான முடிவு எடுக்க அனுமதிக்கிறது என்றும் அவர் கூறினார்.
— தலைமை நீதிபதியின் “வழக்குகளின் பட்டியலைத் தீர்மானிப்பவர்” (master of the roster) என்ற பங்கு பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாக அவர் கூறினார். தலைமை நீதிபதி மிக மூத்த நீதிபதியாக நிர்வாகப் பொறுப்புகளை வகித்தாலும், அது வழக்குகளைத் தன்னிச்சையாக ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தைத் தருவதில்லை என்றார். அனுபவத்தையும், கிடைக்கும் வசதிகளையும் கருத்தில் கொண்டு, கலந்தாலோசனை செய்த பிறகே முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
— பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, பஞ்சாபின் போதைப்பொருள் பிரச்சினை தொடர்பான வழக்குகளை அவர் கையாண்டார். அதை நினைவுகூர்ந்த தலைமை நீதிபதி (CJI), அந்த காலத்தை "பொறுமைக்கான ஒரு உண்மையான சோதனையாகவும், வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், அன்பின் உழைப்பாகவும்" அவர் விவரித்தார்.
— 2015-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்தப் பிரச்சினை தனக்கு ஒதுக்கப்பட்டதாக அவர் கூறினார். அதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக அவர் அதனை தவறாமல் பட்டியலில் வைத்திருந்தார் என்றும் தெரிவித்தார். “இது ஒரே ஒரு விரிவான உத்தரவால் தீர்க்க முடியாத வழக்கு என்பதால் இதற்கு குடும்பங்கள், அதிகாரிகள், நிறுவனங்கள் ஆகியோருடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
— அவர் ஒரு முழுமையான அணுகுமுறையை விளக்கினார். அதில் குற்றவியல் விசாரணை, எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், குற்றவாளிகளை நாடு கடத்துதல், போதை மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை அளித்தல், பாடத்திட்ட மாற்றங்கள் மூலம் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை இடம்பெற்றன. "அதனால், இந்த வழக்கில் கையாளப்பட்ட அணுகுமுறை முழுமையானதாக இருந்தது: தண்டனை, தடுப்பு, மறுவாழ்வு மற்றும் கல்வி அடிப்படையிலானது," என்று அவர் கூறினார்.
— நீதிமன்ற விசாரணைகளின் சுருக்கமான வீடியோக்களால் சமூக ஊடகங்களில் நீதிபதிகள் மீது எழும் விமர்சனங்களையும் அவமதிப்புகளையும் குறித்து தலைமை நீதிபதி தெளிவாகப் பேசினார். அவர் கூறியது: “அந்த மாதிரியான இணையக் கேலிகளை (Trolling) எந்த விலை கொடுத்தாவது புறக்கணிக்க வேண்டும். ஏனெனில் அது அறியாமையால் வருவது; அது ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். சமூக ஊடகங்களில் என்ன பேசப்படுகிறது என்பதற்காக கவனத்தைத் திருப்பினால், நீதி வழங்கும் பணி தவிர்க்க முடியாமல் பாதிக்கப்படும்.”
— எதிர்காலத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதற்கும், அனைவருக்கும் நீதி மற்றும் பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அமைப்புகளையும் நடுநிலையாகத் தீர்க்கும் முறையையும் வலுப்படுத்துவதிலேயே தன் கவனம் இருக்கும் என்று அவர் கூறினார். "அது எனக்கு மிக அடிப்படையானது" என்றும் அவர் தெரிவித்தார்.
உங்களுக்குத் தெரியுமா?
— இந்திய அரசியலமைப்பின் 124(1)-ஆவது சட்டப்பிரிவின்படி, இந்திய உச்சநீதிமன்றம் என்பது இந்தியத் தலைமை நீதிபதி தலைமையில், அவருடன் சேர்ந்து சில பிற நீதிபதிகள் கொண்ட ஒரு நீதிமன்றமாக அமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.
— சட்டப்பிரிவு 124(2)-ன்படி: "உச்ச நீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். நியமனத்திற்கு முன், தேவையான உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் கலந்தாலோசித்த பிறகே நியமன ஆணை வழங்கப்படும். நீதிபதிகள் 65 வயது வரை பதவியில் இருப்பர் என்று கூறப்படுகிறது. ஆனால், தலைமை நீதிபதியைத் தவிர மற்ற நீதிபதிகளை நியமிக்கும்போது இந்தியத் தலைமை நீதிபதியுடன் கட்டாயம் கலந்தாலோசிக்க வேண்டும்."
— கொலீஜியம் (Collegium) என்பது உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான ஒரு அமைப்பாகும். இது "நீதிபதிகள் வழக்குகள்" (Judges Cases) என்று அழைக்கப்படும் தொடர்ச்சியான உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் உருவானது ஆகும்.
Original link:
What are the constitutional provisions related to the appointment of judges?